அம்மா

அம்மா, வாலி, வாலி பதிப்பகம், சென்னை, பக். 88, விலை 60ரூ. சினிமாவைத் தாண்டி வாலிக்கிருந்த இலக்கியச் சிந்தனையை சுவைக்க விரும்புவோர் இந்தத் தொகுதியைப் படித்தாலே போதும். தாயை, தந்தையை, காஞ்சிப் பெரியவர், குலகுரு என்று பாடிய அவரேதான் முடிதிருத்தும் முனியனையும் பாடுகிறார். சலவைத் தொழிலாளியை, விறகு வெட்டியை, பெண்ணின் எழிலை, மின்னலை இப்படி அவர் தொடாத பொருளில்லை. அவர் பாடலில் இடம்பெற்றால் அந்தப் பொருளுக்கும் புது அர்த்தம் வந்துவிடுகிறது. தாய் பற்றிய கவிதையில் அம்மாவின் ஆன்மாவையே தரிசிக்க வைத்துவிடுகிறார். நன்றி: குமுதம், 6/8/2014. […]

Read more

நக்சல்பாரி முன்பும் பின்பும்

நக்சல்பாரி முன்பும் பின்பும், சுனிதிகுமார் கோஷ், தமிழில் கோவேந்தன், விடியல் பதிப்பகம், கோயமுத்தூர் 15, விலை 350ரூ. இந்திய அரசியல் நகர்வில் இறுதியாக நடந்த அரசியல் எழுச்சி நக்சல்பாரி புரட்சி. ஜனநாயகத்தையும் சோசலிசத்தையும் மக்கள் அடைவதற்கு மார்க்சியமும் லெனினியமும்தான் சரியான பாதை என்பதை உணர்ந்தது, அந்த எழுச்சிக்குப் பிறகுதான். இமயமலையின் அடிவாரத்தில் டார்ஜிலிங் மாவட்டத்தில் நக்சல்பாரி என்ற கிராமத்தில் தோன்றிய விவசாயிகளின் எழுச்சி, பல்வேறு மாநில எல்லைகளைக் கடந்து ஒட்டுமொத்தமாக இந்தியாவின் அனைத்துப் பகுதியையும் அசைத்துப் பார்த்தது. இந்தியா அப்படியே தலைகீழாக மாறிப் போய்விடவில்லைதான். […]

Read more

மாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்

மாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள், விடியல் பதிப்பகம், கோயமுத்தூர், தொகுதி – 9,  விலை 2000ரூ. தத்துவார்த்த விசாரணைகளை வளர்தெடுத்தவை அமைப்புகளோ, கட்சிகளோ, பெரிய பல்கலைக்கழகங்களோ அல்ல. சில தனி மனிதர்களே அதைச் சாதித்தார்கள். அந்தவகையில் உலகின் திசையை மாற்றிய மாவோவின் படைப்புகளை முழுமையாகத் தமிழில் கொண்டுவந்த மகத்தான சாதனையை செய்துவிட்டு மண்ணில் புதைந்துவிட்டார் விடியல் சிவா. அவரது நினைவுகளைச் சுமந்து இந்த ஒன்பது தொகுதிகள் வெளிவந்து இருக்கின்றன. ஓர் ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கி ஒரு தேசத்துக்கு விடியலை விதைத்து கோடிக்கணக்கான மக்களுக்கு வசந்தத்தின் […]

Read more

இனி எனது நாட்களே வரும்

இனி எனது நாட்களே வரும், நிலாந்தன், விடியல் பதிப்பகம், 32 /5 , ஏ.கே.ஜி. நகர், 3 – வது தெரு, உப்பிலிபாளையம் அஞ்சல், கோயம்புத்தூர் – 15, விலை ரூ. 70. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-024-0.html யுத்தம் என்னை ஜனங்களுக்குள் இறக்கியது. எல்லாவற்றுக்கும் சாட்சியாயிருக்கக் கற்றுக்கொடுத்தது. ஜனங்களின் மொழியிலேயே ஜனங்களுக்கு விளங்கும் விதத்திலேயே இதையும் கூறுமாறு எனக்கது விதித்தது. அதனாலது எனது மொழியை இலகுவாக்கிக் கொடுத்தது. இருக்கின்ற எந்த வடிவத்திலும் திருப்தி ஏதோ ஒரு கட்டத்தில் […]

Read more
1 2