ஷிா்டி பாபா

ஷிா்டி பாபா, திருப்பூா் கிருஷ்ணன், திருப்பூா் குமரன் பதிப்பகம், பக்.136, விலை ரூ.150. மகான்களின் வரலாற்றை எழுதும்போது அவா்கள் நிகழ்த்திய அற்புதங்களை எழுதுவதைத் தவிா்க்க இயலாது. பல மகான்களின் வரலாறே அற்புதங்களின் தொகுப்புதானே’ என்று வியந்து நூலைத் தொடங்கும் திருப்பூா் கிருஷ்ணன், ஷிா்டி பாபா நிகழ்த்திய பல அற்புதங்களை இந்நூலில் விரித்துரைத்துள்ளாா். அவற்றுள், பலரும் அறியாத ஒன்றுதான் போண்டா பொட்டலத்தின் நூலை இரண்டு தென்னை மரங்களின் இடையே கட்டிவிட்டு அந்த நூலில் பாபா படுத்துறங்கியது.அதேபோல, பாபாவை சுதந்திரப் போராட்டத் தியாகி பால கங்காதர திலகா் […]

Read more

சிவா – விஷ்ணு ஆலயங்கள்

சிவா – விஷ்ணு ஆலயங்கள், ஆர்.ஹேமா பாஸ்கர் ராஜு, ஆசிரியர் வெளியீடு, விலைரூ.200. சிவா விஷ்ணு ஆலயங்கள், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் எங்கெங்கு உள்ளன என்பன பற்றிய தகவல்களும், கோவில் அமைப்பு, சிறப்பு பற்றி தெளிவாக எழுதப்பட்டுள்ள நுால். ஐயப்பன், பைரவர், வீரபத்திரன் கோவில்கள் அமைந்துள்ள இடங்கள், வழிபாட்டு நேரம், பூஜை காலம் பற்றிய தகவல்களுடன், பரிகார விளக்கத்தையும் விரிவாக தருகிறது. சிவன், யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம் தெட்சிணாமூர்த்தி, அம்பிகை, மயில் வடிவில் இறைவனை பூஜித்த தலம் மயிலாப்பூர், சிவபெருமான் […]

Read more

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தல வரலாறு

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தல வரலாறு, வெளியீடு: அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், விலைரூ.50 திருக்கோவில் வெளியீடாக வந்துள்ள நுால். மதுரை, மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் தல வரலாறு பதிப்பிக்கப்பட்டுள்ளது. காப்பில் துவங்குகிறது. கால வரிசைப்படி வரலாற்று தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. பாண்டியர் ஆட்சியில் துவங்கி நாயக்க மன்னர்கள் ஆட்சி வரை உள்ளது.கோவிலில் வழிபடும் முறை, தினசரி பூஜை விபரங்கள் விரிவாக தரப்பட்டுள்ளது. திருவிழாக்கள், உப கோவில் விபரங்கள், கோவில் அமைப்பு முறை, நடந்துள்ள திருப்பணிகள் போன்ற விபரங்களும் கூறப்பட்டுள்ளன.தலக்குறிப்பில், இலக்கியம், கல்வெட்டு, ஓவிய, சிற்பங்கள் […]

Read more

அழகன் முருகன்

அழகன் முருகன், டாக்டர் லட்சுமி ராஜரத்தினம், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.90  பக்தர்களுக்கு அருளும் பண்பாளன்… பார் போற்றும் தயாளன்… பக்தர்களின் துயர் தீர்க்க பறந்தோடி வரும் மயிலோன் அழகன் முருகனைப்பற்றி ஆயிரம் பேர் பாடினாலும் தீராது.சொல்ல சொல்ல இனிக்கும் முருகன் திருவிளையாடலை, அழகு தமிழில் விளக்கியுள்ளார் ஆசிரியர் லட்சுமி ராஜரத்தினம். பிள்ளைத்தமிழ் பாடிய பகழிக்கூத்தருக்கு கழுத்தணி வழங்கி, அவரின் திறமையை உலகுக்கு வெளிப்படுத்திய முருகன், பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாத பிரம்மனுக்கு தண்டனை வழங்கி, அவரின் கர்வத்தை அழித்தொழித்தான். வித்வத் […]

Read more

திருவாசகப் பயணம் முதல் சுற்று

திருவாசகப் பயணம் முதல் சுற்று, அ.நாகலிங்கம், ஆசிரியர் வெளியீடு, விலைரூ.80 சிவ புராணம், கீர்த்தித்திரு அகவல் பிரிவுகளுக்கு பாடலைப் பிரித்து, அரும்சொல் விளக்கம் தந்து விளக்கவுரையை குறிப்புகளுடன் எழுதி உள்ளார். நால்வர் நான்மணி மாலையிலிருந்து மாணிக்கவாசகர் பற்றிய 10 பாடல்களை வெளியிட்டதோடு, அவர் வரலாறும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மாணிக்கவாசகர் குறிப்பிடும் பிறப்புகளை இரு வகைகளாக விளக்கியிருப்பது அருமை. ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு உயிர் வரை வகைப்படுத்தி தரப்பட்டுள்ளன.திருவாசக உரைகளை ஆய்ந்து அரிய செம்பொருள் விளக்கம் தந்துள்ளார். கீர்த்தித் திரு அகவல் பகுதியில் […]

Read more

பாம்பன் சுவாமிகள்

பாம்பன் சுவாமிகள், பா.சு.ரமணன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.16\ ராமநாதபுரம் பாம்பனில் அப்பாபுவாக பிறந்தவர் பாம்பன் சுவாமிகளாக, குமரகுருதாச சுவாமிகளாக அறியப்பட்டார். முருகனை முழுமுதற்கடவுளாக கொண்டு தமிழகம் முழுக்க யாத்திரை சென்றவர். கற்றறிந்ததை அறிவால் பெற்றறிந்ததை சண்முக கவசமாக, குமாரஸ்தவமாக மக்களுக்கு அருளியவர்.அந்த மகானின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நுால் இது. வாழ்வின் பெரும்பகுதியை இறை அனுபவத்திற்காக, மக்களின் இறை வாழ்விற்காக செலவிட்டவர் பாம்பன் சுவாமிகள். இல்லறத்தில் இருந்து நிரந்தர துறவறம் செல்ல நினைத்தவர் முருகனே பழநிக்கு அழைத்தாரா என நண்பர் […]

Read more

சங்கத்தமிழ் காட்டும் சனாதன தர்மம்

சங்கத்தமிழ் காட்டும் சனாதன தர்மம், விஷ்ணு சர்மா, சந்தம் தேசிய இலக்கிய பேரவை, விலை 30ரூ. தமிழர்கள் ஹிந்துக்கள் அல்ல என்று ஒரு கூட்டம், ஹிந்து தெய்வங்கள், வழிபாடுகள் குறித்து அவதுாறு பரப்ப மற்றொரு கூட்டம் என, பல்முனை தாக்குதலை ஹிந்து மதம் சந்தித்து வருகிறது. குறிப்பாக அந்தணர்கள் கைபர் போலன் கணவாய் வழியே வந்தவர்கள், விநாயகர் வழிபாடு பின்னாளில் வந்தது, முருகன் குறிஞ்சி நில தலைவன், அவனை தெய்வமாக்கி ஹிந்து மதம்தமிழர்களை ஏமாற்றுகிறது என்றெல்லாம் சிலர் பிரசாரம் செய்து வருகின்றனர். அவை அனைத்தும் […]

Read more

கடவுள் இருக்கிறார்

கடவுள் இருக்கிறார், கு.பாலசுந்தரி, மணிமேகலைப் பிரசுரம், பக். 152, விலை 100ரூ. சுவாமி சிவானந்தாவின் கடவுள் பற்றிய சிந்தனைகளை தமிழில் தரும் நுால். அவர் அருளிய, ‘கோ எக்சிஸ்ட்’ என்ற ஆங்கில நுாலை, தமிழில் சி.கனகராஜன் மொழிபெயர்த்துள்ளார். மிக எளிமையாக கருத்துக்களை விவரிக்கிறது. நன்றி: தினமலர், 11/10/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

மீண்டும் பச்சைப்புடவைக்காரி

மீண்டும் பச்சைப்புடவைக்காரி, வரலொட்டி ரெங்கசாமி, தாமரை பிரதர்ஸ், பக். 280, விலை 300ரூ. பச்சைப்புடவைக்காரியின் மேல் பித்தனாகி போன நுாலாசிரியர் வரலொட்டி ரெங்கசாமியின் மற்றொரு படைப்பு மீண்டும் பச்சைப்புடவைக்காரி. அதென்ன… வாய் ஓயாமல் அன்னை மீனாட்சி, பராசக்தி, உமா மகேஸ்வரி, பார்வதி என அன்னையின் சொரூபங்களை, ஆனந்த ஆராதனைகளை அடுக்கி கொண்டே போகிறார் எனத் தோன்றலாம். அம்மாவை எத்தனை முறை அழைத்தாலும் அத்தனை முறையும் உள்ளிருந்து ஊற்றெடுக்கும் பாச உணர்வு தான், நுால் ஆசிரியரின் மீனாட்சியின் மீதான பக்தி உணர்வு. இந்த பக்தியை தராசு […]

Read more

முருகா ஆறு படையின் புராணக்கதை

முருகா ஆறு படையின் புராணக்கதை, பிரபுசங்கர், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட்லிமிடெட், பக். 118, விலை 120ரூ. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்றாலும், முருகனின் ஆறு படை வீடுகள் தனிச்சிறப்பும், வரலாறும் பெற்றவை. முருகனின் ஆறு படை வீடுகளைப் பற்றிய முழுமையான தொகுப்பை நுாலாசிரியர் பிரபுசங்கர் தொகுத்து வெளியிட்டுள்ளார். வீடு பேறு தரும் ஆறு படை வீடுகளின் வரலாறு, அவற்றின் தொன்மை, சுவாமியின் அலங்கார ரூபம், வீற்றிருக்கும் திருக்கோலம், கோவிலுக்கு செல்லும் வழி, அங்கு நடைபெறும் பூஜை முறைகளின் எண்ணிக்கை, கோவில் […]

Read more
1 2 3 111