காக்கியின் டைரி

காக்கியின் டைரி, சிங்கம்பட்டி பெ.மாடசாமி, நேசம் பதிப்பகம், விலை 200ரூ. ‘தேடுதலாக’ தேடிய தகவல்களின் தொகுப்பு நூல். அதில் விசித்திர வழக்கு, விநோத மனிதர், அரிய நிகழ்வு, அபூர்வ சம்பவம், வேடிக்கை,,, விநோதமென… – ‘இப்படியா? இருக்குமா? நடக்குமா? நடந்ததா?’ என்கிற கேள்விக்குறிகள் பல ஆச்சரியக்குறியாய் எழ, சிக்கின சிக்கல் வழக்குகள் சில. அவைகளை அருமையாக பரபரப்பூட்டும் செய்தியாக பதிவு செய்திருக்கிறார் உதவி ஆணையராக ஓய்வு பெற்ற சிங்கம்பட்டி பெ. மாடசாமி. அன்றாடச் செய்திகளில், இப்படியெல்லாம் ஏமாற்றுவார்களா? இப்படியும் ஏமாறுவார்களா? மற்றும் நினைத்துப் பார்க்க […]

Read more

ஜெயகாந்தனின் பர்ணசாலை

ஜெயகாந்தனின் பர்ணசாலை, நவபாரதி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 100ரூ. நினைவில் புரளும் ஜே.கே. ஜெயகாந்தன் தொடர்பான அநேக நூல்கள் தமிழ்ச் சூழலில் வந்து கொண்டேயிருக்கின்றன. அப்படியொரு நூலான இது பெருங்கடலில் ஒரு தனித் துளியாகச் சேர்ந்திருக்கிறது. ஜெயகாந்தனுடனான நேரடி உரையாடல், தகவல்கள், ருசிகரச் சம்பவங்கள் ஆகியவற்றின் வழியே ஒரு சித்திரத்தைத் தீட்டுகிறார் நூலாசிரியர் நவபாரதி. ஜெயகாந்தனின் கதை உலகம் பற்றிய பார்வைகள், விமர்சனங்கள், சக எழுத்துக்கும் ஜே.கே.வின் எழுத்துக்குமான ஒப்பிடல்கள் என ஒரு நீண்ட கட்டுரையும் நூலில் இடம் பெறுகிறது. ஜே.கே. மறைந்து […]

Read more

ஜெயகாந்தனின் பர்ணசாலை

ஜெயகாந்தனின் பர்ணசாலை, நவபாரதி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 100ரூ. சிறுகதை, நாவல் இலக்கிய உலகில் சிகரம் தொட்டவர், ஜெயகாந்தன். நண்பர்களால் அவர் ‘ஜே.கே.’ என்று அன்புடன் அழைக்கப்பட்டார். ஜெயகாந்தனின் கே.கே. நகர் வீட்டு மாடியில் நண்பர்கள் கூடி அடிக்கடி கூடி விவாதிப்பது வழக்கம். அந்த இடத்தை ‘பர்ணசாலை’ என்று அழைத்தனர். ஜெயகாந்தனோடு 50 ஆண்டுக் காலம் பழகிய எழுத்தாளர் நவபாரதி, அவரோடு பகிர்ந்து கொண்ட எண்ணங்கள், அவரிடம் இருந்து பெற்ற அனுபவங்களை இந்த நூலில் பதிவு செய்து இருக்கிறார். மேலும் அவரது சிறுகதைகள் […]

Read more

பாரதியாரின் புதுச்சேரித் தோழர்கள்

பாரதியாரின் புதுச்சேரித் தோழர்கள், வில்லியனூர் தியாகி முத்து. சுந்தரமூர்த்தி, விலை 200ரூ. பாரதியார், அரவிந்தர், வ.வே.சு. அய்யர், நாகசாமி ஆகியோர் புதுச்சேரியில் வாழ்ந்த காலத்தில் (1908-1918) அவர்களுக்கு நண்பர்களாக இருந்தவர்கள் பற்றி விவரிக்கிறது, “இவர்களின் புதுச்சேரி தோழர்கள்” என்ற இந்த புத்தகம். பாரதிக்கும், மற்றவர்களுக்கும் நண்பர்களாக இருந்தவர்கள் பொதுமக்களிடம் புகழ் பெற்றவர்களாக இல்லாமல் இருக்கலாம். ஆயினும் சரித்திரத்தில் இடம் பெற்றவர்கள். தேசத்தொண்டு செய்தவர்கள், அவர்களைப்பற்றி இளைய தலைமுறையினர் அறிய இந்நூல் உதவும்.  சுதந்திரப் போராட்டம் உச்சத்தில் நடந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளையும் […]

Read more

டாக்டர் ஜேசி குமரப்பாவின் கருத்துக்களஞ்சியம்

டாக்டர் ஜேசி குமரப்பாவின் கருத்துக்களஞ்சியம், டாக்டர் மா.பா. குருசாமி, சர்வோதய இலக்கியப் பண்ணை, விலை 300ரூ. ஜேசி குமரப்பா: ஆளுமையும் கருத்துகளும் தஞ்சையில் பிறந்து இங்கிலாந்தில் படித்து தணிக்கையாளர் ஆகி, மும்பையில் தொழில் செய்த இளைஞர் அவர். பின்னர் அமெரிக்கா சென்று மேற்படிப்பு முடித்து மும்பை திரும்பியிருந்தார். மேற்கத்திய பாணியில் நடை உடை பாணிகள் கொண்டவர். பொருளாதாரம் பற்றி ஒரு கட்டுரை எழுதினார். அதை நூலாக வெளியிட காந்தியை அணுகுமாறு சொன்னார்கள். காந்தியை சந்திக்கப்போனபோது காத்திருக்க வேண்டியிருந்தது. பார்க்காமல் கட்டுரையை மட்டும் அளித்துவிட்டுத் திரும்பிவிட்டார். […]

Read more