தொல்காப்பியர் விளக்கும் திருமணப் பொருத்தம்

தொல்காப்பியர் விளக்கும் திருமணப் பொருத்தம், மூதறிஞர் தமிழண்ணல், தமிழ்ப் பேராயம், ராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர் 603203, பக். 80, விலை 45ரூ. தொல்காப்பியம் தமிழின் தொன்மையான நூல், தமிழின் பண்பட்ட இலக்கணச் செறிவைக் காட்டுவதோடு, தமிழர் வாழ்வியல் பற்றியும் விளக்குவது இது. எழுத்திற்கும், சொல்லிற்கும் எல்லா மொழிகளிலும்இலக்கணம் உண்டு. அகம்,புறம் என வாழ்வுக்கும் இலக்கணம் வகுக்கும் நூல் தொல்காப்பியம். மூதறிஞர் தமிழண்ணல் புலமையருள் புலமையர் தொல்காப்யித்தை முழுதுணர்ந்து கற்று உரை கண்ட அறிஞர். தொல்காப்பியத்துள் தலைவன் தலைவியர் இலக்கணம் வகுத்துள்ளபாங்கில், இருவர்க்கு இடையிலான […]

Read more

கட்டுரைக் களஞ்சியம்

கட்டுரைக் களஞ்சியம், முனைவர் மு. இளங்கோவன், வயலவெளிப் பதிப்பகம், இடைக்கட்டு, உள்கோட்டை (அஞ்சல்), அரியலூர் 612 901, பக். 160, விலை 150ரூ. செம்மொழித் தமிழ் ஆய்வு இளைஞர் விருது பெற்றவர் நூலாசிரியர். 24 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். கிரந்த எழுத்துக்கள் பற்றிய முதல் கட்டுரையும், இறுதிக் கட்டுரையும் அறிஞர்கள் சிந்தனைக்குரியவை. கிரந்த எழுத்துக்களை நீக்கித் தமிழில் எழுத முடியும் என்பதே உண்மை. தமிழில், எழுத்துச் சீர்திருத்தம் இனியும் வேண்டுவதில்லை. 1978ல் தமிழக அரசு செய்த மாற்றம் போதுமானது. நடைமுறையிலும் பழகிவிட்டது. இனியும் சீர்திருத்தம் […]

Read more

அநீதி, நீதி, சமூக நீதி

அநீதி, நீதி, சமூக நீதி, தேவ். பேரின்பன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41, பி. சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, பக். 126, விலை 60ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-006-8.html ஆசிரியர் தேவ். பேரின்பன், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர். மார்க்சியக் கொள்கைகள், தமிழியல் ஆய்வுகள், விவாதங்களை முன்னெடுக்கும் சமூக விஞ்ஞானம் இதழின் நிர்வாக ஆசிரியர். மார்க்சிய நோக்கிலான பல நூல்களின் ஆசிரியர் என்பதன் மூலம் இந்நூலின் சிறப்பை உணர்ந்து […]

Read more