ராமாநுஜர்

ராமாநுஜர், இந்திரா பார்த்தசாரதி, கவிதா பப்ளிகேஷன், பக்.176, விலை ரூ.160. ராமாநுஜரின் வாழ்க்கை, சிந்தனை, ஆற்றிய அரும் பணிகள் ஆகியவற்றை எளிமையான முறையில் மக்களுக்குக் கொண்டு செல்லும்வகையில் நாடக வடிவத்தில் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. நூலாசிரியர் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பதை போன்று, தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒருவர் எப்படி நமக்குச் சம காலத்தவராய் ;இருக்கிறார் என்பதை உணர்த்துவதே இந்நாடகத்தின் நோக்கமாகஇருக்கிறது. ராமாநுஜர் ஜாதி வேறுபாட்டை ஒழிக்கும் வகையில், வைணவம் அனைவருக்கும் உரித்தானது என்று அறிவித்தார். சமூக விளிம்பிலிருந்த பஞ்சமர்களையும் வைணவர்களாக்கி அவர்களைத் திருக்குலத்தார் என்றழைத்தார் என்று முன்னுரையில் […]

Read more

வீழ்வேன் என்று நினைத்தாயோ?

வீழ்வேன் என்று நினைத்தாயோ?, மாலன், கவிதா பப்ளிகேஷன், பக்.128, விலை ரூ.100. பத்திரிகையாளர், விமர்சகர், இலக்கியவாதி என பன்முகத் தன்மை கொண்ட மாலன் "தினமணிகதிரில் தொடராக எழுதியபோதே பெருவாரியான வாசகர்களால் மிகவும் ;நேசித்து வாசிக்கப்பட்ட கட்டுரைகள் தற்போது புத்தகமாக வெளிவந்திருக்கிறது லீ காங் சியான் புலமைப் பரிசிலைப் பெற்ற மாலன் சிங்கப்பூரில் தங்கியிருந்து இந்தநூலை எழுதியதாக நூலின் முகப்புரையில் குறிப்பிட்டிருந்தாலும், அவருக்கும் சிங்கப்பூருக்குமான தொடர்பு என்பது இதயத்திலிருந்து எழுத்து வழியாகவே வெளிப்பட்டிருப்பதை நூல் வெளிப்படுத்துகிறது/ நூலில் இடம் பெற்ற 20 கட்டுரைகளும், தலைப்பு முதல் […]

Read more

மௌனத்தின் நிழல்

மௌனத்தின் நிழல், கர்ணன், கவிதா பப்ளிகேஷன், பக்.320, விலை ரூ.280. விடுதலைப் போராட்டத்தைப் பின்புலமாகக் கொண்டு தமிழில் ஏற்கெனவே பல புதினங்கள் வந்துள்ளன. இதுவும் அவ்வகையிலானதுதான் எனினும், குறிப்பிட்ட ஓர் ஊரை மட்டுமே கதைக்களமாகக் கொண்டிருப்பதாலும், நிஜத்தில் வாழ்ந்து மறைந்தவர்களே கதாபாத்திரங்களாக இடம் பெற்றிருப்பதாலும் மற்றவற்றிலிருந்து வேறுபடுகிறது. ஆன்மிக நகரமாக அறியப்பட்டிருக்கும் மதுரை, தென்னிந்தியாவின் அரசியல் எழுச்சிக்குக் காரணமாக இருந்ததை ஏராளமான உண்மை நிகழ்வுகள் மூலம் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார் ஆசிரியர். தொடக்கத்தில் காவல்துறை அதிகாரி சேதுராமன் மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்வதைப் படிக்கும்போதே […]

Read more

சித்தம் அழகியார்

சித்தம் அழகியார், சுகி.சிவம், கவிதா பப்ளிகேஷன், பக்.184, விலை ரூ.100. சமூக அக்கறையுடன் கூடிய ஆன்மிகக் கருத்துகளை இந்த பூமியில் விதைத்து வரும் சொற்பொழிவாளரும், எழுத்தாளருமான நூலாசிரியரின் கருத்துக் குவியலே இந்நூல். மனவிகாரம் உடைய இந்த மனித சமூகத்தில் ‘சித்தம் அழகியவர்கள்‘ நம் கண்களுக்குப் பளிச்சென தெரிவதை தனக்கே உரித்தான பாணியில் 24 தலைப்புகளில் எடுத்துரைத்துள்ளார் நூலாசிரியர். இறையடியார்கள் எந்தப் புகழுக்கும் மயங்காதவர்கள். அவர்கள் ஆணவம் தலைக்காட்டாது அடக்கம், பணிவு, எளிமை, ஒடுக்கம் உள்ளிட்ட பண்புகளின் உறைவிடமாய் திகழ்பவர்கள். அப்படிப்பட்ட உதாரண புருஷர்கள்தான் சித்தம் […]

Read more

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

நாலாயிர திவ்யப் பிரபந்தம், அழகர் நம்பி, கவிதா பப்ளிகேஷன், தொகுதி 1, பக்.416, தொகுதி 2, பக்.448, தொகுதி 3, பக்.288, தொகுதி 4, பக்.496, மொத்த பக். 1,648, நான்கு தொகுதிகளும் சேர்த்து விலை ரூ.1,200. ‘அடைவதற்கான வழியும், அடையப்பெறும் பொருளும் (சாதனம், சாத்தியம்) நானே‘ என்கிறார் (‘மாமேகம் சரணம் வ்ரஜ‘ – பகவத் கீதை) ஸ்ரீகிருஷ்ணர். இதை நன்கு உணர்ந்தவர்களே பன்னிரு ஆழ்வார்கள். இவர்கள் வைணவத்தையும், தமிழையும் தழைத்தோங்கச் செய்ததுடன், பக்தி இலக்கியத்தையும்; அந்தாதி, மடல், தாண்டகம், எழுகூற்றிருக்கை, பாவை, பள்ளியெழுச்சி […]

Read more

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

நாலாயிர திவ்யப் பிரபந்தம், அழகர் நம்பி, கவிதா பப்ளிகேஷன், தொகுதி 1, பக்.416, தொகுதி 2, பக்.448, தொகுதி 3, பக்.288, தொகுதி 4, பக்.496, மொத்த பக். 1,648, நான்கு தொகுதிகளும் சேர்த்து ரூ.1,200. அடைவதற்கான வழியும், அடையப்பெறும் பொருளும் (சாதனம், சாத்தியம்) நானே என்கிறார் மாமேகம் சரணம் (வ்ரஜ – பகவத் கீதை) ஸ்ரீகிருஷ்ணர். இதை நன்கு உணர்ந்தவர்களே பன்னிரு ஆழ்வார்கள். இவர்கள் வைணவத்தையும், தமிழையும் தழைத்தோங்கச் செய்ததுடன், பக்தி இலக்கியத்தையும்; அந்தாதி, மடல், தாண்டகம், எழுகூற்றிருக்கை, பாவை, பள்ளியெழுச்சி முதலிய சிற்றிலக்கிய […]

Read more

இந்தியாவின் தோற்றமும் வரலாறும்

இந்தியாவின் தோற்றமும் வரலாறும், கே. வெங்கட்ராமன், கவிதா பப்ளிகேஷன், பக். 352, விலை 250ரூ. ‘இந்தியா பிறந்தது’ முதல் ‘இந்தியா சுதந்திரம் அடைந்தது’ ஈறாக, 16 தலைப்புகளில் கற்கால மனிதர்கள், சிந்து சமவெளி நாகரிகம், வேத காலம், புத்த, ஜைன மத காலம், கிறிஸ்துவுக்குப் பின் இந்தியா, அரேபிய படையெடுப்பு, விஜயநகரப் பேரரசு, முகலாயப் பேரரசு, ஆங்கிலேயர் வருகை, இந்திய சுதந்திரம், செண்பகராமன் வரலாறு இப்படியாக நூலாசிரியர் தனக்குத் தெரிந்த கருத்துக்களை எல்லாம் இந்நூலில் பதிவு செய்துள்ளார். ‘இயக்கர்கள்’ என்ற பழங்குடியினர், ‘யக் ஷர்கள்’ […]

Read more

அசுரக் கலைஞன் எம்.ஆர்.ராதா

அசுரக் கலைஞன் எம்.ஆர்.ராதா, கவிதா பப்ளிகேஷன், விலை 100ரூ. நீயே உனக்கு நிகரானவன் ஏழு வயதில் எம்.ஆர்.ராதா ஆலந்தூர் மன மோகன ரங்கசாமியின் நாடகசபாவில் இணைகிறார். “கிருஷ்ண லீலா’ நாடகத்தில் பாலகிருஷ்ணனாக நடிக்கிறார். அதன் பிறகு பல சபாக்கள், பல மேடைகள். பால மீன ரஞ்சனி சங்கீத சபாவில் மட்டும் 15வருட அனுபவம்; சமூக சீர்திருத்தக்ப கருத்துகள் உடைய அவருக்கு, பெரியார், அண்ணாவுடன் பரிச்சயம் உண்டாகிறது. எம்.ஜி.ஆர், சிவாஜி, மு.கருணாநிதி ஆகியோருடனான நாடக அனுபவங்கள் கிடைக்கின்றன. கி.ஆ.பெ.விசுவநாதம் எழுதிய “இழந்த காதல்’\ நாடகத்தை பல […]

Read more

கணையாழிக் கதைகள் (1995-2000)

கணையாழிக் கதைகள் (1995-2000), தொகுப்பு ஆசிரியர்கள்: ம.ரா., க.முத்துக்கிருஷ்ணன், வேல் கண்ணன், கவிதா பப்ளிகேஷன், பக். 288, விலை ரூ. 210. நவீன தமிழ் இலக்கியத்தில் “கணையாழி’ என்ற பெயர் பல உணர்வுகளைத் தூண்டக் கூடியது. நவீனம் என்றால் 1960-களுக்குப் பிந்தைய நவீன காலம். ஆனால் இப்போது விமர்சனத்துக்கு வந்துள்ள புத்தகம், புதிய தலைமுறையின் தலைமையின் கீழ் வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பு. ஒரே இதழிலிருந்து மூன்று கதைகள் கூட இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. மிகத் தரமான கதைகள் மட்டுமே ஒவ்வோர் இதழிலும் வெளிவந்ததை இது காட்டுவதாகக் […]

Read more

அசுரக் கலைஞன் எம்.ஆர்.ராதா

அசுரக் கலைஞன் எம்.ஆர்.ராதா, ஆர்.சி.சம்பத்,கவிதா பப்ளிகேஷன், விலை 100ரூ. திராவிட இயக்க முன்னோடிக் கலைஞன், புரையோடிப்போன மூட நம்பிக்கைகளைச் சாடி, அறிவுக்கண் திறக்கச் செய்த கலையுலக ஆசான்/ நடிகனைப்போல சமூகப் புரட்சியாளன், புரட்சியாளனைப் போன்ற தலைசிறந்த நடிகன், இத்துனைக்கும் மேலே, திரைப்படங்களால் வில்லனாக மக்களிடையே சித்தரிக்கப்பட்ட அவர், தனி மனித வாழ்க்கையில் எப்படி ஒரு உன்னத மனிதனாக இருந்தார் என்கிற ரகசியத்தையும் இந்த நூல் மூலம் அறிய வைக்கிறார் நூலாசிரியர் ஆர்.சி.சம்பத். நன்றி: தினத்தந்தி, 28/12/2016.

Read more
1 2 3 4 7