மூன்றாம் கதாநாயகன்

மூன்றாம் கதாநாயகன், ஏ. நடராஜன், கவிதா பப்ளிகேஷன், சென்னை, விலை 160ரூ. பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு. இதில் 21 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. அன்பு வேறு, காதல் வேறு என்பதை எடுத்துக்காட்டும் கதை மூன்றாம் கதாநாயகன். மனைவி இருக்க மற்றவள் மீது மோகம் கொண்டால் குடும்பம் என்னவாகும் என்கிறது என்ன குறை என்ற கதை. ஒரு குடும்பத்திற்கு கணவனோ, மனைவியோ நல்லவிதமாக அமையவில்லை என்றால் அந்த குடும்பத்தின் கதி என்னவாகும் என்பதை காட்டும் வித்தியாசமான நட்பு என்ற கதை. […]

Read more

இவள் நெருப்புக்கு இணையானவள்

இவள் நெருப்புக்கு இணையானவள், ஞா. சிவகாமி, மணிமேகலை பிரசுரம், பக். 136, விலை 100ரூ. இத்தனை சிறிய நாவலில், எத்தனை எத்தனை விஷயங்களைப் பற்றி ஆசிரியை பேசுகிறார் என்ற பிரமிப்பு உண்டாகிறது. வாழ்க்கையில் பலதரப்பட்ட அனுபவங்களை இவர் பெற்றிருப்பதால், ஒவ்வொரு தனிப்பட்ட அனுபவத்தையும், ஒவ்வொரு அத்தியாயங்களாக்கி, இந்த நாவலைச் செய்திருக்கிறார். பீக் ஹவர் பஸ் பயண அனுபவம், லஞ்ச ஊழல்கள், ஜாதி வேற்றுமைகள், முதியோர் இல்லத்தில் அவதியுறும் முதியவர்கள் என, பல பிரச்னைகளை இந்த நாவலில் அலசுகிறார். இவர் தலைமைச் செயலகத்தில் பணியில் இருந்தவர் […]

Read more

கடைசிக்கோடு

கடைசிக்கோடு, ரமணன், கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 80ரூ. இந்தியாவின் வரைபடம் முதன் முதலாக 1806ம் ஆண்டு எவ்வாறு தயாரிக்கப்பட்டது? அதன் மூலம் இமயத்தின் உயரமான சிகரம் எவரெஸ்ட் என்பது எப்படி கண்டறியப்பட்டது? என்பது போன்ற பல தகவல்கள் நாவல் போல சுவைபட தரப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 2/1/2014.   —-   உடல் உண(ர்)வு மொழி, தே. சவுந்தரராஜன், விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி, கோயம்புத்தூர் 1, விலை 80ரூ. எப்போது உண்ணக்கூடாது, எதை […]

Read more

சென்னை மாநகர்

சென்னை மாநகர், மா.சு. சம்பந்தன், இந்திய பண்பாட்டு ஆய்வு மையம், மாங்காடு. சென்னையின் வரலாற்றை, பல்வேறு தகவல்களுடன் விளக்கும் நூல், 1911ம் ஆண்டுக்கும் முன், சென்னைத் தெருக்களில் விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் விளக்குகளே பயன்பாட்டில் இருந்தன. பிறகுதான் மண்ணெண்ணெய் விளக்குகள் வந்தன. 1911ல் நகரில் 6269 மண்ணெண்ணெய் விளக்குகள் இருந்தன. பவுர்ணமிக்கு முதல் நாளும், பவுர்ணமி அன்றும், விளக்கேற்றுவதற்காக விடுமறை விடப்பட்டது. 1942ல் சென்னை முழுக்க மின்விளக்கு மயமானது. பின்பு, தெரு சந்திப்புகளில், மின் கடிகாரங்கள் வைக்கப்பட்டன. ஆனால், பல கடிகாரங்கள் சரியான நேரத்தைக் […]

Read more

அவ்வையார் அருளிய நல்வழி

அவ்வையார் அருளிய நல்வழி, கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தியாகராயர் நகர், சென்னை 17, விலை 150ரூ. வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்வதற்கு அவ்வையார் கூறி சென்ற வழியில் தெளிவு காணத்துடிக்கும் ஒவ்வொருவருக்கும் விடையளிக்கும் நூல் இது. பேராசிரியர் நல்லூர் சா. சரவணன் 41 தலைப்புகளில் அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் சமுதாயம் சார்ந்த வாழ்வியல் செயல்களை எளிமையான நடையில் தந்துள்ளார். இந்த நூலில் இடம் பெற்றுள்ள தத்துவ கருத்துக்கள் படிப்பவர்களுக்கு மனித மாண்புகளை வளர்த்துக்கொள்ள உதவுகிறது. அவ்வையார் பற்றி ஆய்வுகள் மேற்கொள்பவர்களுக்கும் […]

Read more

வாழ்க்கைக் கோயில்கள்

வாழ்க்கைக் கோயில்கள், மயன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை சென்னை 2, விலை 115ரூ. கோயில்கள் பற்றிய புத்தகங்கள் தமிழில் நிறைய வந்துள்ளன. அவற்றில் இந்நூல் வித்தியாசமானது. முக்கியமானது. திருமணத்தடை நீக்கும் கோயில்கள் பிரிந்தவர் கூடிட வழி செய்யும் தலங்கள், வம்ச விருத்திக்கு அருள் பாலிக்கும் ஆலயங்கள், கண்ணொளி தரும் திருத்தலங்கள் இவ்வாறு பல்வேறு தலைப்புகளில் ஆலயங்களின் சிறப்பை விவரித்திருப்பது சிறப்பாக உள்ளது. இந்தப் பரிகார கோயில்கள் எங்கே உள்ளன. அங்கு எப்படிப் போவது என்பவை போன்ற பயனுள்ள குறிப்புகளும் தரப்பட்டுள்ளன. படங்கள் கண்ணைக் […]

Read more

வால்மீகி இராமாயணம்

வால்மீகி இராமாயணம், அழகர் நம்பி, கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 200ரூ. எத்தனை முறை படித்தாலும் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய அனுபவத்தைத் தரக்கூடிய, காலத்தால் அழியாத காவியமான ராமாயணத்தை பலரும் பல வழிகளில் எடுத்துக் கூறி இருக்கிறார்கள். வால்மீகி முனிவர் அருளிய ராமாயணத்தை எளிய தமிழில் ஒரு நாவல்போல சுவைபட கொடுத்து இருப்பது புதுமை என்பதோடு, ராமாயணத்தின் மீது ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தும் கருவியாக இந்த நூல் அமைந்து இருப்பது பாராட்டுக்குரியது. உத்ர காண்டம் […]

Read more

விட்டு விடுதலையாகி

விட்டு விடுதலையாகி, வாஸந்தி, கவிதா பப்ளிகேஷன், தபால்பெட்டி எண்-6123, 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17. பாரதி தன் மனைவியைப் பார்த்துப் பாடியதாகக் கூறப்படும் பாடலின் தொடக்கம்தான் புதினத்தின் தலைப்பு. பல தலைமுறைகளுக்கு வேதனையும் அவமானமும் அனுபவித்த ஒரு குலத்தினரைப் பார்த்து, சிட்டுக்குருவியுடன் ஒப்பிட்டு பாரதி ‘விட்டு விடுதலையாகி நிற்பாய்’ என்று தார்மீக கோபத்துடன் ஆலோசனை கூறியிருக்கக்கூடும்தான். நாயகி கஸ்தூரி வாழ்வின் இறுதிக் கட்டத்தில் கிடக்கிறாள். அவங்க இறந்துட்டாங்கன்னா சாமி (இறைவன்) தீட்டு பார்க்கணும்கிறீங்களா? என்ற கோயில் காவலாளியின் கேள்விக்கு, ஆமாம் […]

Read more

ஏற்றம் தரும் மாற்றம்

ஏற்றம் தரும் மாற்றம், புதிய தலைமுறை பதிப்பகம், 25ஏ, என்.பி. இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஈக்காட்டுதாங்கல், சென்னை 32, விலை ரூ.170. படிப்பறிவு இல்லாவிட்டாலும் பட்டறிவும், விடாமுயற்சியும், தொடர் பயிற்சியும் இருந்தால், யார் வேண்டுமானாலும் வெற்றி பெற முடியும் என்பதை உணர்த்தும் நூல். எளிய முறையில் மதிப்புக் கூட்டுதல் தொழில் மூலம் வெற்றி பெற்ற பலரது அனுபவங்களை தொகுத்தளிக்கிறார் வீ. அரிதாசன். நன்றி: தினத்தந்தி, 4/12/13.   —-   அவ்வையார் அருளிய நல்வழி (வாழ்வியலுரையும் தத்துவார்த்தமும்), கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், […]

Read more

இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள்

இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள், இந்திரா பார்த்தசாரதி, கவிதா பப்ளிகேஷன், பக். 400, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-863-4.html கும்பகோணத்தில் பிறந்து, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற, டில்லியில் தமிழ்ப் பேராசிரியராக கல்லூரியில் பணிபுரிந்து, தமிழில் நிறைய எழுதி, புகழ் பெற்ற இ.பா. கட்டுரைகளின் தொகுப்பு. அவரே கூறியுள்ளதுபோல, வெங்காயத்லிருந்து வெடி குண்டுவரை என, அனைத்து விதமான விஷயங்களையும் அலசி, ஆராய்ந்து, விமர்சித்து, பின்னிப்பெடலெடுத்து எபதப்பட்டுள்ள கட்டுரைகள். சவை, சுவாரஸ்யம், காரசாரம், வம்பு என எல்லாம் அடக்கம். […]

Read more
1 2 3 4 5 6