புனித அன்னை தெரசா

புனித அன்னை தெரசா, குன்றில்குமார், குறிஞ்சி வெளியீடு, பக். 216, விலை 190ரூ. ஒழுக்கம், கட்டுப்பாடு, சேவையின் திலகமாக வாழ்ந்த அன்னை தெரசாவின் அழியா புகழைக் கூறுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 13/11/2016.   —- நின்று ஒளிரும் சுடர்கள், உஷாதீபன், கவிதா பப்ளிகேஷன், பக். 184, விலை 130ரூ. காலத்தால் அழியாத சிறந்த திரைப்படக் கலைஞர்களின் நடை சித்திரங்களை பிரதிபலிக்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 13/11/2016.

Read more

காற்றினிலே வரும் கீதம்

காற்றினிலே வரும் கீதம், ரமணன், கவிதா பப்ளிகேஷன், பக். 264, விலை 800ரூ. இசையரசியின் வாழ்க்கைப் பயணம் இசையரசி எம்.எஸ்.,ஸின் வாழ்க்கை வரலாறு ஏற்கனவே பலரால் எழுதப்பட்டு வெளிவந்திருந்தாலும் அவரது நூற்றாண்டை ஒட்டி வெளியாகிஇருக்கும் இந்த நூல் தனிச் சிறப்புடன் விளங்குகிறது. எம்.எஸ்.,ஸின் வாழ்க்கையின் உன்னத தருணங்களை மிகுந்த உணர்ச்சிகரமான நடையில் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். எம்.எஸ்., ஆறு வயது குழந்தையாக இருந்தபோதே, ‘ஆனந்தாரா’ என்ற மராட்டியப் பாடல் அருமையாக நம் முன்னால் பாடியதிலிருந்து, அவரது வாழ்நாள் இறுதி வரை எதிர்பாராத பல சம்பவங்களே […]

Read more

வைதீஸ்வரன் கதைகள்

வைதீஸ்வரன் கதைகள், எஸ்.வைதீஸ்வரன், கவிதா பப்ளிகேஷன், பக்.304, விலை ரூ. 225 தமிழில் புதுக்கவிதையின் மறுமலர்ச்சிக் காலத்தில் கவனிக்கத்தக்க கவிஞராக அறிமுகமானவர் எஸ். வைதீஸ்வரன். பிறகு சிறுகதைகளையும் எழுதத் தொடங்கினார். அவர் சிறந்த நவீன ஓவியரும்கூட. அந்த வகையில் இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளில் பலவும் ஒரு கவிஞனின், ஓர் ஓவியனின் மன ஓட்டத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளன. “பிம்பம்’ என்ற கதை ஒரு மூதாட்டியைப் பற்றியது. “கதையாக’ அது தொடங்கினாலும், முடியும்போது அதற்கு ஒரு கவித்துவம் வந்துவிடுகிறது. அந்தக் கவித்துவ அம்சம்தான் நம் நெஞ்சைத் […]

Read more

சிக்குவானா? சிக்குவாளா?

சிக்குவானா? சிக்குவாளா? , ஜோதிர்லதா கிரிஜா, கவிதா பப்ளிகேஷன், பக்.160; ரூ.125; சமூகக் கதைகளையும், குடும்பக் கதைகளையும் எழுதி வந்த ஜோதிர்லதா கிரிஜா, ஓர் அருமையான துப்பறியும் நாவலை எழுதியுள்ளார். ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்பு குறையாமல் யார் கொலை செய்தது என்ற புதிர் வெளிப்படாமல் வெகு நேர்த்தியாக எழுதியுள்ளார். இன்ஸ்பெக்டர் மணவாளனும், சப்-இன்ஸ்பெக்டர் சிவதாணுவும் கொலைகாரன் யார் என்று எல்லா கோணங்களிலும் துப்பறிந்து கொலையாளியைக் கண்டுபிடிக்கிறார்கள். கலாவதி என்கிற பெண் கொல்லப்படுகிறாள். இறந்த அவளின் மூடிக் கிடந்த கைகளில் இருந்த ஒரு பேனா […]

Read more

சுப்ரஜா சிறுகதைகள்

சுப்ரஜா சிறுகதைகள், சுப்ரஜா, கவிதா பப்ளிகேஷன், பக். 544, விலை 400ரூ. வெவ்வேறு சூழ்நிலைகளில் சுப்ரஜா எழுதிய கதைகளின் தொகுப்பு. வீடென்று எதைச் சொல்வீர்? இன்றைய ஃபிளாட் மயமாகலில் நகரத்தின் ஆன்மா சிதைந்து போவதை வலியோடு சொல்லும் கதை. எல்லாமே இது மாதிரி மனதைப் பிசையவைக்கும் கதைகள்தான். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 04/5/2016.   —- திமிரும் நீயும் ஒரே சாயல், ஷர்மிவீரா, வாசகன் பதிப்பகம், பக். 96, விலை 75ரூ. காதலர்கள் தங்களை அடையாளம்காண வைக்கும் பாசாங்கற்ற கவிதைகள். -இரா. மணிகண்டன். […]

Read more

பாப்லோ நெருதாவும் ஈரோடு தமிழன்பனும்

பாப்லோ நெருதாவும் ஈரோடு தமிழன்பனும், ப. குணசேகர், கவிதா பப்ளிகேஷன், பக். 184, விலை 120ரூ. தென் அமெரிக்காவின், சிலி நாட்டுக் கவிஞன் பாப்லோ நெருதாவையும், தமிழன்பனையும் கவிதைகளால் உரசிப் பார்த்திருககிறார் நூலாசிரியர். மக்கள் கவிஞராக இருவரையும் பார்த்ததோடு மட்டும் அல்லாமல், இரு கவிஞர்களின் மேடைப் பிரம்மாண்டங்களையும் விரித்துப் படைத்துள்ளார். எட்டு தலைப்புகளில் இரு மொழிக் விஞர்களின் கவிதைகளைச் சாளரத்தின் வாயிலாகக் காட்டுகிறார். சில இடங்களில் கதவைத் திறந்தும் வெளிப்படுத்துகிறார். திறனாய்வு, விமர்சனம் எனும் எல்லைகளைக் கடந்து, இரண்டு பேரின் படைப்புகளையும் எடுத்து வைத்து, […]

Read more

மூன்றாம் கதாநாயகன்

மூன்றாம் கதாநாயகன், ஏ. நடராஜன், கவிதா பப்ளிகேஷன், சென்னை, விலை 160ரூ. இந்த நூலில் ஆண் – பெண் உறவு, காதல் என்ற வட்டத்தைச் சுற்றியே பெரும்பான்மையான கதைகள் பின்னப்பட்டு இருக்கின்றன. எல்லா கதைகளுமே, உரையாடல்களின் பலத்தால் நிமிர்ந்து நிற்கின்றன. நெறி தவறும் பெண்ணிடம்கூட, தெய்வீகக் குணங்கள் இருக்கும் என்கிறது, மூன்றாம் கதாநாயகன் என்ற கதை. குரு பக்தி இல்லாத சீடனை சித்தரிக்கிறது, குருவை மிஞ்சிய சிஷ்யன் என்ற கதை. சிறைப்பறவை என்ற கதையில், ஒரு இசை அரசியை நேசிப்பவன் சொல்கிறான், உங்கள் இசையை […]

Read more

தேவர் வருக

தேவர் வருக, இந்திரா பார்த்தசாரதி, கவிதா பப்ளிகேஷன், சென்னை, பக். 160, விலை 125ரூ. சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் தேவர் வருக குறுநாவலும் 6 சிறுகதைகளும் அடங்கிய நூல். நாவலாகட்டும், சிறுகதைகளாகட்டும் வெறும் கதைக என்கிற எல்லையத் தாண்டி, வாழ்க்கை பற்றிய பார்வையைத் தருகின்றன. இன்றைய அரசியல்வாதிகளின் செயல்பாடுகளை ஒருவித கிண்டல் தொனியுடன் விமர்சிக்கும் தேவர் வருக நாவல். அநியாயம், அக்கிரமம் செய்பவர்களைக் கடவுள் கண்டுகொள்ளமலிருக்கிறார் என்று எண்ண வேண்டாம். அவர் ஏதோ ஒரு வடிவத்தில் இப்போதும்கூட அக்கிரமக்காரர்களைத் தண்டித்துக் […]

Read more

சகுனி

சகுனி, விஜயராஜ், பூம்புகார் பதிப்பகம், பக். 543, விலை 410ரூ. மாபெரும் இந்திய இதிகாசமான மகாபாரதத்தில், சகுனி கதாபாத்திரம் முக்கியமானது. சூது, வஞ்சத்தின் தலைவனாக, சகுனி கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும். சகுனியின் மறுபக்கத்தை அலசியிருக்கிறார் ஆசிரியர். காந்தார நாட்டுத் தலைவன், காந்தாரியின் மகன், துரியோதனனின் தாய் மாமன் சகுனி என்ற அறிமுகம் சிறப்பாக உள்ளது. தான் கொண்ட சபதத்தை நிறைவேற்ற, பொறுமை காப்பதிலும், திட்டமிடுவதிலும், செயல்படுத்துவதிலும் சகுனி தீர்க்கமானவர் என்கிறார் ஆசிரியர். தங்கையின் வாழ்விற்காக, சகுனி செய்யும் காரியங்கள் அனைத்தையும் வாசிப்பவர் ஏற்கும்படி தர்க்க ரீதியில் […]

Read more

நல்லூர் மனிதர்கள்

நல்லூர் மனிதர்கள், அஸ்வத், ஆனந்தம் பதிப்பகம், தஞ்சாவூர், பக். 207, விலை 175ரூ. இந்த நூல், 20 ஆண்டுகள் கழித்து இரண்டாம் பதிப்பாக வெளிவந்துள்ளது. இந்நூல் வெளிவந்த காலத்துக்குப் பின்பு சமூகப் பழக்க வழக்கங்களும், நடைமுறைகளும் நிறையவே மாறிவிட்டன. இதனால், இந்த நூலின் தொன்மைத் தன்மையும் கூடியிருக்கிறது. அதனால், இந்த நூலைப் படிக்கும் வாசகர்கள் தங்களது மனநிலையை சற்றே பின்னோக்கிச் செலுத்தி கதை மாந்தர்களைக் காண வேண்டிய நிலை உள்ளது. நல்லூர், ஒரு மலை உச்சியிலிருந்து ஓர் ஊரை அப்படியே புகைப்படம் எடுத்தால் எப்படி […]

Read more
1 2 3 4 5 7