கண் தெரியாத இசைஞன்

கண் தெரியாத இசைஞன், விளாதீமிர் கொரலேன்கோ, தமிழில் – ரா. கிருஷ்ணையா, ஜீவா பதிப்பகம், பக். 286, விலை ரூ.200, அளவில் நூல் பெரிதல்ல என்றாலும் ரஷிய நாவல்களில் வாசித்த அல்லது வாசிக்கப் போகும் ஒவ்வொருவரையும் மறக்க முடியாமல் வைத்திருக்கச் செய்யும் பிரம்மாண்டமான வல்லமையைக் கொண்டது.  மனித மனதின் உள்ளுறை ஆழத்தை ஊடுருவிப் பார்த்து அதன் கலைச் சிந்தனையை மிகத் திறமையாக வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவரான கொரலேன்கோ, இந்த நாவலில் பிறப்பிலேயே பார்வையில்லாத ஒருவனை – பியோத்தர் – கதைநாயகனாகக் கொண்டு உண்மையான அகத்தின் […]

Read more

புரிந்துகொள்வோம் ஊரக உள்ளாட்சியை

புரிந்துகொள்வோம் ஊரக உள்ளாட்சியை, பேராசிரியர் க. பழனித்துரை, கோரல் பப்ளிஷிங் அண்ட் டிஸ்ட்ரிப்யூட்டர், பக். 216, விலை: ரூ. 230 உள்ளாட்சி அமைப்புகளின் பணி, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் எதிர்கொள்ளும் சவால்கள், எதிர்கொள்வது எப்படி என்பவற்றையெல்லாம் நூலாசிரியர் விளக்கியுள்ளார். உள்ளாட்சி என்பது ஒரு கூட்டுச் செயல்பாடு என்பதில் தொடங்கி, ‘தலைவர்கள் உருவாக்கம்’, ‘பேரிடர் மேலாண்மையில் உள்ளாட்சி’, ‘மாதிரி கிராமம் உருவாக்கல்’, ‘தேர்தல் முறை மாற்றங்கள்’, ‘நாம் செய்யத் தவறிய பணி’, ‘நூறு நாள் வேலை: ஒரு பார்வை’ உள்ளிட்ட தலைப்புகளில் 30 கட்டுரைகள் நூலில் இடம்பெற்றுள்ளன. […]

Read more

தமிழக வரலாற்று நூற்களஞ்சியம்

தமிழக வரலாற்று நூற்களஞ்சியம், முனைவர் அ.பிச்சை, கபிலன் பதிப்பகம், பக்.464, விலை ரூ.460. ‘வரலாறு என்பது ஓர் இனத்தின் வாழ்வுக்கும் வீழ்வுக்கும் சான்று கூறும் எழுத்துச் சின்னம்’ என்பதை, ‘தமிழ்நாட்டு வரலாறு’ என்ற நூலிலிருந்து தரும் நூலாசிரியர் வரலாற்றின் பயன், வரலாற்று முறையியல், தொல்லியலும் வரலாறும் ஆகியவை பற்றி முன்னோர் மொழிந்த மொழியைப் பதிவிட்டிருக்கிறார். ‘தொன்மைக்கால வரலாறு’ என்ற பகுதியில் மொழி, சிந்து சமவெளி நாகரிகம், அங்கு குடியேறிய திராவிடர்கள், ஆரியர்கள், மூத்த குடிகள் பற்றிய விவரம், மதுரை கீழடி, குமரிக்கண்டமும் லெமூரியாவும் என […]

Read more

வீரமாமுனிவர்

வீரமாமுனிவர், அமுதன் அடிகள், தனிநாயக அடிகள் தமிழியல் நிறுவனம், பக். 112, விலை ரூ.150. இத்தாலியில் உள்ள காஸ்ட்ரான் டெலி ஸ்ட்ரூவி என்ற ஊரில் 1680-இல் பிறந்த வீரமாமுனிவர், 1710-ஆம் ஆண்டில் தமிழகத்துக்கு வந்து தொண்டாற்றினார். அவரது தமிழ்த் தொண்டு, சமயத் தொண்டுகள் குறித்து பல்வேறு புத்தகங்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இத்தாலியில் அவர் பிறந்த ஊரின் சிறப்பு, குடும்பத்தினர் விவரம், அங்கு அவர் ஆற்றிய சமயத் தொண்டு என்று இத்தாலிக்கே சென்ற நூலாசிரியர் தான் தேடி திரட்டிய தகவல்களை விரிவாக வெளியிட்டுள்ளார். பெஸ்கி குடும்பத்தைச் […]

Read more

தம்மபதம்

தம்மபதம், பெளத்த அறநூல், மொழி பெயர்ப்பு: நல்லி குப்புசாமி செட்டியார், ப்ரெய்ன் பேங்க், பக். 80, விலை ரூ.75. பழைய நீதிநூல்களான அர்த்த சாஸ்திரம், சுக்ர நீதி, பர்த்ருஹரியின் நீதி சதகம், இன்னா நாற்பது இனியவை நாற்பது, வியாச கீதை போன்றவற்றுக்கு எளிய தமிழில் விளக்க நூல்கள் எழுதியது போன்று தம்மபதத்துக்கும் எளிய தமிழில் நூலாசிரியர் விளக்கம் தந்துள்ளார். பாலியில் கி.மு. 5-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டு, பின்னர் சம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, அதிலிருந்து ஜெர்மனி தத்துவஞானி மாக்ஸ்முல்லரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நூலை அடிப்படையாகக் கொண்டு […]

Read more

மீண்டும் ஒரு தொடக்கம்

மீண்டும் ஒரு தொடக்கம், வளவ.துரையன், சந்தியா பதிப்பகம், பக். 128, விலை ரூ.125. பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நூலாசிரியர், தனது 16 சிறுகதைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார். இந்தச் சிறுகதைகள் தினமணி கதிர் உள்ளிட்ட இதழ்களில் வெளியானவை. தனது வாழ்வில் நேரிட்ட அனுபவங்களைப் பெரும்பாலும் கதை வடிவமாக்கி இருப்பதாக முன்னுரையில் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு கதையையும் படிக்கப் படிக்க கிராமத்து பேச்சு நடையில் விறுவிறுப்பாகச் செல்கிறது. கதையின் தொடக்கத்தில் இருந்து, முடிவு வரை ஒவ்வொரு கதையும் சலிப்புத் தட்டாமல் செல்கிறது. வாழ்க்கை […]

Read more

வள்ளுவர் ஈன்ற முப்பால் தமிழகத்தில் பன்முக நோக்கும் போக்கும்

வள்ளுவர் ஈன்ற முப்பால் தமிழகத்தில் பன்முக நோக்கும் போக்கும், பேராசிரியர் தி. முருகரத்தனம், தமிழ்ச் சோலை, பக். 150, விலை ரூ. 150. தமிழில் அறம், பொருள், இன்பம் என்று கூறப்படும் முப்பாலுக்கும், வட மொழியில் தர்மார்த்தகாம மோட்சம் என்று கூறப்படும் அறம், பொருள், இன்பம், வீடு இவற்றுக்கும் இடையிலான ஒற்றுமையையும், வேற்றுமையையும் ஆராயும் ‘தென்தமிழ் முப்பால் மரபும் வடமொழி நாற்பால் மரபும்’ கட்டுரையில் தொடங்கி, தமிழ் இலக்கண- இலக்கியங்களில் உறுதிப் பொருள்கள், வள்ளுவரின் எழு பிறப்பு எழுப்பும் குழப்பம், இம்மையும் மறுமையும் – […]

Read more

பார்புகழும் பாம்பன் சுவாமிகள்

பார்புகழும் பாம்பன் சுவாமிகள், கு.சண்முக சுந்தரம், முல்லை பதிப்பகம், பக்.112, விலை ரூ.120. முருகப் பெருமானின் அருள்பெற்ற மகான், தவத்திரு பாம்பன் சுவாமிகள் அருளிய பகை கடிதல், குமாரஸ்தவம், ஷண்முகக் கவசம், வேற்குழவி வேட்கை, பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம் ஆகியவற்றின் மூலமும் உரையும் இணைந்த பதிப்பு இது. ஷண்முகக் கவசப் பாடல்கள் ஆற்றல் மிக்கவை. இதற்குமேல் மந்திரம் எதுவுமில்லை என்று வாரியார் சுவாமிகள் இந்தப் பாடல்கள் குறித்து நூலாசிரியரிடம் சிறப்பித்துக் கூறியுள்ளார். பாம்பன் சுவாமிகள் அம்மை நோயால் மிகவும் துன்புற்ற சமயத்தில் அவரால் இயற்றப்பட்டதுதான் […]

Read more

தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920

தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920, வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக்.720, விலை ரூ.630.   நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று, உள்ளாட்சிப் பிரதிநிதிகளாக 12,838 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சூழலில், தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம்,1920 எனும் நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் சட்டம்தான் நகராட்சிகள், பேரூராட்சிகளின் அனைத்து செயல்பாடுகளுக்கும் அடிப்படையாகும். இந்த நூலில் நகராட்சிகள், பேரூராட்சி மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், உறுப்பினர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் பணி என்ன? அவர்களுக்கான அதிகாரங்கள் எவை? என்பது குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. […]

Read more

ஒப்பிலக்கியக் கோட்பாடுகளும் பிறதுறை ஒப்பீடுகளும்

ஒப்பிலக்கியக் கோட்பாடுகளும் பிறதுறை ஒப்பீடுகளும், பேரா. சே. சாரதாம்பாள், மீனாட்சி புத்தக நிலையம்,  பக். 418, விலை ரூ.400.  ‘ஒப்பிலக்கியம்’ என்ற ஓர் இலக்கியம் சென்ற நூற்றாண்டில்தான் தோற்றம் பெற்றுள்ளது. இதன் தாயகம் ஐரோப்பா. பிறகுதான் இது உலகெங்கும் பரவியதாகத் தெரிய வருகிறது. இந்த ஆய்வை மேற்கொண்டிருப்பவர் ஒப்பிலக்கியத் துறையில் பேராசிரியராக இருப்பதால், அதுகுறித்த ஆழ்ந்த புரிதலுடன் நுட்பமாக சில செய்திகளை இந்தநூலில் பதிவு செய்திருக்கிறார். ஆய்வுத் தலைப்புக்கேற்ப இரு பகுதிகளாகப் பகுத்து, முதல் பகுதியில் ‘ஒப்பிலக்கியக் கருத்துருவாக்கமும் கோட்பாடுகளும்’ எனும் தலைப்பில் பிரெஞ்சு […]

Read more
1 2 3 180