நெசவு மொழி

நெசவு மொழி, முனைவர் சு.கார்த்திகேயன், காவ்யா, பக்.261, விலை ரூ.260. உலகில் பண்டையக் கலைகளுள் ஒன்று நெசவுக் கலை. தொன்மையான இந்த நெசவுத் தொழிலில் காலச் சுழற்சி, மனிதப் பயன்பாடு ஆகியவற்றுக்கேற்ப ஏற்பட்ட பல பரிணாமங்களையும், இந்தத் தொழிலின் பயன்படுத்தப்பட்ட தொன்மையான சொற்கள் பல அழிந்தும், சில நிலைபேறு அடைந்தும், பல புதிய சொல்லாகத் திரிந்தும், பிறமொழிச் சொற்களுடன் கலந்தும் உள்ள நிலையையும் இந்த நூல் எடுத்துரைக்கிறது.  குறிப்பாக ‘கோபி’ வட்டத்தை ஆய்வு எல்லையாகக் கொண்டுள்ள இந்த நூலில் கைத்தறி, விசைத்தறி என இரு […]

Read more

பதிபசு பாசப் பனுவல் மூலமும் உரையும்

பதிபசு பாசப் பனுவல் மூலமும் உரையும், மறைஞானசம்பந்தர், உரையாசிரியர் மறைஞானதேசிகர், டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம், பக். 150, விலை ரூ. 135. சைவ நெறியில் சமயக் குரவர் நால்வர் இருப்பதுபோலவே சந்தானக் குரவர் நால்வர் உளர். அவர்கள் மெய்கண்டார், அருணந்தி சிவம், மறைஞானசம்பந்தர், உமாபதி சிவம் ஆகியோர். இவர்களுள் அருணந்தி சிவத்தின் மாணாக்கரான மறைஞானசம்பந்தர் எழுதியது இந்நூல். சைவ சித்தாந்தத்தின் நுண்கருத்துகளை விளக்கும் இந்நூலுக்கு காண்டிகை உரை வரைந்திருப்பவர் மறைஞானதேசிகர். ஒவ்வொரு பாடலும் திருக்குறள் போல ஏழு சீர்களோடு ஒன்றேமுக்கால் […]

Read more

சித்தர்களின் மனிதச் சார்பியல் கொள்கை

சித்தர்களின் மனிதச் சார்பியல் கொள்கை, குருதேவ் முத்துக்கொத்தள மாரியப்ப செல்வராஜ், நர்மதா பதிப்பகம், பக். 378, விலை ரூ.300. இன்றைய நவீன அறிவியலின் அடிப்படைக் கோட்பாடாக அமைந்தது, ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாடு. ஆற்றலின் மதிப்பை அளவிட உதவும் இயற்பியல் கொள்கையான பொது சார்பியல் கோட்பாடு, பொருளின் நிறையையும் ஒளிவேகத்தின் இருமடங்கையும் பெருக்கினால் கிடைப்பதே ஆற்றலின் மதிப்பு என்று அளவிடுகிறது. இதை சுருக்கமாக E = mc2 என்ற சூத்திரமாக எழுதுவது வழக்கம். இது ஒரு வடிவியல் கணிதச் சமன்பாடாகும். அண்டத் தோற்றத்தை […]

Read more

ஜீவன் லீலா

ஜீவன் லீலா, குஜராத்தியில் – காகா காலேல்கர், தமிழில் – பி.எம்.கிருஷ்ணசாமி, பக்.480, விலை ரூ.385. குஜராத்தியில் “லோகமாதா’ எனும் பெயரில் வெளியான நூலின் தமிழாக்கமே “ஜீவன் லீலா’. இந்தியா முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக காணப்படும் அருவி, ஆறு, ஏரி இவற்றோடு சேர்ந்த கடல், கடல்-ஆறு சங்கமம், கடற்கரை குறித்து 70 தலைப்புகளில் நூலாசிரியர் இந்நூலில் விவரித்துள்ளார். ஒவ்வொரு தலைப்பிலும் தனது பயண அனுபவங்களோடு அதன் பின்புலமாக உள்ள புராண – இதிகாச குறிப்புகள், வரலாறு, அங்கு வாழும் மக்கள், பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட […]

Read more

இப்படித்தான் ஜெயித்தார்கள்

இப்படித்தான் ஜெயித்தார்கள், ஒரு பத்திரிகையாளனின் நேர்காணல்கள், மோ.கணேசன், பாரதி புத்தகாலயம், பக்.239, விலை ரூ.230. “அப்போது எங்கள் வீட்டில் கேட்பதற்கு வானொலி பெட்டி கூட இல்லை’ என்கிறார் பிரபல வானொலி அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத். பள்ளித் தேர்வில் நான்கு முறை தோல்வி அடைந்ததை சிரித்துக் கொண்டே கூறுகிறார் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன். சென்னை வந்த மூன்றே மாதத்தில் வீடு வாங்கினேன்- அப்போது எனக்கு வயது 15 என நம்மை புருவம் உயர்த்த வைக்கிறார் ஓவியர் ஸ்யாம். இதேபோன்று மணல் மாஃபியாக்களுக்கு முடிவு கட்டிய அமுதா ஐஏஎஸ், […]

Read more

தேசமே உயிர்த்து எழு!

தேசமே உயிர்த்து எழு!, டாக்டர் க. கிருஷ்ணசாமி, கிழக்கு பதிப்பகம், பக்: 216, விலை ரூ. 250. இந்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பது தவறு என்று கண்டிக்கும் “இந்தியா ஒன்றியமா?’ கட்டுரையில் தொடங்கி, “நேதாஜியின் மர்ம மரணம்’, “சாதி ஒழிப்பு நாடகம்’, “திராவிட பேரினவாதம்’, “வன்னிய இட ஒதுக்கீடு’, “மாறாத அமெரிக்கா’, “புதிய கல்விக் கொள்கை’, “எழுவர் விடுதலை’, “காலத்துக்குப் பொருந்தாத சாதிப்பட்டியல்’ உள்ளிட்ட 39 தலைப்புகளில் உள்ளாட்சி நிகழ்வுகளிலிருந்து உலக நாடுகளின் நடப்பு வரை சுருக்கமாகவும் தெளிவாகவும் விவரித்திருக்கிறார் நூலாசிரியர். […]

Read more

தேசியமும் திராவிடமும்

தேசியமும் திராவிடமும், துரை கருணா, எம்.ஜி.ஆர். பாசறை, பக் – 200, விலை ரூ. 300. தேசியமும் திராவிடமும் – என்ற இந்த நூலில் பெரும் பகுதி திராவிட இயக்கத்தின் வளர்ச்சி, ஆட்சி, அதிகாரம் குறித்து எழுதப்பட்டுள்ளது. மொத்தமாக 39 கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். தேசியம் என்று வரும் போது, காங்கிரஸ் பேரியக்கத்தின் ஆரம்ப கால சுதந்திரப் போராட்ட வீரர்களான வ.உ.சி, வாஞ்சிநாதன் வரலாற்றுச் சம்பவங்களுடன் தொடங்குகிறது. “வாஞ்சியின் தீவிரவாதச் செயலும் அவரது உயிரிழப்பும் தனக்கு உவப்பிலை’ என்று வ.உ.சி.யின் அறிக்கையை எடுத்துக்காட்டி […]

Read more

தமிழரைத் தேடி

தமிழரைத் தேடி, த.தங்கவேல், சமூக இயங்கியல் ஆய்வு மையம், பக்.326, விலை ரூ.250. ஓர் இனத்தின் பண்பாடுகளை வரையறுக்க அவ்வினத்தின் மொழியை முன்னிறுத்துவது உலக வழக்கம். அவ்வகையில் தமிழர்களுக்கும் தமிழுக்கும் நீண்ட நெடிய வரலாறு உண்டு. பிற இனத்தின் உடன்பாடான பண்பாட்டுக் கூறுகளையும் தமிழினம் உள்வாங்கியது. அதேநேரத்தில் தமிழினத்தின் தனித்துவமான அடையாளங்கள் பேணிக்காக்கப்பட்டன. தமிழர்களின் பண்பாட்டில் புகுந்த பிற இனங்கள் குறித்த ஆய்வுக்கு முக்கியத்துவம் அளித்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது. தமிழர்கள் யார், அவர்களின் பண்பாட்டு அடையாளங்கள் யாவை, அவர்களது தோற்றம், குடியேற்றங்கள் எங்கு எப்போது […]

Read more

பச்சைப் பாம்பும் அழகிய லில்லியும்

பச்சைப் பாம்பும் அழகிய லில்லியும், மூலம்: யொஹான் வோல்ப்கங்க் பான் கோதெ, தமிழில்: சுஜாதா ராஜகோபால், கார் முகில் எஜூகேஷனல் டிரஸ்ட், பக். 48; விலைரூ.80; ஜெர்மன் கவிஞர் ஷில்லெர் ‘ஹோரன்’ எனும் பத்திரிகைக்கு எழுதிய கடிதங்களில் தத்துவ ரீதியாக உள்ள கருத்துகளை மையப்படுத்தி உயிரோட்டமுள்ள கதையாக ஜெர்மானிய பன்முக ஆளுமை ‘கோதெ’வால் எழுதப்பட்டதுதான் இந்நூல். ஓர் உன்னதமான இலட்சிய சமுதாயம் எப்படி இருக்க வேண்டும்? என்பதை பஞ்சதந்திர வகைமையிலான கதை சொல்லும் பாணியில் எழுதியிருப்பது இந்நூலின் சிறப்பு. இந்தக் கதையில் வரும் பித்தளை, […]

Read more

பனை ஓலையும் பழந்தமிழும்

பனை ஓலையும் பழந்தமிழும், வி.ஜி.சந்தோசம், பழனியப்பா பிரதர்ஸ், பக்.140, விலை ரூ.125. பனை ஓலையும் பழந்தமிழும் என்ற நூலின் தலைப்புக்கேற்ப பனை ஓலை தொடர்பான அனைத்துத் தகவல்களும், பழந்தமிழர் வாழ்க்கை தொடர்பான அனைத்துத் தகவல்களும் இந்நூலில் நிரம்பியுள்ளன. மன்னர் காலத்துக்கு முன்பிருந்து மனிதர்களிடையே தகவல் தொடர்புகள் எவ்வாறு இருந்தன, அதில் ஓலைச்சுவடிகளின் பங்கு என்ன என்பதை நூல் தெளிவாக விளக்குகிறது. பனை ஓலை தொடர்பான கட்டுரையில் பனை மரத்தின் பயன்கள், பனைமரத்திலிருந்து கிடைக்கும் பொருள்கள், பனைத் தொழிலாளர்களின் வாழ்க்கை, பனை பொருள்களின் விற்பனை என […]

Read more
1 2 3 4 5 180