எங்க வாத்தியார்

எங்க வாத்தியார்,  கொற்றவன், வானதி பதிப்பகம், பக். 728, விலை ரூ.500. முதல்வர் எம்ஜிஆர் மறைந்து, 35 ஆண்டுகளாகியும் தமிழர்கள் மனதில் இன்றும் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார். அவரைப் பற்றி நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வெளிவந்தபோதிலும், எந்தப் புத்தகத்திலும் இல்லாத பல தகவல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. எம்ஜிஆரோடு நடித்த நடிகைகள், திரையுலகப் பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட 29 பேரிடம் பேட்டி கண்டு, நூலாசிரியர் அதை பிரசுரம் செய்துள்ளார். கடையெழு வள்ளல்கள் இருந்திருப்பது நமக்குத் தெரியும். ஆனால், நம்காலத்தில் அவர்களுக்கு இணையாக வாழ்ந்த வள்ளலாக, […]

Read more

ராஜீவ் காந்தி- அதிகாரம், ஆட்சி, அரசியல்

ராஜீவ் காந்தி- அதிகாரம், ஆட்சி, அரசியல், ஆர்.முத்துக்குமார், கிழக்கு பதிப்பகம், பக். 232, விலை ரூ. 250. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் வாழ்க்கை வரலாற்றை இந்நூல் எடுத்துரைக்கிறது. ராஜீவைப் பற்றி மட்டுமல்லாமல் அவரின் தாயாரும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி காலத்தில் நிகழ்ந்தவை, அந்தக் காலத்தில் காங்கிரஸின் செயல்பாடுகள், நாட்டின் நிலை, மக்களின் எண்ணவோட்டங்கள், மாநிலங்களின் அரசியல் சூழல், சர்வதேச நிகழ்வுகள் என அனைத்தையும் இந்நூல் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்திரா காந்தியின் படுகொலைக்கான காரணங்கள், அதற்குப் பிறகு நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள், […]

Read more

வல்லிக்கண்ணனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

வல்லிக்கண்ணனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள், தொகுப்பாசிரியர்: ‘மேலும்’ சிவசு, சாகித்திய அகாதெமி, பக்.288, விலை ரூ.240. மறைந்த எழுத்தாளர் வல்லிக்கண்ணனின் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இதில் இடம் பெற்றுள்ள கல்யாணி சிறுகதையில் வரும் இளம் பெண் கல்யாணி தன் வீட்டருகே உள்ள இளைஞர்களைக் கவர முயற்சிக்கிறாள். அரசுப் பணியில் இருக்கும் காசிநாதனுடன் திருமணம் நடக்கிறது. பிரிவும் நேர்கிறது. தந்தை வீட்டுக்குத் திரும்பும் கல்யாணி, மீண்டும் தன் வீட்டருகே உள்ள இளைஞர்களைக் கவர நினைக்கிறாள். ‘மலருக்கு மலர் தாவும் வண்டுகள் ஆண்கள் என்று குற்றம் […]

Read more

கலைஞர் என்னும் மனிதர்

கலைஞர் என்னும் மனிதர், மணா, பரிதி பதிப்பகம், பக். 352, விலை ரூ. 500. திராவிட இயக்கத்தின் முக்கியமான ஆளுமையாக, திமுக தலைவராக, மாநில முதல்வராக, திரைத்துறையில் சிறந்த வசனகர்த்தாவாக அறியப்படும் மு.கருணாநிதி, ஒரு மனிதராக எதிர்கொண்ட சவால்களையும், ஓயாத உழைப்பையும் பல்வேறு கட்டுரைகள், பேட்டிகள் மூலம் இந்நூல் விளக்குகிறது . சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக புரட்சி பேசி, தமிழ்த் திரைப்படங்களின் திசையை மாற்றிய “பராசக்தி’ படம் குறித்து அனைவருக்கும் தெரியும் என்றாலும், 1952-ஆம் ஆண்டு அந்தப் படம் வெளியாகும் முன்னர் சந்தித்த பிரச்னைகள், […]

Read more

திருத்தலங்களைத் தேடி

திருத்தலங்களைத் தேடி, வனஜா இளங்கோவன், மைதிலி வைத்தியநாதன், பத்மா பதிப்பகம், பக்.416, விலை ரூ.320. பாரத நாட்டை ஆன்மிகத்திலிருந்து விலக்கி நிறுத்த இயலாது. நாடு முழுவதும் கோயில்கள் நிறைந்திருக்கின்றன. கோயில்களுக்குச் சென்று வழிபடுவோருக்கு கோயில்களைப் பற்றிய பல்வேறு தகவல்களை இந்நூல் தொகுத்து வழங்குகிறது. இந்நூலின் ஆசிரியர்கள், பல சிறப்புகள் வாய்ந்த ஆலயங்களைத் தரிசித்து, ஒவ்வொரு திருக்கோயிலின் அமைவிடம், செல்லும் வழி, அமைப்பு, சிறப்பு, அதனுடன் தொடர்புடைய தொன்மச் செய்திகள், ஸ்தல விருட்சம் என கோயில் தொடர்புடைய பல தகவல்களைத் தொகுத்துத் தந்திருக்கிறார்கள்.  ஒரு கோயிலுக்குச் […]

Read more

மாங்குடி மருதனாரின் மதுரைக்காஞ்சி ஆய்வுரை

மாங்குடி மருதனாரின் மதுரைக்காஞ்சி ஆய்வுரை, ம.திருமலை, மீனாட்சி புத்தக நிலையம், பக்.400, விலை ரூ.350. மதுரைக்காஞ்சி நூலை ஆய்வு நோக்கில் எழுதியுள்ள நூலாசிரியர், தமிழரின் தொன்மை வாழ்க்கை முறைகளையும் இன்றைய நவீன வாழ்க்கையையும் ஒப்பிட்டும் எடுத்துக்கூறியுள்ளார். அதற்காகவே மனித இன வரலாற்றையும் நூலின் முதல் கட்டுரையான மதுரைக்காஞ்சி- நகர்மயமாதலின் பனுவலில் விரிவாக சுட்டிக்காட்டியுள்ளார். அன்றைய காலத்திலிருந்த மதுரையின் அமைப்பு, நகரில் வாழ்ந்த மக்களின் தொழில், அற வாழ்க்கைக்கு ஆலோசனை கூறும் அவை, நகரின் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றை புலவர்களின் பாடல்களை எடுத்துக்காட்டி விளக்கியிருக்கிறார் மதுரை […]

Read more

செவ்விலக்கியச் சொல்லாய்வுகள்

செவ்விலக்கியச் சொல்லாய்வுகள், வாணி அறிவாளன், அருண் அகில் பதிப்பகம், பக்.144, விலை ரூ.150. பழந்தமிழ் இலக்கியங்களில் வழங்கப்பட்டுள்ள குறிப்பிட்ட சில சொற்கள் குறித்த விரிவான ஆய்வு நூல் இது. தொல்காப்பிய முதல் அதிகாரத்தின் முதல் இயலான நூன்மரபு என்பது சரியா? நூல் மரபு என்று அதைப் புரிந்து கொண்டால் என்ன பொருள் தரும்? என்பன போன்ற வினாக்களுக்கு ஆய்வு நோக்கில் இந்நூல் விடையளிக்கிறது, ‘தொல்காப்பிய முதல் இயல் நூன்மரபு அன்று. நூல் மரபே’ என்ற முதல் கட்டுரை. கேண்மியா, சென்மியா என்று பழந்தமிழ் இலக்கியங்களில் […]

Read more

நானும் நீதிபதி ஆனேன்

நானும் நீதிபதி ஆனேன், சுயசரிதை, கே. சந்துரு, அருஞ்சொல் வெளியீடு, பக்.480, விலை ரூ. 500. முப்பதாண்டுகள் வழக்கறிஞராகவும் சுமார் ஏழு ஆண்டுகள் நீதிபதியாகவும் பணியாற்றி ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துருவின் தன் வரலாறெனக் குறிப்பிடப்பட்ட வரலாற்றுப் பதிவுகளின் தொகுதி இது. நூலில் 22 தலைப்புகளில் தாம் எடுத்துக் கொண்ட பொருள்களின்வழி தன்னுடைய வரலாற்றை மட்டுமல்லாமல், குறிப்பிட்ட காலகட்டத்தின் அல்லது பிரச்னையின் வரலாற்றையும் விரிவாக எடுத்துச் சொல்கிறார் சந்துரு. எண்ணற்ற மனித உரிமை வழக்குகளில் வாதாடி வெற்றி பெற்றவர்; மக்கள் கொண்டாடிய எண்ணற்ற தீர்ப்புகளை […]

Read more

சிலப்பதிகாரம் இனவரைவியல் நோக்கு

சிலப்பதிகாரம் இனவரைவியல் நோக்கு,  பெ.சுப்பிரமணியன், காவ்யா, பக்.170, விலைரூ.160. ஒரு சமூகத்தின் புவிச் சூழலியல், குடியிருப்புகள், பொருளாதாரம், குடும்ப அமைப்பு, திருமணம் உள்ளிட்ட சடங்குகளைத் தொகுத்துக் கூறுவது இனவரைவியல் ஆகும். சிலப்பதிகார காப்பியத்தை இனவரைவியல் கோட்பாடு முறையில் நூலாசிரியர் ஆய்வு செய்துள்ளார். சிலப்பதிகாரத்தில் வேட்டுவ வரி, குன்றக் குரவை, ஆய்ச்சியர் குரவை ஆகிய 3 காதைகளும் தொல்குடிகளின் வாழ்வியலைக் காட்டும் பகுதிகளாக உள்ளன. வேட்டுவ வரி இயலில் வேட்டுவ இனமக்களின் கூத்துகள், ஆடல்- பாடல், இசை, கொற்றவை வழிபாடு, பலியிடல் முதலிய பல்வேறு செய்திகள் […]

Read more

தமிழர் வரலாறு

தமிழர் வரலாறு, ப.பாலசுப்பிரமணியன், சங்கர் பதிப்பகம், பக்.208, விலை ரூ.200. இந்தியப் பகுதியில்தான் பூர்வ குடிகள் வாழ்ந்தனர் என்பதற்கான சான்றுகள் பல உள்ளன. தொல் உயிர்கள் தோன்றி, வளர்ந்து, பெருகியதும் இந்தியாவில்தான்; மனிதனும் அங்குதான் தோன்றி வளர்ந்திருக்கக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். கி.மு. நான்காயிரம் ஆண்டுகள் வரை இந்தியா முதல் பாரசீகம், எகிப்து, சைப்ரஸ், கிரேத்தா வரையில் ஒரே இனத்தைச் சேர்ந்த மக்களே வாழ்ந்தனர்; தென் பகுதியில் வாழ்ந்த மக்களே வடக்கிலும் இன்ன பிற இடங்களிலும் சென்று குடியேறினர். இந்த உலகில் இல்லாத ஒரு நிலப்பரப்பு […]

Read more
1 3 4 5 6 7 180