ஒளரங்கசீப்

ஒளரங்கசீப், ஆங்கிலத்தில்: ஆட்ரே ட்ரஷ்கெ, தமிழில்: ஜனனி ரமேஷ், கிழக்கு பதிப்பகம், பக்.158, விலை  ரூ.200. முகலாயப் பேரரசர்களில் மிகக் கொடூரமானவராகச் சித்திரிக்கப்பட்டவர் ஒளரங்கசீப். உண்மையில் ஒளரங்கசீப் கொடூரமானவரா என்பதை இந்நூல் ஆராய்கிறது. அமெரிக்க வரலாற்றாசிரியரான ஆட்ரே ட்ரஷ்கே, இது குறித்து பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில், ஒளரங்கசீப் பற்றி கூறப்படும் பல குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டவை என்ற முடிவுக்கு வருகிறார். ஒளரங்கசீப் ஆட்சிக் காலத்தில் நூற்றுக்கணக்கான கோயில்கள் அழிக்கப்பட்டன என்று கூறுவது உண்மையல்ல என்று கூறும் நூலாசிரியர், அவருடைய ஆட்சிக் காலத்தில் இடிக்கப்பட்ட இந்துக் கோயில்களின் எண்ணிக்கை பத்து […]

Read more

ஆயிரம் காந்திகள்

ஆயிரம் காந்திகள் , சுனில் கிருஷ்ணன், நன்னூல் பதிப்பகம்,பக்.148, விலை ரூ.120; காந்தியின் மறைவுக்குப் பிறகு காந்தியக் கொள்கைகளும் அழிந்துவிடும் என்கிற எண்ணம் பலருக்கும் இருந்தது. ஆனால் எதிர்காலத்திலும் காந்தியம் நிலைத்து நிற்கும் என்பதை இந்நூல் எடுத்துரைக்கிறது. சுந்தர்லால் பகுகுணா, ஜே.சி.குமரப்பா, பேக்கர், பாபா ஆம்தே உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த ஆளுமைகள் பெரும் சோதனை, மனப்போராட்டங்களுக்கு இடையே காந்தியடிகள் வலியுறுத்திய சத்தியம், அகிம்சைகளை எவ்வாறு கைக்கொண்டனர் என்பதை வரலாற்று நிகழ்வுகளுடன் இந்நூல் விளக்குகிறது. நிலையான பொருளாதாரச் சூழல் என்பது இயற்கைக்கு மாறாக இயங்க […]

Read more

சாதி பேதத்தை தகர்த்த இராஜாஜி

சாதி பேதத்தை தகர்த்த இராஜாஜி (ராஜாஜி 143-ஆவது பிறந்த நாள் வெளியீடு), ரெ.தே.பெ.சுப்ரமணியன், பக்.80, விலை குறிப்பிடப்படவில்லை. ‘இந்தியத் தலைவர்களிலேயே அதிகம் தவறாக அறியப்பட்டவர் ராஜாஜி’ என காந்தியடிகளே கூறுமளவுக்கு ராஜாஜிக்கு எதிரான அவதூறுகள் வலுப்பெற்றிருந்தன. ராஜாஜியின் கல்விக் கொள்கையை ‘குலக் கல்வித் திட்டம்’ என அடையாளப்படுத்தும் அளவுக்கு பிரசாரங்கள் வலிமையுடன் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் அந்தக் கல்வித் திட்ட வரைவில் எங்கேயும் அப்படிப்பட்ட உணர்வு இல்லை என்பதே உண்மை. எத்தொழிலும் இழிவானதல்ல என்ற எண்ணத்தை சமுதாயத்தில் விதைக்க வேண்டும் என்று நினைத்த ராஜாஜிக்கு கிடைத்தது […]

Read more

ஆதித்தநல்லூரும் பொருநைவெளி நாகரிகமும்

ஆதித்தநல்லூரும் பொருநைவெளி நாகரிகமும், சாத்தன்குளம் அ.இராகவன், அழகு பதிப்பகம், பக்.224, விலை ரூ.220. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான தமிழர் நாகரிகத்தை எடுத்தியம்பும் ஆதிச்சநல்லூர் அகழாய்வு குறித்த ஆய்வு நூல் இது. திருநெல்வேலி அருகே தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆதிச்சநல்லூர் பறம்பில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வே இந்தியாவின் முதல் அகழாய்வாகக் கருதப்படுகிறது. 1876- ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் சாகோர், ஆதிச்சநல்லூரில் மேற்கொண்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தாழிகள், மனித எலும்புகள், மண்பாண்டங்கள், இரும்புப் பொருள்கள் உள்ளிட்டவை பல ஆயிரம் ஆண்டுகள் பழைமையான நாகரிகத்தை […]

Read more

தமிழ்க் கவிதையியல்

தமிழ்க் கவிதையியல், தொகுப்பாசிரியர்: இரா.சம்பத், சாகித்திய அகாதெமி, பக்.608, விலை ரூ.440. சாகித்திய அகாதெமி சார்பில் “தமிழ்க் கவிதையியலும் யாப்பும்’ என்ற பொருண்மையில் நடந்த இரண்டு நாள் கருத்தரங்கில் வ.ஞானசுந்தரம், தமிழவன், செ.வை.சண்முகம், தி.இராஜரெத்தினம், ப.திருஞானசம்பந்தம் போன்ற ஆய்வறிஞர்களால் முன்வைக்கப்பட்ட 16 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.  செய்யுள் இயற்றுவதற்கு அடிப்படையான யாப்பிலக்கணத்தை தமிழ், கன்னடம் ஆகிய இரு திராவிட மொழிகளுடன் ஒப்பிடுகிறது ஒரு கட்டுரை. யாப்பின் அடிப்படையில் கவிதை எழுதுவதற்கு சொல் வளம் அவசியம். அந்தச் சொல் வளத்தைப் பெருக்குவதற்கு நிகண்டுகளைக் கற்பதும் அவசியம். […]

Read more

இலக்கிய முத்துக்கள் 20

இலக்கிய முத்துக்கள் 20 (என் வாசிப்பின் வாசம்),  ஜெ.பாஸ்கரன், அர்ஜுன் ராம் பப்ளிகேஷன்ஸ்,  பக்.184, விலை ரூ.200. தமிழின் புகழ்பெற்ற இருபது படைப்பாளிகளின் படைப்புகள் குறித்த விரிவான அறிமுகமாக மலர்ந்திருக்கிறது இந்நூல். அசோகமித்திரன், கி.ரா., ந.பிச்சமூர்த்தி, ஆ.மாதவன், தி.ஜானகிராமன், லா.ச.ரா., சுந்தரராமசாமி, இந்திரா பார்த்தசாரதி, ஜெயகாந்தன், எம்.வி.வெங்கட்ராம் உள்ளிட்ட தமிழின் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளைப் பற்றிய அருமையான பதிவாக மலர்ந்திருக்கிறது இந்நூல். இவர்களிலிருந்து சற்றே வேறுபடும் சுஜாதா, பாக்கிய ராமசாமி, ரா.கி.ரங்கராஜன், பரணிதரன், தேவன் ஆகியோரின் படைப்புகளைப் பற்றியும் பேசுகிறது. ஒரு படைப்பாளி, அவர் எழுதிய […]

Read more

உள்ளம் படர்ந்த நெறி

உள்ளம் படர்ந்த நெறி,  கோவை எழிலன், சந்தியா பதிப்பகம், பக்.200, விலை  ரூ.200.  தான் ரசித்துப் படித்த ஓர் இலக்கியக் காட்சியை நண்பர்கள் குழுவில் தினமும்பதிவிட்டதன் பயனாக உருவாகியிருக்கிறது இந்தத்தொகுப்பு. மொத்தம் நூற்று ஐம்பது காட்சிகள் உள்ளன. ஒவ்வொன்றுமே இலக்கியக் கடலில் கண்டெடுத்த முத்துக்கள் என்றே கூறலாம். கம்பராமாயணம், யுத்தகாண்டத்தில் உள்ள கடவுள் வணக்கப் பாடலுடன் தொடங்கி, ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வோர் இலக்கியக் காட்சியாக நமக்குக் காட்சிப்படுத்துகிறார் நூலாசிரியர். சீர்காழி திருப்பதியின் வருணனை, இராவணனை நற்பண்புள்ளவனாகக் காட்டும் பாவேந்தரின் பாடல், முழுமதி கிரகண நாளில் […]

Read more

நதியின் கடவுள்

நதியின் கடவுள் (சீன நாட்டுப்புறக் கதைகள்) , ரெவ்.ஜான் மேக்காவன், தமிழில்: திருமலை சோமு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,  பக்.200 ,  விலை ரூ.235. சீன வானொலியில் “கதைத்தேன்’ என்ற தமிழ் நிகழ்ச்சியில் ஒலிபரப்பான சீன நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்பே இந்நூல். துறவி, நகரத்தின் கடவுள், நதியின் கடவுள், அழகு மகள், விதவை, கன்பூசியசின் பழங்கதை என்பன உள்ளிட்ட 15 சிறுகதைகள் இதில் அடங்கியுள்ளன. சீனாவில் அக்காலத்தில் நடைபெற்ற திருமணச் சடங்குகள், பண்டிகைக் கொண்டாட்டங்கள், திருவிழாக்கள், தெய்வ நம்பிக்கை, முன்னோர் […]

Read more

சுதந்திர இந்தியாவின் பொறியியல் புரட்சிகள்

சுதந்திர இந்தியாவின் பொறியியல் புரட்சிகள், வி.டில்லிபாபு, திசையெட்டு, பக்.88, விலை ரூ.120. சுதந்திர இந்தியாவின் தொழில்நுட்பத் தலைமகன்களால் முன்னெடுக்கப்பட்டசில முக்கிய அறிவியல் தொழில்நுட்பப் பொறியியல் புரட்சிகளைப் பற்றி பதிவு செய்யும் முயற்சியே இந்த நூல். வேளாண் துறை, பாதுகாப்புத்துறை, போக்குவரத்துத் துறை என பல்வேறு துறைகளில் நமது நாட்டின் பெருமிதம் கொள்ளும் சாதனைகளையும், சாதனையாளர்களையும் ஒருசேரக் கொணர்ந்துள்ள இந்த நூல், இளைய தலைமுறையினருக்கு ஒரு வழிகாட்டியாக விளங்கும். அறிவியல்துறையை சாராதவர்களும், பொதுமக்களும் நமது நாட்டின் தொழில்நுட்பச் சாதனைகளை எளிதாக அறிந்து கொள்ள முடியும். விளக்கில்லாத் […]

Read more

பணம் தரும் மந்திரம்

பணம் தரும் மந்திரம் – உங்களை செல்வந்தராக மாற்றும் எளிய வழிகாட்டி,  எஸ்.கே.முருகன், விகடன் பிரசுரம்,  பக்.176, விலை  ரூ.125. பணம் சம்பாதிப்பது என்பது மனித வாழ்க்கையின் ஓர் அடிப்படைத் தேவையாகிவிட்டது. பணமின்றி ஓரணுவும் அசையாது. ஆனால் பணம் சம்பாதிப்பது எப்படி? அதற்கான வழிமுறைகள் எவை? பணம் சம்பாதிப்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்துவிடலாமா?என்பன போன்ற கேள்விகளுக்கு மிக எளியமுறையில் பதில் சொல்கிறது இந்நூல். பணம் சம்பாதித்து வாழ்வில் உயர்நிலையில் உள்ள திருபாய் அம்பானி, பங்குச் சந்தையில் உச்சம் தொட்ட வாரன் எட்வர்ட் பஃபெட், தன்னுடைய […]

Read more
1 4 5 6 7 8 180