தாயில்லாமல் நான் இல்லை

தாயில்லாமல் நான் இல்லை, சம்சுல் ஹூதா பானு, கோதை பதிப்பகம், பக்.204, விலை ரூ.200. ஒவ்வொருவருக்கும் தனது குழந்தைப் பருவம் குறித்த முதல் நினைவு பசுமரத்தாணிபோல மனதில் பதிந்திருக்கும். சிலருக்கு வாழ்நாளெல்லாம் அந்நினைவு பசுமையாக இருக்கும். பலருக்கு ரண வேதனையாக இருக்கும். அந்தப் பலரில் ஒருவராக தனது வாழ்க்கையைப் பதிவு செய்துள்ளார் இந்நூலாசிரியர். மூன்று அண்ணன்கள், ஓர் அக்காவுக்குப் பிறகு ஐந்தாவது குழந்தையாக பெண்ணாகப் பிறந்த நூலாசிரியர், குழந்தைப் பருவத்திலேயே தாயைப் பறிகொடுத்துவிடுகிறார். வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டும் இன்று சிறந்த குடும்பத் தலைவியாகப் பரிணமித்துள்ளார். […]

Read more

கபிலரின் செயற்கையற்ற வாழ்வும் மொழிநடையும்

கபிலரின் செயற்கையற்ற வாழ்வும் மொழிநடையும், ந.அறிவரசன், பாவை பப்ளிகேஷன்ஸ், பக்.236, விலை ரூ.200. சங்கப் பாடல்களில் அதிகமான பாடல்களைப் பாடியவர் கபிலர்தான். அவர் தம்முடைய பாடல்களில் இயற்கை சூழல், இயற்கைக் காட்சிகள், இயற்கையோடு இயைந்த மக்களின் வாழ்க்கைமுறை போன்றவற்றையே பெரிதும் காட்சிப்படுத்துவார். குறிஞ்சிக் கபிலரான அவரை, “இயற்கைக் கவிஞர்’ என்றும் போற்றலாம் என்கிறது இந்நூல். கபிலரின் இயற்கையோடு இயைந்த வாழ்வு, கபிலரின் படைப்பும் பாடுபொருளும், கபிலரின் பாடல்களில் மொழிநடை ஆகிய மூன்று உட்தலைப்புகளைக் கொண்டிருக்கிறது இந்நூல். முதல் பகுதியில் கபிலரின் பிறப்பு, குலம், பெயர்க் […]

Read more

நாகராஜா கோவில்

நாகராஜா கோவில்,  சிவ.விவேகானந்தன்,  காவ்யா பதிப்பகம், பக். 306. விலை  ரூ.300. கன்னியாகுமரி மாவட்டத் தலைநகரான நாகர்கோவில் என்ற ஊரின் பெயருக்கு காரணமாக அமைந்த நாகராஜா கோயில் குறித்த ஆய்வு நூல் இது. கோயில் அமைப்பு, கட்டடக் கலை, சிற்பக் கலை, வழிபாடு, திருவிழாக்கள் உள்ளிட்டவை குறித்து அரிய தகவல்களுடன் விளக்கியுள்ளார் நூலாசிரியர். ஒரு காலத்தில் சமணக் கோயிலாக இருந்து, இப்போது சமண, சைவ, வைணவக் கோயிலாக நாகராஜா கோயில் மாறிய வரலாறு விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. கோயில் அமைப்பு மற்றும் கட்டடக் கலை குறித்து […]

Read more

லா.ச.ரா.

லா.ச.ரா., லா.ச.ரா. சப்தரிஷி, சாகித்திய அகாதெமி, பக்.128, விலை ரூ.50. தமிழ் இலக்கியவுலகில், கதையோ கட்டுரையோ ஒரு வரியைப் படித்தவுடன் “இது இவர் எழுதியதுதானே’ என்று கேட்கும்படியான தனித்துவமிக்க எழுத்து நடை அமையப்பெற்றவர்கள் ஒரு சிலரே. அவர்களுள் ஒருவர் லா.ச.ரா. என்று இலக்கிய உலகில் அறியப்பட்ட லால்குடி சப்தரிஷி ராமாமிருதம். ஏறக்குறைய எழுபத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து சிறுகதை, புதினம், கட்டுரை என்று தமிழ் எழுத்துலகில் இயங்கி வந்த எழுத்தாளர் இவராகத்தான் இருப்பார். லா.ச.ரா.வின் சிறுகதைகள், கட்டுரைகள், புதினங்கள், அவற்றில் காணப்படும் வார்த்தை ஜாலங்கள், தத்துவமொழிகள் […]

Read more

அமெரிக்க ஜனாதிபதி ஐஸன் ஹோவர்

அமெரிக்க ஜனாதிபதி ஐஸன் ஹோவர், அப்துற் றஹீம், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்,  பக்.208, விலை ரூ.180. 1953 -1961 வரை அமெரிக்காவின் 34-வது ஜனாதிபதியாக பதவி வகித்த ஐஸன் ஹோவரின் வாழ்க்கை வரலாற்றையும், குறிப்பாக இரண்டாம் உலகப்போரில் ராணுவரீதியாக அவர் ஆற்றிய பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்தும் இந்நூல் விரிவாக எடுத்தியம்புகிறது. மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் ஏழு பேரில் மூன்றாவதாகப் பிறந்த ஐஸன் ஹோவர் மிகுந்த மதக் கட்டுப்பாடுகளுடன் வளர்க்கப்பட்டார். ஆனால் ராணுவக் கல்லூரியில் பயிலும்போது, ஐஸன் ஹோவர் மிகவும் ஒழுங்கீனமாக நடந்தார். ராணுவத்தில் சேர்ந்த […]

Read more

உலகக் கவிஞர் தமிழ்ஒளி

உலகக் கவிஞர் தமிழ்ஒளி, மு.பரமசிவம், வேமன் பதிப்பகம், பக்.160, விலை ரூ.150. கவிஞர் தமிழ்ஒளியுடன் பழக வாய்ப்புக் கிடைத்த நூலாசிரியர், கவிஞரின் தனிப்பட்ட வாழ்வு குறித்தும், படைப்புகள் குறித்தும் மிகச் சிறப்பாக இந்நூலை எழுதியிருக்கிறார். 1924 -ஆம் ஆண்டு பிறந்த விஜயரங்கம், கவிஞர் பாரதிதாசன் பணியாற்றிய கல்வே கல்லூரியில் பயின்றார். சிறு வயது முதலே கவிதை எழுதுவதில் ஆர்வமுடைய விஜயரங்கம், பாரதிதாசனின் மாணவராகி அவருடைய சீர்திருத்தக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு தமிழ்ஒளி என்ற புனைபெயரை வைத்துக் கொள்கிறார். 1947 – ஆம் ஆண்டு திராவிட இயக்கத்தில் […]

Read more

சித்தர்கள் கண்ட விஞ்ஞானம்-தத்துவம்

சித்தர்கள் கண்ட விஞ்ஞானம்-தத்துவம், சாமி சிதம்பரனார், அழகு பதிப்பகம், பக்.160, விலை ரூ.160. “தமிழில் எல்லா மக்களுக்கும் பயன்படக்கூடிய வைத்தியக் கலைதான் சித்த வைத்தியக் கலை. சித்தர்களின் வைத்தியக் கலைக்கு நிகரான கலையுடன் வேறு எந்த வைத்தியக் கலையையும் ஒப்பிட முடியாது. பொதுமக்கள் நோயின்றி வாழ்வதற்காகவே சித்தர்கள் தமது வைத்தியக் கலையை வளர்த்தனர்’ என்றும்; “சித்தர்களின் நூல்களிலே பரிபாஷைகள் பல காணப்படுகின்றன. அவற்றைப் படிக்கும் புலவர்களோ, பொதுமக்களோ அவற்றின் உண்மைப் பொருளைக் கண்டறிய முடியாது. பரம்பரையாக சித்தர் நூல் பயிற்சி உள்ளவர்கள்தாம், அவற்றின் உண்மைப் […]

Read more

கோடிக்கால் பூதம்

கோடிக்கால் பூதம்,  அ.உமர் பாரூக், டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், பக்.128, விலை ரூ.150. கரோனா இரண்டாம் அலை தனிநபர் வாழ்வில் ஏற்படுத்திய பாதிப்புகளைத் துல்லியமாக சித்தரிக்கும் நாவல். டேவிட், மைக்கேல், குமார் ஆகியோரை மையமாகக் கொண்டுள்ள இந்நாவல், கரோனா தொற்று உடல் அளவில் மட்டுமல்ல, மனதளவிலும் பல பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகிறது என்பதைக் கூறுகிறது. கேரளாவில் மதபோதகர் பணி செய்யும் டேவிட் கரோனா பொதுமுடக்கம் காரணமாக, தமிழ்நாட்டில் சொந்த ஊரில் தங்கியிருக்க, கேரளாவில் உள்ள பெரிய போதகர் அவனை உடனே கேரளாவுக்கு வந்து பணியில் சேரும்படி கட்டளையிடுகிறார். […]

Read more

சட்டமேதை அண்ணல் அம்பேத்கர்

சட்டமேதை அண்ணல் அம்பேத்கர், டாக்டர் எச்.வி. ஹண்டே, வசந்தா பதிப்பகம், பக். 176, விலை ரூ. 200. டாக்டர் அம்பேத்கர் பற்றிய எண்ணற்ற நூல்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், அம்பேத்கரின் மிகப் பெரும் சாதனைகளில் ஒன்றாக மதிக்கப்படும் இந்திய அரசியல் சட்ட உருவாக்கத்தைப் பற்றி மிகச் சிறப்பாக இந்நூலில் விவரித்துள்ளார் நூலாசிரியர். “டாக்டர் அம்பேத்கர் அன்ட் த மேக்கிங் ஆஃப் த இந்தியன் கான்ஸ்டிடியூஷன்’ என்ற ஆங்கில நூலின் தமிழாக்கமே இந்நூல். நூலாசிரியர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை ரத்தினச் சுருக்கமாகத் தெரிவித்துவிட்டு, அரசியல் சட்ட உருவாக்கத்தைப் […]

Read more

நினைவில் வாழும் குழந்தைக் கவிஞர்

நினைவில் வாழும் குழந்தைக் கவிஞர் , தொகுப்பாசிரியர்: தேவி நாச்சியப்பன், குழந்தைப் புத்தக நிலையம்,பக். 288, விலை  ரூ.180.  தமிழில் குழந்தை இலக்கியத்தை ஓர் இயக்கமாக வளர்த்த “குழந்தைக் கவிஞர்’ அழ.வள்ளியப்பாவின் நூற்றாண்டை- நினைவைப் போற்றும் வகையில் வெளிவந்திருக்கிறது இத்தொகுப்பு. அழ.வள்ளியப்பாவுடன் பழகியவர்கள், நண்பர்கள் என நூறு பேரிடமிருந்து பெறப்பட்ட வாழ்த்து, கவிதை, கட்டுரை, கருத்துரை, புதிய கட்டுரைகள் ஆகியவை நான்கு பகுதிகளாகப் பிரித்துத் தனித்தனியே தொகுக்கப்பட்டுள்ளன.  பொள்ளாச்சி நா. மகாலிங்கம், சௌந்தரா கைலாசம், சுப.வீரபாண்டியன், குழ.கதிரேசன், பூவண்ணன், அய்க்கண், திருப்பூர் கிருஷ்ணன், இனியவன், […]

Read more
1 6 7 8 9 10 180