யாப்பு விளக்கம்

யாப்பு விளக்கம் (தமிழ்ச் செய்யுள் இலக்கணம்), ப.எழில்வாணன், தமிழ்வாணன் பதிப்பகம், பக்.572, விலை ரூ.650. தமிழில் உள்ள யாப்பிலக்கணங்கள்தாம் தொன்மையும் முதன்மையும் கொண்டவையாகத் திகழ்கின்றன. தொல்காப்பியத்திற்குப் பிறகு புலவர்கள் பலர் யாப்பிலக்கணம் செய்துள்ளனர் என்றாலும், தொல்காப்பியத்திற்குப் பிறகு கிடைத்த இரு யாப்பிலக்கண நூல்கள், அமிர்தசாகரர் என்பவரால் எழுதப்பட்ட யாப்பருங்கலமும், யாப்பருங்கலக்காரிகையும்தான். இந்நூல்களுக்குப் பிறகு சுமார் முப்பது யாப்பிலக்கண நூல்கள் வந்ததாகத் தெரிய வருகிறது. இந்நூல் இயற்றமிழ்ப் பாக்கள், இசைத்தமிழ்ப் பாக்கள், பொது, சித்திரப் பாக்கள் ஆகிய நான்கு இயல்களைக் கொண்டு உறுப்பியல், பாவினங்கள், புதுப் […]

Read more

மனிதன் நினைப்பது ஒன்று

மனிதன் நினைப்பது ஒன்று, அசோக் யெசுரன் மாசிலாமணி, மாசி பப்ளிகேஷன்ஸ், பக்.152,  விலை ரூ.130. ஜமீன்தார் முறை நம்நாட்டில் ஒழிக்கப்பட்டுவிட்டாலும், பழைய ஜமீன்தார்கள் செல்வ வளத்தோடும், பாரம்பரிய மரியாதைகளுடனும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களைப்பற்றிய நாவல் இது. பாரம்பரியமான வாழ்க்கைமுறையை மேற்கொள்ளும் பெரிய ஜமீன், நவீன கலாசாரத்தில் மூழ்கிக் கிடக்கிற தன் மகனைப் பற்றிக் கவலைப்படுகிறார். சின்ன ஜமீனுக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர். பல வருடங்களுக்குப் பிறகு, சின்ன ஜமீனின் மனைவி கர்ப்பம் தரிக்கிறாள். உறவினர் ஒருவரின் மரணத்தின் காரணமாக, பெரிய ஜமீனும் அவருடைய மனைவியும் […]

Read more

நாட்டுப்புறவியலும் மக்கள் வாழ்வியலும்

நாட்டுப்புறவியலும் மக்கள் வாழ்வியலும்,  சரசுவதி வேணுகோபால்,மணிவாசகர் பதிப்பகம்,  பக்.159,  விலைரூ.125.  நாட்டுப்புற இலக்கியம் பற்றிய நூல்கள், கருத்தரங்கக் கட்டுரைகள் எனப் பலவும் வெளிவந்துள்ளன. அவ்வரிசையில், நாட்டுப்புற இலக்கியக் கூறுகளான வாய்மொழிப் பாடல்கள், கூத்து, ஆட்டம், விளையாட்டு, பழமொழி, விடுகதைகள், கதைப் பாடல்கள், ஆட்டப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், ஒப்பாரி பாடல்கள், மக்கள் வாழ்வியல், பண்பாடு முதலியவற்றை சாறு பிழிந்து தந்திருக்கும் இந்நூல், கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட, சில மாத, நாளிதழ்களில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. நாட்டுப்புறவியல்துறைத் தலைவராகப் பணியாற்றிய நூலாசிரியை, நாட்டுப்புறவியலின் போக்குகள், அணுகுமுறைகள், கோட்பாடுகள், […]

Read more

என் இனிய இந்து மதம்

என் இனிய இந்து மதம், திருமகள் நிலையம், சென்னை, விலை 45ரூ. இந்து மதத்தின் பெருமைகளையும், மேன்மைகளையும் விளக்கிக்கூறும் நூல். மார்கழியின் மகத்துவம். தை மாதத்தில் திருமணம் செய்தால் ஐப்பசியில் குழந்தையோடு தலைத் தீபாவளி கொண்டாடலாம். சிவராத்திரியின் சிறப்பு, ஜாதகம் பார்ப்பது ஏன்? கடவுளுக்கு எதற்கு கல்யாணம்? முடியைக் காணிக்கையாக செலுத்துவது ஏன் என்பன போன்ற இந்துக்களின் சடங்குகள், சம்பிரதாயங்களில் ஒளிந்திருக்கும் ஆழ்ந்த நுட்பமான பொருளை எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன் அழகுபட விவரித்துள்ளார். அதுவே மனிதன் மகிழ்வோடு வாழ்ந்திட ஆதாரமாக இருக்கிறது என்பதை ஆதாரத்துடன் […]

Read more

கடைசிக்கோடு

கடைசிக்கோடு, இந்தியாவின் வரைபடம் பிறந்த கதை, ரமணன், கவிதா வெளியீடு, விலை 80ரூ To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-187-6.html பொறாமைப்படவைக்கும் ஒரு புத்தகம் நில அளவைத்துறை என்கிறார்கள் இன்றைக்கு சங்கிலிப் பிடித்து நூறு நூறு அடியாக இந்தத் தேசம் முழுவதையும் அளந்து வரைபடமாகத் தயாரித்தவர்கள் அந்த சர்வே துறையில் பிள்ளையார் சுழியிட்ட இரண்டு வெள்ளைக்கார அதிகாரிகள். 1802ஆம் ஆண்டில் சென்னை நகரத்து மெரினா கடற்கரையில் கேப்டன் வில்லியம் லாம்ப்டன் என்பவர் முதல் அளவைக் கோட்டை வரைந்து தொடங்கிய இந்தப் […]

Read more