இந்திய ஓவியம் ஓர் அறிமுகம்

இந்திய ஓவியம் ஓர் அறிமுகம், அரவக்கோன், கிழக்கு பதிப்பகம், விலை 250ரூ. சுவர் ஓவியங்கள், பழங்குடியின ஓவியங்கள், கிராமிய ஓவியங்கள் தொடங்கி ஒவ்வொரு மாநிலவாரியாக இந்திய ஓவியங்களை விரிவாக அறிமுகப்படுத்துகிறார் மூத்த ஓவியர் அரவக்கோன். பல்வேறு விதமான ஓவிய பாணிகள், அதன் வரலாற்றுப் பின்னணி என நீண்ட விவாதங்களையும் இந்தப் புத்தகத்தில் முன்னெடுத்திருக்கிறார். நன்றி: தி இந்து, 11/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/9789386737441.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

நெஞ்சோடு கிளத்தல்

நெஞ்சோடு கிளத்தல், பாதசாரி, தமிழினி பதிப்பகம், விலை 70ரூ. ‘மீனுக்குள் கடல்’ தொகுப்புக்குப் பிறகு நீள்மௌனத்தில் ஆழ்ந்திருந்த பாதசாரி புதிய உற்சாகத்துடன் மீண்டும் எழுத ஆரம்பித்திருக்கிறார். கதை, கவிதை, கட்டுரை என்று எந்த வகைக்குள்ளும் அடங்காத பாதசாரியின் மனநிழல் குறிப்புகள் வரிசையில் சமீபத்திய வரவு இது நன்றி: தி இந்து, 10/1/19.   இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

தொ.பரமசிவன் நூல்கள் வரிசை

தொ.பரமசிவன் நூல்கள் வரிசை, காலச்சுவடு வெளியீடு, விலை 620ரூ. தமிழ்ப் பண்பாட்டு ஆய்வுக்களத்தில் மகத்தான பங்களிப்பு செய்தவர் தொ.பரமசிவன். வெகுமக்கள் வழக்காறுகள் மற்றும் நம்பிக்கைகள், சடங்குகள் சார்ந்த இவரது ஆய்வுகள், அழிந்துவரும் பண்பாட்டுக்கூறுகளின் அவசியத்தை முன்வைப்பவை. ‘பாளையங்கோட்டை’, ‘மரபும் புதுமையும்’, ‘இதுவே சனநாயகம்’, ‘மஞ்சள் மகிமை’, ‘தொ.பரமசிவன் நேர்காணல்கள்’ என தொ.பரமசிவனின் ஐந்து புதிய நூல்களைக் கொண்டுவந்திருக்கிறது காலச்சுவடு பதிப்பகம். நன்றி: தி இந்து, 10/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

மேற்கத்திய ஓவியங்கள்

மேற்கத்திய ஓவியங்கள், பி.ஏ.கிருஷ்ணன், காலச்சுவடு பதிப்பகம், விலை 975ரூ. கலைகளில் ஈடுபாடுகொள்ளும்போது வாழ்க்கை இன்னும் அழகாகிறது. புரிதலின்மை காரணமாக ஓவியத்திலிருந்து விலகிவிடும் கலை ரசிகர்களை இன்னும் இணக்கமாக ஓவியத்தை அணுகும்பொருட்டு ‘மேற்கத்திய ஓவியங்கள்’ நூல் வரிசையில் நவீன ஓவியங்களை பி.ஏ.கிருஷ்ணன் அறிமுகப்படுத்துகிறார். இப்போது இரண்டாம் நூல் அழகான வடிவமைப்பில் வெளிவந்திருக்கிறது. சுமார் 250 வண்ண ஓவியங்களுடன் 336 வண்ணப் பக்கங்கள். ஓவியத்தின் பின்புலம், வரலாறு, பேசுபொருள் என பிரெஞ்சுப் புரட்சி ஆண்டுகளிலிருந்து 21-ம் நூற்றாண்டு வரையிலான நவீன ஓவியங்களை அறிமுகப்படுத்தும் நூல் இது. நன்றி: […]

Read more

போர்ஹெஸ் கதைகள்

போர்ஹெஸ் கதைகள், தமிழில் பிரம்மராஜன், யாவரும் வெளியீடு, விலை 550ரூ. 20-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்பானிய எழுத்தாளர்களில் ஒருவரான போர்ஹெஸ், உலகம் முழுக்க எழுத்தாளர்களையும் வாசகர்களையும் பாதித்தவர். தன் வாழ்நாளில் நாவலே எழுதாத இவர் லத்தீன் அமெரிக்க நாவல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுகிறார். ஐநூறு பக்க நாவல் தரும் பிரம்மாண்டத்தையும் திகைப்பையும் தனது சிறுகதைகளில் உருவாக்கிவிடக் கூடியவர். அனுபவங்கள், தத்துவங்கள், கருத்தியல்கள், வரலாறு எல்லாமும் ஒரு புனைவுதானோ என்ற எண்ணத்தை உருவாக்கக் கூடிய போர்ஹெஸின் சிறந்த கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு இது. தமிழின் […]

Read more

இந்த இவள்

இந்த இவள், கி.ராஜநாராயணன், காலச்சுவடு பதிப்பகம், வலை 175ரூ. நாம் வாழும் காலத்தின் மாபெரும் கதைசொல்லி யான கி.ராஜநாராயணனின் வாசகர்களைக் குஷிப்படுத்துவதற்காக, அவரது புதிய குறுநாவலான ‘இந்த இவள்’ புத்தகத்தின் இடப்பக்கத்தில் கி.ராவின் கையெழுத்து வடிவம், வலப்பக்கத்தில் அவர் எழுதிய பாணியிலேயே அச்சு வடிவம் எனப் பதிப்பித்திருக்கிறார்கள். “இதை ஒரு பொக்கிஷம்போல வைத்திருப்போம்” என்கிறார்கள் கி.ரா வாசகர்கள். அட்டகாசம்! நன்றி: தி இந்து, 8/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

மார்க்சியம் இன்றும் என்றும்

மார்க்சியம் இன்றும் என்றும், விடியல் பதிப்பகம், விலை 500ரூ. பெரியார், அம்பேத்கர் நூல்கள் வரிசையில் இந்தப் புத்தகக்காட்சியைக் கலக்க விடியல் பதிப்பகம் கொடுத்திருக்கும் நூல் வரிசை ‘மார்க்சியம் இன்றும் என்றும்’. மூன்று நூல்கள், கெட்டி அட்டை, ஏறக்குறைய ஆயிரம் பக்கம் கொண்ட தொகுப்பை வெறும் ரூ.500 விலையில் கொடுத்து ஆச்சர்யப்படுத்துகிறார்கள். மார்க்ஸியம் பற்றி அறிமுகம் இல்லாதவர்களும்கூட அதைப் பற்றி புரிந்துகொள்வதற்கு எளிதாக கம்யூனிஸ்ட் அறிக்கைக்கு பில் கஸ்பர் எழுதிய வழிகாட்டி நூல், மூலதனம் நூலின் சாராம்சத்தை விளக்கும் டேவிட் ஸ்மித் எழுதிய சித்திரக் கதை […]

Read more

மறைக்கப்பட்ட பக்கங்கள்

மறைக்கப்பட்ட பக்கங்கள் பால், பாலினம், பாலியல் ஒருங்கிணைவு, கோபி ஷங்கர், கிழக்கு பதிப்பகம், விலை 250ரூ. பாலினத்தின் பன்முகங்கள் தன்பாலின உறவு இனிச் சட்ட விரோதம் அல்ல என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உச்சநீதி மன்றத் தீர்ப்பு, 2018-ல் வழங்கப்பட்டது. இருப்பினும் ஆண், பெண் ஆகிய இரு பாலினங்களைத் தவிர மற்றவர்களைக் குறித்த தெளிவு இன்னும் எட்டப்படவில்லை. இரண்டு பாலினங்களைச் சேர்ந்தவர்களின் பார்வையை ஒட்டியே மருத்துவம், அறிவியல், வரலாறு என அனைத்தும் காலங்காலமாக எழுதப்பட்டுவந்திருக்கின்றன. இது சரியா என்னும் கேள்வியை வாசகர்களின் மனத்தில் ஆழமாக […]

Read more

அமைப்பாய்த் திரள்வோம்

அமைப்பாய்த் திரள்வோம், தொல்.திருமாவளவன், நக்கீரன் வெளியீடு, விலை 450ரூ. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எழுதிய ‘அமைப்பாய்த் திரள்வோம்’ புத்தகத்தில் தனது கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு, ஒரு அரசியல் அமைப்பில் பணியாற்ற எப்படியான ஒழுங்கெல்லாம் தேவைப்படுகிறது என்பதைப் பதிவுசெய்திருக்கிறார். சமூகம், அரசியல் பொருளாதாரம், கலாச்சாரம் என அமைப்பு என்பது என்னவாக இருக்கிறது? அமைப்பின் நோக்கம், இலக்கு, கொள்கை, வடிவம், விதிமுறைகள் என்னென்ன? மிக முக்கியமாக, மக்களை ஏன் அமைப்பாக்க வேண்டும் என பல்வேறு அமைப்பு சார்ந்த கேள்விகளுக்கு விடைதேடுகிறார் திருமாவளவன். நன்றி: தி […]

Read more

பன்முக அறிவுத் திறன்கள் ஓர் அறிமுகம்

பன்முக அறிவுத் திறன்கள் ஓர் அறிமுகம், ம.சுசித்ரா, தமிழ் திசை வெளியீடு, விலை 150ரூ. உயிரோட்டமான கல்வி வாசித்தல், மனப்பாடம் செய்து எழுதுதல், கணிதத் திறன் இவற்றுக்கு அப்பாற்பட்ட பன்முக அறிவுத் திறன்கள் இருக்கின்றன. மொழித் திறன், தர்க்கம் மற்றும் கணிதத் திறன், காட்சித் திறன், உடல் மற்றும் விளையாட்டுத் திறன், இசைத் திறன், மனிதத் தொடர்புத் திறன், தன்னிலை அறியும் திறன், இயற்கைத் திறன், வாழ்விருப்பு சார்ந்த திறன் என 9 விதமான திறன்களை ம. சுசித்ரா இந்து தமிழ் நாளிதழின் ‘வெற்றி […]

Read more
1 2 3 4 5 36