விதை அரசியல்

விதை அரசியல, பாமயன் , தமிழினி வெளியீடு , இடுபொருட்களை விற்பனைசெய்து வேளாண்மையில் இனிமேலும் பெரும் லாபம் சம்பாதிக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்ட பன்னாட்டு நிறுவனங்கள், அடிமடியில் கை வைக்கும் விதமாக விதை வியாபாரத்தை கையில் எடுத்துள்ளன. இது எப்படிப்பட்ட பேரழிவுக்கு இட்டுச்செல்லும் என்று எச்சரிக்கிறது இந்நூல். நன்றி: தி இந்து, 5/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

எங்கு செல்கிறோம்?

எங்கு செல்கிறோம்?, பி.ஏ.கிருஷ்ணன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 140ரூ. அரசியலும் கலாச்சாரமும் முக்கியமான காலகட்டத்தில் அமெரிக்கா, காஷ்மீர், கேரளம், மேற்கு வங்கம், அசாம் என பயணம் மேற்கொண்டு தொடர் கட்டுரைகளாக ‘இந்து தமிழ்’ நாளிதழில் பி.ஏ.கிருஷ்ணன் எழுதியவற்றின் தொகுப்பு இந்நூல். அரசியலோடு மக்களின் வாழ்க்கைமுறை, கலாச்சாரம் என வேறு தளங்களுக்கும் கட்டுரைகளை எடுத்துச்செல்கிறார். பி.ஏ.கிருஷ்ணன் இயல்பில் ஒரு புனைவெழுத்தாளர் என்பதால் எழுத்து நடை உயிர்ப்போடு மிளிர்கிறது. நன்றி: தி இந்து,1/12/18. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

பண்டிகைக் கால சமையல்

பண்டிகைக் கால சமையல், தொகுப்பு பிருந்தா சீனிவாசன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 170ரூ. பலகாரம் இல்லாத பண்டிகையா? இந்து தமிழ்’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழில் வெளியான சமையல் குறிப்புகளின் தொகுப்பு. பலகாரப் பக்குவமும் கைப்பழக்கம்தான் என்று நம்பிக்கை தருவதோடு, விதவிதமான பண்டிகைப் பலகாரங்களைச் செய்ய இந்தப் புத்தகம் நிச்சயம் வழிகாட்டும். புதுப்புது பொருட்களை வாங்க வேண்டிய தேவையில்லாமல் நம் கைக்குக் கிடைக்கிற பொருட்களை வைத்தே சமைக்கக் கற்றுத்தந்திருப்பது இந்நூலின் சிறப்பு. நன்றி: தி இந்து, 3/11/18. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

முரசுப் பறையர்

முரசுப் பறையர், தி.சுப்பிரமணியன், அடையாளம் பதிப்பகம், விலை 150ரூ. கர்நாடக தலித்துகளின் வரலாறு தமிழக அரசின் தொல்லியல் துறையில் உதவி இயக்குநராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற தி.சுப்பிரமணியன் பல்வேறு அகழாய்வுப் பணியில் ஈடுபட்டவர். தொல்லியல் சார்ந்த பல்வேறு நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். அவரது புதிய நூல் ‘முரசுப் பறையர்’. தமிழக சாதிய அமைப்புகளில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அண்டை பிராந்தியங்களின் சாதிகளும் இணைந்திருக்கின்றன. இப்படிப் பிணைப்பு கொண்ட சமூகம் பற்றிய இனவரைவியலாக இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. இந்த நூலில், கர்நாடகத்திலிருந்து தமிழ்நாடு வந்துசேர்ந்த தலித்துகளின் […]

Read more

இரண்டாம் சுற்று

இரண்டாம் சுற்று, ஆர். பாலகிருஷ்ணன், பாரதி புத்தகாலயம், விலை 240ரூ. எண்ண அலைகளை ஈர்க்கும் இரண்டாம் சுற்று இந்திய ஆட்சிப் பணித் தேர்வு முழுவதும் தமிழில் எழுதி முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்று ஆட்சிப் பணியில் நுழைந்தவர் ஆர்.பாலகிருஷ்ணன். சிந்துவெளிப் பண்பாடு செழித்த ‘கொற்கை, வஞ்சி, தொண்டி’ வளாகத்தை ஆய்வுலகின் கவனத்துக்குக் கொண்டுவந்தவர். அவருடைய சமீபத்திய ‘இரண்டாம் சுற்று’ நூலில், தான் பயணித்த இடங்கள், சந்தித்த மனிதர்கள், சம்பவங்கள் என இரண்டாம் முறையாக எதிர்கொண்டதை நுட்பமாகப் பதிவுசெய்துள்ளார். தமிழே பாதையும் பயணமுமாய் இலக்காகவும் இருக்கும் தமிழ் […]

Read more

வாரணாசி

வாரணாசி, பா.தேவேந்திர பூபதி, காலச்சுவடு பதிப்பகம், விலை 100ரூ. நிகர்மலர்கள் அவர்கள் பொருள் மதிப்பில் பார்த்தால் சீக்கிரத்திலேயே வாடிவிடக்கூடியதும் அதேவேளையில் பேரழகும் நுட்பமும் கொண்ட வடிவங்கள் மலர்கள். எத்தனை கலைஞர்களை, மெய்ஞானிகளை, கவிஞர்களை அவை ஈர்த்திருக்கின்றன? “உடைகளுக்காக நீங்கள் கவலைப்படுவானேன்? வயல்வெளி யிலுள்ள லீலி புஷ்பங்கள் எப்படி வளரு கின்றன எனப் பாருங்கள்” என்று மலர்களைப் பார்த்து வியந்திருக்கிறார் கிறிஸ்து. புத்தர் ஒன்றுமே பேசாமல் புன்னகைத்தபடி சீடன் மஹாகாஷ்யபனுக்கு ஞானத்தைக் கடத்தியது தாமரையை உயர்த்திக் காட்டியபடிதான். மலர் வழியாகக் கடத்தப்பட்ட அந்த ஞானம்தான் 28 […]

Read more

கண் அறியாக் காற்று

  கண் அறியாக் காற்று, சஹானா, ஆகுதி பனிக்குடம் பதிப்பகம், விலை 100ரூ. கீறி குணப்பட்ட கண்களின் அறிதல் என் படகு கடல் மீன்கள் தூங்கியிருக்கும் மணல் நண்டுகள் சண்டையிடும் கடல் ஆமைகள் அமைதியாக கரை ஏறித் தவழ்ந்து மகிழும் சூரியன் கடலறையில் ஓய்வெடுக்கும் வான் நிலா மேலேறி பணியைத் தொடரும் மேகம் புகைநிறம் ஆகிவிடும் ஒரே ஒரு மீன் மட்டும் விழித்து இருக்கும் என் படகு கடலில் செல்லும் நேரம். ‘கணத்தின் மொக்கவிழ்ந்தால் காலாதீதம்’ என்பது பிரமிளின் கவிதை வரி. அந்தக் கண்டுபிடிப்பை […]

Read more

கால் பட்டு உடைந்தது வானம்

கால் பட்டு உடைந்தது வானம், எஸ்தர், போதிவனம் பதிப்பகம், விலை 120ரூ. உணர்விழைகளால் நூற்கப்பட்டவை இலங்கையின் மலையகத்தை இனி எஸ்தரின் கவிதைகளைக் கொண்டும் அடையாளப்படுத்தலாம். எஸ்தரின் முதல் தொகுப்பு இது. ‘விடுதலையை நினைத்தவனும் போராடியவனும் நிலமற்றுப்போன என் மலையக மூதாதையர்களுக்கும்’ என நூலின் சமர்ப்பணமே கவிதையாய் விரிகிறது. மெல்லிய உணர்விழைகளால் நூற்கப்பட்ட கவிதைகளைக் கொண்டிருக்கின்றன. காதல், காமம், சோகம், மகிழ்ச்சி, ஆற்றாமை, தவிப்பு, தோல்வி, பிரிவு, துரோகம், இயலாமை என மனிதருக்குள் ஊறும் உணர்வுகளை உருவி எடுத்துக் கவிதைகளாக்கியிருக்கிறார். மலையும் கடலும் வானமும் நதியும் […]

Read more

கள்ளிவட்டம்

கள்ளிவட்டம், பா.சரவணகுமரன், போதிவனம், விலை 100ரூ. கீழத்தஞ்சை:மண்ணும் மனங்களும் நாகை திருக்கண்ணங்குடியைச் சேர்ந்த பா.சரவணகுமரனின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. திருமணம் தள்ளிப்போகும் இளைஞனின் ஏக்கங்கள், அவன் மண் சார்ந்த நினைவுகள் என இரண்டு தளங்களில் எழுதப்பட்ட இயல்புவாதச் சிறுகதைகள். மகள் பருவம் எய்தியதும் கள்ளுக்கடையை மூடிவிட்டு தார்ச்சாலை போடும் வேலைக்குப் போகும் பரமேஸ்வரி, மகளின் திருமணத்துக்காக விற்ற ‘மாரியம்மா’ செல்லும் வழியில் இறந்துவிட மாடு வாங்கியவருக்குப் பணத்தைத் திருப்பிக்கொடுக்கும் சின்னச்சாமி என உழைப்புக்கும் பெருந்தன்மைக்கும் உதாரணங்களாக விளங்கும் காவிரிப் படுகையின் கதாபாத்திரங்கள், கதைகள் நெடுகிலும் […]

Read more

கலை வரலாறு சில புதிய அணுகுமுறைகள்

கலை வரலாறு சில புதிய அணுகுமுறைகள், தொகுப்பும் மொழிபெயர்ப்பும் தேன்மொழி, மணற்கேணி பதிப்பகம், விலை 100ரூ. கலைகள் குறித்த உணர்வும் அறிவும் அக்கறையும் இல்லாத சமுதாயம் தன் மனதையும் முகத்தையும் அழித்துக்கொள்கிறது. பண்டைய சமுதாயத்தின் பண்பாட்டு ஆவணங்களான அவை பேணப்படுவதுடன் ஆராயப்படவும் வேண்டும். இன்று தனியாரும் கல்விப்புலங்கள் சார்ந்த பலரும் ஆய்வுகளில் ஈடுபட்டாலும் ஆய்வை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதற்கான ஆய்வு அணுகுமுறை சார்ந்த நூல்களும் கோட்பாடு சார்ந்த நூல்களும் மிகமிகக் குறைவாகவே உள்ளன. இக்குறை களையப்பட வேண்டும் என்ற ஆதங்கத்தின் விளைவாக, கலையியல் […]

Read more
1 3 4 5 6 7 36