நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்

நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம், உரையாசிரியர் துரை.ராஜாராம், நர்மதா, பக். 272, விலை 160ரூ. பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகள், கடைச்சங்கப் புலவர்களில் மிகச் சிறந்தவர். சேரமன்னன் செங்குட்டுவனின் இளைய சகோதரரான இவர், கற்புக்கரசி கண்ணகியின் காலத்தில் வாழ்ந்தவர். இக்காப்பியம் கண்ணகியின் கால் சிலம்பின் காரணமாக விளைந்த வரலாற்றை கூறுவதால் இதற்கு சிலப்பதிகாரம் என்று பெயர் வந்தது. காவிரிப் பூம்பட்டினத்தில் பெருங்குடி வணிகர் மரப்பில் தோன்றிய கண்ணகி கோவலனின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் இக்காவியத்தில் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழும் விரவிக் கிடக்கின்றன. தவிர, […]

Read more

கொஞ்சம் பயமாய் இருக்கிறது

கொஞ்சம் பயமாய் இருக்கிறது, நர்மதா, படிவெளியீடு, விலை 90ரூ. சுற்றி நடக்கும் அநீதியைத் தட்டிக் கேட்க முயலாமல், உள்ளுக்குள் நொறுங்கி வெளியே தைரியசாலியாய் வேஷம் போடும் மனத்தின் மனக்குரலாய் ஒலிக்கும் கவிதைகள். நேசம், பாசம், பரிதவிப்பு, நெகிழ்ச்சி என்று ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு உணர்வின் வெளிப்பாடு. -ஆர்.நாகராஜன். நன்றி: குமுதம், 3/1/2018

Read more

ஆடவும் பள்ளுப் பாடவும்

ஆடவும் பள்ளுப் பாடவும், நர்மதா, பாப்லோ பதிப்பகம், பக். 96, விலை 150ரூ. ‘நீயுமா பாரதி… விடுதலையைப் பாட நாங்கள்தான் குனிந்து கும்மியடிக்க வேண்டுமா? என்ற கவிதைகளின் வரிகளிலேயே இக்கவிதைத் தொகுப்பு எதைப் பற்றியது என்பதை உணர்த்திவிடுகிறது. பெண், பெண்ணியம், பெண் விடுதலை, பெண் உரிமை இவற்றின் தேவைகளும், கட்டாயமும் என்பது போன்ற உணர்வை ஊட்டும் கவிதைகள் இவை. நன்றி: குமுதம், 3/5/2017

Read more

திண்ணைகளற்ற பெரு நகரங்களில்

திண்ணைகளற்ற பெரு நகரங்களில், நர்மதா, பாப்லோ பதிப்பகம், பக். 82, விலை 80ரூ. தொலைந்து போன் மனித மனங்களைத் தேடும் ஒரு முயற்சி இது. ‘எல்லோர்க்கும் எல்லாம் கிட்டும் நல்வாழ்வு தேடும் நல்லோர் நிறை சமூகம் வேண்டும்’ என்பது கவிஞரின் அன்றாடப் பிரார்த்தனை. அதுவே படிப்போரை நாளைய உலகம் நல்லோரின் கை சேரலாம் என்ற நம்பிக்கை கொள்ள வைக்கிறது. -இரா. மணிகண்டன், நன்றி: குமுதம் 1/2/2017.

Read more

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், டாக்டர் J.V.G. சேகர், நர்மதா பதிப்பகம், பக். 368, விலை 200ரூ. வக்கீல் தொழில் புரிந்த இந்நூலாசிரியர், அதை விட்டு விட்டு இயற்கை மருத்துவத்தில் பயிற்சி பெற்று, 30 ஆண்டுகளாக அனைத்து வகையான நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்து பாராட்டு பெற்று வருகிறார். இதில் இவரது மனைவி டாக்டர் மதுரம் சேகரும் யோகா, யுனானி, மற்றும் அக்கு பஞ்சர் நிபுணராக இவருக்கு துணை நிற்பது சிறப்புக்குரியது. இவர்கள் தமிழ்நாட்டில் மட்டுமின்றி பல வெளிநாடுகளிலும், தங்கள் சிறப்பு மருத்துவ முகாம்களை அமைத்து […]

Read more

அலைகடலுக்கு அப்பால்

அலைகடலுக்கு அப்பால், பூங்கொடி பதிப்பகம், விலை 80ரூ. மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ் முதலிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்த பேராசிரியர் முனைவர் மு.பி. பாலசுப்ரமணியன் தனது அனுபவங்களை இந்த நூலில் எழுதியுள்ளார். தமிழ் மாநாடுகளில் கலந்துகொள்வதற்காக இச்சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதால், கட்டுரைகளில் தமிழ் மணம் கமழ்கிறது. நன்றி: தினத்தந்தி, 17/2/2016.   —-   செல்வம் தரும் தென்னை வளர்ப்பு, டாக்டர் வா.செ. செல்வம், நர்மதா பதிப்பகம், விலை 75ரு. அறிவியல் வழிமுறைகளால் சாதிக்க முடியாதவற்றை தனது அனுபவ ஆராய்ச்சி அறிவால் ஆராய்ந்து, தென்னை வளர்ப்போருக்கு ஒரு […]

Read more