திருத்தலங்களைத் தேடி

திருத்தலங்களைத் தேடி, வனஜா இளங்கோவன், மைதிலி வைத்தியநாதன், பத்மா பதிப்பகம், பக்.416, விலை ரூ.320. பாரத நாட்டை ஆன்மிகத்திலிருந்து விலக்கி நிறுத்த இயலாது. நாடு முழுவதும் கோயில்கள் நிறைந்திருக்கின்றன. கோயில்களுக்குச் சென்று வழிபடுவோருக்கு கோயில்களைப் பற்றிய பல்வேறு தகவல்களை இந்நூல் தொகுத்து வழங்குகிறது. இந்நூலின் ஆசிரியர்கள், பல சிறப்புகள் வாய்ந்த ஆலயங்களைத் தரிசித்து, ஒவ்வொரு திருக்கோயிலின் அமைவிடம், செல்லும் வழி, அமைப்பு, சிறப்பு, அதனுடன் தொடர்புடைய தொன்மச் செய்திகள், ஸ்தல விருட்சம் என கோயில் தொடர்புடைய பல தகவல்களைத் தொகுத்துத் தந்திருக்கிறார்கள்.  ஒரு கோயிலுக்குச் […]

Read more

தண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும்

தண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும், ஆர்.நல்லகண்ணு, பத்மா பதிப்பகம், பக். 200, விலை 190ரூ. தமிழகம் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னைக்கு உள்ளாகும் என்பதை முன்னதாகவே அறிந்து, நீர் நிலைகளை வளமாக்கும் திட்டங்களை கட்டுரை வடிவில் கொண்டு சென்ற மூத்த அரசியலாளர் இவர். உழவர்களின் தோழர் என்ற போற்றுதலுக்கு உரியவர். தமிழகத்தின் வறட்சியைப் போக்கும் வழி, கங்கை – காவிரி இணைப்பு, சேது கங்கா இணைப்பு, நெஞ்சம் குளிரும் நீர் வழிகள் உள்ளிட்டவை, நீர்வள மேலாண்மையின் முக்கியத்துவத்தை விதைப்பதாக உள்ளன. காவிரி உரிமையைக் காப்போம், தாமிரபரணியின் […]

Read more

தண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும்

தண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும், ஆர்.நல்லகண்ணு, பத்மா பதிப்பகம், விலை: ரூ.190 நீரின்றி அமையாது உலகு தமிழகத்தின் தலையாய பிரச்சினையாக உருவாகியிருக்கும் தண்ணீர்ப் பிரச்சினை தொடர்பாக எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மூலவராகத் திகழ்ந்தவரும் இளம் பருவத்திலிருந்தே பொதுவுடைமைக் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டு சமூக அர்ப்பணிப்போடு செயலாற்றிவருமான நல்லகண்ணுவின் முதிர்ந்த அனுபவப் பார்வையில் எழுதப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட நாற்பது ஆண்டு அனுபவமும் வரலாறும் இத்தொகுப்பில் பதிவாகியுள்ளது. 1977-ன் புயல் வெள்ளச் சேதம் தொடங்கி காவிரி நீர்ப் பிரச்சினை, தாமிரபரணிப் பிரச்சினைகளோடு […]

Read more

தண்ணீர் வளமும் கண்ணீர்த்துளியும்

தண்ணீர் வளமும் கண்ணீர்த்துளியும்,  ஆர்.நல்லகண்ணு, பத்மா பதிப்பகம், பக்.200, விலை ரூ.190. தமிழகத்தின் நீராதாரம் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். நூலின் முதல் கட்டுரையான தமிழ்நாட்டின் வறட்சியைப் போக்கும் வழி கட்டுரையிலேயே நீராதாரத்தைப் பெருக்க ஏரி, குளங்களை ஆழப்படுத்துவது, மழைக்காலங்களில் ஆறுகளிலிருந்து வீணாகப் போய்ச் சேரும் தண்ணீரைப் பயன்படுத்துவது, காடுகளைப் பாதுகாப்பது, நதிகளை இணைப்பது என பலவழிகள் கூறப்பட்டுள்ளன. இந்தக் கட்டுரையின் விரிவாகவே இந்நூலின் பிறகட்டுரைகள் அமைந்துள்ளன. கங்கை – காவிரி இணைப்பு, சேது கங்கா இணைப்பு, முல்லைப் பெரியாறு பிரச்னை என பல நீராதாரப் […]

Read more

வரலாற்று உண்மைகள் தமிழ்மண், தமிழர், தமிழ் வரலாறு,

வரலாற்று உண்மைகள் தமிழ்மண், தமிழர், தமிழ் வரலாறு, தமிழ் புகழேந்தி, பத்மா பதிப்பகம். இந்நூல் தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித் துறை நிதியுதவி பெற்று வெளியிடப் பெற்றதாகும். இந்நூல் மூன்று பகுதிகளாகப் பிரித்து அமைக்கப்பட்டு உள்ளது. முதல் பகுதி வரலாற்றுப் பகுதி, 37 தலைப்புகளில் அமைகிறது. நூலாசிரியரின் புதிய கண்டுபிடிப்புகள் அடங்கிய கட்டுரைகள் உடுக்குறிகள் இட்டுக் காட்டப்பட்டுள்ளன. சேரன் செங்குட்டுவன் படையெடுப்பால் ஏற்பட்ட அவமானத்தைப் போக்கவே களப்பிரர் என்ற இனத்தினர், தமிழகத்தின் மீது போர் தொடுத்து ஆட்சியைக் கைப்பற்றினர் (பக். 50). இதுபோன்று வருவன […]

Read more

வரலாற்று உண்மைகள் தமிழ்மண் தமிழர் தமிழ் வரலாறு

வரலாற்று உண்மைகள் தமிழ்மண் தமிழர் தமிழ் வரலாறு, தமிழ் புகழேந்தி, பத்மா பதிப்பகம், விலை 350ரூ. தமிழ்நாட்டின் வரலாற்றை ஆதாரபூர்வமாக எழுதியுள்ளார், தொல்லியல் கல்வெட்டு ஆய்வாளர் தமிழ் புகழேந்தி. தமிழ் உணர்வுடன் இந்த நூலை அவர் எழுதியிருப்பது பாராட்டுக்கு உரியது. உலகில் உள்ள மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழி தமிழ்தான் என்று உறுதிபடக் கூறுகிறார். “உலகில் முதன் முதலில் மனிதன் தோன்றியது தென்னிந்தியாவில்தான்” என்று சர்ஜான்ஸ் இவான்ஸ் என்ற மேல்நாட்டு அறிஞர் கூறியுள்ளதை எடுத்துக்காட்டுகிறார். “குமரிக்கண்டம் (லெமூரியா) கடலில் அமிழ்ந்தபோது, அதில் வசித்த மக்கள் எட்டுத் […]

Read more

வரலாற்று உண்மைகள்

வரலாற்று உண்மைகள் தமிழ் மண் தமிழர் வரலாறு, தமிழ் புகழேந்தி, பத்மா பதிப்பகம், பக் 348, விலை 350ரூ. தொல்லியல், கல்வெட்டு ஆராய்ச்சியாளரான நூலாசிரியர், தனது 30 ஆண்டுகால ஆராய்ச்சியின் பயனாக வரலாற்று உண்மைகள் என்ற தலைப்பில் தமிழ் மண், தமிழர், தமிழ் வரலாறு தொன்மைக்காலம் முதல் கி.பி. 1947-ஆம் ஆண்டு வரையில் உள்ள உண்மைகளை வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழகத்தின் தொன்மைகளை அகழ்வாய்வு, கல்வெட்டு, மொழியாய்வு வல்லுநர்களின் கருத்துகளைக் கொண்டு விவரிக்கிறார் நூலாசிரியர். தமிழ் மன்னர்களைப் பற்றியும், அவர்களது உணர்வுகள் குறித்தும் “நந்திக்கலம்பகம்’‘ நூலின் மூலம் […]

Read more

ஏர் காக்க நீர் காக்க பார் காக்க

ஏர் காக்க நீர் காக்க பார் காக்க, காவி. கண்ணன், பத்மா பதிப்பகம், பக். 120, விலை 125ரூ. ஒரு ஏர் உழவனின் சீரிய சிந்தனைகளின் பிரச்னைகள், விவசாயத்தில் இன்றைய நிலை பற்றி, ஆராய்ந்து இந்திய தேசத்தின் பாரம்பரிய முறையைக் காப்பாற்றி இந்தியப் பொருளாதாரத்தை விரிவுபடுத்த ஆலோசனை கூறும் நூல். நன்றி: குங்குமம், 23/9/2016.

Read more

கிராம நிர்வாக அலுவலர் கடமைகள் மற்றும் பணிகள்

கிராம நிர்வாக அலுவலர் கடமைகள் மற்றும் பணிகள், ரேவதி பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 330ரூ. ஒரு கிராமத்தில் அரசாங்கத்தின் பிரதிநிதியாக இருப்பவர் கிராம நிர்வாக அலுவலர். அந்தக் கிராமத்தில் நில நிர்வாகம், வரி வசூல், பொதுச் சொத்துக்களைப் பாதுகாத்தல், இதரத் துறை அலுவலர்களுக்கு உதவுதல் போன்ற எண்ணற்ற பணிகளை கிராம நிர்வாக அலுவலர் கவனித்து வருகிறார். அவர்களின் கடமைகள் மற்றும் பணிகள் குறித்து இந்த நூலில் வடகரை செல்வராஜ் விரிவாக விளக்கியுள்ளார். நன்றி: தினத்தந்தி.   —- கலைஞர் பரணி கவிதை மலர்கள், கவிஞர் […]

Read more

சொப்பன சுந்தரி

சொப்பன சுந்தரி, வானவில் புத்தகாலயம், சென்னை, விலை 299ரூ. பிரபல தெலுங் எழுத்தாளர் யத்தனபூடி சுலோச்சனா ராணி எழுதிய நாவல். தமிழில் கவுரிகிருபானந்தன் மொழிபெயர்த்துள்ளார். சேற்றில் பிறந்த செந்தாமரை மேனகா, தாயின் வாழ்க்கையில் நடந்த தடுமாற்றத்தால் சமுதாயம் அவர்களை மதிப்புக் குறைவாக நடத்துகிறது. மேனகா எதிர்பாராதவிதமாக நடிகையாகி விடுகிறாள். அவள் மனதார விரும்பிய ஹரி கிருஷ்ணாவுக்கும் ரேகாவுக்கும் திருமணம் நடக்கிறது. இந்த நிலையில் ரேகா இறந்து போகிறாள். ஹரி கிருஷ்ணன் மீது கொலை குற்றம் சாட்டப்படுகிறது. திகில்களும், திருப்பங்களும் நிறைந்த கதை. முடிவு என்னவாக […]

Read more
1 2