நான் அவள் கேபுச்சினோ

நான் அவள் கேபுச்சினோ, ஹரிஷ் குணசேகரன், பாரதி பதிப்பகம், பக். 144, விலை 120ரூ. தகவல் தொழில்நுட்ப அரங்கில் பணிபுரியும், இளைய தலைமுறையினரின் விதிக்கப்பட்ட தினசரி வாழ்க்கை. வயதின், சூழலின் நெருக்கத்தில் வரும் காதல்கள், பிரிவின் துயரங்கள், இந்தக் கதையில் விரவிக்கிடக்கின்றன. நவீன கால வாழ்க்கையைப் பேசும் இலக்கியம், அமுத கண்ணும், சிந்திய மூககுமாய் இருக்க வேண்டும் என்பதை, இந்நாவல் மறுத்து ஒதுக்குகிறது. நன்றி: தினமலர், 22/1/2018.

Read more

போருக்குத் தயார்

போருக்குத் தயார், தியாகி ஐ. மாயாண்டி, பாரதி பதிப்பகம், பக். 40, விலை 50ரூ. இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றை விளக்கும் நூல்கள் படிக்க படிக்க அலுப்பு ஏற்படுத்தாதவை. போராட்ட நூல்களை படிப்பவர்களுக்குதான் இது தெரியும். அந்த வரிசையில் வந்துள்ள நூல் இது. 1939ல் வெளியானதன் இரண்டாம் பதிப்பு இப்போது வந்துள்ளது. சுயநலம் வேண்டாம். தர்க்கம் வேண்டாம். நம் நாட்டு யுத்த மந்திரி காந்திஜியின் கட்டளை பிறந்துவிட்டது. தயார் தயார் என்று மார் தட்டுங்கள். உங்கள் பளிங்கு போன்ற இருதயத்திலே வீர உணர்ச்சி பீறிட்டு […]

Read more

நரபட்சிணி

நரபட்சிணி, தமிழில்-முத்து மீனாட்சி, பஞ்சாபி மூலம்-நானாசிங், சாகித்ய அகடமி, ரவீந்திர பவன், 35, பெரோஷா சாலை, டில்லி 110001, பக். 449, விலை 235ரூ. இந்திய தேச விடுதலைக்கு முன்பும் பின்புமாக, சுதந்திர இந்தியா உருவான காலத்தையொட்டிய சூழலை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட புதினம் இது. பெருமுதலாளியாக விரும்பும் நர மாமிச பட்சிணியின சிறு முதலாளி டாவர் சிங், மங்கையர் திலகமாக அவருக்கு வாய்த்த மனைவி, முற்போக்கு எண்ணம் கொண்ட, அவர்களது மகன், அவ்வப்போது நல்லவனாக மாறி, வாழ்க்கையில் தடுமாறும் தொழிலாளி சிங்காரசிங், அவனது […]

Read more

நமது சினிமா (1912-2012)

நமது சினிமா (1912-2012), கவிதா பப்ளிகேஷன்ஸ், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார்,தி.நகர், சென்னை 17, விலை 350ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-863-8.html இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் சினிமா படம் ராஜா ஹரிச்சநதிரா இந்திய சினிமாவின் பிதாமகன் என்று போற்றப்படும் பால்கே, 1913ம் ஆண்டில் இதைத் தயாரித்தார். எனவே இந்தியாவில் சினிமாப்படம் தயாரிக்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி நாடு முழுவதும் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. நமது சினிமா (1912-2012) என்ற இந்தப் புத்தகத்தை சிவன் சிறந்த முறையில் எழுதியுள்ளார். […]

Read more

தன்னம்பிக்கை தரும் குட்டிக்கதைகள்

தன்னம்பிக்கை தரும் குட்டிக்கதைகள், சுந்தர்பாலா, குறிஞ்சி பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2வது தெரு, ராஜாஜி நகர் விரவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 55ரூ. 54 குட்டிக் கதைகள் அடங்கிய சிறு நூல். இருப்பினும் அனைத்துமே அருமையான கதைகள். சிறுவர் விரும்பும் வகையில் உள்ளன.   —-   கட்டுப்படுத்துவோம் காசநோயை, மருத்துவர் நா. மோகன்தாஸ், பண்பு நூல் வெளியீட்டகம், 2266, மானோசியப்பா வீதி, தஞ்சாவூர், விலை 100ரூ. காசநோய் உடலின் எந்தெந்த உறுப்புகளை எவ்வாறு தாக்குகிறது என்றும், அவற்றை எவ்வாறு […]

Read more

2012 சிறந்த 10 புத்தகங்கள் – ஜெயமோகன்

2012 சிறந்த 10 புத்தகங்கள் – ஜெயமோகன் சரிவிகித உணவு பற்றி நாம் ஐந்தாம் வகுப்பிலேயே வாசிக்க ஆரம்பித்திருப்போம். எல்லா சத்துகளும் அடங்கிய உணவுதான் உடல்நலத்துக்கு நல்லது. ஏதேனும் ஒரு சத்து மிகையாக இருந்தாலும், குறைந்தாலும்… நோயையே உருவாக்கும். வாசிப்பிலும் அப்படி ஒரு சரிவிகித நிலை வேண்டும். எல்லா அறிவுத்தளங்களிலும் முக்கியமான நூல்களை வாசிப்பதுதான் அவசியமானது. அதுவே சமநிலை கொண்ட முழுமையான நோக்கை உருவாக்கும். நாக்கின் சுவை கருதி உண்பது எப்படி நோயை அளிக்குமோ, அப்படித்தான் வாசிப்பின் சுவை மட்டுமே கருதி வாசிப்பதும். தமிழில் […]

Read more