மணற்கேணி

மணற்கேணி, எச்.நாராயணசாமி(நானா), வானவில் புத்தக்களஞ்சியம், விலை 306ரூ. வித்தியாசமான அம்சங்களுடனும், மற்ற நூல்களில் இருந்து வேறுபட்டும் தயாராகியுள்ள இந்த நூல், பல விதமான மலர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தோரணம் போலக் காட்சி அளிக்கிறது. நூலாசிரியர் தான் கற்றரிந்த, தனது அனுபவத்தில் கிடைத்த மற்றும் தான் படித்த, பார்த்த பயனுள்ள தகவல்களைக் கேள்வி பதில் வடிவில் தந்து இருப்பது புதிய முயற்சி. வரலாறு, அறிவியல், காதல், காமம், முதுமை, தத்துவம், உளவியல், பத்திரிகை, மனதைத் தொட்ட பாடல்கள் போன்ற பல விஷயங்களை சுவைபடத் தொகுத்துத் தந்து […]

Read more

சங்கப் பாடல்களில் சாதி, தீண்டாமை

சங்கப் பாடல்களில் சாதி, தீண்டாமை இன்ன பிற…, வீ.எஸ். ராஜம், மணற்கேணி, பக். 80, விலை 60ரூ. சாதிகளின் உடலரசியல், உதயசங்கர், நூல்வனம், பக். 94, விலை 75ரூ. ஜாதி ஒழிப்பு : நம்பிக்கை விதைக்கும் நூல்கள் இந்தியச் சூழலில், சாதியை சந்திக்காமல் எவரும் வாழ்க்கை நடத்திவிட முடியாது. சாதியை வெளியில் சொல்லிக் கொள்வது அநாகரிகம். இன்னொருத்தர் சாதியைக் கேட்பது அவமரியாதை என்ற உணர்ச்சிகளுக்கு, இன்றைய இந்திய சமூகத்தில் இடமில்லாமல் போய்விட்டது. மாறாக தன், சாதியின் ‘பெருமை’யை பெரிதாகப் பேசித்திரிவது, தன்னை இன்ன சாதி […]

Read more

அ-சுரர்களின் அரசியல் தலித்துகளும் மதுவிலக்கும்

அ-சுரர்களின் அரசியல் தலித்துகளும் மதுவிலக்கும், ரவிக்குமார், மணற்கேணி, சென்னை, விலை 30ரூ. மதுவிலக்கு-இன்னொரு கோணம் ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்ற வாசகங்களை மதுக்குடிப்பியில் அச்சிடுவதோடு கடமை முடிந்துவிட்டது என்று அரசுகள் நினைக்கின்றன. இந்நிலையில் மதுவிலக்கை வலியுறுத்தித் தமிழகத்தில் வெவ்வேறு தரப்பிலிருந்தும் உறுதியான குரல்கள் எழுகின்றன. இச்சூழ்நிலையில் மதுப்பழக்கத்தால் உடல்ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் அதிகம் பாதிக்கப்படுபவர்களான அடித்தட்டு,தலித் மக்கள் நோக்கிலிருந்து மதுவிலக்கை வலியுறுத்திப் பேசும் சிறுகட்டுரைகள் இவை. மதுப்பழக்கத்தை கீழ்மக்களோடு தொடர்புபடுத்தும் மேல்தட்டு வர்க்கக் கற்பிதங்களையும் இக்கட்டுரைகள் கேள்விக்குள்ளாக்குகின்றன. குடியை மாற்றுப் பண்பாடாக அணுகும் போக்கையும் ரவிக்குமார் […]

Read more

வடநாட்டு கோயிற்கலைகள்

வடநாட்டு கோயிற்கலைகள், கோ. வீரபாண்டியன், வேலா வெளியீடு, சென்னை, பக். 356, விலை 260ரூ. கி.மு. 3000 முதல் வடநாட்டில் கட்டப்பட்ட கோயில்களின் கட்டுமானப் பணிகள், பயன்படுத்தப்பட்ட பொருள்கள், கட்டியவர்கள் குறித்தும், இன்றைய காலத்தில் கட்டடம் கட்டும் பணியைக் காட்டிலும், அன்றைய காலத்தில் எவ்வளவு நவீன முறைகளைக் கையாண்டுள்ளனர் என்ற தகவல்களும் விரிவாக இடம் பெற்றுள்ளன. மொகஞ்சதாரோ, ஹரப்பா, உள்ளிட்ட பல்வேறு நகரங்களின் கட்டுமானப் பணிகள், நிர்வாகப் பணிகள் போன்றவையும் இடம் பெற்றுள்ளன. கோயில்கள், வேள்வி பீடங்கள், குன்றுகள், குடைவரைகள், தூண்கள் போன்றவற்றின் கட்டுமான […]

Read more