நாளும் நலம் நாடி

நாளும் நலம் நாடி, மருத்துவர் அசோக், மணிமேகலைப்பிரசுரம், உடல்நலம், மனநலம், சமுதாய நலம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த கருத்தாக மருத்துவத்தை எளிதாக புரிய உதவிடும் நுால். ஆசிரியர் அசோக், ஆங்கிலம் மற்றும் சித்த மருத்துவத்தில் நல்ல பரிச்சயம் கொண்டவர். அகில இந்திய வானொலியில் இவர் தினசரி உரையாற்றிய தொகுப்பை இந்த நுால் கொண்டிருக்கிறது. சர்க்கரை வியாதி இப்போது புதிதாக சமுதாயத்தை மிரட்டும் நோய். அதை சமாளிக்க நார்ச்சத்துணவை வலியுறுத்தும் பலரும் எது நார்ச்சத்து உணவு என்று பட்டியலை உருவாக்க சிரமப்படலாம். பீன்ஸ், காளான், சோயா, வெங்காயத்தாள் […]

Read more

அது ஒரு கனாக்காலம்

அது ஒரு கனாக்காலம், ஜெ.பாஸ்கரன், மணிமேகலைப்பிரசுரம், விலை 100ரூ. சில நினைவுகள் காலத்தால் அழியாதவை. இன்று நினைத்தாலும் இனிமையான உணர்வலைகளை உள்ளமெங்கும் தவழ விடுபவை என்பதில் சந்தேகமில்லை. சைக்கிள் விட்ட துள்ளலையும், கல்யாணங்களில் ஆனந்தப்பட்டதையும், பெண் பார்த்த அப்பாவித் தனத்தையும், வாழைப்பூ வடை சாப்பிட்ட நாக்கு ரசனையையும், துபாய் அனுபவிப்பையும், லண்டனில் படித்ததையும், அகஸ்தியர் கோவில் அமைப்பையும், அம்மாவின் அரவணைப்பையும், சினிமா மோகத்தையும் நினைவுகூர்வதாக அமைந்துள்ளது இந்நுால். சில நினைவுகள் காலத்தால் அழியாதவை. இன்று நினைத்தாலும் இனிமையான உணர்வலைகளை உள்ளமெங்கும் தவழ விடுபவை என்பதில் […]

Read more

நல்கிராமம்

நல்கிராமம், கமலக்கண்ணன் கோகிலன், மணிமேகலைப்பிரசுரம், விலை 250ரூ. இந்த நாவல், நல்கிராமம் என்று தலைப்பிடப்பட்டு இருந்தாலும் தற்போதைய நகரங்கள் ஆகியவற்றை ஆக்கிரமித்துள்ள கார்ப்ரேட் நிறுவனங்கள், அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவை பற்றி அதிகமாக பேசும் வகையில் எழுதப்பட்டுள்ளது. பொழுதுபோக்காக வெறும் கதையை மட்டும் சொல்லிப்போகாமல், தற்கால நாகரிக உலகில் பாதிக்கப்பட்ட சமூக நலன்கள், மதுவிலக்கு போன்றவை பற்றிய ஆதங்கமான கருத்துகள் கதை நெடுகிலும் வற்புறுத்தப்பட்டு இருக்கிறது. படிக்காத அந்தக் காலத்து பாட்டன் அப்பாவை விட, படித்த தற்காலத்து மக்கள் தான் அதிகம் ஏமாற்றப்படுகிறார்கள் என்ற […]

Read more

இமயத்தில் தமிழ்க்கொடி நாட்டிய கரிகாலன்

இமயத்தில் தமிழ்க்கொடி நாட்டிய கரிகாலன், கே.சித்தார்த்தன், மணிமேகலைப்பிரசுரம், விலை 150ரூ. வடநாட்டு மன்னர்கள் பலரை முறியடித்து, இமயமலையில் சோழர்களின் புலிக்கொடியை நாட்டியது, காவிரியின் குறுக்கே பலம்வாய்ந்த கல்லணையைக் கட்டியது போன்ற அரிய செயல்களால் அழியாப்புகழ் பெற்ற மன்னர் கரிகாலனின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எழுதப்பட்டுள்ள இந்த நாடகம். விறுவிறுப்பான சினிமா படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வைத் தரும் வகையில் அமைந்து இருக்கிறது. ஒரு சில கற்பனை கதாபாத்திரங்களையும் சேர்த்து, நாடகத்தை நேர்த்தியாக நகர்த்திச் செல்லும் பாங்கு, கரிகாலனின் நல்ல குணங்களை படம்பிடித்துக் காட்டுவது போன்ற […]

Read more

இந்தியாவின் தலைவிதியை மாற்றிய தலைசிறந்த சொற்பொழிவுகள்

இந்தியாவின் தலைவிதியை மாற்றிய தலைசிறந்த சொற்பொழிவுகள், கோபால் மாரிமுத்து, ஐ.ஆர்.பி.எஸ், மணிமேகலைப்பிரசுரம், விலை 350ரூ. 40 இந்தியர்கள், குறிப்பாக சுதந்திரப்போராட்ட வீரர்கள் அரசியல்வாதிகளின் பேச்சுகள் மற்றும் வெளிநாட்டினரின் சிறப்பான, உத்வேகம் அளிக்கிற பேச்சின் தொகுப்புத்தான் இந்த புத்தகம். உரை ஆற்றியவர்களைப் பற்றிய குறிப்பு, அவர்கள் உரை ஆற்றிய தருணம் வரை தரப்பட்டு உள்ளது. மொழி பெயர்ப்பினை நேர்த்தியாக, பொருள் சிதையாமல் செய்வதே ஒரு கலை. அதை நூலாசிரியர் நிறைவாக செய்து இருக்கிறார். மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் இருவரும் சுதந்திர போராட்டத்தில் வெவ்வேறு அணுகுமுறைகளை, […]

Read more

மாறுமோ தமிழக வறட்சி நிலை?

மாறுமோ தமிழக வறட்சி நிலை?, ச. அரிகரபுத்ரன், மணிமேகலைப்பிரசுரம், விலை 60ரூ. நூலில் இடம் பெற்றுள்ள கவிதைகளில் நாட்டு நலன், மக்கள் நலன், மொழி நலன், சிந்தனை ஆற்றல்கள் காணப்படுகிறது. பெண் குழந்தைகள் குப்பைத் தொட்டியில் வீசப்படும் அவலம் கண்டு ஆசிரியரின் உள்ளக்குமுறல் வெளிப்படுகிறது. நன்றி: தினத்தந்தி, 6/12/2017.

Read more

விநாயகர் பற்றிய அற்புதமான விஷயங்கள்

விநாயகர் பற்றிய அற்புதமான விஷயங்கள், சிந்தனையருவி இரா.ரெங்கசாமி, மணிமேகலைப்பிரசுரம், விலை 110ரூ. விநாயகர் பற்றி புராணங்களில் சொல்லப்பட்டுள்ள சகல விவரங்களும் இந்தப் புத்தகத்தில் உள்ளன. அத்துடன் விநாயகரின் ஜாதகமும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நன்றி: தினத்தந்தி, 26/7/2017,

Read more

ஏவுகணை நாயகன் அப்துல் கலாம்

ஏவுகணை நாயகன் அப்துல் கலாம், விருதை ராஜா, கண்ணப்பன் பதிப்பகம், விலை 70ரூ. மறைந்த ஜனாதிபதி, பாரத ரத்னா, ஏவுகணை நாயகர் அப்துல்கலாம், மக்கள் மனதில் இடம் பிடித்தவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக அதே சமயம் மனதைத் தொடுகிற விதத்தில் எழுதியுள்ளார் விருதை ராஜா. நன்றி: தினத்தந்தி, 25/5/2017.   —-   மனிதர்களின் அலட்சியங்களும் தீர்வுகளும், சா.ஜெயக்குமார், மணிமேகலைப்பிரசுரம், விலை 70ரூ. சிந்திக்கும் திறன் கொண்ட மனிதனால், அவனுடைய வாழ்க்கையை இன்பமாகவும், சிறப்பானதாகவும் அமைத்து கொள்ள முடியவில்லை என்பதற்கு விடையளிக்கும் நூலாக […]

Read more

சிகரத்தை நோக்கி

சிகரத்தை நோக்கி, குவைத் கா. சேது, மணிமேகலைப்பிரசுரம், விலை 240ரூ. தமிழகத்தில், செம்பொன்மாரி என்ற சிறுகிராமத்தில் பிறந்து, மும்பையில் வேலை பார்த்து, பின்னர் குவைத் நாட்டுக்குச் சென்ற கா.சேது, அங்கு விமானப் பணியாளராக சுமார் 40 ஆண்டுகள் பணியாற்றினார். குவைத் தமிழ்ச் சங்கத்தின் மூலம், மூத்த தலைமுறைக்கும், இளைய தலைமுறைக்கும் இணைப்புப் பாலமாக விளங்கினார். சிறந்த எழுத்தாளரான இவர், தன் வாழ்க்கை வரலாற்றை “சிகரத்தை நோக்கி” என்ற தலைப்பில் எழுதினார். அதன் இரண்டாம் பாகம் இப்போது வெளிவந்துள்ளது. தன் வாழக்கை அனுபவங்களை கதைபோல சுவைபட […]

Read more

தமிழ் கற்பித்தல்

தமிழ் கற்பித்தல், டாக்டர் பி. இரத்தின சபாபதி, சாந்தா பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வழிகாட்டும் கையேடு இது. நன்றி: தினத்தந்தி, 1/3/2017. —- புலி வாலைப் பிடித்தால், வெங்கட் பிரசாத், மணிமேகலைப்பிரசுரம், விலை 85ரூ. சென்னையில் ஒரு கல்லூரியில் பேராசிரியர் பணியில் சேர வரும் இரண்டு இளைஞர்கள் ஒரு ஆபத்தில் சிக்கிக்கொள்வது பற்றிய கதை. மர்மம் எதிர்பாராத திருப்பம், சாகசம், காதல்… இப்படி பல்சுவை கொண்ட நாவலை விறுவிறுப்பாக எழுதியுள்ளார் வெங்கட் பிரசாத். நன்றி: தினத்தந்தி, 1/3/2017.

Read more
1 2