பண்டைத் தடயம்
பண்டைத் தடயம், பதிப்பாசிரியர்கள்: நடன.காசிநாதன், மா.சந்திரமூர்த்தி, மணிவாசகர் பதிப்பகம், பக்.320, விலை ரூ275. தமிழகத்தின் வடபகுதியும், ஆந்திர மாநிலத்தின் சிறு பகுதியும் இணைந்த பகுதிதான் தொண்டை நாடு. ஜவ்வாது மலை, வேங்கடமலை, வங்கக்கடல், பெண்ணையாறு ஆகிய நான்கும் தொண்டை நாட்டின் எல்லைகள். அப்பர், சுந்தரர், வள்ளலார் மற்றும் முதல் மூன்று ஆழ்வார்கள் முதலிய அருளாளர்களும், ஆன்மிகப் பெரியோர்களும் தோன்றிய பெருமைக்குரியது இந்நாடு. அத்தகைய தொண்டை மண்டலத்தின் தொன்மைச் சிறப்புகளையும், வரலாற்று உண்மைகளையும், அங்கு கிடைத்த தடயங்களையும் இந்நூல் பறை சாற்றுகிறது. அதுமட்டுமல்ல, திருமாணிக்குழி-சோழர்கால அளவுகோல், […]
Read more