கவி காளிதாசரின் மகா காவியங்கள்

கவி காளிதாசரின் மகா காவியங்கள், சி.எஸ். தேவநாதன், ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், பக். 496, விலை 350ரூ. வால்மீகி ராமாயணம், மகாபாரதம், திருமந்திரம், உபநிடதம் பேசும் உண்மை போன்ற குறிப்பிடத்தக்க நூல்களை எளிய உரைநடையில் அளித்த இந்நூலாசிரியர், இதுவரை 300 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். அவற்றில் ‘நம் தேசத்தின் கதை’ என்ற நூல் 2013 ல் தமிழக அரசின் விருதைப் பெற்றது. அந்த வகையில் இந்நூலில் கவி காளிதாசர் இயற்றிய உலகப் புகழ்பெற்ற மகா காவியங்களான மேகதூதம், குமார சம்பவம், ரகுவம்சம், அபிஞான சாகுந்தலம் […]

Read more

ஸ்ரீபாஷ்யம்

ஸ்ரீபாஷ்யம், (ஸ்ரீ ராமானுஜரின் பிரும்ம சூத்திர விளக்கவுரை), ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், விலை 600ரூ. பகவான் வேதவியாசர் அருளிய பிரம்ம சூத்திரத்திற்கு ஸ்ரீமத் ராமானுஜர் எழுதிய பாஷ்யத்துக்கான விளக்கநூல். பிரும்மத்தில் இருந்தே உலகம் தோன்றியது என்பது முதல் அந்த பிரம்மம் யார்? பிரும்மத்தை அறிவதற்கும் அடைவதற்கும் வேதங்களும் வேதாந்தங்களும் சொல்லும் நெறிமுறைகள் என்னென்ன என்பதையெல்லாம் சாமான்யர்களுக்கும் புரியும் வகையில் எளிமையாகச் சொல்லியிருப்பது சிறப்பு. பகவானைக் காண பக்தர்களுக்குப் பாதை காட்டும் நூல். நன்றி: குமுதம், 5/6/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

ஸ்ரீபாஷ்யம்

ஸ்ரீபாஷ்யம், ராமாநுஜரின் பிரம்மசூத்திர விளக்கவுரை,  ஸ்வாமி,  ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், பக்.752, விலை ரூ.600. பிரம்மசூத்ரம் என்கிற நூலை பாதராயணர் தொகுத்தது என்று கூறும் மரபு உள்ளது. வேத வியாசர் அருளியதே பிரம்ம சூத்ரம்; ஸ்ரீமந் நாராயணனே வியாசராக அவதரித்து பிரம்மசூத்ரத்தை அருளிச் செய்தார் என்றும் கூறப்படுகிறது. வேத-உபநிஷத்துக்கள் என்னும் ஞானப் பாற்கடலைக் கடைந்து பிரம்ம சூத்ரம் என்கிற அமிருதத்தைப் பெற்று, வியாசர் நமக்களித்தார் என்போர் உளர். ராமாநுஜரின் பிரம்ம சூத்ர உரை ஸ்ரீபாஷ்யம் என்று அறியப்படுகிறது. சரஸ்வதி தேவியே ராமாநுஜரின் உரைக்கு ஸ்ரீபாஷ்யம் […]

Read more

சர்தார் வல்லபாய் படேல்

சர்தார் வல்லபாய் படேல், அ.செல்வமணி, ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், பக். 458, விலை 280ரூ. அசோகர், கனிஷ்கர், சந்திர குப்தர், சாணக்கியர், சத்ரபதி சிவாஜி, மேவார்ராணாக்கள், தாந்தியோதோபி, நானாசாகிப் போன்ற மாவீரர்கள் இந்த பாரத தேசத்தை வலிமைமிக்க நாடாக ஆக்க எடுத்த முயற்சிகள் தனித்தனியானவை. தனித்துவமானவை. ஆனால் பிரிந்து கடந்த இந்த பாரதத்தை செம்மைப்படுத்தி, ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த மாவீரர் சர்தார் வல்லப பாய்படேல் என்ற ஒரு தனி மனிதரே. அவரது வாழ்க்கை வரலாற்றை முழுமையாகத் தரும் நூல் இது. -இரா. […]

Read more

மஹாபாரதம்

மஹாபாரதம், கவிஞர் பத்மதேவன், ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 320ரூ. எல்லோருக்குமான பாரதக் கதை இந்தியாவின் பிரதான இதிகாசங்களில் ஒன்று மகா பாரதம். இதன் பிரதான கதையும் கிளைக்கதைகளும் படிப்போரைப் பரவசப்படுத்துபவை. மகாபாரதக் கதையைப் படிக்க எல்லோரும் விரும்புவது இயற்கை. ஆனால் மகாபாரத வாசிப்பு அசுர உழைப்பைக் கோருகிறது. முழுக் கதையையும் படிக்க வேண்டும். ஆனால் எளிதாகவும் விரைவாகவும் வாசிக்க வேண்டும் எனும் ஆர்வம் அனைவருள்ளும் எழும். இந்த ஆர்வத்தைப் பூர்த்திசெய்யும் நோக்கத்தில் ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ் மஹாபாரதம் என்னும் நூலை வழங்கியுள்ளது. […]

Read more

அம்மா சொன்ன குட்டிக் கதைகள்

அம்மா சொன்ன குட்டிக் கதைகள், தொகுப்பு-சே. இளையகுமார், முத்துக்குமரன் பதிப்பகம், திண்டுக்கல், சென்னை 125ரூ. தமிழக மக்கள் வாழ்க்கையில் கலை, இலக்கியம், இயல், இசை, நாடகம் ஆகியவை இரண்டறக் கலந்துள்ளது. இதனால் கதை மூலமாக சொன்ன கருத்துக்கள் மிக எளிதாக மக்களை சென்றடைவதால், தமிழக முதல்அமைச்சர் ஜெயலலிதா கதை மூலமாக பல நல்ல கருத்துக்கள், சிந்தனைகள் அடங்கிய குட்டிகதைகளை மேடைகளில் கூறிவருகிறார். முதல் அமைச்சரின் 66வது பிறந்த நாளையொட்டி 66 கதைகள் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதைக்கும் ஏற்றார் போன்று ஓவியங்களையும் நூலாசிரியர் இணைத்துள்ளார். […]

Read more

மனுநீதி என்னும் மனு தர்மசாஸ்திரம் (மூலமும் உரையும்)

மு. வ. கட்டுரைக் களஞ்சியம் (இரண்டு தொகுதிகள்), முனைவர் ச.சு. இளங்கோ, பாரி நிலையம் வெளியீடு, 184/88, பிராட்வே, சென்னை -108, பக்கம் 1656, விலை 1000 ரூ. அறிஞர் மு.வ. அவர்களின் நூலாக்கம் பெறாத கட்டுரைகளின் தொகுப்பாக, இவ்விரண்டு தொகுதிகளும் வெளிவந்துள்ளன. நிறைகுடமாக விளங்கிய மு.வ. அவர்கள் எளிமையாக வாழ்ந்து காட்டியவர். அன்னாரின் கட்டுரைகள் தமிழர்க்கும், தமிழ்மொழிக்கும் என்றென்றும் பெருமை சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளன என்றும் உறுதியாகக் கூறலாம். இந்நூலில், மொழி, தமிழ், சங்க இலக்கியம், திருக்குறள், சமயம், கலை, கவிதை, சிறுகதை, வாழ்வியல் […]

Read more