கடாஃபி வாழ்வும் வீழ்வும்
கடாஃபி வாழ்வும் வீழ்வும், பிரதீபா, நக்கீரன் பதிப்பகம், 105, ஜானி ஜான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 30ரூ.
40 ஆண்டுகளுக்கு மேலாக லிபியா நாட்டை ஆட்சி செய்த கடாபியின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் நூல் இது. சர்வாதிகாரியாக செயல்பட்டாலும் கடாபிக்கு லிபிய வரலாற்றில் இடம் உண்டு என்பதை இந்த நூல் தெளிவுபடுத்தியுள்ளது. மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு பயனுள்ள நூல்.
—-
ஆலந்தூர் மோகனரங்கன் கவிதைகள், வசந்தா பதிப்பகம், 26, குறுக்குத்தெரு, ஜோசப் குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை 88, விலை 170ரூ.
தமிழ்நாட்டின் சிறந்த கவிஞர்களில் ஒருவரான ஆலந்தூர் மோகனரங்கன் மரபுக்கவிதை, புதுக்கவிதை, எதுவாக இருந்தாலும் சிறப்பாக எழுதுபவர். அவருடைய சிறந்த கவிதைகளைத் கொண்ட தொகுதி இது. தமிழ் அறிஞர்கள் பற்றிய கவிதைகள் இந்த நூலின் தனிக்சிறப்பு. நன்றி; தினத்தந்தி, 5/12/12.
—-
டாக்டர் அம்பேத்கரின் படைப்புகள் ஓர் அறிமுகம், மு. நீலகண்டன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், அம்பத்தூர், சென்னை 98,பக். 273, விலை 185ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-918-9.html
டாக்டர் அம்பேத்கரின் படைப்புகளை அரசியல், பொருளியல், சட்டவியல், சமூகவியல், சமயம் என வகைப்படுத்தி, அம்பேத்கரின் சிந்தனைகளைப் படிப்போர் மனதில் அழமாகப் பாயச் செய்திருக்கிறார் நூலாசிரியர். பகுத்தறிவு செயல்பட இடம் கொடுக்காத வேதங்களை வெடிவைத்துத் தகர்க்க வேண்டும், இந்தியாவில் பெண்ணின் வீழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் மனு தர்மம்தான் காரணம் என்பன போன்ற அம்பேத்கரின் சிந்தனைகள் நூலில் அதிகம் பேசுவதோடு சிந்திக்கவும் வைக்கிறார் நூலாசிரியர் மு. நீலகண்டன். அம்பேத்கரின் சிந்தனைகள் பற்றிய ஆய்வுக்கு இந்நூல் ஒரு முக்கிய ஆவணமாகத் திகழும் அளவுக்கு செரிவாக ஆக்கப்பட்டுள்ளது. நன்றி: குமுதம், 5/12/12.
