காட்டு நெறிஞ்சி

காட்டு நெறிஞ்சி, கவிமதி சோலக்சி, இனிய நந்தவனம் பதிப்பகம், பக். 128, விலை 110ரூ. கவிதைகள் ஒவ்வொன்றும் ஒரு அர்த்தத்தை உணர்த்தும்விதமாக உள்ளன. நாம் கவனிக்கத் தவறிய, நாம் மறந்துபோன பல விஷயங்களை கவிதைகளாகப் படைத்து, படிப்போரை வியப்படைய வைக்கிறார் கவிஞர். கோபம், வலி, சுமை, ஏக்கம், என்று ஒன்றுவிடாமல் நிஜத்தை நிதர்சனமாக காட்டியுள்ளார். அடித்தட்டு மக்களின் வாழ்வியலைப் பேசும் கவிதைத் தொகுப்பு. நன்றி: குமுதம், 14/9/2016.

Read more

மாணவ மணிகளே

மாணவ மணிகளே, டாக்டர் ச. தமிழரசன், குறிஞ்சி பதிப்பகம், பக். 74, விலை 50ரூ. மாணவ சமுதாயத்தை நன்னெறிப்படுத்த வேண்டும் என்ற நோக்கமே இந்நூல். மது, புகை, தற்கொலை, கேலிவதை போன்ற களையப்பட வேண்டியவைகளையும், பெற்றோர், ஆசிரியர், நண்பர் ஆகியோரின் பங்களிப்பு பற்றியும் மாணவர்களின் கற்கும் முறை, லட்சியம், தொண்டுள்ளம் எப்படி இருக்க வேண்டும் என்கிற நூலாசிரியரின் எண்ணமே இங்கே நூல் வடிவம் பெற்றுள்ளது. நன்றி: குமுதம், 14/9/2016.

Read more

இதய ஒலி என் வாழ்க்கை அனுபவங்கள்

இதய ஒலி என் வாழ்க்கை அனுபவங்கள், பழனி. ஜி. பெரியசாமி, வானதி பதிப்பகம், பக். 352, விலை 350ரூ. கல்லும் முள்ளும் நிறைந்த கடினப்பாதையில் தொடங்கி, நிறைந்த முன்னேற்றத்தை அடைந்த தொழிலதிபர் பழனி.ஜி.பெரியசாமி, தன் அனுபவங்களை இந்த நூலில் பகிர்ந்து கொள்கிறார். சிலம்பொலி செல்லப்பனாரின் மாணவரான பெரியசாமி, அமெரிக்காவுக்கு மேற்படிப்பிற்காக சென்ற முதல் தலைமுறை இந்தியர் ஆக செல்லும் முன், அங்கு செல்ல தன் மாமனார் தயங்கியதை சுட்டிக்காட்டியிருப்பது, அருமை. ஆனாலும் தன் மனைவி அதை மீறி அனுப்ப முன்வந்தது, தமிழக குடும்பங்களில் உள்ள, […]

Read more

எதிரி உங்கள் நண்பன்

எதிரி உங்கள் நண்பன், பால்தசார் கிராசியன், தமிழில்  சந்தியா நடராஜன், சந்தியா பதிப்பகம், பக்.96,  விலை ரூ.80. 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக அறியப்படும் ஸ்பெயின் நாட்டு எழுத்தாளர் பால்தசார் கிராசியன், நட்பு, கல்வி, உறவு, பழக்கம், ஒழுக்கம், மேன்மை என இன்னும் பலவற்றைப் பற்றி எழுதியவற்றின் தமிழ் வடிவம் இந்நூல். இன்றைய இளைஞர்களுக்கு நல்ல அறிவுரையை வழங்கக்கூடிய வகையில் இந்த நூல் அமைந்திருக்கிறது. நீ யார், என்ன செய்ய வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படிப் பேச வேண்டும், எப்படி முன்னேற வேண்டும் […]

Read more

மழைவில் மனிதர்கள்

மழைவில் மனிதர்கள், ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன், செந்தில் பதிப்பகம், பக்.240, விலை ரூ.200. சின்னஞ்சிறு வயது முதல் ஏறத்தாழ ஐம்பதாண்டுகாலம், தன் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை அசாத்தியமான நினைவாற்றலுடன் அழகுறப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார் நூலாசிரியர். மனிதர்களோடும், பிராணிகளோடும், பறவைகளோடும், பூச்சிகளோடும், தூக்கத்தோடும், தும்மலோடும், குறட்டையோடும், கொட்டாவியோடும், சப்தத்தோடும், நிசப்தத்தோடும், ஒட்டடையோடும் பின்னிப்பிணைந்திருக்கின்றன இந்த அனுபவ வெளிப்பாடுகள். ஆடு மேய்க்கும் பாட்டி, “பூவுதான் ரெண்டு பூக்கும்; நாவு ரெண்டு பேசுமா?‘’ என்பதும், “திருமணங்களைப் பற்றித் தெரியாது; ஆனால், விடுமுறைகள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட காலம் அது’‘ என்று சிறுவயது […]

Read more
1 7 8 9