ஒப்பற்ற வாழ்வு தரும் உன்னத ஆலயங்கள்

ஒப்பற்ற வாழ்வு தரும் உன்னத ஆலயங்கள், வானதி பதிப்பகம், விலை 195ரூ. பனையபுரம் பனங்காட்டீசன் கோவில், பழையாறை வடதளி தர்பூரீஸ்வரர் கோவில், தேவதானப்பட்டி காமாட்சி ஆலயம், திருவண்ணாமலை மாவட்டம் சோமாசிபாடியில் அமைந்துள்ள அதிசய மலைக் கோவில், போடி பரமசிவம் கோவில், பேரையூர் நாகநாதசுவாமி ஆலயம் உள்பட 33 கோவில்கள் குறித்து பனையபுரம் அதியமான எழுதிய நூல். கோவில்களின் தொன்மை சிறப்பு, புராண சிறப்பு, அங்குள்ள இறைவனை வணங்குவதால் உண்டாகும் நன்மைகள், வழித்தடங்கள் போன்ற முழுமையான செய்திகள் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 14/9/2016

Read more

யாப்பு

யாப்பு டொனமூர் முதல் சிறிசேனா வரை, மு. திருநாவுக்கரசு, ஆகுதி பதிப்பகம், விலை 120ரூ. அரசியல் போராட்டமும், ஆயுதப் போராட்டமும் தொடர் தோல்வியைத் தழுவிய நிலையில் கையறு நிலையில் நிற்கிறான் ஈழத்தமிழன். அதற்கு அகத்திலும் புறத்திலும் ஆயிரம் காரணங்கள். எது காரணமாக இருந்தாலும் அவர்கள் வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்துதானே ஆகவேண்டும்? சோகத்தைச் சுமந்து சுணங்கிப் போக முடியுமா? சுணக்கத்தில் இருந்து மீட்டெடுக்க வந்திருக்கிறது மு. திருநாவுக்கரசுவின் இந்தப் புத்தகம். ஈழத்தமிழர் வாழ்க்கையை தமிழ் உணர்ச்சிமயமாக இல்லாமல், சிங்கள இனவாதமாக பார்க்காமல் மிக நுண்மையாக ஆராய்கிறார் […]

Read more

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், டாக்டர் J.V.G. சேகர், நர்மதா பதிப்பகம், பக். 368, விலை 200ரூ. வக்கீல் தொழில் புரிந்த இந்நூலாசிரியர், அதை விட்டு விட்டு இயற்கை மருத்துவத்தில் பயிற்சி பெற்று, 30 ஆண்டுகளாக அனைத்து வகையான நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்து பாராட்டு பெற்று வருகிறார். இதில் இவரது மனைவி டாக்டர் மதுரம் சேகரும் யோகா, யுனானி, மற்றும் அக்கு பஞ்சர் நிபுணராக இவருக்கு துணை நிற்பது சிறப்புக்குரியது. இவர்கள் தமிழ்நாட்டில் மட்டுமின்றி பல வெளிநாடுகளிலும், தங்கள் சிறப்பு மருத்துவ முகாம்களை அமைத்து […]

Read more

சூல்

சூல், சோ. தர்மன், அடையாளம், பக். 500, விலை 380ரூ. “தூர்வை’‘, “கூகை‘’ நாவல்களைத் தொடர்ந்து இந்நாவலை எழுதியிருக்கிறார் சோ.தர்மன். ரஷியாவின் பிரஷ்னேவ் எழுதிய “தரிசு நில மேம்பாடு’ புத்தகத்தில் வரும் ஒரு சம்பவமே நாவலின் கரு என்கிறார். எட்டயபுரம் அரசாட்சிக்கு உட்பட்டது உருளைப்பட்டி கிராமம். இங்குள்ள கண்மாயை தூர்வாரி மராமத்துப் பணியை கிராமத்தினர் தொடங்குவதிலிருந்து ஆரம்பிக்கிறது இந்த நாவல். கண்மாயின் காவலனாக நீர்பாய்ச்சி, ஊர் பெரிய மனிதர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் என பலதரப்பட்ட மக்கள் வாழ்ந்தாலும் வழக்கம்போல் பிரச்னைகள் சூழ கதைக்களம் பல […]

Read more

பள்ளிப்பருவம்

பள்ளிப்பருவம், தொகுப்பு ரவிக்குமார், மணற்கேணி பதிப்பகம், பக். 96, விலை 80ரூ. கவிஞர் ஞானக்கூத்தன், இமையம், அ. ராமசாமி, இந்திரா பார்த்தசாரதி, பேராசிரியர் கல்யாணி, க. பஞ்சாங்கம் ஆகிய ஆறு ஆளுமைகள் தமது பள்ளிப்பருவம் தொடர்பாக எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு. இதன் மூலம் அக்காலத்தில் நிலவி வந்த பள்ளிக் கல்வியையும் அவை இக்காலத்தில் எப்படியெல்லாம் உருமாறி வந்துள்ளது என்பதையும் அறிய வைத்திருப்பது சிறப்பு. நன்றி: குங்குமம், 23/9/2016.

Read more

ஜீன் ஆச்சர்யம்

ஜீன் ஆச்சர்யம், மொஹமத் சலீம், விகடன் பிரசுரம், பக். 216, விலை 140ரூ. ஜீன் எனப்படும் மரபலகுகளின் விந்தையான செயல்பாடுகள் குறித்து எழுதப்பட்ட அறிவியல் தொடரின் நூல் வடிவம் இது. மனிதர்கள் மட்டுமன்றி, உயிர்கள் அனைத்திலும் ஜீன்களால் ஏற்படும் மாற்றங்கள், அவற்றின் செயல்பாடுகள், ஜீன்களின் பரிணாம வளர்ச்சி என புரிந்து கொள்ளச் சிரமமான அறிவியல் தகவல்களை எளிய தமிழில் விளக்கியுள்ளார் நூலாசிரியர். ஆராய்ச்சிதான் வளர்ச்சிக்கு அடிப்படை. “தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை ‘‘ என ஒரு பழமொழி உண்டு. பிறக்கும் குழந்தை […]

Read more

கவிஞராக

கவிஞராக, அ.கி. பரந்தாமன், அல்லி நிலையம், பக். 342, விலை 135ரூ. தமிழில் இலக்கியம், இலக்கணம், வரலாறு என அனைத்து நிலைகளிலும் நுண்மாண் நுழைபுலம் மிக்கவரான நூலாசிரியர், தன் மாணாக்கர்களுக்கு கவிதை படைக்கும் ஆற்றலை வளர்க்க கற்பித்ததன் அடிப்படையில் இந்நூல் உருவாக்கம் பெற்றுள்ளது. பொது இயல், உறுப்பியல் போன்ற ஒன்பது தலைப்புகளிலும், முப்பத்தைந்து உள் தலைப்புகளிலும் கவிதையை, அதன் உருவாக்கத்தை நூலெங்கும் விளக்கியுள்ளார். யாப்பிலக்கணத்தை மையமாக வைத்து கவிதை உருவாக்குவதன் அவசியத்தைமுக்கியமாகக் கூறியுள்ள நூலாசிரியர், புதுக்கவிதை இலக்கணமற்றது என்பதை மறுக்கிறார். யாப்பிலக்கணம் அக்காலம் முதல் […]

Read more

காரேய் கருணை இராமாநுஜா

காரேய் கருணை இராமாநுஜா, வேதா டி. ஸ்ரீதரன், வேதா ப்ரகாசனம், பக். 192, விலை 150ரூ. வைணவ ஆசார்யார்களுள் மிகவும் முக்கியமானவர் ஸ்ரீராமாநுஜர். அவர் ஒரு புரட்சியாளர் என்று சிலரும், சமூக சீர்திருத்தவாதி என்று சிலரும், மதமாற்றத்தில் ஈடுபட்டவர் என்று சிலரும், ஸ்ரீரங்கம் கோயிலில் பாரம்பரியமாக நடைபெற்று வந்த வழிபாட்டு முறைகளை மாற்றியவர் என சிலரும், அவர் ஒரு வறட்டு வேதாந்தியே தவிர சிறந்த பக்திமான் அல்ல என்று சிலரும், வேத மரபுக்கே விரோதமானவர் என்று சிலரும் அவர் மனைவியைப் பிரிந்தது நியாயமல்ல என்று […]

Read more

இதய ஒலி என் வாழ்க்கை அனுபவங்கள்

இதய ஒலி என் வாழ்க்கை அனுபவங்கள், பழனி ஜி. பெரியசாமி, வானதி பதிப்பகம், பக். 420, விலை 350ரூ. வாழ்வில் திட்டமிட்டு உழைத்து, உயர்ந்த சிகரங்களை எட்டியவர்களின் தன்வாழ்க்கை வரலாற்று நூல்கள், மற்றவர்களுக்கு முன் மாதிரியாக விளங்குபவை. அந்த வகையில், அமெரிக்கா வாழ் இந்தியரான டாக்டர் பழனி ஜி. பெரியசாமியின் வாழ்க்கை மிகவும் குறிப்பிடத் தக்கதாகும். நாமக்கல்லில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து, கல்வி வேட்கையால் உந்தப்பட்டு பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற அமெரிக்கா சென்ற பெரியசாமி, அங்கேயே கல்வியாளராக மாறினார். இருந்தபோதும் தாய்மண் மீதான […]

Read more

தமிழக வரலாற்றில் ஒளிர்வது களப்பிரர் காலம்

தமிழக வரலாற்றில் ஒளிர்வது களப்பிரர் காலம், துளசி இராமசாமி, விழிகள் வெளியீடு, பக். 291, விலை 300ரூ. சங்கம் வைத்து தமிழ் வளர்த்தவர்கள் களப்பிரரே. பாண்டிய வேந்தர்கள் இல்லை என்றும் களப்பிரர் வந்தேறி இனக்குழுவினர் என்றும், பாண்டியர் இனக்குழுவினரை அகற்றி அரசு உருவாக்கியவர்கள் என்றும், பல ஆதாரங்களுடன் பேசும் நூல். ஆய்வு மாணவர்களுக்கு பயன்படும். நன்றி: குங்குமம், 23/9/2016.

Read more
1 5 6 7 8 9