காக்கியின் டைரி

காக்கியின் டைரி, பெ. மாடசாமி, நேசம் பதிப்பகம், பக். 240, விலை 200ரூ. காவல்துறையில் 34 ஆண்டுகள் பணியாற்றி, உதவி ஆணையராக ஓய்வு பெற்றவர் நூலாசிரியர். காவல்துறை பணியில் தனது அனுபவங்கள் – காவல்துறையில் பணிபுரிந்த, புரியும் தனது நண்பர்களின் அனுபவங்கள் – ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்நூலை எழுதியிருக்கிறார். காவல்துறையில் பணிபுரிபவர்கள் சந்திக்க வேண்டிய பல்வேறு சவால்கள், சுமக்க வேண்டிய சுமைகள், அவர்களுடைய பல்வேறு பணிநெருக்கடிகள் ஆகியவற்றை இந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவரும் உணர முடியும். பலவிதமான குற்றங்கள், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், அவர்களைப் […]

Read more

கம்பர் வைணவநெறி

கம்பர் வைணவநெறி, பாவலர் மணிசித்தன், திருவரசு புத்தக நிலையம், விலை 80ரூ. பாவேந்தர் பாரதிதாசனால் பாராட்டப்பட்ட, இந்நூலாசிரியர் சிறந்த தமிழ் அறிஞர். இவர் கம்பர் குறித்தும், வைணவம் குறித்தும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக, இந்நூல் வெளிவந்துள்ளது. இந்நூலில், 11 கட்டுரைகள் உள்ளன. ஒரு குரங்கை, கம்பன் கண்ட மனிதனாக கூறுவதும் (பக். 3), கண்ணனைச் சரயு ஆற்று ஓட்டத்தில் காண வைப்பதும் (பக். 12), நம்மாழ்வார் பிரபந்தங்களை தழுவிக் கொள்ளும் கம்பரின் பாடல்களை விளக்குவதும் (பக். 23), சிவபெருமானின் பெருமைகளை விளக்கும், கம்பரின் பாடல்களைக் […]

Read more

பூமியின் பாடல்கள்

பூமியின் பாடல்கள் (வட கிழக்கு இந்தியக் கதைகள்), கைலாஷ் சி. பரல், தமிழில் சுப்பிரபாரதி மணி, சாகித்ய அகாடமி, பக். 204, விலை 140ரூ. வடகிழக்கு மாநிலங்களின், 16 கதைகளை தமிழில் மொழிபெயர்த்து தொகுக்கப்பட்ட நூல் இது. பதிப்பாசிரியர்: கைலாஷ். சி.பரல் திரட்டிய, 15 எழுத்தாளர்களின் கதைகளை, தமிழாக்கம் செய்திருப்பவர் சுப்பிரபாரதி மணி. அசாம், மணிப்பூரி, மேகாலயா, மிசோரம், திரிபுரா, நாகாலாந்து பிரதேச, 16 கதைகளில், சில நெடுங்கதைகள், பல் வகையான மையப் பொருள்களில், அவரவருக்கே உரித்தான நடையில் படைத்தவற்றில், சில கருத்துமிக்க அழுத்தமான […]

Read more

நிம்மதி

நிம்மதி, இடைமருதூர் கி. மஞ்சுளா, கலைஞன் பதிப்பகம், பக். 168, விலை 180ரூ. இந்திய ஆய்வியல் துறை, மலாயாப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து மலேசியாவில் வெளியிடப்பட்ட இந்தச் சிறுகதைத் தொகுப்பில் 22 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. ஓடும் ரயிலில், ரயில் நிலையத்தில் காத்திருக்கும் போது, பேருந்தில், ஆட்டோவில், மருத்துவமனையில், நெடுந்தூர ரயில் பயணத்தில்… ஏன், கனவில் கூட தன்னைச் சுற்றி நிகழ்ந்த – நிகழ்கின்ற நிகழ்ச்சிகளைக் கதைக் கருவாக்கியுள்ளார் நூலாசிரியர். தற்கால இளைஞர்களின் சுயநலப் போக்கை “சூளை’ சிறுகதை படம் பிடித்துக் காட்டுகிறது. “நிம்மதி’ […]

Read more

நூறு வடமொழிக் கதைகள்

நூறு வடமொழிக் கதைகள், பத்ம சாஸ்திரி, தமிழில் அலமேலு கிருஷ்ணன், சாகித்திய அகாதெமி, பக். 256, விலை 150ரூ. வடமொழிக் கதைகள் என்பதை சம்ஸ்கிருத கதைகள் என்று புரிந்து கொண்டு படித்தாலும், இந்தக் கதைகள் எந்த வட்டத்துக்குள்ளும் பொருந்தவில்லை. மரபுவழிக் கதைகளா, நீதிக்கதைகளாக, புனைவுகளா, வேற்றுமொழிக்கதைகளா, பஞ்ச தந்திர கதைகளின் மாற்றுருவா? எதையும் நூலாசிரியர் சொல்லவே இல்லை. வாசகனே அவரவர் வாசிப்பின் பரப்புக்கேற்ப தீர்மானித்துக் கொள்ள வேண்டியதுதான். நூறு கதைகளில் அதிகபட்சமாக 4 கதைகளை “நன்று‘’ எனச் சொல்லலாம். குறிப்பாக, “இரும்பு வியாபாரி”, “அரசனின் […]

Read more

செம்பியன்மாதேவி கலைக்கோவில்கள்

செம்பியன்மாதேவி கலைக்கோவில்கள், முனைவர் கோ. எழில்ஆதிரை, இயல்வெளியீடு, விலை 400ரூ. தமிழகத்து வரலாற்றில் ஈடு இணையற்ற கலைத்தொண்டு ஆற்றிய பெண்மணி செம்பியன்மாதேவியாவார். இவர் கண்டாதித்த சோழனின் மனைவியும், உத்தமசோழனின் தாயுமாவார். இவர் தன் வாழ்நாள் முழுவதும் காளத்தி மலை முதல் நாகப்பட்டினம் வரை புகழ்வாய்ந்த பாடல் பெற்ற தலங்களைப் புதியதாகக் கட்டி அவற்றில் எழிலார்ந்த செய்யுத் திருவுருவங்களை வீதி உலாவிற்காக செய்தமைத்து ஏராளமான கொடைகளை அளித்து தனக்கென ஒரு மாபெரும் வரலாற்றையே தோற்றவித்த பெண்மணியாவார். அவர் கோனேரிராசபுரத்தில் செய்த பணிகளை விரிவாகவும், விளக்கமாகவும் கூறுகிறது […]

Read more

காமராஜர் எனும் கலங்கரை விளக்கம்

காமராஜர் எனும் கலங்கரை விளக்கம், அரங்க பரமேஸ்வரி, வையவி பதிப்பகம், விலை 120ரூ. திக்குத் தெரியாமல் நிலை தடுமாறும் கப்பலுக்கு வழிகாட்டிக் கரை சேர்க்கும் கலங்கரை விளக்கம் போலக் காட்சியை எப்படி நடத்த வேண்டுமென்று வழிகாட்டி, தன்னலமற்ற தியாகத்திற்கு வழிகாட்டி, பொது வாழ்க்கைக்கான தொண்டு எவ்வாறு அமைய வேண்டுமென்பதற்கு வழிகாட்டி, நாட்டின் வளர்ச்சிக்குச் செயல் வீரவராக எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு வழிகாட்டி, மக்கள் விரும்பும் தலைவராகவும் மக்களை நேசிக்கும் தொண்டராகவும் ஒரு மனிதன் ஆற்ற வேண்டிய பாங்கிற்கு வழிகாட்டி, உண்மையான நேர்மையான உழைப்புக்கு […]

Read more

மனிதப் பிறவிக்கு முக்தி தரும் ஞான வள்ளல்

மனிதப் பிறவிக்கு முக்தி தரும் ஞான வள்ளல், ஞானேஸ்வரி, ஓங்காரம் வெளியீடு, விலை 600ரூ. திருவருளை அடைய குருவருள் அவசியம் என்பார்கள், மெய்யன்பர்கள். இதைத்தான் ‘குருவின் திருமேனி கண்டாலே தெளிவு பிறக்கும்’ என்றார், திருமூலம். ஓங்காரநந்தா சுவாமிகளுடனான தனது நேரடி அனுபவங்கள், சுவாமிகளின் ஜீவகாருண்ய அனுபவங்கள், குருபக்தி, குருவின் பெருமைகள், குருவின் அவசியம் உள்ளிட்டவற்றையும் மகேஸ்வர புஜை, படி பூஜை, ஞானதீப வழிபாடு, குரு பூஜை போன்ற வழிபாடுகளை நடத்தும் முறைகளையும் நூலாசிரியர் ஞானேஸ்வரி எளிய தமிழில் விரிவாக விளக்கியுள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக […]

Read more

நினைவில் நின்றவை

நினைவில் நின்றவை, கே. சிவகாமிநாதன், கலைஞன் பதிப்பகம், பக். 192, விலை 180ரூ. அரசு துறையான ஆவினில், மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்ற கே. சிவகாமிநாதன், தன் அனுபவங்களை இந்த புத்தகத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். ஒரு அரசு அதிகாரியாக, அரசியல் தலைவர்கள், வி.ஐ.பி.,க்கள் என பலரிடமும் பழகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்து இருந்திருக்கிறது. ஒரு தலைமுறைக்கு முன்பு நடந்த பல வரலாற்று தகவல்களையும், சுவையாகக் கூறியுள்ளார். விருதுநகரைச் சேர்ந்த அவர், தனது சொந்த ஊரில் இருந்து, நினைவுகளை தொடங்கியுள்ளார். சாதாரண கிராமமாக இருந்த […]

Read more

நனைந்த நதிகள்

நனைந்த நதிகள், கவிஞர் தமிழ்தாசன், காவ்யா பதிப்பகம், பக். 120, விலை 100ரூ. நனைந்த நதிகள் புத்தகம் முழுவதும் கவிதை துளிகளை தெளித்திருக்கிறார் கவிஞர் தமிழ்தாசன். ரத்தத் துளிகளால் எழுதப்பட்டது நம் சுதந்திர இந்திய வரலாறு தூசி படர்ந்து கிடக்கிறது என இது எங்கள் தேசம் என்ற தலைப்பில்(பக். 57) அவர் எழுதியுள்ள கவிதைகள் நடந்தவற்றை படம் பிடிக்கின்றன. சொல்லவந்த கருத்தை சுருங்கச் சொல்லி இருக்கும் முயற்சி பாராட்டுதற்குரியது. நன்றி: தினமலர், 2/10/2016

Read more
1 3 4 5 6 7 9