காற்றினிலே வரும் கீதம்

காற்றினிலே வரும் கீதம், ரமணன், கவிதா பப்ளிகேஷன், பக். 264, விலை 800ரூ. இசையரசியின் வாழ்க்கைப் பயணம் இசையரசி எம்.எஸ்.,ஸின் வாழ்க்கை வரலாறு ஏற்கனவே பலரால் எழுதப்பட்டு வெளிவந்திருந்தாலும் அவரது நூற்றாண்டை ஒட்டி வெளியாகிஇருக்கும் இந்த நூல் தனிச் சிறப்புடன் விளங்குகிறது. எம்.எஸ்.,ஸின் வாழ்க்கையின் உன்னத தருணங்களை மிகுந்த உணர்ச்சிகரமான நடையில் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். எம்.எஸ்., ஆறு வயது குழந்தையாக இருந்தபோதே, ‘ஆனந்தாரா’ என்ற மராட்டியப் பாடல் அருமையாக நம் முன்னால் பாடியதிலிருந்து, அவரது வாழ்நாள் இறுதி வரை எதிர்பாராத பல சம்பவங்களே […]

Read more

கல்லூரி பல்கலைக்கழகங்களில் தமிழர் தலைவர்

கல்லூரி பல்கலைக்கழகங்களில் தமிழர் தலைவர், கி. வீரமணி, திராவிடர் கழக வெளியீடு, விலை 350ரூ. திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி நாடறிந்த தலைவர். நல்ல பேச்சாளர். சீரிய சிந்தனையாளர். டாக்டர் பட்டம் பெற்றவர். சிறந்த கல்வியாளர். அவரைத் தம் கல்வி நிறுவனங்களுக்கு அழைத்து மாணவர்களிடையே உரை நிகழ்த்தச் செய்ய அனைவரும் விரும்புகின்றனர். அவர்கள் அழைப்பை ஏற்று பல கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உரையாற்றியிருக்கின்றார். 25 கல்லூரிகளில் நிகழ்த்திய உரை இந்த நூலில் இடம்பெற்றுள்ளது. கல்லூரி அரங்கங்களில் மாணவர்கள் வினாதொடுப்பதும், கி.வீரமணி விடை நல்குவதும் அறிவார்ந்த […]

Read more

கால்டுவெல்லின் தமிழ்க்கொடை

கால்டுவெல்லின் தமிழ்க்கொடை, இரா. காமராசு, சாகித்ய அகாடமி, பக். 240, விலை 180ரூ. கால்டுவெல் தொண்டு தமிழின் கல்வெட்டு திராவிட மொழி இயலின் தந்தை ராபர்ட் கால்டுவெல். 202 ஆண்டுகளுக்கு முன் அயர்லாந்தில் பிறந்து, கிறிஸ்தவ சமயப் பணியாளராக, 1938ல் சென்னை வந்தார். மூன்று ஆண்டுகளில் தமிழைக் கற்றுத் தேர்ந்தார். வின் சுலோ, போப், பவர், ஆண்டர்சன் முதலான தமிழ் அறிஞருடன் இணைந்தார். 400 மைல் தொலைவு திருநெல்வேலிக்கு, சென்னையில்இருந்து நடந்தே சென்றார். தமிழ் மக்களை நேரில் கண்டு, அவரது மொழி, கலை, பண்பாடுகளை […]

Read more

தேவ அமுதம்

தேவ அமுதம், இரா. யுனி ஜோசப், மாவிகா அச்சகம், பக். 225, விலை 100ரூ. இரா. யுனிஜோசப் பக்தி பாடலாசிரியர், ஆலயத்தின் பாடகர் குழு தலைவராக உள்ளார். தேவ அமுதம் என்னும் இந்த இசை தொகுப்பின் வழியாக, திருவழிப்பாட்டு பாடல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இந்நூலில் 14 தலைப்புகளில் 303 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. கத்தோலிக்க கிறிஸ்தவ வழிபாட்டிற்கு உகந்த நூல். நன்றி: தினமலர், 2/10/2016

Read more

நவரத்தினங்கள்

நவரத்தினங்கள், லில்லி சகாதேவன், சாந்தா பப்ளிஷர்ஸ், பக். 128, விலை 80ரூ. இன்றைய கல்வி முறை குறித்த அனைவரது எண்ணங்களையும் ஆக்கபூர்வமான கருத்துக்களையும் பதிவு செய்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 2/10/2016   —-   மனசுக்கு ஒரு செக்போஸ்ட், க. கார்த்திகேயன், ஜி. சிவராமன், நர்மதா பதிப்பகம், பக். 144, விலை 70ரூ. லட்சியம், உழைப்பு, அதற்கு தேர்ந்த முறை, அவை அழைத்துச் செல்லும் வாழ்விற்கு இந்த செக்போஸ்ட் தடையல்ல வழிகாட்டி. நன்றி: தினமலர், 2/10/2016

Read more

ஆளுமை மலர்ச்சிக்கு ஆன்ம பரிசீலனை

ஆளுமை மலர்ச்சிக்கு ஆன்ம பரிசீலனை, டி.ராம்பாபு, நர்மதா பதிப்பகம், பக். 200, விலை 100ரூ. இன்றைய இளைய தலைமுறைக்கு, எச்சரிக்கையாக, செய்தியாகவுள்ள பல விஷயங்களின் தொகுப்பு இந்நூல். நன்றி: தினமலர், 2/10/2016   —- வெளிநாட்டு கல்வி வழிகாட்டி, வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக். 464, விலை 350ரூ. எந்த கல்வியை, எந்த நாட்டில் பயிலலாம் என்பதை விளக்கி, உலக நாடுகளில் கல்வி பயில வழிகாட்டியாக அமையும் நூல் இது. நன்றி: தினமலர், 2/10/2016

Read more

சாஸ்திரங்கள்

சாஸ்திரங்கள் (பாகம் 2), க. கோபி கிருஷ்ணன், பொன் பதிப்பகம்,பக். 80, விலை 50ரூ. முயற்சிகளில் வெற்றியடைந்து வாழவில் வளம் பெற இந்நூலில் உள்ள சாஸ்திரங்கள் ஊக்க விசைகளாக உள்ளன நன்றி: தினமலர், 2-10-2016.   —- தமிழர் வாழ்வு நெறிக் கருவூலம், அ.சா.குருசாமி, நர்மதா வெளியீடு, விலை 50ரூ. ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், உலக நீதி, வெற்றி வேற்கை, மூதுரை, நல்வழி, நன்னெறி ஆகிய நீதி நூல்களின் மூலமும், விளக்கமும் அடங்கிய புத்தகம். நன்றி; தினத்தந்தி, 14/9/2016.

Read more

தமிழக வரலாற்றுத் தடத்தில் மகளிர்

தமிழக வரலாற்றுத் தடத்தில் மகளிர், பாவை பப்ளிகேஷன்ஸ், விலை 220ரூ. வரலாற்றில் மகளிரையும், மகளிரின் வரலாற்றையும் வெளிக்கொணரும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி நூலாகும். தொடக்க காலத்திலிருந்து தமிழக மகளிர், சமூக சீர்திருத்தங்களும் மகளிர் இயக்கங்களும், மகளிர் கல்வி, விடுதலைப் போராட்டத்தில் தமிழகப் பெண்கள் – தன்னாட்சி இயக்கம் வரை, விடுதலைப் போராட்டத்தில் தமிழகப் பெண்கள் – காந்தியின் காலம், பெண்களும் வாக்குரிமை இயக்கமும், பெண்களின் ஆரோக்கிய நல முன்னேற்றம் ஆகிய ஏழு தலைப்பின் கீழ் சங்க காலம் முதல் 1947 வரையிலான நிகழ்வுகளை சான்றுகளின் […]

Read more

சேதுபதியின் காதலி

சேதுபதியின் காதலி, எஸ்.எம். கமலா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 150ரூ. கி.பி. 1710 முதல் 1728 வரை சேது நாட்டை ஆண்ட முத்து விசய ரகுநாத சேதுபதியின் வாழ்வியல் நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்ட வரலாற்று புதினம். மன்னரது பண்பு நலன், கொடை, வீரம், கலைப்பணிகள் ஆகியவற்றை இப்புதினத்தின் வழியாக புலப்படுத்தியுள்ளார் நூலாசிரியர் எஸ்.எம். கமலா. நன்றி: தினத்தந்தி, 14/9/2016

Read more

வங்க மொழிச் சிறுகதைகள்

வங்க மொழிச் சிறுகதைகள், (தொகுப்பு 3), அஷ்ரு குமார் சிக்தார், சாகித்திய அகாதெமி, விலை 400ரூ. அரிவாள் மணையில் நறுக்கிய மீன் பாரத தேசத்தில் வளமான இலக்கியத்துக்குப் பங்களிப்புச் செய்ததில் வங்கமொழிக்காரர்களுக்கு எப்போதுமே தனிப்பட்ட இடமும் பெருமிதமும் உண்டு. சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள இந்தச் சிறுகதைகளின் தொகுப்பு அந்தப் பெருமிதத்துக்குச் சான்று பகிர்கிறது. இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள இருபத்தேழு சிறுகதைகளையும் எழுதியவர்கள் 1920 முதல் 1940 காலகட்டத்தில் பிறந்தவர்கள் என்கிறது முன்னுரை. பெரும்பாலும் பாரதம் விடுதலை பெற்ற சமயத்தில் வங்காளம் இருந்த அவலமான நிலையைப் […]

Read more
1 4 5 6 7 8 9