குருவிவனம்

குருவிவனம், எம். கமலசேகர், ஊஞ்சல் பதிப்பகம், பக். 80, விலை 60ரூ. இயந்திரத்தனமும் நகர மயமாக்களும் எப்படி மனிதனையும் மற்ற ஜீவராசிகளையும் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளன என்ற யதார்த்தத்தை பேசும் இவரது கவிதைகளுக்கு பாராட்டு நிச்சயம். பெண்கள் பற்றிய கவிதைகளில் அவரது சமூக பிரக்ஞை பலருக்கு உதாரணம். நன்றி: குங்குமம், 23/9/2016.

Read more

புத்தம் புது பூமி வேண்டும்

புத்தம் புது பூமி வேண்டும், சு. ராஜு, உரத்தசிந்தனை பதிப்பகம், பக். 120, விலை 150ரூ. ஹைதராபாத்திலுள்ள தேசிய புவி இயற்பியல் ஆய்வுக்கூட முதன்மை விஞ்ஞானியான இந்நூலாசிரியர், நில அதிர்வு ஆய்வுகள் குறித்து இந்தியா முழுவதும் சென்று அரிய தகவல்களைத் திரட்டி வருபவர். இவரது பல ஆய்வு அறிக்கைகள் இத்துறையைச் சேர்ந்த மாணவர்களுக்கு பயன்தரத்தக்கவையாக உள்ளன. விஞ்ஞானியாக இருந்தாலும், எளிய தமிழ் நடையில் எழுதும் ஆற்றல் மிக்கவர். உரத்த சிந்தனை என்ற மாத இதழில் இவர் எழுதிய புவி அறிவியல் குறித்த கட்டுரைகளின் தொகுப்பே […]

Read more

ஏர் காக்க நீர் காக்க பார் காக்க

ஏர் காக்க நீர் காக்க பார் காக்க, காவி. கண்ணன், பத்மா பதிப்பகம், பக். 120, விலை 125ரூ. ஒரு ஏர் உழவனின் சீரிய சிந்தனைகளின் பிரச்னைகள், விவசாயத்தில் இன்றைய நிலை பற்றி, ஆராய்ந்து இந்திய தேசத்தின் பாரம்பரிய முறையைக் காப்பாற்றி இந்தியப் பொருளாதாரத்தை விரிவுபடுத்த ஆலோசனை கூறும் நூல். நன்றி: குங்குமம், 23/9/2016.

Read more

சொன்னால் நம்பமாட்டீர்கள்

சொன்னால் நம்பமாட்டீர்கள், தேசியச் செல்வர் சின்ன அண்ணாமலை, குமரன் பதிப்பகம், பக். 240, விலை 90ரூ. 1978-ல் குமுதம் போனஸ் வெளியீடாக சிறுசிறு புத்தகங்கள் வெளியிட்டது. அப்போது சின்ன அண்ணாமலை வாழ்வில் நடைபெற்ற நம்பமுடியாத சில சம்பவங்களை தொகுத்து குமுதத்தில் அவர் எழுதிய கட்டுரைகள் பரபரப்பாகப் பேசப்பட்டன. அவற்றின் தொகுப்பே இந்நூல். காந்திஜியை நேரில் சந்தித்தது, ஹரிஜன் இதழை தமிழில் நடத்த காந்தி அவருக்கு அனுமதி தந்து கடிதம் எழுதியது, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, சிறைசென்றது, மக்களே சிறையை உடைத்து இவரை விடுதலை செய்தது, […]

Read more

அசோகமித்திரன் சிறுகதைகள்

அசோகமித்திரன் சிறுகதைகள், தொகுப்பு க. மோகனரங்கன், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், விலை 1450ரூ. 274 சிறுகதைகள் கொண்ட அசோகமித்திரனின் ஒட்டு மொத்தத் தொகுப்பு இது. எல்லாவற்றையும் மொத்தமாகப் படிக்கும்போது, இலக்கியத்தில் அவர் எவ்வளவு தூரம் சமரசமின்றி செயல்பட்டு இருக்கிறார் என்பதைக் காணமுடிகிறது. சிறுகதை என்பது வெறும் மொழியோ, புனைவோ, வடிவநேர்த்தியோ, உத்திப்புதுமைகளோ மட்டுமன்று. அது அசோகமித்திரனின் எழுத்தில் வாழ்க்கையை உள்ளது உள்ளபடி காட்டுவது. அப்படிப் பார்த்தால் அவரின் கதைகளில் எப்போதும் மேலதிக ஆழமுண்டு. மிக எளிய மனிதர்களின் நாடித்துடிப்புகளை ஆகப்பெரும் அன்போடும், கண்ணீரோடும் தொட்டுத் தடவி […]

Read more

பழைய பேப்பர்

பழைய பேப்பர், கோ. செங்குட்டுவன், பி.எஸ்.பப்ளிகேஷன், விலை 225ரூ. தேர்ந்த பத்திரிகையாளரின் பங்கு ஒரு போர் வீரன் போன்றது. சூழலுக்குத் தக்கவாறு பணியாற்றுவதும், செய்திகள் சேகரிப்பதும், நல்ல வண்ணம் அந்தச் செய்திகளை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதும் சாதாரண வேலையில்லை. அதிலும் வெளியூரில் இருந்து செய்தி சேகரிக்கும் நிரூபரின் பணி சுவாரஸ்யங்கள் நிறைந்தது. திடீர் திருப்பங்கள் கொண்டது. இவ்வளவு செய்திகள் உருவான அத்தனை பின்னணிகளையும் துறுதுறு நடையில் விறுவிறுப்பாக எழுதியிருக்கிறார் செங்குட்டுவன். சதா நுண்ணுணர்வுடன் வேலை செய்ய வேண்டிய அவசியத்தைப் புரிய வைக்கிறார். அவரின் அனுபவங்கள், […]

Read more

கண்டி வீரன்

கண்டி வீரன், ஷோபாசக்தி, கறுப்புப் பிரதிகள், விலை 160ரூ. ஈழத்தின் தவிர்க்க முடியாத எழுத்தாளர் ஷோபாசக்தி. அவரின் பத்து சிறுகதைகள் கொண்ட தொகுப்பு இது. மேம்போக்கான வாசிப்பு தவிர்த்து, ஆழ்ந்த கவனிப்பை வேண்டுபவை அவரின் கதைகள். அவரின் படைப்பு மொழி, ஆக்கம், கதையை இறுதிக்கு நகர்த்தும் விஷயம் எல்லாமே மிகுந்த அக்கறைக்கு ஆட்பட்டு நடந்தேறும். படித்து முடித்ததற்குப் பின்னாலும், நம் மனசை இறுக்கி, அசை போடத் தூண்டும் அவர் எழுத்து. இதில் இருக்கிற ‘சுண்டி வீரன்’ சிறுகதை, கண்டிப்பாக விவாதத்திற்கு உட்பட வேண்டியது. அகதி […]

Read more

நம்மிடையே உலவும் ஆவிகள்

நம்மிடையே உலவும் ஆவிகள், விக்ரவாண்டி வி. ரவிச்சந்திரன், மேகதூதன் பதிப்பகம், பக். 304, விலை 250ரூ. உலகப் புகழ்பெற்ற ஜேம்ஸ் வான் பிராக் என்ற ஆவியுலக ஆராய்ச்சியாளரின் அனுபவங்களைச் சொல்லும் இடங்கள் பிரமிப்பு. அவரைப்போலவே பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆவியுலக ஆராய்ச்சியாளர்களையும் அவர்களது அனுபவங்களையும் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார் நூலாசிரியர். அந்த வகையில் ஆவியுலகத்துறையில் ஆர்வமுள்ள தமிழ் வாசகர்களை உலக அளவில் அழைத்துச் செல்லும் முயற்சி இது. படிக்கப்படிக்க சுவாரஸ்யம். நன்றி: குமுதம், 14/9/2016.

Read more

ஜான்சிராணி

ஜான்சிராணி, கள்ளிப்பட்டி சு. குப்புசாமி, சுவாமிமலை பதிப்பகம், பக். 96, விலை 40ரூ. ஜான்சிராணி லட்சுமிபாய் சாதாரண குடும்பத்தில் பிறந்து, அரச குடும்பத்தைச் சேர்ந்தவராகி, பிரிட்டிஷ் பேரரசை ஆட்டம் காணவைத்த வீரமங்கை. இந்திய புரட்சி இயக்கம் கொண்ட வீரர்களிலேயே துணிச்சல் மிக்க, அச்சமற்ற, மிகச்சிறந்த தலைவியாக விளங்குவதை பல்வேறு நிகழ்வுகளைக் கொண்டு நூலாசிரியர் விளக்குவது சிறப்பு. அவரைப்போன்று ஒவ்வொரு இந்தியப் பெண்ணும் அந்நியரிடமிருந்தும் தீவிரவாதிகளிடமிருந்தும் தீய சக்திகளிடமிருந்தும் நாட்டினைக் காக்க வீராங்கனைகளாக வீறுகொண்டு எழ வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட நூல் இது. நன்றி: குமுதம், […]

Read more

காதல் ஒரு மின்னல் போர்

காதல் ஒரு மின்னல் போர், ப. குணசேகர், பண்புப் பதிப்பகம், பக். 128, விலை 70ரூ. உலகப் பெருங்கவிஞரான பாப்ளோ நெருதாவின் காதல் பாடல்களில் தனக்குக் கிடைத்தவற்றை தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார் ப. குணசேகர். காதல் வாழ்க்கை தந்த அனுபவங்கள் கவிதை வடிவம் பெற்றுள்ளன. மக்கள் மொழியில் இருப்பதால் அவை மக்கள் மனதை எளிதில்கொள்ளை கொள்கின்றன. தமிழில் எழுதிய கவிதைகள் போலவே தந்து நெருதாவுக்கு சிறப்பு செய்துள்ளார் மொழிபெயர்ப்பாளர். நன்றி: குமுதம், 14/9/2016.

Read more
1 6 7 8 9