ஆத்மபோதம்

ஆத்மபோதம்,  க. மணி;  அபயம் பப்ளிஷர்ஸ், பக்.260; விலை ரூ.350.   நான் என்னும் சொல்லை நாம் எல்லாருமே ஒவ்வொரு நாளும் பலமுறை உச்சரிக்கிறோம். ஆனால், அந்த நான் என்பது என்ன? அது நம் உடலா? உறுப்பா? மனமா? இவை மூன்றுமே இல்லையென்றால் வேறு எது? நான் என்பதற்கும் நான் அல்லாதவற்றிற்கும் என்ன வேறுபாடு? அந்த வேறுபாட்டை நாம் எப்படி அறிவது? அதனை அறிவதால் நாம் பெறக் கூடிய பயன் என்ன? இந்த வினாக்கள் அனைத்திற்கும் விடையாக அமைந்திருக்கிறது இந்த நூல். கனமான விஷயம் குறித்த […]

Read more

சங்கத் தமிழ்க் கவிதை அழகியல்

சங்கத் தமிழ்க் கவிதை அழகியல், எம். அல்போன்ஸ், பொதிகை பதிப்பகம், பக்.320; விலை ரூ.300. சங்கத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் அழகியல் கூறுகள் பல்வேறு வடிவங்களில் விரவிக் காணப்படுகின்றன. அழகு என்ற சொல்லுக்கு இணையாக எழுபது சொற்கள் இந்நூலில் தரப்பட்டுள்ளன.  அழகியல் வெளிப்படுவதற்குக் கலைகள் முதன்மையான சாதனமாகும். அவற்றுள் இலக்கியக்கலை முதன்மை இடத்தைப் பெறுகிறது. இலக்கியக் கலையில் கவிதைக் கலை, கவிதையின் அழகு, கவிதையின் வடிவமைப்பு, பொருள், உத்திகள், கவிதை சுவைக்கான சொல்லும் பொருளும் ஆகியவை அமைகின்றன. செய்யுளில் அமைந்திருக்கும் சொற்கள், உவமைகள், ஒலிக்கூறுகள், […]

Read more

இந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை

இந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை, மு.நீலகண்டன்; கனிஷ்கா புக் ஹவுஸ், பக்.236; விலை ரூ.200;  பெண் விடுதலை என்பதும், பெண் சுதந்திரம் என்பதும் ஆண்களுக்கு எதிரானது அல்ல. பெண் விடுதலை என்பது சமூகத்தின் விடுதலையே என்ற அடிப்படையில் பெண்ணியத்தை அணுகும் நூல். 1938 – ஆம் ஆண்டு பம்பாய் மாநில சட்டமன்றத்தில் அம்பேத்கர் சுதந்திரத் தொழிலாளர் கட்சியின் தலைவராக இருந்தபோது, குடும்பக்கட்டுப்பாடு தொடர்பான தனிநபர் தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கிறார். கருவுறுவதும், குழந்தை பெறுவதும் முற்றிலும் பெண்கள் தங்கள் விருப்பப்படித் தெரிந்தெடுத்ததாக இருக்க வேண்டும் என்பது […]

Read more

அண்ணலாரின் ஆளுமைகள்

அண்ணலாரின் ஆளுமைகள், கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்,  இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்,  பக்.207; விலை ரூ.175. அரேபிய நாட்டில் இஸ்லாத்துக்கு முன்பு நிலவிய தவறான கோட்பாடுகளை, கி.பி. 571-இல் மக்காவில் பிறந்த நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் 23 ஆண்டுகளில் அகற்றி புதிய ஆன்மிகம், சமூக, அரசியல் பொருளாதாரம் ஆகியவற்றை எப்படி உருவாக்கினார் என்பது குறித்தும் அவரது ஆளுமைகள் குறித்தும் இந்த நூல் எடுத்துரைக்கிறது. 40 வயது வரை மற்றவர்களைப் போல் நேர்மையான வாழ்க்கையை வாழ்ந்த நபிகள் நாயகத்துக்கு இறைவனின் தூதர் என்ற அருள்கொடை […]

Read more

பஷீருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும்

பஷீருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும், இளங்கோ கிருஷ்ணன், புது எழுத்து வெளியீடு, விலை: ரூ.80 பிரக்ஞையும் தன்மிதப்பும் இரண்டாயிரத்துக்குப் பிறகு எழுதத் தொடங்கிய இளங்கோ கிருஷ்ணன், காத்திரமான கவிஞராகவும் விமர்சகராகவும் விளங்குபவர். கவிதை வாசகர்களிடையே பேசப்பட்ட தொகுதிகளான ‘காயசண்டிகை’, ‘பட்சியன் சரிதம்’ நூல்களை அடுத்து ‘பஷீருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும்’ தொகுதியில் கவிதை வெளியீடு சார்ந்த சரளத்தை இளங்கோ கிருஷ்ணன் அநாயசமாக எட்டியுள்ளார். சத்தமான உரையாடலின் தொனியைக் கொண்ட இந்தக் கவிதைகளில் இளங்கோவின் குரல் கேட்கிறது. நகல் குரல்களும் போலிக் குரல்களும் பெருகியுள்ள நவீனக் […]

Read more

நான் உலகம் கடவுள்

நான் உலகம் கடவுள், க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலைரூ.120 ஆன்மிகத்தை முன் வைத்து எழுதப்பட்டுள்ள நுால். ‘சைதன்யம்’ என்ற பொருள் பற்றி பேசுகிறது. அதாவது சுத்த தனிஅறிவு பற்றி அலசுகிறது. விழிப்பு நிலை தான் சைதன்யம். ஒருவனிடம், விழிப்பு நிலை எங்கே உள்ளது என்று கேட்கலாம். அதற்கு பதில் உண்டு. என்னை பார்க்கிறீர்கள்; நான் நீல வண்ணச் சட்டை அணிந்து உள்ளேன். எப்படி பார்க்க முடிகிறது. கண்ணால் பார்க்க முடிகிறது. கண்களின் பின் இருப்பது என்ன… நீங்கள் தான். அதுதான் ஆன்மா எனப்படுகிறது. கண்ணில் […]

Read more

மேலைநோக்கில் தமிழ் நாவல்கள் – பகுதி 1

மேலைநோக்கில் தமிழ் நாவல்கள் – பகுதி 1, ப.மருதநாயகம், எழிலினி பதிப்பகம், விலை: ரூ.350 ஆங்கிலத்தின் வாயிலாகவே தமிழில் நாவல் வடிவம் அறிமுகமானது. ஆனால், தமிழ் நாவல்கள் பற்றிய விமர்சனங்களில் மேலை இலக்கியக் கோட்பாடுகளையெல்லாம் பொதுவாகக் கவனத்தில் கொள்வதில்லை. ரசனை அடிப்படையே நாவல்களின் தரம், குணம் யாவற்றையும் தீர்மானிக்கிறது. தமிழ்-ஆங்கில இலக்கிய ஒப்பீட்டு ஆய்வு முன்னோடிகளில் ஒருவரான ப.மருதநாயகத்தின் இந்த நூல், ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ தொடங்கி தற்காலம் வரையில் தமிழின் குறிப்பிடத்தக்க நாவல் படைப்புகளை மேலை இலக்கியக் கோட்பாடுகளின் பார்வையில் திறானாய்வு செய்யும் […]

Read more

பீனிக்ஸ் பெண்கள்

பீனிக்ஸ் பெண்கள், வினிதா மோகன், எழிலினி பதிப்பகம், விலைரூ.250 உலக அளவில் தன்னம்பிக்கை ஊட்டும் பெண்களின் வெற்றி வாழ்க்கை பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. 20 பேர் பற்றி எழுதப்பட்டுள்ளது. முதல் கட்டுரையே, தமிழகத்தில் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி பற்றியது. சுருக்கமான வாழ்க்கை வரலாற்றுடன், சாதனையை வியந்து எழுதப்பட்டுள்ளது. பல துறைகளில் மிளிர்ந்த பெண்களின் வியப்பான வாழ்க்கை, சாதனை புரிய துாண்டுதல் என நம்பிக்கை தரும் வகையில் எழுதப்பட்டுள்ளது. பதின்பருவ சிறுமியர், லட்சியப் பாதை வகுக்க உதவும் .நன்றி: தினமலர், 17/5/20 இந்தப் […]

Read more

சுதந்திரத்தின் நிறம்

சுதந்திரத்தின் நிறம், லாரா கோப்பா, தமிழில்: பி.ஆர்.மகாதேவன் தன்னறம் நூல்வெளி வேங்கிக்கால், விலை: ரூ.500 ஒரு கிராமத்தில் நிலச்சுவான்தார்களால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் மக்களோடு போய் உரையாடுவதுதான் அவர்கள் அணுகுமுறையின் முதல் படி. நிலச்சுவான்தாரை மட்டுமே நம்பி வாழும் சூழலில் மக்களால் எப்படி அவர்களுக்கு எதிராகக் குரல்கொடுக்க முடியும்? கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அதைச் சாத்தியப்படுத்தினார்கள். மக்களோடு தங்கியிருந்து, அவர்களோடு தங்களைப் பிணைத்துக்கொண்டு, அவர்களுள் ஒருவராகத் தங்களை உணர வைத்து நம்பிக்கையைப் பெறுவார்கள். பிறகு, மக்களையும் அதிகாரத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட வைத்தார்கள். ஒருகட்டத்தில், இரு […]

Read more

கில்கமெஷ் காவியம்

கில்கமெஷ் காவியம், ஸ்டாலின், சாகித்ய அகடமி, விலைரூ.190. மெசபடோமிய நாகரிகத்தைக் காட்டும் இக்காவியம் அக்கேடிய மொழியில், கி.மு., 130ல் பெல் அஹிஉகூர் எழுதினார். கொடுங்கோல் அரசர் கில்கமெஷ் ஆட்சியில், மக்கள் கொடுமைக்கு ஆளாகின்றனர். கில்கமெசிற்கு எதிராக தெய்வங்கள் என்கிடுவை உருவாக்குகின்றன. காட்டில் கொடிய விலங்குகளுடன் வாழும் என்கிடு, அவரை மாற்றுகிறார். முடிவில் கில்கமெஷ் மனம் மாறி, தெய்வங்களின் மறைபொருளை கூறுகிறார். யூப்ரடீஸ், டைகிரீஸ் ஆற்றங்கரைகளில், கி.மு., 2800க்கும் – கி.மு., 2500க்கும் இடைப்பட்ட காலத்தில் கிஷ் பகுதியை ஆண்ட மன்னர் பரம்பரைக் கதை இது. […]

Read more
1 2 3 4 5 6