பஞ்சதசி – மூலமும் உரையும்

பஞ்சதசி – மூலமும் உரையும்; கோவிலூர் மடாலயம், பக்.280; ரூ.300. உபநிடதங்களின் கருத்துகளை எளிமையாக்கி வேதாந்த பிரகடனம் என்கிற பெயரில் தொகுப்பு நூல் ஒன்று வடமொழியில் எழுதப்பட்டது. அதில் பதினைந்து பிரிவுகளில் ஆயிரத்து ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சுலோகங்கள் இடம் பெற்று உள்ளன. இதில் முதல் பிரிவில் இடம் பெற்றுள்ளவை பஞ்சதசி (பதினைந்து) ஆகும். இதனை இயற்றியவர் சிருங்கேரி மடத்தின் பன்னிரண்டாவது குருவாக விளங்கியஸ்ரீ வித்யாரண்ய சுவாமிகள் ஆவார். இந்நூலில் இடம் பெற்றுள்ள பதினைந்து அத்தியாயங்களில் அனைத்துவிதமான வேதாந்த கருத்துகளும் ஆழமாகவும் எளிமையாகவும் விளக்கப்பட்டுள்ளன. பொதுவாக […]

Read more

இசை எனும் நீர்

இசை எனும் நீர், நினைவின் ஆழியில் அலையும் கயல்கள், ரவிசுப்பிரமணியன், போதிவனம் பதிப்பகம், விலை: ரூ.150 நல்லவற்றை அடையாளம் காணுதல் ஒரு கலை. தனக்கானதைக் கண்டடைந்து, அதைத் தன்னுணர்வாக மாற்றி பாடுபொருளின் பன்முகத்தன்மையை நம் பயணிப்புக்கு ஏதுவாக மாற்றம்கொள்ளவும் செய்திடுகிறார் கவிஞர் ரவிசுப்பிரமணியன். அன்றாடங்களில் நிகழும் சம்பவங்களில் கவிதைக்கான விதையைத் தேர்வுசெய்தல், திறம்பட மொழியில் பிணைத்தல், இசை எனும் நீரால் ஈரப்படுத்துதல் எனும் தொடர் செயல்பாடுகளால் தன் படைப்புகளுக்கு முழுமை தருகிறார் ரவிசுப்பிரமணியன். இயல்பில் அவர் பாடகராக இருப்பது அவரின் கவிதைகளுக்குக் கூடுதல் பலமாக […]

Read more

சுந்தர ராமசாமி கருத்தும் கலையும்

சுந்தர ராமசாமி கருத்தும் கலையும், ராஜ்கௌதமன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலைரூ.270 எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் எண்ணத்தையும், போக்கையும் அவரது படைப்புகள் வாயிலாகக் கண்டறியும் முயற்சியின் வெளிப்பாடு தான் இந்த நுால். எல்லாவற்றையும் தன் கண்ணோட்டத்திற்குள் நுணுகிப் பார்க்கும் பார்வையை, சுந்தர ராமசாமியின் கருத்தாகக் காணமுடிகிறது. ‘சுந்தர ராமசாமியின் சிறுகதைகள், விமர்சன – விவாதக் கட்டுரைகள் முழுவதையும் படித்து அசை போட்ட பின், புளிய மரம் தந்த உற்சாகம் கிடைக்கவில்லை’ என, தன் என்னுரையிலேயே சுருங்கிய வடிவத் திறனாய்வாக வெளியிட்டுள்ளார் ஆசிரியர். ‘சு.ரா.வுக்கு […]

Read more

ரொமிலா தாப்பர்: ஓர் எளிய அறிமுகம்

ரொமிலா தாப்பர்: ஓர் எளிய அறிமுகம், மருதன், கிழக்குப் பதிப்பகம், விலை: ரூ.50. வரலாற்றாசிரியரின் வரலாறு மொழிபெயர்ப்பு நூல்கள், கட்டுரைகள் வழியாக ஏற்கெனவே தமிழுக்கு அறிமுகமாகியிருப்பவர் வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர். அவரது வாழ்க்கை வரலாற்றையும் வரலாற்றுக்கு அவர் செய்திருக்கும் பங்களிப்பையும் பற்றித் தெளிவாகவும் சுருக்கமாகவும் மருதன் எழுதியுள்ள நூல்தான் ‘ரொமிலா தாப்பர் ஓர் எளிய அறிமுகம்’. ரொமிலா தாப்பர் சிறு வயதில் காந்தியைச் சந்தித்தது, நேருவைச் சந்தித்தது போன்றவை குறித்தெல்லாம் மருதன் சுவைபட எழுதியிருக்கிறார். சம காலத்தில் மிகவும் கொண்டாடப்பட்ட, விமர்சிக்கப்பட்ட ஒரு வரலாற்று […]

Read more

சுவடுகள் மறையாத பயணம்

சுவடுகள் மறையாத பயணம், பெ.சிதம்பரநாதன், பழனியப்பா பிரதர்ஸ், விலைரூ.300 வள்ளலாகிய அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் ஐயா ஒரு மா மனிதர். அவருடன் நெருங்கிப் பழகும் பேறு பெற்ற சிதம்பரநாதன், அருட்செல்வரின் பல்வேறு முகங்களைப் பதிவு செய்கிறார். வேளாண் உற்பத்தி, தொழில் மேம்பாடு, மொழிப் பிரச்னை, வெளியுறவுக் கொள்கை, உலகமயமாதல், இட ஒதுக்கீடு, கல்வி மறுமலர்ச்சி, மதச்சார்பின்மை, சமூகப் பிரச்னைகள், சமூக சேவை எனப் பல பிரச்னைகளுக்குத் தம் அறிவுத்திறனாலும், அனுபவத்தாலும், தொழில் நுட்பத்தாலும் காந்தியக் கொள்கை வழி நின்று தீர்வுகளைச் சொன்னவர் அருட்செல்வர். ஒரு […]

Read more

அணிந்துரை அணிவகுப்பு

அணிந்துரை அணிவகுப்பு, பேராசிரியர் இரா.மோகன், வானதி பதிப்பகம், பக். 240,விலை 150ரூ. இந்த நூலில் 30 அணிந்துரைகள் சேர்க்கப்பட்டுள்ளன.மூல நுாலைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை இந்த அணிந்துரைகள் ஏற்படுத்தும். ஏற்றுக்கொண்ட நுாலின் ரசமான பகுதிகளை ஆசிரியர் குறிப்பிடுவது நேர்த்தியானது. ‘மு.வ.,வின் செல்லப் பிள்ளை’ எனத் தமிழ் கூறும் நல்லுலகத்தில் அழைக்கப் பெறும் இரா.மோகன், சாகித்ய அகாடமிக்காக எழுதிய கு.ப.ராஜகோபாலன், கல்கி, முடியரசன், மீரா குறித்த ஆய்வு நுால்கள் எல்லாம் தனிப் பெரும் சாதனை எனச் சொல்லலாம். அணிந்துரை அணிவகுப்பு என்ற இந்த நுாலிலும் […]

Read more

கர்ணன்: காலத்தை வென்றவன்

கர்ணன்: காலத்தை வென்றவன், சிவாஜி சாவந்த், தமிழில்: நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் வெளியீடு, விலை: ரூ.899. இந்திய இலக்கிய மரபில் அதிக நிழற்பிரதிகளைக் கொண்ட பேரிலக்கியம் மகாபாரதம். அச்சு யுகத்தில் மகாபாரதத்தின் வெவ்வேறு நிழற்பிரதிகள் அதிக அளவில் உருவாகத் தொடங்கின. நவீன இலக்கியம் மகாபாரதத்தைத் தொடர்ந்து மீள்வாசித்துவருகிறது. அவ்விலக்கியத்தின் கதாபாத்திரங்கள் குறித்துத் தனித்தனிப் புனைவுகள் தொடர்ந்து எழுதப்படுகின்றன. அவ்வகையில், கர்ணனைப் பற்றி மராட்டிய எழுத்தாளர் சிவாஜி சாவந்த் எழுதிய நாவல் ‘மிருத்யூஞ்ஜயா’. இதை ‘கர்ணன்: காலத்தை வென்றவன்’ என்ற பெயரில் சிறப்பாகத் தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார் […]

Read more

இராஜாஜி

இராஜாஜி, ம.பொ. சிவஞானம், ஏ.கே.எல்., பதிப்பகம், விலைரூ.165 மூதறிஞர் ராஜாஜி பற்றி செங்கோல் இதழில், 1985 முதல், 1987 வரை எழுதப்பட்ட, 41 கட்டுரைகளின் தொகுப்பே இந்நுால். 130 நுால்களை எழுதியுள்ள ம.பொ.சி., இந்நுால் அவற்றிலிருந்து தனிப்பட்ட ஒன்று எனக் கூறியுள்ளார். ராஜாஜியின் முதல் நுாலான, ‘ஸோக்ரதர்’ – சாக்ரடீஸ் மூலம் அவரின் எழுத்திலும், விடுதலைப் போராட்டத் தலைவர் என்பதன் மூலம் பேச்சிலும் ஈடுபாடு கொண்டு, பின் அவரையே குருவாக ஏற்ற ம.பொ.சி., ராஜாஜியின் அரசியல், ஆன்மிகம், குணநலன்கள், ஆட்சித் திறன் போன்றவற்றை இந்நுாலின் […]

Read more

வீரப்பன் மரணம் யாரால் எப்படி?

வீரப்பன் மரணம் யாரால் எப்படி?, நக்கீரன் கோபால், நக்கீரன் வெளியீடு, பக். 312, விலை 300ரூ. சந்தன கடத்தல் வீரப்பன் மரணம் குறித்த புத்தகத்தின் இரண்டாம் பாகம். வீரப்பனை சந்தித்து நக்கீரன் குழுவினர் சேகரித்த தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. பிறன்மனை நோக்கா ஒழுக்க சீலன், பெண்களை மதிப்பவன் என்று நூல் முகப்பில் சித்தரிக்கப்படும் வீரப்பன், நூற்றுக்கும் மேற்பட்ட கொலைகளில் தொடர்புடையவன் என்பது குறிப்பிடத்தக்கது. அதிரடிப் படையின் தேடலில் ராஜதந்திரம் தெரிந்தாலும், மலைவாழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்கள் பற்றிய தகவல்கள் பதற வைக்கின்றன. அது […]

Read more

மனம் கவரும் மகாபாரத கதைகள்

மனம் கவரும் மகாபாரத கதைகள், கமலா கந்தசாமி, சிந்தாசேகர், அருணா பப்ளிகேஷன்ஸ், பக். 154, விலை 50ரூ. இந்தியாவுக்கும் புகழ் சேர்க்கும் இதிகாசம் மகாபாரதம். அது எழுதப்பட்ட விதம், அதில் உள்ள கதைகள், பாத்திரங்கள் சார்ந்த விளக்க கதைகள் என, 28 தலைப்புகளில் எழுதப்பட்டு உள்ளது. அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக தயாரிக்கப்பட்டு உள்ளது. நன்றி: தினமலர், 15/3/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more
1 2 3 4 5 6