அவசரம்- உடனடியாகச் செய்ய வேண்டிய சமூக பொருளாதார மாற்றங்கள்

அவசரம்- உடனடியாகச் செய்ய வேண்டிய சமூக பொருளாதார மாற்றங்கள்,  சோம.வள்ளியப்பன், கிழக்கு பதிப்பகம், பக்.152; விலை ரூ.175. நம்நாட்டில் வறுமை இருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் இருக்கிறது. சுற்றுச்சூழல் கேடு நிகழ்ந்த வண்ணம் உள்ளது. மக்களின் வாழ்க்கைநிலையில் மிகப் பெரிய ஏற்றத் தாழ்வுகள் உள்ளன. பெரிய அளவிலான பொருளாதார வளர்ச்சி இல்லை'- இவ்வாறு நம்நாட்டின் பொருளாதார நிலையை மிகத் தெளிவாக இந்நூல் தக்க சான்றுகளுடன் படம் பிடித்துக் காட்டுகிறது. இப்படியே நிலைமை தொடருமானால், மிகப்பெரிய பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இப்போதுள்ள இந்தப் பொருளுற்பத்தி […]

Read more

கறங்கு

கறங்கு, நாஞ்சில் நாடன், தமிழினி, விலைரூ.90. நுாலாசிரியர் எழுதிய பல்வேறு இதழ்களில் வெளியான, 12 சிறுகதைகளின் தொகுப்பு இது. வட்டார மொழியில் எழுதப்பட்ட சிறுகதைகளை படிக்கும் போது, அந்தந்த பகுதிக்கே சென்று வந்த உணர்வை தருகிறது. குறிப்பாக, கறங்கு என்ற சிறுகதை மலைக்க வைக்கிறது. நன்றி: தினமலர், 8/3/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் – பாகம்-1

வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் – பாகம்-1;  பெ.சிவசுப்ரமணியம்; சிவா மீடியா,  பக். 380; விலை ரூ.400; பத்திரிகையாளரான நூலாசிரியர், வீரப்பனோடு சுமார் எட்டு ஆண்டுகள் தொடர்பில் இருந்திருக்கிறார். அதன் அடிப்படையில், வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றைத் தக்க ஆதாரங்கள், புகைப்படங்களோடு இந்நூலில் விவரிக்கிறார். வீரப்பனை மையமாகக் கொண்ட ஒவ்வொரு நிகழ்விலும் தற்போது உயிருடன் இருக்கும் வீரப்பனுடைய அன்றையக் கூட்டாளிகள், தமிழக – கர்நாடக வனத் துறையினர், காவல் துறையினர், அதிரடிப் படையினர், பழங்குடிகள், பொதுமக்கள் உள்ளிட்டோரின் பேட்டிகளையும் இணைத்திருப்பது இந்நூலுக்கு வலு சேர்க்கிறது. வீரப்பனின் இளமைப் […]

Read more

வாழ நினைத்தால் வாழலாம்

வாழ நினைத்தால் வாழலாம், முனைவர் செளந்தர மகாதேவன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.150 நுாலாசிரியர் முனைவர் சவுந்தர மகாதேவனின், ‘வாழ நினைத்தால் வாழலாம்’ என்ற புத்தகம், திருக்குறளின் சாறு பிழிந்து, சுவைமிகு ரசமாக படைக்கப்பட்டிருக்கிறது. இன்பம், துன்பம், நம்பிக்கை, நட்பு என எந்த பக்கம் திரும்பினாலும், வழிகாட்டியாய், கலங்கரை விளக்கமாய் திருக்குறள் நமக்கு ஆறுதல் தருகிறது என்பதை சொல்லியிருக்கிறார். உலகப் பொதுமறையான திருக்குறளை விளக்க உரையுடன் தராமல், சிறு சிறு குட்டிக் கதைகளை சொல்லி, அவற்றின் வழியே திருக்குறள் கருத்துக்களை விளக்கும் […]

Read more

மறக்க முடியுமா?

மறக்க முடியுமா?, எம்.கே.நடராஜன், லட்சுமி பதிப்பகம், விலைரூ.200 பர்மாவில், இரண்டாம் உலகப் போர் அனுபவத்துடன் துவங்குகிறது புத்தகம். வாழ்க்கையை, தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்ட விதம் விவரிக்கப்பட்டுள்ளது. போரற்ற, நோயற்ற நிலை நோக்கி நகர துாண்டும் தொகுப்பு நுால். புத்தகத்திலிருந்து… பர்மா நாட்டில், மீங்கேயில், 1940ல் வசித்தோம். தமிழரை, ‘கள்ளா’ என்று அழைப்பர். பள்ளியில், 5ம் வகுப்பில் இருந்தேன். பேரிரைச்சலுடன் விமானங்கள் பறந்தன. தலை தெறிக்க ஓடினோம். 40 ஜப்பானிய விமானங்கள் குண்டுகளை பொழிந்தன. அன்று மூடிய பள்ளி திறக்கவேயில்லை. ஆங்கிலேய அதிகாரிகள் பர்மாவை விட்டு வெளியேற […]

Read more

தமிழ் இலக்கிய அகராதி

தமிழ் இலக்கிய அகராதி, பாலுார் கண்ணப்ப முதலியார், வைகுந்த் பதிப்பகம், விலைரூ.625 பள்ளி, கல்லுாரிகளில், தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவ – மாணவியருக்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்ட அகராதி நுால். பழந்தமிழ் இலக்கிய சொற்களை, புரிந்து பொருள் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இலக்கிய மொழிக்கு மட்டுமின்றி, வழக்கு மொழிக்கான பொருளும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் சொல்லகராதியாக மட்டுமின்றி, தொகை சொற்கள், தொடர் மொழி விளக்கங்கள், பிரபந்தங்கட்குரிய விளக்கங்கள், நுால், புலவர்கள் பற்றிய குறிப்புகளையும் உள்ளடக்கியுள்ளது. பழந்தமிழ் நுால்கள் பற்றியும், அவற்றை இயற்றியவர் பற்றி அறியவும் உதவும். […]

Read more

குஞ்ஞாலி

குஞ்ஞாலி, ஜ்வாலாமுகி ராஜ், கிருஷ்ணாலயா பதிப்பகம், விலைரூ.1500 இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ள நாவல். ஆதிவாசி பெண் குஞ்ஞாலியின் வாழ்க்கை மிக விரிவாக எழுதப்பட்டுள்ளது. அவள் பல்கலையில் பட்டங்கள் பெற்றும், மலையில் ஆடு, மாடு மேய்த்து வாழ்ந்தாள். கல்லுாரியில் படித்த காலத்தில் தடகள வீராங்கனையாக விளங்கினாள். உணர்வுகளால் கட்டப்பட்டவருக்கு தடகள பயிற்சியாளருடன் உறவு ஏற்படுகிறது. பின், மற்றொருவனை திருமணம் செய்யும் நிலை ஏற்படுகிறது. தவறான பழக்க வழக்கம் உள்ள கணவனை கொல்லும் நிலைக்குத் தள்ளப்படுகிறாள். இந்திய விடுதலைப் போராட்டக் காலம், கதை நடப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனால், […]

Read more

வண்ணநிலவன் சிறுகதைகள் (15) வாசிப்பனுபவம்

வண்ணநிலவன் சிறுகதைகள் (15) வாசிப்பனுபவம், மேலும் சிவசு; மேலும் வெளியீட்டகம்,  பக்.240; விலை ரூ.240. ஆண்களும் பெண்களும் அவரவர்களுடைய பலங்களோடும், பலவீனங்களோடும் வலம் வரும் வண்ண நிலவனின் 15 சிறுகதைகளின் வாசிப்பனுபவ தொகுப்பு இந்த நூல். வாழ்ந்து சரிகிற குடும்பம், புலம் பெயர்கிற சூழலில், குடும்பத்தை நிர்வகிக்கும் புருஷனுடன் வாழாத சித்தி எடுக்கும் துணிச்சலான, அதிர்ச்சியான முடிவுதான் எஸ்தர் சிறுகதை. பூர்வீக பூமியை விட்டுப் பிரிவது லேசுப்பட்ட காரியமா? கனகச்சிதத்துடன் வரையப்பட்ட பெண்ணோவியமாக எஸ்தரைப் படைத்துள்ளார் வண்ணநிலவன் என்றால் அது மிகையல்ல. வாழ்ந்து கெட்டவன், […]

Read more

ராமோஜியம்

ராமோஜியம் ( நாவல்), இரா.முருகன், கிழக்குப் பதிப்பகம், பக்.624, விலை ரூ.600.   பொடி என்ற பெயரில் எழுதப்பட்ட சிறுகதை ‘ராமோஜியம்’என்னும் பெரிய நாவலாக உருவெடுத்திருக்கிறது. ராமோஜிராவ் – ரத்னாபாய் தம்பதிகள் 17-ஆம் நூற்றாண்டு தொடங்கி 20-ஆம் நூற்றாண்டுகள் வரை பிறக்கிறார்கள் – இறக்கிறார்கள். தங்கள் விருப்பு வெறுப்புகளின்படி வாழ்கிறார்கள். ராமோஜி – ரத்னாபாய் காதல் அரும்பியது  ( 1935), சென்னையில் இவர்களின் திருமணம் ( 1937), ஜப்பான் விமானம் குண்டு போடுதல் (1943) – ரத்னா பாயின் அண்ணன் மகள் பூப்பெய்துவது – […]

Read more

குருபக்தி மிக்க குட்வின்

குருபக்தி மிக்க குட்வின் (சுவாமி விவேகானந்தரின் வலது கை), நாரை, ச.நெல்லையப்பன், ராமகிருஷ்ண மடம், பக்.102, விலை ரூ.70. சுவாமி விவேகானந்தரின் உரைகள் அனைத்தும் நூலாகத் தொகுக்கப்பட்டு விவேகானந்த இலக்கியம் என்று அழைக்கப்படுகின்றன. அதற்கு அடிப்படைக் காரணமானவர், அப்பணியை சிரமேற்கொண்ட பத்திரிகையாளர் ஜே.ஜே.குட்வின். அவரைப் பற்றிய சுருக்கமான அறிமுக வரலாறே இந்நூல். 1893 செப்டம்பர் 11-இல் அமெரிக்காவின் சிகாகோவில் நிகழ்ந்த சர்வ சமயப் பேரவையில் சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய உரைக்குப் பிறகு உலகப் புகழ் பெற்றவரானார். அதன் பிறகு பல நாடுகளில் ஆன்மிகப் பிரசாரம் […]

Read more
1 2 3 4 6