வல்லபி

வல்லபி, தேன்மொழி தாஸ், எழுத்துப் பிரசுரம் வெளியீடு, விலை: ரூ.200 தேன்மொழி தாஸின் கவிதைகளைப் படிக்கும்போது சமவெளியிலிருந்து வந்து தன்னை நேசித்துவிட்டுப் பிரிந்துசென்ற ஒருத்தனுக்காக ஒரு மலை தேவதை நெடிய காத்திருப்பில் இருப்பதுபோன்ற பிம்பம் உருவாகும். குறிஞ்சி நிலத்தில் பிறந்த தேன்மொழி தாஸின் பெரும்பாலான கவிதைகளுக்கான உரிப்பொருள் முல்லைத் திணைக்கான காத்திருத்தலும், பாலைத் திணைக்கான பிரிவும்தான். திணை மயக்கம் சங்கக் கவிதைகளிலேயே காணப்படும் ஒரு விஷயம்தான் என்பதால் நவீன கவிதை அந்தக் கட்டுப்பாட்டையெல்லாம் பொருட்படுத்தத் தேவையில்லைதான். இந்தத் திணை மயக்கம்தான் தேன்மொழி தாஸின் கவிதைகளுக்கு ஒருங்கே அழகும் துயரமும் […]

Read more

சிரியாவில் தலைமறைவு நூலகம்

சிரியாவில் தலைமறைவு நூலகம், தெல்ஃபின் மினூய், பிரெஞ்சிலிருந்து தமிழில்: எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, காலச்சுவடு பதிப்பகம், விலை: ரூ.175. இது ஒரு விநோதமான நூல். வாட்ஸ்அப், ஸ்கைப் ஊடாக சிரியாவில் வசிக்கும் விநோதமான இளைஞர்களுடன் பிரபல பத்திரிகை நிருபர் தெல்ஃபின் மினூய் உரையாடியதன் வழியே பெற்ற தகவல்கள்தான் ‘சிரியாவில் தலைமறைவு நூலகம்’ எனும் புத்தகம்(எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி இந்நூலை பிரெஞ்சிலிருந்து நேரடியாகத் தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார்). ஏன் இவர்கள் விநோதமான இளைஞர்கள் என்றால், அன்றாடப் பாடுகளே கழுத்தை நெருக்கிக்கொண்டிருக்கும்போது, இவர்கள் புத்தகங்களைச் சேகரித்துப் பூமிக்கடியில் நூலகம் அமைக்கிறார்கள். சிரியாவை ரத்தக்காடாக மாற்றும் […]

Read more

அந்தியில் மலர்ந்த மொட்டுகள்

அந்தியில் மலர்ந்த மொட்டுகள், உமையவன், நிவேதிதா, விலை 110ரூ. கொரோனா காலம் தந்த நன்மைகளில் ஒன்றாக, இந்த நூலில் மொட்டுகளான குழந்தைகள் எழுதிய கதைகள் மலர்ந்து மணம் வீசுகின்றன. 6 வயது முதல் 16 வயது வரையிலான குழந்தைகள், அவர்களாகவே எழுதிய கதைகள் மனதைக் கவருவதுடன் வியக்க வைக்கின்றன. குழந்தைகளே வரைந்த ஓவியங்களும், கதைகளுக்கான காணொளி கியூஅர் கோட் வடிவில் இணைத்து தரப்பட்டு இருப்பதும் சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 20/12/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

ஆதுர சாலை

ஆதுர சாலை, அ.உமர் பாரூக், டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு, விலை: ரூ.400 சரித்திரக் கதை, பயண நூல், அறிவியல் புனைவு என்பனபோல ‘ஆதுர சாலை’ ஒரு மருத்துவ நாவல். மக்களுக்கான மருத்துவ சேவையைத் தொற்றிய வணிகமய நோய் பற்றிப் பேசுகிற, பாரம்பரிய மருத்துவ அறிவுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டதன் அரசியலைக் காட்டுகிற, நோயும் மரணமும் சார்ந்த மக்களின் அச்சத்தைப் பயன்படுத்திப் பின்னப்பட்டிருக்கும் ஊழல் வலையமைப்புக்கு எதிராக ஒலிக்கிற இலக்கியக் குரல். ஒலிக்கச் செய்திருப்பவர் எழுத்தாளரும் அக்குபங்சர் சிகிச்சையாளருமான அ.உமர் பாரூக். மருத்துவ ஆய்வுக்கூடத் தொழில்நுட்பவியலாளரான […]

Read more

எத்தனை கோடி உயிர்கள் எனக்குள்

எத்தனை கோடி உயிர்கள் எனக்குள், பேராசிரியர் க.மணி, அபயம் வெளியீடு, விலை 120ரூ. கொரோனா காலத்தில், பாக்டீரியாக்கள் (நுண்கிருமிகள்) என்றதும் அச்சத்துடன் பார்க்கும் நிலையில், பாக்டீரியாக்கள் மனித உடலுக்கு எந்த அளவு தேவையானவை என்பது இந்த நூலில் விளக்கப்பட்டு இருக்கிறது. அர்க்கியா, பாக்டீரியா ஆகிய இரண்டு வகை செல்கள் பல கோடி ஆண்டுகளுக்கு முன் இணைந்து புதிய செல் உருவானதால்தான் மனித இனம் தோன்றியது என்பது போன்ற வியப்பான பல செய்திகள் இந்த நூலில் உள்ளன. நன்றி: தினத்தந்தி, 20/12/20 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் […]

Read more

திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்

திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம், வேணுசீனிவாசன், அருணா, விலை 55ரூ. வைஷ்ணவ ஆச்சாரியரான ஸ்ரீராமானுஜரை சந்தித்த திருக்கோளூரைச் சேர்ந்த சாதாரணப் பெண் ஒருவர் தெரிவித்த 81 வாக்கியங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துகள், அவை தொடர்பாக இதிகாச, புராண சம்பவங்கள் இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளன. பகவான் மீது பற்று வைக்க வலியுறுத்தும் இந்த உபதேசங்களை ஆன்மிக பக்தர்கள் படித்துப் பயன்பெறலாம். நன்றி: தினத்தந்தி, 20/12/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

பாடும் நிலா பாலு பற்றிய பல்சுவைத் தகவல்கள்

பாடும் நிலா பாலு பற்றிய பல்சுவைத் தகவல்கள், டி.என்.இமாஜான், மணிமேகலைப் பிரசுரம், விலை 170ரூ. கொரோனா தாக்கியதால் மரணம் அடைந்த பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் வாழ்க்கை வரலாறு, திரைப்படம் தொடர்பான பல துறைகளிலும் அவர் ஆற்றிய சாதனைகள் இந்த நூலில் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் திரைப்படத் துறையில் எவ்வாறு நுழைந்தார் என்பதும் அவரது நேரம் தவறாமை, எளிமை, நகைச்சுவை உணர்வு, எல்லோரிடமும் அன்பாகப் பழகும் தன்மை போன்ற அவரது குணாதிசயங்கள், பல்வேறு சம்பவங்ளை சுட்டிக்காட்டி அழகாகப் படம்பிடித்து தரப்பட்டுள்ளன. […]

Read more

கள்ளத்தோணி

கள்ளத்தோணி, என்.சரவணன், குமரன் புத்தக இல்லம், விலை 275ரூ. மலையக மக்களின் துயரம் தோய்ந்த வாழ்க்கையைச் சமூக, அரசியல், வரலாற்று நிகழ்வுகளுடன் காலவரிசைப்படுத்தி ‘சரிநிகர்’, ‘காக்கைச் சிறகினிலே’ உள்ளிட்ட இதழ்களில் எழுதியவை இப்போது புத்தக வடிவம் பெற்றிருக்கின்றன. கள்ளத்தோணி என்றாலே உரிய ஆவணங்களின்றி, அரசின் அனுமதியின்றி சட்டவிரோதமாகச் செல்வதல்ல, தோணியிலேயே ஒரு ரகம் அப்படியிருக்கிறது என்பது தொடங்கி வியப்பூட்டும் தகவல்கள் நிறைய உள்ளன. வடக்கு-கிழக்குத் தமிழர்களும் மலையகத் தமிழர்களும் இரண்டாம்தரக் குடிமக்களாகவும் வேற்றினத்தவராகவும் வாழ்க்கை நடத்தும் நிலை உருவானது. அதில் மலையகத் தமிழர்களைப் பல […]

Read more

மாணவரை ஆற்றுப்படுத்துதல் கையேடு

மாணவரை ஆற்றுப்படுத்துதல் கையேடு, ஜே.பிரான்சிஸ் சேவியர் நெல்சன், அனல் வெளியீடு, விலை 250ரூ. படிப்புத் தொடர்பாகவும், பாலியல் கொடுமை, போதைப் பழக்கம், அலைபாயும் மனம், ஆடம்பரத்தில் கவர்ச்சி போன்ற பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மாணவ சமுதாயம், அவற்றை வெற்றி கொள்வது எவ்வாறு என்ற அரிய யோசனைகள் இந்த நூலில் தரப்பட்டு இருக்கின்றன. இந்தத் துறைகளில் வல்லுனர்களாகத் திகழும் பயிற்சியாளர்கள் 20 வகுப்புகளில் தெரிவித்த கருத்துகள், மாணவர்கள் மனதில் எளிதில் பதியும் வண்ணம் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. பள்ளிக்கூடம், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக அளவிலான மாணவ, […]

Read more

கம்பன் : புதிய பார்வை

கம்பன் : புதிய பார்வை, அ.ச.ஞானசம்பந்தன், வைகுந்த் பதிப்பகம், விலை 345ரூ. முதுபெரும் தமிழ் அறிஞர் பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் எழுதியதும், சாகித்திய அகாதமி பரிசு பெற்றதுமான இந்த நூலில் கம்பரின் புதிய பரிணாமத்தைக் காண முடிகிறது. புலனடக்கத்திற்குக் கம்பன் கொடுத்த முக்கியத்துவம் நூல் முழுவதும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. கடவுளர்களை இந்த உலகத்திற்குக் கொண்டுவந்து அவர்களை நாயகர்களாக ஆக்கியதில் உலக இலக்கியங்கள் வெற்றிபெறாத நிலையில், கம்பர் மட்டும் வெற்றி பெற்றதும் எடுத்துக்கூறப்பட்டுள்ளது. ராமரைப் பற்றிய கதைகள் சங்க கால இலக்கியங்களிலும், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களிலும் மிகுதியாக […]

Read more
1 3 4 5 6