தமிழ்ப் பண்பாடும் இலக்கியச் சிறப்புகளும்

தமிழ்ப் பண்பாடும் இலக்கியச் சிறப்புகளும், வி.சுப்பிரமணியன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.170. பண்டைய இலக்கிய பண்பாட்டுக் கூறுகள் சார்ந்த கட்டுரைகளை கொண்டுள்ள நுால். முதல் பகுதியில் தமிழர் பண்பாடு, தமிழ் மொழி சிறப்பைக் கூறும் கட்டுரைகளும், இலக்கியங்களில் காணப்படும் அறக்கருத்து அறிவுரைக் கட்டுரைகளும் உள்ளன. இரண்டாம் பகுதியில் தமிழ்ப் பண்பாட்டின் சிறப்பியல்புகளையும் தொன்றுதொட்டு வரும் தமிழர் பழக்க வழக்கங்கள், கோட்பாடுகள், அகம் மற்றும் புறம் சார்ந்த வாழ்வியல் கூறுகள், நம்பிக்கைகள், நாகரிக மாற்றங்கள் போன்றவற்றையும் பதிவு செய்துள்ளது.திருக்குறள் முப்பாலில் உள்ள தேர்ந்தெடுத்த 75 குறள்களுக்கு விளக்கமும், […]

Read more

ஜே.சி.டேனியல் திரையில் கரைந்த கனவு

ஜே.சி.டேனியல் திரையில் கரைந்த கனவு, சேலங்காட்டு கோபாலகிருஷ்ணன், சென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம், விலைரூ.100. மலையாள திரைப்படத்தின் தந்தை என போற்றப்படும், ஜே.சி.டேனியலின் சினிமா சார்ந்த வாழ்க்கைப் போராட்டத்தைக் கூறும் நுால். மலையாளத்தில் இருந்து தமிழாக்கம் செய்துள்ளார் செ.புஷ்பராஜ். எளிய நடையில் இயல்பாக வாசிக்கும் வகையில் உள்ளது.மலையாளத்தில், விகதகுமாரன் என்ற படம், 1928ல் முதன்முதலில் தயாரிக்கப்பட்டது. இதை தயாரித்து இயக்கி, நடித்தவர் தமிழர் ஜே.சி.டேனியல். இந்த அங்கீகாரம் அவருக்கு நீண்ட நாட்களாக வழங்கப்படவில்லை. அவருக்கான அங்கீகாரத்தை போராடி பெற்று தந்தவர் பத்திரிகையாளர் செல்லங்காட்டு கோபாலகிருஷ்ணன். […]

Read more

உலக உயிரினங்களின் வரலாறும் பிரளயமும்

உலக உயிரினங்களின் வரலாறும் பிரளயமும், கே.எம்.சங்கரநாராயணன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.60. அத்தியாவசிய தேவையான உணவு, உடை, வசிப்பிடம் பற்றிய தகவல்கள் கொண்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். வெந்த மாமிசத்தை தின்னும் பழக்கம் சீனாவில் தோன்றியது என குறிப்பிடப்பட்டுள்ளது. உடையில் முதலில் தோன்றியது கவுபீனம். அது தோன்றியது பற்றியும், நாகரிக உடை வளர்ச்சியில் அதன் இடம் பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது. தற்போதும் அதை அணியும் பழக்கம் சிலரிடம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். வசிப்பிடத்தில் குடிசை, மண் வீடு, கல் வீடு என்று, அடுக்குமாடியாக வளர்ச்சி கண்டுள்ளதை சுட்டிக்காட்டுகிறார். மின்வசதிக்கு […]

Read more

எதிர் அரசியல் சினிமா

எதிர் அரசியல் சினிமா, ரதன், நிழல் பதிப்பகம், விலைரூ.150. கறுப்பின மக்கள் பற்றிய படங்களை பற்றி விமர்சிக்கும் சுருக்கமான கட்டுரைகளைக் கொண்டுள்ள நுால். கறுப்பின மக்கள், பல நிலைகளில் அடிமைகளாக நடத்தப்பட்டு இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. ஆப்ரிக்க கறுப்பின இளைஞர்கள் மீது, குற்றம் சுமத்தி வன்முறையாக கொல்லப்படுவதை ஒரு திரைப்படம் பதிவு செய்துள்ளது. வரலாற்றில் இருட்டடிப்புக்கு உள்ளாகிவரும் கறுப்பின திரைப்படங்கள் பற்றிய விபரங்களையும் தருகிறது. பிரபல இயக்குனர்கள் பீப்ல்ஸ், ஸ்பைக் லீ, வோல்கர் ஷ்லாண்டார்ப் போன்றோர் கறுப்பின மக்கள் பிரச்னையை மையமாக கொண்ட […]

Read more

பார்த்தது கேட்டது படித்தது! பாகம் – 10

பார்த்தது கேட்டது படித்தது! பாகம் – 10, அந்துமணி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.310. யந்திர தகடுகளை வைத்துக் கொள்ளும் வழக்கமானது, மூடத் தனமான எதிர்பார்ப்புடன், சுய முன்னேற்ற முயற்சிகளை முடக்கும்; சோம்பேறித்தனத்தை வளர்க்கும்; விபரீத விளைவுகளுக்கு இடம் கொடுக்கும்; விஷப்பரிட்சைக்கு ஆளாக்கும். யந்திர தகடுகளை வைத்து, அவற்றின் மூலம் என்ன பெறலாம் என்று எதிர்பார்ப்பதை விட, ஆக்கப்பூர்வமான தொழில் துறை இயந்திரங்களை உரிய முறையில் பயன்படுத்தி, நாமே ஒரு உன்னத இயந்திரமாக மாறி உழைப்பதே உயர்ந்தது! பல லட்சம் வாசகர்கள் […]

Read more

திருக்குறளில் உயிரினங்கள்

திருக்குறளில் உயிரினங்கள், புலவர் இரா.நாராயணன், பூங்கொடி பதிப்பகம், விலைரூ.100 உயிரினங்களிடம் வள்ளுவர் கொண்டிருந்த அன்பை ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள நுால். குறள்களில் அவை எப்படி பயன்படுத்தப்பட்டுள்ளன என தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. இயற்கை வளம், தாவரங்கள், விலங்குகள், உயிரும் உடலும் என்ற தலைப்பில் கட்டுரைகள் உள்ளன. உயிரினங்கள் மீதான நெகிழ்வை வெளிப்படுத்தும் விதத்தில் உள்ளன. உரிய குறள்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. – ராம் நன்றி: தினமலர், 24/4/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000014324_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

சைக்கோதெரபி

சைக்கோதெரபி,  அசரியா செல்வராஜ்,  கண்ணதாசன் பதிப்பகம், பக்.360, விலை ரூ.350.   உடலில் உயிர் இருக்கும்வரை உடல் நலனில் பாதிப்பு ஏற்படுவது இயல்பு. அதுபோலத்தான் மன நலப் பாதிப்பும். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருமே ஏதோ ஒருவகையில் குறையுள்ளவர்கள்தான் என்கிறது மருத்துவத் துறை. ஒருவரது மனநிலை, பேச்சு, நடத்தை முதலியன பிறருக்குத் தாங்கவொண்ணாத வேதனையைத் தொடர்ந்து அளிக்கும்பட்சத்தில் அவருக்கு மன நலச் சிகிச்சை தேவை. மன நலச் சிகிச்சை குறித்த பல்வேறு அம்சங்களை 60 அத்தியாயங்களில் மிகவும் நுணுக்கமாக எளிய தமிழில் இந்த நூல் விளக்குகிறது. மருந்துகளைத் […]

Read more

மவுண்ட் பேட்டன் பிரபு

மவுண்ட் பேட்டன் பிரபு, ஜெகதா, செண்பகா பதிப்பகம், விலைரூ.175 பிரிட்டிஷ் சாம்ராஜ்ய ராஜதந்திரியாக நிர்வாகத் திறமை கொண்ட மவுண்ட் பேட்டன் பற்றிய நுால். இந்தியாவில் பெரும் பதவி வகித்தவரின் வாழ்க்கை வரலாறு, 32 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது. அறியாத செய்திகளைத் தகவலாக தந்துள்ளார். நேருவுடன் இருந்த ஆழமான நட்பு, படேல், காந்தி போன்றோரிடம் மதிப்பு, முகமது அலி ஜின்னாவின் பிடிவாதம் போன்றவை புதிய தகவலோடு எடுத்தாளப்பட்டுள்ளன. படேல் – நேரு முரண்பாடு, மவுண்ட் பேட்டன் கருத்துகளுக்கு எதிர்ப்பும், மறுப்பும் தெரிவித்தது, ஜின்னா இந்தியாவை இரண்டாக்க வேண்டும் […]

Read more

தவறவிட்ட தருணங்களும்… மீறி வந்த அனுபவங்களும்!

தவறவிட்ட தருணங்களும்… மீறி வந்த அனுபவங்களும்!, எஸ்.எல்.நாணு, குவிகம் பதிப்பகம், விலைரூ.170. எழுத்து, நடிப்பு என்ற கலைகளிலும் திறன் பெற்ற அனுபவங்களை பதிவு செய்துள்ளார். எழுதத் துவங்கிய தருணம், கிடைத்த அங்கீகாரம், வாய்த்த அறிமுகம், கிட்டிய வாய்ப்புகள் என, 40 ஆண்டு கால நிகழ்வுகளை உரையாடல் போல் சொல்லி உள்ளார். எழுத்தாளர் சாவி, நடிகர் நாகேஷ், இயக்குனர் பாரதிராஜா போன்றோரை சந்திக்க முடிந்தும், நெருக்கம் ஏற்படுத்த முடியாமல் போனது குறித்தும் விவரித்துள்ளார். கொல்கத்தா மற்றும் சென்னை நகரின் அமைப்பு, அப்போதைய பிரபல பகுதிகள் தொடர்பான […]

Read more

டிசிஎஸ் – ஒரு வெற்றிக் கதை

டிசிஎஸ் – ஒரு வெற்றிக் கதை, எஸ்.ராமதுரை, தமிழில் – கி.இராமன், கிழக்கு பதிப்பகம், பக். 456, விலை ரூ.550. டிசிஎஸ் நிறுவனத்தின் வளர்ச்சியோடு தனது வாழ்க்கையை நகர்த்தியவரும், அதன் தலைமைப் பொறுப்பை வகித்தவருமான ராமதுரையால் எழுதப்பட்டது இந்நூல். தன்னம்பிக்கை பேச்சாளர்கள் நூறு மணி நேரம் பேசினாலும்கூட கிடைக்காத உத்வேகத்தை தனித்து நின்று ஜெயித்துக் காட்டிய ஒருவரது கதை தந்துவிடும் என்பதை உணர்த்தும் நூல் இது. டாடா கன்சல்டன்ஸி சர்வீஸ் எனப்படும் டிசிஎஸ் நிறுவனம், அருகம்புல் அளவில் தொடங்கியது முதல் ஆலமரமாக கிளை பரப்பியது வரை […]

Read more
1 3 4 5 6 7 8