மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன்?

மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன்?, தொகுப்பாசிரியர் கி.வீரமணி, திராவிடக் கழக வெளியீடு, விலை 50ரூ. கல்வி நம் உரிமை மக்கள், மொழிகள், பண்பாடுகள் என அத்தனையிலும் பன்மைத்துவமும் ஏற்ற இறக்கமும் கொண்ட தேசத்தில் கல்வியைப் பொதுப் பட்டியலுக்குக் கொண்டுவருவது என்பது தவறான கொள்கை. இதைச் சுட்டிக்காட்டிக் கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரக் கோரும் மாநாடு சென்னையில் 2011-ல் நடத்தப்பட்டது. அதன் புத்தக வடிவமே ‘மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன்?’ நன்றி: தி இந்து, 8/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

கல்வியும் சுகாதாரமும் கொள்கைகள் பிரச்சினைகள் தீர்வுகள்

கல்வியும் சுகாதாரமும் கொள்கைகள் பிரச்சினைகள் தீர்வுகள், ஜீன் டிருஸ், அமர்த்தியா சென், தமிழில் பேரா.பொன்னுராஜ், பாரதி புத்தகாலயம், விலை 80ரூ. விவாதப் புள்ளிகள் பள்ளிக் கல்வி தொடர்பான சிக்கல்களை வெறும் தகவல்களின் அடிப்படையிலோ சித்தாந்தம் மீதான உணர்வுபூர்வமான சாய்வாலோ அணுகாமல் நுணுக்கமான விவாதப் புள்ளிகளை எழுப்பி, அவற்றின் வழியாக வாசகர்களைச் சிந்தித்துச் செயல்படத் தூண்டுகிறது கல்வியும் சுகாதாரமும் – கொள்கைகள், பிரச்சினைகள், தீர்வுகள். பொருளாதார அறிஞர்கள் அமர்திய சென், ஜீன் டிரீஸ் இணைந்து 2014-ல் எழுதிய ‘An Uncertain Glory- India and its […]

Read more

குழந்தைகளை நேசிப்போம் கொண்டாடுவோம்

குழந்தைகளை நேசிப்போம் கொண்டாடுவோம், க.சரவணன், நீலவால் குருவி வெளியீடு, விலை 80ரூ. பெற்றோர், ஆசிரியருக்கு! குழந்தைகளைத் தவறிழைக்க அனுமதிக்க வேண்டும், அவர்கள் தலையில் அறிவைத் திணிக்கக் கூடாது, அவர்கள்மீது அதிகாரம் செலுத்தக் கூடாது, அவர்களுடைய மனநிலைக்கு ஏற்ப ஆசிரியரும் பெற்றோரும் திட்டங்களைத் தீட்ட வேண்டும் என்பது போன்ற சிந்தனைகளைச் செயல்படுத்த நடைமுறை சார்ந்த வழிகாட்டுதலை வழங்குகிறது, ‘குழந்தைகளை நேசிப்போம் கொண்டாடுவோம்’ புத்தகம். பள்ளித் தலைமையாசிரியராகவும் எழுத்தாளராகவும் உள்ள க.சரவணன் எழுதியிருக்கும் இப்புத்தகம் குழந்தை வளர்ப்பு குறித்துப் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களும் சிறந்த கையேடு. நன்றி: தி […]

Read more

குறள் இனிது

குறள் இனிது, சோமவீரப்பன், தமிழ் திசை , விலை 225ரூ. உலகம் போற்றும் தமிழ் இலக்கியமான திருக்குறளில் சொல்லாத கருத்துகளே இல்லை எனலாம். தலைமைப் பண்பு, ஆளுமை, மேலாண்மை தத்துவம் ஆகியவற்றையும் திருவள்ளுவர் திறம்படத் தந்து இருக்கிறார். இந்தத் தலைப்புகளில் உள்ள 125 குறள்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றில் உள்ள ஆழமான கருத்துகளை, ஆங்காங்கே நகைச்சுவையுடனும், எளிய முறையிலும் விளக்குவதோடு, இன்றைய வாழ்வில் அவை எவ்வாறு பொருந்துகின்றன என்பதும் அழகாகத் தரப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027269.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

எல்லோர்க்கும் சொந்தம் முஹம்மது நபி

எல்லோர்க்கும் சொந்தம் முஹம்மது நபி, சா.அப்துர்ரஹீம், அறிவு நாற்றங்கால் வெளியீடு, விலை 110ரூ. இறைத்தூர் முஹம்மது நபி அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு இதில் சிறப்பாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. அவர்கள் கொண்டுவந்த செய்தி, அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள், ஆற்றிய உரைகள், அந்தக் காலத்தில் நடைபெற்ற போர்கள் பற்றிய விவரம் ஆகியவையும் தந்துள்ளதால், இஸ்லாமியர்கள் மட்டும் இன்றி அனைவரும் படித்துத் தெரிந்து கொள்ளும் தகவல் பெட்டகமாக அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more

சித்தமெல்லாம் சிவமயம்

சித்தமெல்லாம் சிவமயம், சம்பத்குமார், வானதி பதிப்பகம், விலை 180ரூ. சித்தர்கள் என்பவர்கள் யார்? அவர்கள் எத்தனை பேர்? அவர்களின் பாடல்களில் மறைந்து இருக்கும் பொருள் என்ன? சித்தர்களின் நோய் தீர்க்கும் மருத்துவ முறைகள் யாவை? அவர்கள் வசிக்கும் குகைகள் எங்கே இருக்கின்றன? நமது பூமிக்கு அவர்கள் வருவது எப்படி? என்பது போன்ற அனைத்து வினாக்களுக்கும் இதில் ஆச்சரியமூட்டும் விளக்கம் இருக்கிறது. அனைத்து சித்தர்களின் பிறந்த ஊர், நட்சத்திரம், சமாதி அடைந்த இடம், மற்றும் சமீபகாலத்தில் வாழ்ந்த சித்தர்களின் விவரங்கள் ஆகியவையும் இந்த நூலில் தரப்பட்டுள்ளதால் […]

Read more

இராமாயணம் இராமன் இராமராஜ்யம்

இராமாயணம் இராமன் இராமராஜ்யம், கி.வீரமணி, திராவிடர் கழக வெளியீடு, விலை நன்னொடை 120ரூ. சில மாதங்களுக்கு முன்பு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சென்னை பெரியார் திடலில், 7 நாட்களாக ஆற்றிய உரைகளின் தொகுப்பாக இந்த நூல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் சாதி பாகுபாட்டை வலியுறுத்தும் வருணாசிரமத்தை நீடிக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகவும், மத வெறியை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் ராமாயண பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது என்பதை பல ஆதாரங்களுடன் அவர் எடுத்து வைக்கிறார். பல்வேறு மொழிகளில் ராமாயணம் 48 நூல்களாக வெளியாகி இருக்கிறது […]

Read more

ஸ்டெர்லைட்டின் சூழலியல் படுகொலை

ஸ்டெர்லைட்டின் சூழலியல் படுகொலை,  தொகுப்பு நூல், பூவுலகின் நண்பர்கள் வெளியீடு, கடந்த ஆண்டின் மிகப் பெரிய சூழலியல் பிரச்சினையாகவும், சமூகப் பிரச்சினையாகவும் தொடங்கி, தற்போதுவரை நீடித்துக்கொண்டிருக்கிறது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்சினை. இந்த ஆலை குறித்தும் அதன் பின்னணி குறித்தும் விரிவாக அலசுகிறது இந்தப் புத்தகம். நன்றி: தி இந்து, 5/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 —

Read more

இருளர்களும் இயற்கையும்

இருளர்களும் இயற்கையும், சி. மஞ்சுளா , என்.சி.பி.எச். வெளியீடு, விலை 150ரூ. பழங்குடியினரையும் இயற்கை குறித்த அறிவையும் பிரித்துப் பார்க்க முடியாது. தாவரவியல் அறிவை மருத்துவ அறிவாகப் பரிணமிக்கச் செய்த இருளர்களைப் பற்றி ஆய்வுபூர்வமாகப் பேசுகிறது இந்த நூல். சமவெளி இருளர்கள் பற்றி மிகக் குறைவான பதிவுகளே இருக்கும் நிலையில், இப்புத்தகம் முக்கியமானது. நன்றி: தி இந்து, 5/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027061.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

உயிர் இனிது

உயிர் இனிது , கோவை சதாசிவம் , குறிஞ்சி வெளியீடு , விலை 140ரூ.   நமது பெருமைகளான குறிஞ்சி, செங்காந்தள், செங்கால் நாரை, வரையாடு, தேவாங்கு, ஓங்கில், நட்சத்திர ஆமை உள்பட பல்வேறு உயிரினங்கள், தாவரங்கள், இயற்கை அம்சங்கள் பற்றி சுருக்கமாகவும் தெளிவாகவும் அறிமுகப்படுத்தும் 40-க்கும் மேற்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. நன்றி: தி இந்து, 5/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026971.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more
1 246 247 248 249 250 505