எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம்

எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம், ஜெ.சி.டி. பிரபாகர், இதயக்கனி பிரசுரம், விலை 60ரூ. மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். குறித்து 20 தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. இதனை படிப்பதன் மூலம் எம்.ஜி.ஆரின் இயல்பான குணங்களை முழுமையாக நாம் அறிந்துகொள்ள முடியும். நன்றி: தினத்தந்தி, 26/7/2017,

Read more

விநாயகர் பற்றிய அற்புதமான விஷயங்கள்

விநாயகர் பற்றிய அற்புதமான விஷயங்கள், சிந்தனையருவி இரா.ரெங்கசாமி, மணிமேகலைப்பிரசுரம், விலை 110ரூ. விநாயகர் பற்றி புராணங்களில் சொல்லப்பட்டுள்ள சகல விவரங்களும் இந்தப் புத்தகத்தில் உள்ளன. அத்துடன் விநாயகரின் ஜாதகமும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நன்றி: தினத்தந்தி, 26/7/2017,

Read more

சிவயோகி மா.இரத்தின சபாபதிப்பிள்ளை படைப்புகள்

சிவயோகி மா.இரத்தின சபாபதிப்பிள்ளை படைப்புகள், பேராசிரியர் முனைவர் நல்லூர் சா. சரவணன், சைவ சித்தாந்தப் பெருமன்றம், விலை 450ரூ. விநாயக புராணத்தை அடிப்படையாகக் கொண்டு அவ்வையார் ‘விநாயகர் அகவல்’ நூலுக்கு யோகத் தெளிவு தந்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் திருமந்திரத்திற்கு எழுதிய முன்னுரை, திருமந்திரத்தின் அனுபவ முறை, திருமந்திரத்தின் மூலமான மரணமிலாத் தன்மை எனத் திருமந்திரத்தை விளக்கும் சிவயோகியின் பிற நூல்களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. கடவுளை அடைய உடலைப் பயன்படுத்தும் நெறிமுறைகளை தெளிவாக விளக்கும் நூல். நன்றி: தினத்தந்தி, 26/7/2017,

Read more

நான் ஜிபு மற்றும் புற்றுநோய்

நான் ஜிபு மற்றும் புற்றுநோய், ம. அஹமது நவ்ரோஸ் பேகம், என்.ஜே.பதிப்பகம், விலை 30ரூ. தன்னுடைய 11 வயது மூத்த மகனுக்கு ரத்தப் புற்று நோய் என்றதும் துடித்துபோன தாயின் துயரத்தையும் வேதனையையும் ம.அஹமது நவ்ரோஸ் பேகம் இந்த நூலில் பதிவுசெய்துள்ளார். தொடக்கம் முதல் இறுதி வரை விழித்திரைகளில் கண்ணீர் திரையிடுகிறது. துயரம் நெஞ்சை அடைக்கிறது. நன்றி: தினத்தந்தி, 26/7/2017.

Read more

பலன் தரும் பாரம்பரிய பண்டிகைகள்

பலன் தரும் பாரம்பரிய பண்டிகைகள், கா. சுந்தரமூர்த்தி, விஜயா பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ. தென்னகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படும் தீபாவளி, பொங்கல், மகாசிவராத்திரி, மாசிமகம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி உள்பட 21 பண்டிகைகள் பற்றிய புத்தகம். இந்தப் பண்டிகைகள் கொண்டாடப்படுவதன் நோக்கம், அதன் புராணப் பின்னணி, பலன்கள் முதலியவை பற்றி தெளிவாகவும், சுவையாகவும் எழுதியுள்ளார் கா. சுந்தரமூர்த்தி. நன்றி: தினத்தந்தி, 26/7/2017.

Read more

கதைகள் சொல்லும் கருத்துகள்

கதைகள் சொல்லும் கருத்துகள், ஆர். பத்மபிரியா, அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 40ரூ. நீதிக்கதைகள் பள்ளி, மாணவ-மாணவிகள் மற்றும் சிறுவர்கள் நீதிகளைப் பின்பற்றி சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காக பல அரிய பழைய நூல்களில் இருந்து எடுக்கப்பட்ட நீதிகதைகள் அடங்கிய நூல். நன்றி: தினத்தந்தி, 26/7/2017.

Read more

யோக முத்திரைகளின் அறிவியல்

யோக முத்திரைகளின் அறிவியல், தமிழில் வி.மகாலிங்கம், சப்னா புக் ஹவுஸ், விலை 185ரூ. முத்திரைகளின் வரலாறு, பொதுவான செய்முறை, பஞ்சபூதக் கொள்கை போன்றவை தொகுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 200 முத்திரைகள் விரிவாக படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. முத்திரைகளைச் செய்வதன் மூலம் உடல், மன சமநிலையையும் நோயற்ற வாழ்வையும் எவ்வாறு பெற முடியும் என்பதை இந்நூல் அறிவியல் பூர்வமாக விளக்குகிறது. நன்றி: தினத்தந்தி, 26/7/2017.

Read more

பட்டணம் போனேன் பாட்டெழுத

பட்டணம் போனேன் பாட்டெழுத, சப்னா புக் ஹவுஸ், விலை 85ரூ.பட்டணம் போனேன் பாட்டெழுத, சப்னா புக் ஹவுஸ், விலை 85ரூ. சினிமா பாடலாசிரியராக வேண்டும் என்ற கனவுகளுடன் கோவையில் இருந்து சென்னைக்கு சென்ற கவியன்பன் பாபு, தனது வலிகளையும் தோல்விகளையும் மெல்லிய புன்னகையுடன் இந்த நூலில் செதுக்கி இருக்கிறார். ஒரு நாவலைப் படிப்பதுபோல விறுவிறுப்பாகவும் சுவையாகவும் தனது அனுபவங்களை இந்த நூலில் அவர் பதிவு செய்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 09 /8/2017.

Read more

அகமும் புறமும்

அகமும் புறமும், பரமன் பச்சைமுத்து, மலர்ச்சி பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. பல்வேறு தலைப்புகளில் பரமன் பச்சைமுத்து எழுதிய 25 கட்டுரைகள் கொண்ட நூல். சிவாஜிகணேசன் பற்றிய கட்டுரை அருமை. நன்றி: தினத்தந்தி, 16/8/2017.

Read more

உண்மை விளக்கம்

உண்மை விளக்கம், பதிப்பாசிரியர் சென்னை பல்கலைக்கழக சைவசித்தாந்த துறை தலைவர் பேராசிரியர் நல்லூர் சா.சரவணன், சைவ சித்தாந்த வெளியீடு, விலை 80ரூ. மனவா சகங்கடந்த தேவநாயனார் இயற்றிய உண்மை விளக்கம் எனும் சைவ சித்தாந்தச் சாத்திர நூல். உண்மை விளக்கம் நூலுக்கு தெளிவான பொழிப்புரையும் விளக்கமும் தந்த க.வச்சிரவேலு முதலியார் வழங்கியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 16/8/2017.

Read more
1 375 376 377 378 379 505