ஆண்டாள் அந்தாதி

ஆண்டாள் அந்தாதி, சுரா, செந்தமிழ் அறக்கட்டளை, விலைரூ.100 அந்தாதி பாடுவது மிகவும் கடுமையான சவால். ஆதி, அந்தம் என்ற சொற்களின் கூட்டணியே அந்தாதி. இவ்வகையில் முதல் செய்யுளான, ‘படிக்குப்படி கமலம் வைப்பேன், படிக்கும்படி பாடல் தருவேன்’ என்று துவக்கி, ‘அருள்மிகச் செய்வாய் அம்மா’ என முடிக்கிறார். அடுத்த பாடலில், அம்மாவின் மறு சொல்லான, ‘அம்மையே அருள்வளர் அழகே’ என துவங்குகிறார். இப்படியாக, 100 செய்யுள்கள் நீள்கின்றன. இந்த எளிய பாடல்களுக்கு பொருளும் தந்துள்ளது, பொறுப்புணர்வைக் காட்டுகிறது.  நன்றி: தினமலர், 6/12/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

இந்த மண்ணில் விளைந்த மகத்தான சிந்தனை

  இந்த மண்ணில் விளைந்த மகத்தான சிந்தனை, வி.சண்முகநாதன்; விஜயா பதிப்பகம், பக்.192; விலைரூ.150. வேதங்களின் அரிய சிந்தனைகளை சாதாரணமக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் நூலாசிரியர் 21 அத்தியாயங்களில் விளக்கியிருப்பது வியக்க வைக்கிறது. ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களின் சாரம்சத்தை, குறள் போல சுருக்கி அதன் பதங்கள், சூக்தங்களை குறிப்பிட்டிருப்பது பாராட்டுக்குரியது. காயத்ரி மந்திரம் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால், அது எந்த வேதத்தில் எத்தனையாவது மண்டலத்தில் எந்த வகைப் பாடலாக உள்ளது என்பது ரத்தினச் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது. அதைப் படிப்போருக்கு […]

Read more

பெரியபுராண வாயில்

பெரியபுராண வாயில், சாமி. தியாகராசன், சிவாலயம், பக்.136, விலை ரூ.120.  சேக்கிழார் பெருமான் இயற்றியருளிய பெரியபுராணத்தில் பாயிரம் என்ற பெயரில் பத்துப் பாயிரங்கள் (பதிகங்கள்) உள்ளன. பாயிரம் என்ற சொல்லுக்கு வரலாறு என்று பொருள். அதாவது, நாயன்மார்களின் வரலாற்றை விரித்துரைப்பதால் இப்பெயர் பெற்றிருக்கலாம். நூலில் சொல்லப்பட்ட செய்திகளைப் பாயிரத்தைப் படித்து சுருக்கமாகத் தெரிந்து கொள்ள முடியும். அதனால், பாயிரம் என்பது கோயிலுக்குக் கோபுரம் போல நூலுக்கு கோபுரமாக (முதன்மையானதாக) அமைகிறது. சேக்கிழார் பெருமானுக்கு சிவபெருமானே அசரீரியாக “உலகெலாம்” என்று அடியெடுத்துக் கொடுத்த பெரியபுராணத்தில் உள்ள […]

Read more

திருப்புகழ்த் திருத்தலங்கள்

திருப்புகழ்த் திருத்தலங்கள், ஆ.கோமதி நாயகம், அழகு பதிப்பகம், விலைரூ.350 மறுபதிப்பாக வந்துள்ளது. அருணகிரி நாதர் அருளிய திருப்புகழில் பாடிய, 201 தலங்களைப் பற்றியும், வைப்புத் தலங்கள், முருகன் தலங்கள் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது. அருணகிரி நாதர் வரலாற்றோடு மாவட்டங்கள் தோறும் இத்தலங்கள் அமைந்துள்ள விபரமும் அடங்கி இருக்கிறது. முருகனுக்கு உரிய மந்திரங்கள், யந்திரங்கள், விரதங்கள் போன்றவை விளக்கப்பட்டுள்ளன. நன்றி: தினமலர் இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030996_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

சிவபெருமான் அடியார்களுக்கு அருளிய அருட்கோலங்கள்

சிவபெருமான் அடியார்களுக்கு அருளிய அருட்கோலங்கள், மருத்துவர் கைலாசம் சுப்ரமண்யம், வானதி பதிப்பகம், விலைரூ.125. அளவிலா பக்தி செலுத்தும் அன்பர்களுக்கு தேவை அறிந்தும், சூழலுக்குப் பொருத்தமாக வெளிப்பட்டு அருள் செய்கிறான் இறைவன். உடல் சார்ந்த நோய்களுக்கு, உள்ளம் சார்ந்த இறை நம்பிக்கை மருந்தாக அமையலாம் என உணர்த்துகிறது நுால். நாயன்மார்களுடன் இறைவன் நடத்திய திருவிளையாடல்களின் சுருக்கமே என கூறியுள்ளது, உண்மைத் தன்மையை உணர்த்துகிறது. சுந்தரரை சிவபெருமான் தடுத்தாட்கொண்டது, திருவொற்றியூரில் சங்கிலியாரை மணந்தது, பரவையார் வீட்டிற்குத் துாது போனது, திருநாவுக்கரசருக்கு சூலை நோய் கொடுத்து சிவநெறிக்கு மாற்றியது […]

Read more

பலன் தரும் பரிகாரத் திருத்தலங்கள்

பலன் தரும் பரிகாரத் திருத்தலங்கள்,  அறந்தாங்கி சங்கர், அறந்தாங்கி சங்கர் பதிப்பகம், விலைரூ.150 திருக்கடையூர் அபிராமி அம்மன் துவங்கி, 41 பரிகாரத் திருத்தலங்களை விளக்குகிறார். தலை எழுத்தை மாற்றி அமைக்கும் திருத்தலமாகத் திருப்பட்டூர் ஈசன்; திருமணத்தை நடத்தி வைக்கும் திருமணஞ்சேரி; பல நோய்கள் தீர்க்கும் பல திருத்தலங்கள்; ராகு, கேது தோஷ நிவர்த்தித் தலங்கள்; கடன்தொல்லைகளை தீர்க்கும் திருச்சேறை ரிணவிமோசன லிங்கேஸ்வரர் என்ற சிறப்பானதொரு தகவல். இழந்த பதவி கிடைக்க அச்சிறுபாக்க ஆட்சி புரீஸ்வரர் திருக்கோவில்; திருமணத் தடைகள் நீக்கும் திருவிடந்தை பெருமாள்; சனி […]

Read more

புத்தரின் சிந்தனைகள்

புத்தரின் சிந்தனைகள், பவுத்தப் பிரியன், கரியன்குள்ள அம்மாள் பதிப்பகம், விலைரூ.50 பகவன் என்றால் புத்தன். பகவான் என்றால் இந்து மதக் கடவுள். பகவன் புத்தர் உருவ வழிபாட்டை விரும்பாதவர். கருத்துச் சுதந்திரத்தை ஆதரித்தவர். புத்தம் பலவித கருத்துக்களை சொல்லி நிற்கிறது. அதில் தேர்ந்த தெளிந்த கருத்துக்களை தொகுத்து நுாலாக்கப்பட்டுள்ளது. மனைவியைப் பற்றி, அழகில் கர்வம் கூடாது, ஆடம்பரம் பகட்டு கூடாது, சகோதரி போல அன்பு காட்ட வேண்டும், எல்லா உயிர்களிடமும் தாயைப் போல பரிவு காட்ட வேண்டும், ஆடம்பர தேவைகளில் ஆர்வம் காட்டக்கூடாது என […]

Read more

பாகவதப் பாரதம்

பாகவதப் பாரதம்,  சிவ.விவேகானந்தன், காவ்யா, பக்.592, விலை ரூ.600; வியாசரால் எழுதப்பட்ட வடமொழிப் புராணமான ஸ்ரீமத் பாகவதம், விஷ்ணுவின் அவதாரக் கதைகளைக் கூறுவது. அதே வியாசர் எழுதிய இதிகாசமான மகாபாரதம், பாண்டவ- கெளரவர்களிடையிலான குருவம்ச பங்காளிச் சண்டையை மையமாகக் கொண்டது. இந்த இரண்டையும் இணைக்கும் “பாகவதப் பாரதம்” என்ற காப்பியம் தமிழில் 1800-ஆம் ஆண்டுகளில் தமிழில் ஓலைச்சுவடியில் எழுதப்பட்டிருப்பது வியப்புக்குரிய செய்தி. குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீபல்பநாப நாடார் இந்நூலை எழுதி இருக்கிறார். அம்மானைப் பாடல் வடிவில் பாகவதப் பாரதம் எழுதப்பட்டுள்ளது. அந்த ஓலைச்சுவடியில், […]

Read more

வாசி யோகத்தில் மெய்ஞானம்

வாசி யோகத்தில் மெய்ஞானம், ஆர்.சுந்தர், விஜயா பதிப்பகம், விலைரூ.85 பஞ்சபூதங்களால் ஆனது மனித உடல். இந்த உடல் இயக்கத்திற்கு, காற்று முக்கிய பங்கு வகிக்கிறது. காயமே இது பொய்யடா; வெறும் காற்றடைத்த பையடா என்று சித்தர் வாக்கின் படி, காற்று மிகவும் இன்றியமையாதது. காற்றை யோக முறையில் செயல்படுத்தும் வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. எட்டு வகை யோக முறைகளை விரிவாகப் பேசுகிறது. மெய்ஞானிகள் என்று துவங்கி, நல்ல மொழிகள் என்ற எட்டு தலைப்புகளுடன் நுால் நிறைவெய்துகிறது. சிவவாக்கியர், பட்டினத்தார், வள்ளலார், அவ்வையார் போன்ற சித்தர்களின் கருத்தை […]

Read more

தாடகை நாச்சி மீனாட்சி வரலாறு

தாடகை நாச்சி மீனாட்சி வரலாறு, சொக்கரமணகிரி தாசலிங்கம், பூமாயி பதிப்பகம், விலைரூ.250 ஆன்மிக அன்பர்களுக்கு அருட்கொடையாக வந்துள்ள இந்நுால், மாயாசக்தி அன்னை மீனாட்சியின் பெருமை பேசுகிறது. பக்தி பரவசமூட்டும் எளிய தமிழ் சொற்களால் சங்க காலத்து பாடல்கள் விளக்கப்பட்டு உள்ளன. முதல், இடை, கடை தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்ற புலவர்களை, ஞானிகளை, முனிவர்களை விளக்கும் விதம் அருமை. மதுரையை விட்டு பிரியும் போது நக்கீரர் பாடிய, ‘என்றினி மதுரை காண்பேம்…’ என்ற பாடலும், அதன் விளக்கமும் இதற்கு சான்று. ‘சர்க்கரை பந்தலில் தேன்மாரி’ போல […]

Read more
1 14 15 16 17 18 128