திருவாசகம்

திருவாசகம், மாணிக்கவாசகர், அருணா பப்ளிகேஷன்ஸ், விலைரூ.100 மாணிக்கவாசகர் சுவாமி அருளிய திருவாசகம் மூல நுால் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. எளிதாக படிக்கும் வகையில் பெரிய எழுத்தில் அச்சிடப்பட்டுள்ளது. கவரும் வண்ணம் வடிவமைக்கப் பட்டுள்ளது. கெட்டி அட்டையில், சிறப்பாக, பைண்ட் செய்யப்பட்டுள்ளது. தினமும் எடுத்து வாசிக்க ஏற்ற வகையில் உள்ளது. நீண்ட நாட்கள் பாதுகாப்பாக வைத்திருக்க ஏற்றது. திருவாசகத்தில் உருகும் பக்தர்கள் போற்றி பாதுகாக்க வேண்டிய பெட்டகம். நன்றி: தினமலர், 10/1/21 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

கந்த புராணம்

கந்த புராணம், வேணு சீனிவாசன், அழகு பதிப்பகம், விலைரூ.150 பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைக் கொண்ட கந்த புராணத்தை உரைநடையாக, 43 அத்தியாயங்களில் வழங்கும் நுால். கம்ப ராமாயணத்தைப் போல் ஆறு காண்டங்களைக் கொண்ட கந்த புராணத்தை, கச்சியப்ப சிவாச்சாரியார் அருளினார். அவருக்கு முருகப் பெருமானே அடி எடுத்துக் கொடுத்ததுடன், இலக்கணத் தெளிவையும் வழங்கினார் என்பது புராணம். அந்த வரலாற்றை விரிவாகத் தெரிவித்திருப்பதுடன், கந்த புராணச் செய்திகள் அனைத்தையும் எளிய மொழி நடையில் தெரிவிக்கிறது. வள்ளி திருமணத்துடன் நிறைவடையும் கந்த புராணத்தைத் திருத்தணி என்னும் திருத்தலத்துடன் […]

Read more

நல்லன எல்லாம் தரும்

நல்லன எல்லாம் தரும், டாக்டர் சுதா சேஷையன், வானதி பதிப்பகம், விலை 120ரூ. ஏராளமான ஆன்மீக கட்டுரைகளை எழுதி, தனக்கென தனி இடத்தைத் தக்கவைத்து இருக்கும் மருத்துவர் சுதா சேஷையன் இந்த நூலில் 23 கட்டுரைகளைத் தந்து இருக்கிறார். அனைத்து கட்டுரைகளும் கடவுள் என்ற ஒன்றை மையமாக வைத்து சிந்தனை கருவூலமாக அமைக்கப்பட்டு இருக்கின்றன. பல சமஸ்கிருத நூல்களில் இருந்து மேற்கோள் காட்டப்பட்டு இருப்பது, அவரது சமஸ்கிருத புலமையையும், அந்தக் கருத்துகளை எளிய தமிழில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் கொடுத்து இருப்பது அவரது தமிழ்ப் […]

Read more

நலம் தரும் நாராயணா

நலம் தரும் நாராயணா, டாக்டர் ச.தமிழரசன், குறிஞ்சி பதிப்பகம், விலை 80ரூ. ஆழ்வார்கள் பலரது வரலாறு, தமிழகத்தில் ஆழ்வார்களால் சாசனம் செய்யப்பட்ட கிருஷ்ணரின் 5 கோயில்கள், தாமிரபரணி நதி அருகே அமைந்து இருக்கும் நவ திருப்பதிகள் ஆகியவற்றை நேரில் பார்த்தும், அவை தொடர்பாகக் கேட்டவை, அறிந்தவை, உணர்ந்தவை ஆகியவற்றையும் இக்கால சூழலுக்கு ஏற்ப ரசித்துப் படிக்கும் வகையில் தந்து இருக்கிறார் ஆசிரியர். அரியும் அரனும் ஒன்று என்பதற்கு அவர் அறிவியல் ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் தரும் விளக்கம் வியப்பை அளிக்கிறது. நன்றி: தினத்தந்தி, 21/2/21 […]

Read more

உயிர் வளர்க்கும் திருமந்திரம் – 2

உயிர் வளர்க்கும் திருமந்திரம் – 2, கரு.ஆறுமுகத்தமிழன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.225 திருமந்திரம் திருமுறைகளில் வரிசைப்படுத்தப்பட்டாலும் அது முன்னிறுத்துவது மெய்யியல் விசாரணையைத்தான். உலகின் தோற்றத்தை, அதன் இயக்கத்தை, உயிரை, உடலை, உணர்வை விரிவாகப் பேசும் திருமந்திரம் சைவ சித்தாந்தத்துக்கு மட்டுமல்ல; தமிழ் சித்தர் மரபுக்கும் மூல நூல். ‘ஆனந்தஜோதி’ இணைப்பிதழில் வாரந்தோறும் இலக்கியமும் மெய்யியலும் பின்னிப் பிணைந்த தனிநடையில் கரு.ஆறுமுகத்தமிழன் எழுதி புத்தகமாக வெளியான முதல் தொகுப்பானது வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போது இரண்டாம் பாகம் வந்திருக்கிறது. யோக […]

Read more

அஷ்டாவக்ர கீதை

அஷ்டாவக்ர கீதை,  க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ்,  பக்.350, விலை ரூ.400. அஷ்டாவக்ரர் என்கிற ஞானி ஒரு துறவி. மன்னர் ஜனகர் ஒரு கர்மயோகி. இருவரும் சந்தித்து தத்துவார்த்தமாக உரையாடினால் எப்படி இருக்கும்? இந்த உரையாடல்களின் தொகுப்பே இந்நூல். இருபது அத்தியாயங்களாகப் பகுக்கப்பட்டுள்ள இந்நூலில் பதினொரு அத்தியாயங்கள் அஷ்டாவக்ரருடைய உபதேசமாகவும், ஒன்பது அத்தியாயங்கள் ஜனகர் தனது அனுபவங்களைக் கூறும்விதமாகவும் அமைந்துள்ளன. ஞானி என்பவன் யார் என்று கூறுமிடத்தில் அஷ்டாவக்ரர், ஞானி என்பவன் எந்த குலத்தையும் சேர்ந்தவன் அல்லன். அவன் வடிவம் உடம்பு அல்ல. அதனால் அவன் […]

Read more

லவ குசா

லவ குசா, தி.செல்லப்பா, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.150. விசேஷம் இது வித்தியாசம் என்ற பெயரில் தமிழக கோவில்களின் அதிசய வரலாறு, செல்லும் வழி குறித்து எழுதிய செல்லப்பாவின் இரண்டாவது புத்தகம். கர்ப்பிணியாய் கானகம் சென்ற சீதாவின் வயிற்றில் பிறந்த கன்றுக்குட்டிகளாம் லவன், குசன் பற்றிய அழகான தொகுப்பு இது. இக்கதையில் மணமுடிக்கும் போது சீதாவின் வயது, கானகம் சென்ற போது வயது, மகப்பேறின் போதுள்ள வயதை குறிப்பிடுவது அரிய தகவல். பொறுமையின் சிகரமான சீதா ஏன் பொங்கி எழுந்தாள்… வானளாவ […]

Read more

திருமந்திரம் பத்தாம் திருமுறை – மூலம் முழுவதும்

திருமந்திரம் பத்தாம் திருமுறை – மூலம் முழுவதும், பதிப்பக வெளியீடு, அருணா பப்ளிகேஷன்ஸ்,விலைரூ.220. திருமூலர் அருளிய திருமந்திரம் நுால் மறு அச்சாக்கம் செய்யப்பட்டுள்ளது. பத்தாம் திருமுறையாகப் போற்றப்படும் இந்த நுாலின் மூல வடிவம் தெளிவாக அச்சிடப்பட்டுள்ளது. எளிதாக படிக்கும் வகையில், வடிவமான எழுத்துக்களில் உரிய துணைத் தலைப்புகளுடன் அமைந்துள்ளது. எளிதில் பழுதாகாத வகையில் கெட்டி அட்டை அமைப்புடன், புத்தகம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் பாதுகாக்கப்பட வேண்டிய நுால். நன்றி: தினமலர்,20/12/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

மணிவாசகர் உணர்த்தும் அகப்பொருள் நுட்பம்

மணிவாசகர் உணர்த்தும் அகப்பொருள் நுட்பம், இடைமருதூர் கி.மஞ்சுளா, மணிவாசகர் பதிப்பகம், பக்.368, விலை ரூ.300. ;சைவ சமயத்தின் கருவூலமாகத் திகழும் பன்னிரு திருமுறையில் எட்டாம் திருமுறையாக வைத்துப் போற்றப்பெறுபவை மணிவாசகரின் திருவாசகமும் திருக்கோவையாரும். இவ்விரு நூல்களிலும் இடம் பெற்றுள்ள அகமரபுச் செய்திகள் அமைந்த பாடல்களின் நுட்பங்களை ஆய்ந்து எழுதப்பட்ட முனைவர் பட்ட ஆய்வு நூல் இது. திருவாசகத் தேன் என்பது உலக வழக்கு. இந்நூலாசிரியர், திருவாசகம் மட்டுமல்ல, திருக்கோவையாரும் தேன்தான் என்கிறார். திருவாசகத்தேன் உணவாகவும், திருக்கோவையார் தேன் மருந்தாகவும் விளங்குகிறது என்று நயம்படக் கூறுகிறார். […]

Read more

வைணவ வாழ்க்கை தத்துவங்கள்

வைணவ வாழ்க்கை தத்துவங்கள், ந.இரா.சீனிவாச ராகவன், வானதி பதிப்பகம், விலைரூ.200. ஆன்மிகத்தில் ஆழ்ந்த அறிவு பெற்ற ஆன்மிக அனுபவத்தின் கட்டுரைகளின் தொகுப்பே இந்நுால்.‘ஷேமநிதி’ என்ற தலைப்பிலான கட்டுரையில், பாவ மற்றும் புண்ணியங்களின் கணக்குகளைக் குடும்ப உறவுகளிடையே ஒருங்கிணைத்து, அதன் மூலம் வரும் லாப நஷ்டக் கணக்குகளை அருமையாக குறிப்பிடுகிறார். புண்ணிய பலத்தால் சந்ததியினருக்கு எவ்வாறு இறையருளைப் பெற முடியும் என்றுரைக்கிறார். ‘ஸீதாராமன் திருக்கல்யாணம்’ என்ற தலைப்பிலான கட்டுரையில், தினமும் ஸீதாராமன் திருக்கல்யாணம், காசியில், 200 ஆண்டுகளாகத் தொடர்ந்து சிரத்தையுடன் நடத்துவதை விளக்குகிறார்.திருமலை ஸ்ரீநிவாஸ பெருமாளுக்கும், […]

Read more
1 12 13 14 15 16 128