ஸ்ரீமந் நாராயணீயம் பாகம் – 2

ஸ்ரீமந் நாராயணீயம் பாகம் – 2, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.290. கேரளாவைச் சேர்ந்த நாராயண பட்டத்திரி, தன் குருவுக்கு வந்த வாதநோயை, தனக்கு மாற்றுமாறு வேண்டிக் கொண்டார். குரு நலம் பெற, நாராயண பட்டத்திரிக்கு வாதநோய் ஏற்பட்டு உடலை வருத்தியது. இந்த நோயை தீர்க்குமாறு, கேரளாவில் உள்ள குருவாயூரப்பனை வேண்டுகிறார். வெறும் வேண்டுதலாக இல்லாமல் பாடல்களாக பாடுகிறார். 10 ஸ்லோகங்கள், ஒரு தசகம் வீதம் 1,000 ஸ்லோகங்கள் இயற்றுகிறார். ஒவ்வொரு தசகத்தையும் பெருமாளிடம் படித்து காட்டி, சரி செய்ததாக வரலாறு […]

Read more

கந்த புராணம் மூலமும் உரையும்

கந்த புராணம் மூலமும் உரையும், முனைவர் சிவ.சண்முகசுந்தரம், பாரி நிலையம், விலைரூ.4600. கம்பராமாயணத்திற்கு இணையாகப் போற்றப்படும் பெருமை வாய்ந்த பக்தி இலக்கிய நுால் கந்த புராணம். உற்பத்தி காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தட்ச காண்டம் என, ஆறு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 135 படலங்களுடன், 10 ஆயிரத்து, 345 பாடல்களைக் கொண்டது. கச்சியப்ப சிவாச்சாரியாரால் இயற்றப்பெற்றது. முருகனின் தோற்றம், கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்படுதல், இளவயது திருவிளையாடல், சூரனை வதம் செய்தல், சூரனுக்கு அருள் வழங்கிய திறம், […]

Read more

உங்கள் ஜாதகத்தில் யோகங்கள்

உங்கள் ஜாதகத்தில் யோகங்கள், கே.எஸ்.சேவுகமூர்த்தி, ஒப்பில்லாள் பதிப்பகம், விலைரூ.150. வணக்கத்தக்க மனிதர்களின் ஜாதகங்களையும், அதிர்ஷ்டத்தையும் அறிந்து கொள்ளும் வகையிலான நுால். திருமண தடை நீங்க எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்; எவ்வாறு வணங்க வேண்டும் என்பது தெளிவாக உள்ளது. ஒவ்வொரு ராசியின் சிறப்புகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன; கடவுள்களின் மற்றொரு பெயர்களும், திருநாமங்களும் விவரிக்கப்பட்டுள்ளன. வைரம், கோமேதகம் அணிவதன் பலன்கள் பற்றியும் உள்ளது. – வேணி நன்றி: தினமலர், 1.8.21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

கந்தன் கதை

கந்தன் கதை, ரவிக்குமார், அவனருளாலே பதிப்பகம், விலைரூ.450. தமிழ்க் கடவுள் கந்தனை புவி மாந்தரோடு தொடர்புபடுத்தி கற்பனை கலந்து எழுதிய தொகுப்பு நுால். கற்பனை கதையமைப்பும், காட்சிகளும் சேர்க்கப்பட்ட நெடிய புதினம். கந்த புராணத்தை அடிப்படையாகக் கொண்டு, பக்தித் திரைப்படங்களில் காட்டப்பட்ட வானவர் காட்சியமைப்புகளும், கதைகளும் வரவேற்பு பெற்றன. இந்த பின்னணியில் புதிய புனைவுகளோடு விவரிக்கப்பட்டுள்ளது. சிவன், பார்வதி, ரதி, மாரன், இந்திரன், குமரன், சூரபத்மன், அகத்தியர், திலோத்தமை என கதாபாத்திரங்களின் உரையாடல்களோடு பயணிக்கிறது கதை. தற்கால மொழி நடையில் அமைந்துள்ளது. பழனி போகநாதர் […]

Read more

நவக்கிரகங்களும் பரிகாரங்களும்

நவக்கிரகங்களும் பரிகாரங்களும், ஆர்.ஹேமா பாஸ்கர் ராஜு, விலைரூ.250. நவக்கிரகங்கள் பற்றியும், நவக்கிரக கோவில்கள் இருக்கும் இடம் பற்றியும், அங்கு செல்லும் வழி குறித்தும் விரிவாக எழுதப்பட்டுள்ள நுால். பரிகாரங்கள், பலன் தரும் பரிகாரங்கள், தோஷ நிவர்த்தி பரிகாரங்கள், திருமணத் தடை அகற்றும் திருத்தலங்கள் ஆகியவற்றின் விபரங்களும் தெளிவாக எழுதப்பட்டுள்ளன. அருள் தரும் நடராஜர், நடராஜர் போற்றி, நடராஜர் தலங்கள் பற்றிய விபரங்களும் உள்ளன. நன்றி: தினமலர், 28.3.21 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more

சிவஞான சித்தியார் சுபக்கம்

சிவஞான சித்தியார் சுபக்கம், பொ.முத்தையா பிள்ளை, அழகு பதிப்பகம், விலைரூ.350. அருணந்தி சிவாச்சாரியார், மறைஞான சம்பந்தருக்கு சிவஞான போதப் பொருளை ஓதி எடுத்துரைத்து வந்ததே சிவஞான சித்தியார். இதில் அடங்கிய பரபக்கம், சுபக்கம் எனும் இரு பகுதிகளில், சித்தாந்தப் பார்வையால் சைவக் கோட்பாடு உண்மைகளைப் புலப்படுத்தும் செய்யுள்களால் அமைந்ததே சுபக்கம். சுபக்கம் என்றால், ‘தன் பக்கம்’ என்பதாகப் பொருள் கூறப்படுகிறது. சிவஞான சித்தியார் சுபக்கத்திற்கு எழுதப்பட்ட பல உரைகள் இருப்பினும், பல ஆய்வு விளக்கங்களோடு அமைந்த இந்த உரை நுாலில், சிவஞான யோகியின் கருத்தின் […]

Read more

உலக சமயங்களும் சைவத்தின் மேன்மையும்

உலக சமயங்களும் சைவத்தின் மேன்மையும், மு. விவேகானந்தன், முன்றில் வெளியீடு, விலைரூ.400 உலகில் மதங்கள் தோன்றிய வரலாற்றை அறிந்து கொள்வதற்காகவும், சைவத்திற்கு உயர்வான சமயமில்லை என்பதை எடுத்துரைக்கவும் எழுதப்பட்டுள்ள நுால். சமயம் தோன்றிய வரலாறு, தொன்மை சமயங்கள், இந்திய வரலாற்றில் சமயங்கள், மக்கள் தொகை அடிப்படையில் சமயங்கள், சைவ சித்தாந்த சாத்திரங்கள், சமயங்கள் ஒப்பீடு, சைவத்தின் சிறப்பு என ஏழு இயல்களாகப் பகுத்து, அரிய தகவல்களை மிகுந்த முயற்சியோடு தேடி ஆராய்ந்து தொகுத்து எழுதியுள்ளார். தமிழகத்தில் சமயம் வளர்ந்த வரலாற்றையும், இந்திய அளவில் சமய […]

Read more

திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்புகள்

திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்புகள்: ஓர் ஆய்வு, அ.நிகமத்துல்லாஹ்,  அ.நிகமத்துல்லாஹ், பக்.368, விலை 350. நூலாசிரியர் தனது இரண்டாவது முனைவர் பட்ட ஆய்வுக்காகச் சமர்ப்பித்த ஆய்வேட்டின் நூல் வடிவம். திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்புகள் 1937 முதல் 2011 வரை 14 வெளிவந்துள்ளன. அவற்றில் 12 மொழிபெயர்ப்புகளை ஆய்வுக்காக நூலாசிரியர் தேர்ந்தெடுத்திருக்கிறார். திருக்குர்ஆன் திரும்பத் திரும்ப ஏன் தமிழில் மொழிபெயர்க்கப்படுகிறது? யாருக்காக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது? எந்தவிதமான நெறிமுறைகள், உத்திகளைப் பின்பற்றி மொழிபெயர்த்திருக்கிறார்கள்? மூலத்துக்கு மாற்றமின்றி இருத்தல், வடிவத்தைவிட கருத்துக்கு முன்னுரிமை தருதல் உள்ளிட்ட மொழிபெயர்ப்புக் கோட்பாடுகள் பின்பற்றப்பட்டுள்ளனவா? தமிழில் […]

Read more

குடந்தைப் பகுதி சித்தர்கள்

குடந்தைப் பகுதி சித்தர்கள்,  இரா.கண்ணன், இரா.கண்ணன் வெளியீடு, பக்.380, விலை ரூ.250. தென்னாட்டில் திருக்கோயில்கள் அதிகமிருப்பது போலவே சித்தர்கள் சமாதிநிலை அடைந்த அதிஷ்டானங்களும் அதிகம் உள்ளன. கோயில் நகரம் என அறியப்படும் கும்பகோணம் நகரிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அமைந்துள்ள முப்பத்தெட்டு சித்தர்களின் அதிஷ்டானங்கள் பற்றியும் அந்த சித்தர்கள் நிகழ்த்திய அற்புதச் செயல்கள் குறித்தும் இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. நாடறிந்த சித்தர்களான திருமூலர், பட்டினத்தார், பாடகச்சேரி சுவாமிகள், போதேந்திரர், ஸ்ரீதர ஐயாவாள் போன்றவர்களோடு நாம் அதிகம் அறிந்திராத மூட்டை சுவாமிகள், கத்தரிக்காய் சித்தர், புடலங்காய் […]

Read more

வியாசர் அறம்

வியாசர் அறம், நல்லி குப்புசாமி செட்டியார், பிரெய்ன் பேங்க், விலைரூ.200. வியாசர் மகாபாரதம் சார்ந்த, 60 கதைகளைத் தொகுத்து, புதிய பார்வையில் முன்வைக்கும் நுால். கதை முகப்பில் சுருக்கமான முன்னோட்டம் கொடுத்து, நீதி நெறியைத் விளக்குவதோடு, மையக் கருத்துக்குப் பொருத்தமான ஒரு குறளும் உரையுடன் தரப்பட்டுள்ளது. கதைகளில் வரும் சாபங்கள், விமோசனங்கள், சூழ்ச்சிகள், துரோகங்கள், தந்திரங்களுக்கிடையில் இழையோடும் அறக்கருத்துகள், எளிய நடையில் தரப்பட்டுள்ளன. பழங்கதைகளாயினும், அவற்றினுாடே காணப்படும் நிர்வாக மேலாண்மை, அரசியல் நெறிகள், அறச் சீற்றங்கள் இன்றும் பொருந்துவது நோக்கத்தக்கது. வாழ்வில் சிலருக்கே, மதியும், […]

Read more
1 10 11 12 13 14 128