ஆலய வழிபாடு

ஆலய வழிபாடு, தொகுப்பாசிரியர்: சத்யவதனா; சத்யா பதிப்பகம், பக். 198; விலை ரூ.150. ஆலயங்களின் சிறப்பம்சங்கள், விளக்கேற்றுதல், விரதம் இருத்தல், தானம் அளித்தல், வழிபாட்டு முறைகள், மந்திர மகிமை போன்றவை குறித்து விளக்கமாக எழுதப்பட்டிருக்கும் நூல். முதல் சிவபக்தன், விளக்கேற்றும் ரகசியம், சென்னையில் பஞ்சபூதக் கோயில்கள், கேதார கெளரி விரதம், புரட்டாசி விரதம், நவராத்திரி, மகாளய அமாவாசை என்பன உள்ளிட்ட 30 தலைப்புகளில் ஆன்மிக கட்டுரைகளும், 6 ஆன்மிக சிறுகதைகளும் இந்நூலில் அடங்கியுள்ளன. சிதம்பரம், காஞ்சிபுரம், திருவானைக்காவல், திருவண்ணாமலை, காளஹஸ்தி ஆகியவை பஞ்ச பூதத்தலங்களாக […]

Read more

மதப் புரட்சி செய்த மகான் ஸ்ரீ இராமானுஜர்

மதப் புரட்சி செய்த மகான் ஸ்ரீ இராமானுஜர், ம. கணபதி, மணிவாசகர் பதிப்பகம், விலைரூ.160. ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நுால். காஞ்சிபுரத்திற்கு குடிபெயர்ந்த பின், யாதவப் பிரகாசர் என்னும் அத்வைதியிடம் வேதம் கற்று வந்தார் ராமானுஜர். அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.கங்கைக் கரைக்குத் தீர்த்த யாத்திரை சென்ற போது, நர்மதை ஆற்றங்கரையில் தன்னைக் கொல்லத் திட்டமிட்டிருப்பதை உணர்ந்தார் ராமானுஜர். உடனே தப்பி, மீண்டும் காஞ்சிபுரம் வந்தார். வழியில் வேட்டுவன் வடிவில் இறைவன் காத்த நிகழ்ச்சியை நாடகப் பாங்கில் படைத்து உள்ளார். திருக்கோட்டியூர் நம்பிகளிடம் […]

Read more

ஒருங்கிணைந்த வடார்க்காடு மாவட்ட ஊர்ப் பெயராய்வு

ஒருங்கிணைந்த வடார்க்காடு மாவட்ட ஊர்ப் பெயராய்வு,  அரங்க. இராமலிங்கம், சிவகுரு பதிப்பகம், பக்: 336;  விலை ரூ.250. தொண்டை நாட்டின் பெருமைக்குரிய மண்ணில் வள்ளிமலையில் பிறந்து திருவண்ணாமலையில் முத்தி பெற்றவர் திருப்புகழ் அருளிய அருணகிரி நாதர். அருள்மொழியரசு திருமுருக கிருபானந்த வாரியார், அடைய பலம் கிராமத்தில் பிறந்த அப்பய தீட்சிதர் போன்ற பல அருளாளர்கள், சமயச்சான்றோர் தோன்றிய மண் வடார்க்காடு. இம் மாவட்டத்தில் 4,059 ஊர்கள் இருந்தன. இவற்றுக்கான பெயர்களைப் பகுத்துக் காணுங்கால் அவை காரண காரியங்களால் உருவாக்கப்பட்டிருப்பது தெளிவாகிறது. ஆர் என்னும் ஆத்தி […]

Read more

திருவருட் பயன் விளக்க உரை

திருவருட் பயன் விளக்க உரை, ஆ.ஆனந்தராசன், நர்மதா பதிப்பகம், விலைரூ.250.   சைவ சித்தாந்த ஆசாரிய பரம்பரையில் வந்த உமாபதி சிவம், 600 ஆண்டுகளுக்கு முன் இயற்றிய, ‘சிவப்பிரகாசம்’ நுாலை விளக்கும் வகையில், அவரே படைத்த விளக்கவுரை நுால். சிவப்பிரகாசம் நுாலில் கூறப்பட்டுள்ள, பொங்கொளி ஞான வாய்மை, அதன் பயனை இணைத்துப் பயில்வதால் கிட்டுவதே திருவருட்பயன் என்பதாக முன்வைத்து பல தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது. திருவருளின் இயல்பும், திருவருளால் உயிர்கள் அடையும் பயனும், உயிருக்கான விளக்கமும் எளிய நடையில் தரப்பட்டுள்ளது. ஞானத்தின் ஒளி நிலையும் அஞ்ஞானத்தின் […]

Read more

சைவமும் வைணவமும்

சைவமும் வைணவமும், ஸ்ரீவி தி.மைதிலி, ஆனந்த நிலையம், விலைரூ.150. சைவமும், வைணவமும் இறைவன் ஒன்றே என்ற கோட்பாட்டைக் கூறுகின்றன. இந்நுாலில், இறைவனுக்கு மலர் வழிபாடு செய்தலே பூஜை என்று கூறுகிறது. வைணவ ஆகமங்களாக வைகானசம், பாஞ்சராத்திரம் என்ற வழிபாட்டு நெறிமுறைகள் உள்ளன. பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என்ற ஐந்து நிலைகளில் இறைவன் தன்னை வெளிப்படுத்துகிறான். இறைவனின் 10 அவதாரங்களை விளக்கியும், அவதாரக் கோட்பாடுகள் மனித இனம் தன் நிலை உணர்ந்து சிறந்த லட்சியங்களுடன் வாழ்வதற்கு உறுதுணையாக உள்ளன என்றும் விளக்குகிறது இந்த […]

Read more

கம்பராமாயணத்தில் அரிய அறிவியல் தகவல்கள்!

கம்பராமாயணத்தில் அரிய அறிவியல் தகவல்கள்!, முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியம், மணிமேகலை பிரசுரம், விலைரூ.80 ‘புதியன கண்ட போழ்து விடுவரோபுதுமை பார்ப்பார்’ என்ற கம்பன் கருத்தை ஆமோதிக்கும் வகையில் பல்வேறு அரிய அறிவியல் தகவல்களைத் திரட்டித் தந்துள்ளார். ஆற்றல் அழிவின்மை விதியை உணர்த்தும் முதல் பாடல் துவங்கி, யுத்த காண்டத்தில், கம்பன் கணக்காக படைகளின் பலத்தைக் காட்டுவது ஈறாக, 19 கட்டுரைகளில் அறிவியல் நுட்பம் அணிவகுத்து உள்ளது. சோலார் கருவிகளின் பயன்பாட்டை, வருணனை வழி வேண்டுபடலத்தில் ஒப்பிடும் திறம் புதுமை. ‘விசை இலவாக தள்ளி வீழ்ந்தன’ என்னும் […]

Read more

கந்தனே உனை மறவேன்

கந்தனே உனை மறவேன், திருப்புகழ் மதிவண்ணன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.220. ‘சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை! சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை!’ என்ற பழமொழிக்கு இணங்க, முப்பத்து முக்கோடி தேவர்களும் வணங்கும் தேவ சேனாதிபதி வரலாற்றை விளக்கும் நுால். பக்திரசம் சொட்ட எழுதியுள்ளார் மதிவண்ணன். கச்சியப்ப சிவாச்சாரியார், அருணகிரிநாதர், ராமலிங்க அடிகள், நக்கீரர், தாயுமானவர், வள்ளுவர் போன்றவர்களின் படைப்புகளில் இருந்து மேற்கோள் காட்டி, சரளமான நடையில் தற்கால பாடல் வரிகளையும் புகுத்தி எழுதப்பட்டுள்ளது. கந்தனின் பிறப்பு, வளர்ப்பு, திருவிளையாடல்கள், வேல் […]

Read more

இலக்கியம் வளர்த்த இஸ்லாமியத் தமிழ்ச் சான்றோர்

இலக்கியம் வளர்த்த இஸ்லாமியத் தமிழ்ச் சான்றோர், எஸ். சேகு ஜமாலுதீன், வானதி பதிப்பகம், பக்.160, விலை ரூ.175. இஸ்லாமிய இலக்கியப் படைப்பாளிகளில் 16 பேரை தேர்வு செய்து, அவர்களின் தலைசிறந்த தமிழ்ப் படைப்புகள் எவை? அவர்களின் அரிய கருத்துகள் எவை என்பதை சுவாரசியமாக விவரிக்கிறது இந்த நூல். நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றைத் தமிழில் “சீறாப்புராணம்’ என்ற காப்பியமாகப் படைத்த உமறுப்புலவர், ராமாயண ஆய்வு நூல்களைப் படைத்தளித்த நீதிபதி மு.மு. இஸ்மாயில், “அக்னிச் சிறகுகள்’, “எழுச்சி தீபங்கள்’ உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்த […]

Read more

ஓரெழுத்தில் ஆழ்வார்கள்

ஓரெழுத்தில் ஆழ்வார்கள், ப.ஜெயக்குமார், உமாதேவி பதிப்பகம், பக்.160, விலை ரூ.300. விதியை வென்று, முக்தியைஅடைய வழிகாட்டும் பன்னிரு ஆழ்வார்களின் பக்தி வரலாற்றை “ஓரெழுத்தில் ஆழ்வார்கள்’ என்ற நூல் வாயிலாக புதுக்காவியமாக செதுக்கி சிறப்பித்துள்ளார் நூலாசிரியர். சம்பவங்கள் விடுபடாமல், சமய நெறி குறைபடாமல், மொழியழகுடன் பிழையின்றி வைணவ வளம் காக்க ஆசிரியர் முயன்றுள்ளது மெச்சத் தகுந்தது. பன்னிருவர் வாழ்க்கையை ஓவியமாய், காவியமாய் பாடியுள்ளார். ஒவ்வோர் ஆழ்வாரின் பிறந்த மாதம், நட்சத்திரம், பிறந்த ஊர் – பெருமாளின் திருநாமம், திருமகளின் திருநாமம், தற்கால ஊரின் பெயர், தொடர்புக்கான […]

Read more

திருமுருகாற்றுப்படை விளக்கம்

திருமுருகாற்றுப்படை விளக்கம்,  கி.வா.ஜகந்நாதன், பூங்குன்றன் பதிப்பகம்,  பக்.384, விலை ரூ.300. திருமுருக கிருபானந்தவாரியார் நடத்திய ” திருப்புகழ் அமிர்தம்’ என்ற இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். முருகனை இன்ன வழியில் சென்று, இன்ன இடத்தில் கண்டால் முருகனுடைய தரிசனம் கிட்டும், அவன் திருவருளையும் பெறலாம் என்று சொல்லும் வகையில் அமைந்தது திருமுருகாற்றுப்படை.<br>திருமுருகாற்றுப்படைக்கு பிற்காலத்தில் பத்து வெண்பாக்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றுக்கான பொருளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது. முருகனின் அறுபடை வீடுகள் குறித்த, திருமுருகாற்றுப்படையின் ஒவ்வொரு வரியையும் எடுத்துக் கொண்டு, அதற்கான பொருளைக் கூறும் […]

Read more
1 8 9 10 11 12 128