சைவ சித்தாந்தம்: அடிப்படைகள்

சைவ சித்தாந்தம்: அடிப்படைகள், முனைவர் நல்லூர் சா.சரவணன், சைவ சித்தாந்தப் பெருமன்றம், விலைரூ.50. சைவ சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கைகள், தத்துவத்தை எளிய நடையில், இனிய தமிழில் வழங்கியுள்ள நுால். தகவல் களஞ்சியமாக விளங்குகிறது. ‘நமசிவாய’ என்ற ஐந்தெழுத்தின் விளக்கம், அதன் பயனை எளிமையாக சொல்கிறது. பரம்பொருள் உயிர்களை ஈடேற்றும் கருவியாக இது உள்ளது. உயிர்களை ஆணவத்திலிருந்து விடுவிக்க தொடர்ந்து இயங்கும் கூத்தப் பெருமானை பற்றி விளக்குகிறது. அனைவரும் படிக்க வேண்டிய நுால். – பேராசிரியர் இரா.நாராயணன் நன்றி: தினமலர், 31/10/21 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

நாம் வணங்கும் சித்தர்கள்

நாம் வணங்கும் சித்தர்கள், த.உத்திரகுமாரன், பூம்புகார் பதிப்பகம், விலைரூ.575. பரந்த மனப்பான்மையுடன் வாழ்ந்த சித்தர்களின் ஆன்மிகக் கருத்துகளை தெளிவாக, எளிய தமிழ் நடையில் விளக்கும் நுால். பெயர் மட்டுமே தெரிந்த சித்தர்களின் வரலாறும், அவர் தம் கொள்கைகளையும் தெரிந்து கொள்ளலாம். படிப்போருக்கு இன்பம் பயக்கும். ஜாதிப் பாகுபாடு கூடாது என்பதை சிவவாக்கியர், அவ்வையார், பாரதியார், குதம்பைச்சித்தர் பாடல்கள் மூலம் விளக்குகிறார்; அஷ்டமா சித்திகள் எட்டையும் விளக்கியுள்ளார்; அஷ்டாங்க யோகங்களையும் விளக்கி, தத்துவங்கள் 96 என்பதை பட்டியலிட்டுள்ளார். திருக்குறளுடன் ஒப்பிட்டுள்ளார். அபிராமி பட்டர், ராமலிங்க அடிகளார் […]

Read more

நாளாம் நாளாம் திருநாளாம்

நாளாம் நாளாம் திருநாளாம், வரலொட்டி ரெங்கசாமி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.280. அகங்காரத்தில் ஆரம்பிப்பதாக நினைத்த எழுத்தாளருக்கு அள்ளித்தரும் அன்னையின் வரம் அந்த நிமிடமே கிடைத்தபோது மனம் மைசூர்ப்பாகாய் கரைந்துவிட்டது. துணையாக கண்ணீர் சேர்ந்து உப்புச்சீடையாக மாறிவிட்டது. சில நேரங்களில் யாரும் தான் கேட்கமாட்டார்களே என நிஜமான, ‘மைண்ட் வாய்சில்’ மனசுக்குள்ளேயே பேசிய நிகழ்வு நடந்திருக்கும். உடனடியாக நிறைவேறும் போது அதை அனுபவிக்க முடியாமல் மனம் தடுமாறும். இங்கும் அப்படித்தான் அன்னையின் அன்பை நினைந்து மனம் கரைந்து உப்புச்சுவடுகளின் வழியே அப்பனை […]

Read more

அன்பின் உரு அருளின் தரு வள்ளலார்

அன்பின் உரு அருளின் தரு வள்ளலார், பேராசிரியர் புதுவைக்கிருஷ்ணா, அருள்மொழிப் பிரசுரம், விலைரூ.250. வள்ளலாரின் வாழ்க்கையை காட்சிப்படுத்தும் நுால். வாசிப்போரை ஊக்கப்படுத்தும் வகையில் கட்டியங்காரன் நாடகத்தை நடத்திச் செல்லும் பாங்கு அருமை. வள்ளலார் ஜோதியில் கலந்தது வரை வரிசையாகத் தெரிவிக்கிறது. உலகில் 51- ஆண்டுகள் வாழ்ந்த மகானின் வரலாற்றை, 51- காட்சிகளில், 51- பாத்திரங்களோடு மிக நேர்த்தியான காட்சிகளாக அமைந்துள்ளன. முதல் அங்கத்தில் சிதம்பரத்தில் ரகசியக் காட்சி கண்டு அருள் பெற்றதும், வள்ளலாரின் முதல் சொற்பொழிவும் காட்சிப் படுத்தப்பட்டு உள்ளது. சன்மார்க்க சங்கம் நிறுவியதன் […]

Read more

பிரமிடுகள் பிரமிப்புகள்

பிரமிடுகள் பிரமிப்புகள், ஸ்ரீவி தி.மைதிலி, ஆனந்த நிலையம், விலைரூ.110. பிரமிடு வடிவ அமைப்பின் சிறப்புகள் பற்றி எழுதப்பட்டுள்ள நுால். கோபுர கலசம் போல், பிரமிடுஅமைப்பை வீட்டில் உபயோகித்து வந்தால், இயற்கை சீற்றத்தை தடுக்கலாம். இயற்கை சீற்றத்தால் ஏற்படும் விபத்துகளில் இருந்து காக்க பிரமிடு உதவும் என கூறப்பட்டுள்ளது. பிரமிடு வடிவமைத்து, அதன் உள்ளே அமர்ந்து தியானம் செய்வதால் மன அமைதி கிடைக்கும்; முடிவு எடுக்கும் திறனும் அதிகரிக்கும் என்றெல்லாம் நுாலில் விளக்குகிறார். – எஸ்.குரு. நன்றி: தினமலர், 22/8/21. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b3/ […]

Read more

திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்,  பெரும்பற்றப்புலியூர் நம்பி, உரையாசிரியர்: மு. அருணகிரி, அருணா பப்ளிகேஷன்ஸ்,  பக்.808, விலை ரூ.990.  “பாண்டிப் பதியே பழம்பதி’ என்று கூறுவர். பாண்டிய நாட்டின் தலைநகராம் மதுரையில் திருவாதவூரருக்காகவும், பிற உயிரினங்களுக்காகவும் அறுபத்து நான்கு திருவிளையாடல்களை நிகழ்த்திக்காட்டினார் சொக்கநாதப் பெருமான். இறைவனின் திருவிளையாடல்களை ஓரிரு புலவர்கள் அவ்வப்போது பாடியிருந்தாலும் அவற்றை நிரல்படத் தொகுத்தளித்தவர் பெரும்பற்றப்புலியூர் நம்பியே. உ.வே.சா.இந்நூலை இருமுறை பதிப்பித்துள்ளார். அப்பதிப்புகளில் அவர் பொழிப்புரை தரவில்லையாயினும் அரிய செய்திகளைக் குறிப்புரையாகத் தந்துள்ளார். அக்குறிப்புரைகளை ஆதாரமாகக் கொண்டு இந்நூலாசிரியர் பொழிப்புரை வழங்கியுள்ளார். இந்நூல் மதுரையைப் […]

Read more

மதப் புரட்சி செய்த மகான் ஸ்ரீ இராமானுஜர்

மதப் புரட்சி செய்த மகான் ஸ்ரீ இராமானுஜர், ம. கணபதி, மணிவாசகர் பதிப்பகம், விலைரூ.160. ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நுால். காஞ்சிபுரத்திற்கு குடிபெயர்ந்த பின், யாதவப் பிரகாசர் என்னும் அத்வைதியிடம் வேதம் கற்று வந்தார் ராமானுஜர். அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.கங்கைக் கரைக்குத் தீர்த்த யாத்திரை சென்ற போது, நர்மதை ஆற்றங்கரையில் தன்னைக் கொல்லத் திட்டமிட்டிருப்பதை உணர்ந்தார் ராமானுஜர். உடனே தப்பி, மீண்டும் காஞ்சிபுரம் வந்தார். வழியில் வேட்டுவன் வடிவில் இறைவன் காத்த நிகழ்ச்சியை நாடகப் பாங்கில் படைத்து உள்ளார். திருக்கோட்டியூர் நம்பிகளிடம் […]

Read more

அபரோக்ஷ அனுபூதி

அபரோக்ஷ அனுபூதி, க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலைரூ.270. தலைப்பைப் பார்த்ததும், ‘சமஸ்கிருத வார்த்தையாச்சே… நமக்கு எங்கே புரியப் போகுது…’ என நினைத்து விட வேண்டாம். அத்தனை விளக்கங்களும் தமிழில் உள்ளன. இனி புத்தகத்தில் எழுதியுள்ளதைப் பற்றி… பானையைப் பார்க்கிறோம்; பானை என்பதாகவே நம் கண்ணுக்குப் புலப்படுகிறது. தங்கத்திலான நகையைப் பார்க்கிறோம்; நகை தான் நம் கண்ணுக்குப் புலப்படுகிறது. வானத்தைப் பார்க்கிறோம்; நீல நிறமாகத் தெரிகிறது. உண்மை என்ன… பானையைச் செய்ய பயன்படுத்தப்பட்ட களிமண் தான் பானையில் உள்ளது; நகையைச் செய்ய பயன்படும் தங்கம் தான், […]

Read more

ஸ்ரீமந் நாராயணீயம் பாகம் – 1

ஸ்ரீமந் நாராயணீயம் பாகம் – 1, ஆசிரியர் : பதிப்பக வெளியீடு, வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.290. சரணாகதி என்பதே ஸ்ரீமந் நாராயணீயத்தின் சாராம்சம். குருவை பிடித்த வாதநோயை தனக்கு மாற்றி தன்னை வருத்திக் கொண்ட நாராயண பட்டத்திரி அந்த நோயை குணமாக்குமாறு குருவாயூரப்பனை வேண்டுகிறார். 1,034 ஸ்லோகங்கள் இயற்றி பாடப் பாட குருவாயூரப்பன் சரியென்று தலையாட்டியதாக வரலாறு. குழந்தைகளை கண்ணே, மணியே, என் செல்லமே… என்று கொஞ்சி கொஞ்சி சீராட்டி பாராட்டுவதைப் போலிருக்கிறது ஸ்ரீமந் நாராயணீயம். பெருமாளின் ஒவ்வொரு […]

Read more

சித்தர்கள் சொன்ன மூலிகை மருத்துவம்

சித்தர்கள் சொன்ன மூலிகை மருத்துவம், சம்பத் குமார், திருவரசு புத்தக நிலையம், விலை 450ரூ. மனிதர்களைத் தாக்கும் 4,448 வித நோய்களுக்கும் இயற்கை அளித்த கொடையான மூலிகைகள் மூலம் சித்தர்கள் தீர்வு கண்டனர் என்பதை இந்த நூல் விளக்குகிறது. மக்கள் உயிர் வாழப் பயன்படுத்தக்கூடிய அத்தனைப் பொருள்களிலும் புதைந்துள்ள மருத்துவக் குணங்கள் எவை என்பதையும் இந்த நூல் தருகிறது. மலர்கள், காய்கள், பழங்கள், எண்ணெய் ஆகியவற்றின் மருத்துவ குணங்கள், ஒவ்வொரு நோய்க்கும் மூலிகை மருத்துவம் என்ன? அவற்றை எவ்வாறு எடுத்துக்கொள்வத போன்ற விவரங்களும் இந்த […]

Read more
1 6 7 8 9 10 128