மகா பெரியவா

மகா பெரியவா, வீயெஸ்வி, விகடன் பிரசுரம், விலை 350ரூ. காஞ்சி மடாதிபதியாக இருந்தவரும், பக்தர்களால் மகா பெரியவா என்று அழைக்கப்பட்டவருமான சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகளின் விரிவான வாழ்க்கை வரலாறு இந்த நூலில் தரப்பட்டு இருக்கிறது. அவர் நிகழ்த்திய அற்புதங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், அவர் பிறந்தது முதல் முக்தி அடைந்தது வரை நடைபெற்ற நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. வாழ்க்கைக் குறிப்பை விவரித்து வரும் அதே நேரம், இடையிடையே காஞ்சிப் பெரியவர் வழங்கிய உரைகளின் சுருக்கமும் தரப்பட்டு இருக்கிறது.  காஞ்சிப் பெரியவருக்கும், ஆங்கிலேயரான பால்பிரண்டன் […]

Read more

இறையுரையிசை

இறையுரையிசை (பகவத் கீதை), ஹரிஹரன், சோலைப் பதிப்பகம், விலைரூ.100. ஹிந்து மதத்தின் உயரிய புனித நுால் பகவத் கீதை. இதன் பெருமையைச் சொல்லாத மகான்களே இல்லை. பகவத் கீதை என்ற சொல்லுக்கு மாற்று வடிவமே, ‘இறையுரையிசை’ என அமைத்துள்ளார் நுாலாசிரியர். 18 அத்தியாயங்களில், 701 சிந்தியல் வெண்பாக்களால் அமைந்துள்ளது. அர்ச்சுனன் மகாபாரதத்தில் குருஷேத்திரப்போர் துவங்கும் முன், எதிரணியைப் பார்வையிட்டான். அவ்விடத்தில் உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் இருப்பதைக் கண்டு போரிட மறுத்து கிருஷ்ணரிடம் உரையாடினான். அர்ச்சுனனின் தேரோட்டியான கிருஷ்ணர் தர்மத்திற்காகப் போரிடுகையில் உறவு முறைகளை, நட்பை, […]

Read more

ஸ்ரீ வைஷ்ணவ ஸ்தோத்திரமாலை

ஸ்ரீ வைஷ்ணவ ஸ்தோத்திரமாலை, மணிமேகலை சிதம்பரம், ஸ்ரீ ஆனந்த நிலையம், விலைரூ.200. இறைவனை கோவில்களில் சென்று வழிபடுவது போன்று, இல்லங்களிலும் அவனது ஸ்தோத்திரங்களைக் கூறிப் பலரும் வழிபடுவர். இறைவனை விட அவன் நாமம் பெரியது என்று வைணவம் கூறுகிறது. இறைவனை வழிபட 55 விதமான ஸ்தோத்திரங்கள் உள்ளன. ஸ்ரீலஷ்மி நரசிம்ம ஸ்தோத்திரம், பஜ கோவிந்தம், ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம், ஸ்ரீ விஷ்ணு ஸகஸ்ரநாம ஸ்தோத்திரம், ஸ்ரீ ஸுதர்ச நாஷ்டகம், ஸ்ரீ கிருஷ்ணாஷ்டகம், ஸ்ரீ லஷ்மி ஸ்தோத்திரம், ஸ்ரீஸ்துதி, ஸ்ரீ ராம அஷ்டோத்திர சத நாமாவளி, […]

Read more

கிருஷ்ண காவியம்

கிருஷ்ண காவியம், எத்திராஜன் ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், விலைரூ.250. கிருஷ்ணரின் அவதார காலம் முதல், பாரதப் போர் முடிந்து தருமத்தை நிலைநாட்டிய வரை விந்தைகளை தரவு கொச்சகக் கலிப்பா வடிவில் இனிய சந்த பாடல்கள் கொண்ட நுால். எதுகை, மோனைகள், உவமைகள் பொதிந்த சந்தங்கள் சிறப்பாக அமைந்துள்ளன. துவக்கத்தில் வட மதுரையின் சிறப்புரைக்கும் பாடல்களில், கண்ணனின் இளம் பருவப் பெருமைகள், சிறையில் தேவகியின் துன்பம், பூதகியின் சதி, ஆயர்பாடியில் வளர்ப்பு, கண்ணன் விளையாட்டு, கம்சனின் மரணம், குருகுல வாசம், இளமை துள்ளும் கோபியர் களியாட்டங்கள், […]

Read more

ஸ்ரீமத் பாகவதம்

ஸ்ரீமத் பாகவதம்,  டி.வி.ராதாகிருஷ்ணன், குவிகம் பதிப்பகம்,  பக்.214,  விலை ரூ.180. ஹைந்தவ பக்தி இலக்கியத்தில் மகாபுராணமான ஸ்ரீமத் பாகவதம் சிறப்பான இடத்தை வகிக்கிறது. பகவத்கீதைக்கு அடுத்தபடியாக அதிக உரைகள் இயற்றப்பட்டதும் பாகவதத்துக்குத்தான். சைதன்யர், வல்லபாசார்யரின் பக்தி மார்க்கத்தின் முக்கிய தூண்களில் ஸ்ரீமத் பாகவதமும் ஒன்றாகும். புராண இலக்கியத்தின் கீழ் அமைந்துள்ள இந்த நூல், பக்தி சம்பிரதாய பரவலுக்குப் பெரிதும் அடிப்படையாக அமைந்தது. இதனை இயற்றியவர் வியாசர் என்பது மரபு. நமது புராண இலக்கியங்களின் வடிவத்தையொட்டியே, கதை, கதைக்குள் கதை, கிளைக் கதை என விரிந்து […]

Read more

ஸ்ரீமத் பகவத் கீதை

ஸ்ரீமத் பகவத் கீதை, பி.எஸ்.ஆச்சார்யா, நர்மதா பதிப்பகம், விலை 150ரூ. பகவத் கீதை பிறந்த கதை, அதன் தனிச்சிறப்பு, 18 அத்தியாயங்களில் உள்ள அனைத்து வரிகளுக்கும் எளிய தமிழில் விளக்கம் ஆகியவை ராமகிருஷ்ண பரமஹம்சரின் மேற்கோள்களுடன் தரப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி,28/2/21 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000006395_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

வியாசர் இயற்றிய ஸ்ரீமத் பாகவதம்

வியாசர் இயற்றிய ஸ்ரீமத் பாகவதம், அனந்தாச்சாரி,  அருணா பப்ளிகேஷன்ஸ், விலை – ரூ.230 எளிய தமிழ்நடையில் பாகவதம் மகாபாரதத்தை இயற்றியவர், வேதங்களைத் தொகுத்து அளித்தவர் இந்து மதத்தின் 18 புராணங்களில் 17ஐ இயற்றியவர் வேதவியாசர். அவற்றில் மிகப் புனிதமானதாகக் கருதப்படுவதும் இன்றளவும் ஆன்மிகச் சான்றோர்களாலும் சொற்பொழிவாளர்களாலும் பெரிதும் மேற்கோள் காட்டப்படுவதுமான புராணம் ஸ்ரீமத் பாகவதம். வியாசர் வடமொழியில் இயற்றிய பாகவத புராணத்தை எளிய தமிழில் அனைத்து வயதினரும் புரிந்துகொள்ளும் வகையில் கதைகளாகக் கொடுத்துள்ள நூல் இது. புராணத்தின் பத்து ஸ்கந்தங்களின் (பகுதிகள்) சாராம்சமும் 119 […]

Read more

வாழ்வை வளமாக்கும் திருக்கோயில் வழிபாடு

வாழ்வை வளமாக்கும் திருக்கோயில் வழிபாடு, ஆர்.ஹேமா பாஸ்கர் ராஜு, ஆர்.ஹேமா பாஸ்கர் ராஜு வெளியீடு, விலை 200ரூ. அடிக்கடி ஆலயம் செல்பவர்களுக்கு அதிகமாக நோய்கள் வருவதில்லை என்று கூறி இருக்கும் ஆசிரியர், அதற்கான அறிவியல் விளக்கத்தையும் தந்து இருக்கிறார். கோயில் கோபுர வகைகள், கருவறை, கொடிமரம், பலிபீடம் போன்ற அனைத்து விவரங்களையும், வழிபாட்டு முறைகள், அபிஷேகம், நைவேத்தியம் போன்றவை பற்றிய தகவல்களும், நந்தியை வழிபடுவதால் கிடைக்கும் சிறப்பு, 18 வகை பிரதோஷங்களின் பயன்கள், ருத்திராட்சம், சாளக்கிராமம், தர்பைப் புல் போன்றவற்றின் சிறப்புகளும் எளிய நடையில் […]

Read more

பாகவதப் பாரதம்

பாகவதப் பாரதம் (ஆராய்ச்சிப் பதிப்பு), சிவ. விவேகானந்தன், காவ்யா,  பக்.1185, விலை  ரூ.1200. பாரதத்தில் தோன்றி உலகம் முழுதும் பரவி அழியாப் புகழ் கொண்ட இரு இதிகாசங்கள் இராமாயணமும் மகாபாரதமும்.வால்மீகியின் இராமாயணத்தையொட்டி, கம்பர் உள்ளிட்ட சிலர் இராமாயணத்தை எழுதினர்.அவ்வாறே வியாசரின் மகாபாரதத்தையொட்டிப் பலரும் பாரதம் படைத்தனர். இந்த “பாகவதப் பாரதம்’, பாகவதம், பாரதம் ஆகிய இரு இதிகாசங்களையும் பகுத்து ஆராய்ந்து, அவற்றின் சிறப்புகளைத் தேர்ந்தெடுத்து பாகவதத்தின் கூறுகளை பாரதத்தில் பொருத்தி ஏறத்தாழ 26,000 அடிகளைக் கொண்டதாக அம்மானை வடிவில் புதிய பாரதமாகப் படைக்கப்பட்டுள்ளது. இது […]

Read more

சித்ரசூத்ரம்

சித்ரசூத்ரம், தமிழில்: அரவக்கோன், அனன்யா வெளியீடு, விலை: ரூ.140. இந்தியாவின் ஓவிய மரபுகளுக்குப் பின்னால் உள்ள கோட்பாடுகள், இலக்கணங்களைத் தெரிந்துகொள்ள உதவும் பண்டைய ஓவியக் கலைக்களஞ்சியம் ‘சித்ரசூத்ரம்’. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட விஷ்ணுதர்மோத்தர புராணத்தின் ஒரு பகுதியாக இருந்த இந்த நூலை 1924-ம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகம் முழுக்கப் பிரபலப்படுத்தியவர் கலை வரலாற்றறிஞர் ஸ்டெல்லா கிராம்ரிஷ். ஆங்கிலத்திலிருந்து மாதிரி ஓவியங்களுடன் தமிழில் இந்த நூலை அரவக்கோன் மொழிபெயர்த்திருக்கிறார். இந்தியக் கலைமரபின் வீச்சை தமிழில் அறிவதற்கு உதவிகரமான நூல் இது. நன்றி: தமிழ் இந்து,.6/3/21 இந்தப் […]

Read more
1 4 5 6 7 8 128