லவகுசா

லவகுசா, தி.செல்லப்பா, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.150 விசேஷம் இது வித்தியாசம் என்ற பெயரில் தமிழக கோயில்களின் அதிசயத்தக்க வரலாறு, செல்லும் வழி குறித்து எழுதிய செல்லப்பாவின் இரண்டாவது புத்தகம். கர்ப்பிணியாய் கானகம் சென்ற சீதாவின் வயிற்றில் பிறந்த கன்றுகுட்டிகளம் லவன், குசன் பற்றிய அழகான தொகுப்பு. இக்கதையில் மணமுடிக்கும் போது சீதாவின் வயது, கானகம் சென்றபோது வயது, மகப்பேறின் போதுள்ள வயதை குறிப்பிடுவது அரிய தகவல்.பொறுமையின் சிகரமான சீதா ஏன் பொங்கி எழுந்தாள்… வானளாவ புகழ்ந்து ராமகதைகள் சொல்லிய அவளது […]

Read more

பறையும் பாவையும்

பறையும் பாவையும், க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலைரூ.110. புத்தகத்தில் பக்கங்களைத் திருப்பினால், பாடல்களும், அதன் அர்த்தமும் வரிசையாக உள்ளன. ‘திருப்பாவைக்கு நிறைய புத்தகங்கள் அர்த்தத்துடன் வந்துவிட்டதே…’ என்ற எண்ணம் முதலில் எழத் தான் செய்கிறது. ‘இவ்வளவு தானா… விசேஷம் ஒன்றும் இல்லையே…’ என்ற எண்ணத்துடன், 43ம் பக்கத்தைத் திருப்பும்போது தான், ஆசிரியரின் சிறப்பம்சம் துவங்குகிறது. பாவை என்றால் என்ன, பாவை நோன்பு எங்கு தோன்றியது, ஆண்டாள் யார், பறைக்கு ஆண்டாள் ஏன் முக்கியத்துவம் கொடுத்தாள், கண்ணன் காலத்திலேயே இந்த நோன்பு இருந்ததற்கான ஆதாரம் என […]

Read more

தமிழரின் சமயங்கள்

தமிழரின் சமயங்கள், அருணன், விகடன் பிரசுரம், விலைரூ.220 தமிழரின் மதங்கள் சாம்ராஜ்ஜிய காலங்களில் எப்படி இருந்தது என்பதை விவரிக்கும் நுால். நாயக்கர் காலம், ஆங்கிலேயர் ஆட்சி காலம், நவீன காலம் என பகுப்பாய்வு செய்து, தமிழரின் சமயச் சார்பு பற்றி ஆய்வு நோக்கில் எழுதப்பட்டுள்ள நுால். கிறிஸ்துவ மதம் தமிழர்களிடம் பரப்பப்பட்ட விதம், இஸ்லாமியர் மதம் பரப்ப முனைப்பு காட்டாததற்கான காரணம், நாட்டார் தெய்வ வழிபாடு பற்றிய விபரங்களும் அலசி ஆராயப்பட்டுள்ளன. ஹிந்து மதத்தில் உள்ள பெரும் பிரிவுகள், அவற்றில் உள்ள வேறுபாடுகள் பற்றி […]

Read more

இந்திர விழா

இந்திர விழா, தே.ஞானசேகரன், காவ்யா, விலைரூ.130. இந்திரனுக்கு எடுக்கும் விழா பற்றி விவரிக்கும் நுால். இந்திரன் மழைக் கடவுள் என்றும், வேளாண் தொழிலுக்குத் தலைவன் என்றும் இலக்கிய ஆதாரங்களோடு நிறுவுகிறார். ஐந்து கட்டுரைகள் அழகு செய்கின்றன. இந்திர விழா என்பது பழங்காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் எடுக்கப்பட்டது. இது பற்றிய செய்திகள் சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் இடம் பெற்றுள்ளன. மழை வளம் பெருகவும், மன்னனின் ஆட்சி சிறக்கவும் விழா எடுப்பதை சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. தற்போது கோவை பேரூரில் நடைபெறும் இந்திர விழா எனும் நாற்று நடவுத் திருவிழாவையும் […]

Read more

பாரதி பாடிய மணக்குள விநாயகர்

பாரதி பாடிய மணக்குள விநாயகர், சொ. சேதுபதி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக்.240, விலை ரூ.225. மகாகவி பாரதியார் எல்லாத் தெய்வங்களையும் பாடியிருந்தாலும், அவர் முழுமுதல் பரம்பொருள் நிலையில் வைத்துப் போற்றியது விநாயகக் கடவுளையே என்பதை அவர் பாடிய “விநாயகர் நான்மணி மாலை’ நூல் தெற்றென உணர்த்துகிறது. பாரதியாரின் புகழ்பெற்ற சொற்றொடர்களான “எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன்’, “தவமே புரியும் வகையறியேன்’, “அச்சமில்லை அமுங்குதலில்லை’ “நமக்குத் தொழில் கவிதை’, “பேசாப் பொருளை பேசநான் துணிந்தேன்’, “அன்பிற் சிறந்த தவமில்லை’, “கவலைப் படுதலே கருநரகு’ போன்றவை […]

Read more

அன்னதானம்

அன்னதானம், இந்தியப் பண்பாட்டின் ஆணிவேர், இரா.கண்ணன், வெளியீடு: இரா.கண்ணன், பக்.644; விலை ரூ.1000. “தானத்தில் சிறந்தது அன்னதானம்’ என்பது முதுமொழி. அன்னமே உலகில் மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. உயிர்களின் பலமும் ஒளியும் எப்போதும் அன்னத்தாலேயே வளர்ச்சி பெறுகின்றன. அன்னம் தண்ணீரால் உண்டாகிறது. இத்தண்ணீரால் உண்டான அன்னம் இல்லையென்றால் உலகில் எதுவுமே இல்லை. அதனால்தான் இவ்விரண்டின் பெருமைகளையும் பீஷ்மர் (மகாபாரதத்தில்) எடுத்துரைக்கிறார். “பசியுடன் இருப்பவர்க்கு அன்னம் பாலித்தால் இறைவன் இருமடங்கு அருளை வழங்குகின்றான்’ என்கிறது நமது வேதம். “பசிப்பிணியால் வாடுகின்ற அனைவரும் அன்னதானம் ஏற்பதற்குரிய தகுதி […]

Read more

வரங்களை அள்ளித் தரும் வல்லநாடு சித்தர்

வரங்களை அள்ளித் தரும் வல்லநாடு சித்தர், முத்தாலங்குறிச்சி காமராசு, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.260. மனிதனுக்குள் சொல்லொணாத ஆற்றல்கள் புதைந்து கிடக்கின்றன. அவற்றை முறையாக பயன்படுத்தி தெய்வ நிலைக்கு உயர்பவர்களை சித்தர்கள் என அழைக்கிறோம். சித்து என்றால் உயிர். சித்தர் என்றால் உயிர் உடைய ரகசியம் அறிந்தவர் என்று பொருள். ஆற்றல் பெற்றாரைச் சித்தி அடைந்தவர் என அழைப்பதுண்டு. மனத்துக்கண் மாசிலனாகி செயற்கரிய செயல்புரிபவர் சித்தர்கள். சித்தி எனும் சொல்லிற்குக் கைகூடல், முயற்சியில் வெற்றி என்பது பொருளாகும். ஐம்புலனை அடக்கும் சித்திகளில் […]

Read more

ராமேஸ்வரம் காசி புனிதப் பயணம்

ராமேஸ்வரம் காசி புனிதப் பயணம், காசி ஸ்ரீ காசி நாதன், செல்வி புத்தக நிலையம், விலை 120. ராமேஸ்வரத்திலிருந்து 118 நாட்கள் நடை பயணமாக காசிக்குச் சென்று அவர்களின் வியக்கத்தக்க அனுபவ அன்றாட நாட்குறிப்பு,  பக்திபூர்வமாக சொல்லப்பட்டு இருக்கிறது. இந்த வழித்தடத்தில் பயணிக்க இருப்பவர்களுக்கு இந்த நூல் உறுதுணையாக இருக்கும். நன்றி: தினத்தந்தி, 28/11/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பாம்பன் சுவாமிகள்

பாம்பன் சுவாமிகள், பா.சு.ரமணன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.160. ராமநாதபுரம் பாம்பனில் அப்பாவுவாக பிறந்தவர் பாம்பன் சுவாமிகளாக, குமரகுருதாச சுவாமிகளாக அறியப்பட்டார். முருகனை முழுமுதற்கடவுளாக கொண்டு தமிழகம் முழுக்க யாத்திரை செய்தவர்.கற்றறிந்ததை, அறிவால் பெற்றறிந்ததை சண்முக கவசமாக, குமார ஸ்தவமாக அருளியவர். அந்த மகானின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நுால் இது. வாழ்வின் பெரும்பகுதியை இறை அனுபவத்திற்காக மக்களின் இறை வாழ்விற்காக செலவிட்டவர் பாம்பன் சுவாமிகள்.இல்லறத்தில் இருந்து நிரந்தர துறவறம் செல்ல நினைத்தவர் முருகனே பழநிக்கு அழைத்தாரா என நண்பர் கேட்க, […]

Read more

நாகராஜா கோவில்

நாகராஜா கோவில்,  சிவ.விவேகானந்தன்,  காவ்யா பதிப்பகம், பக். 306. விலை  ரூ.300. கன்னியாகுமரி மாவட்டத் தலைநகரான நாகர்கோவில் என்ற ஊரின் பெயருக்கு காரணமாக அமைந்த நாகராஜா கோயில் குறித்த ஆய்வு நூல் இது. கோயில் அமைப்பு, கட்டடக் கலை, சிற்பக் கலை, வழிபாடு, திருவிழாக்கள் உள்ளிட்டவை குறித்து அரிய தகவல்களுடன் விளக்கியுள்ளார் நூலாசிரியர். ஒரு காலத்தில் சமணக் கோயிலாக இருந்து, இப்போது சமண, சைவ, வைணவக் கோயிலாக நாகராஜா கோயில் மாறிய வரலாறு விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. கோயில் அமைப்பு மற்றும் கட்டடக் கலை குறித்து […]

Read more
1 3 4 5 6 7 128