ஸ்ரீ சாயி சித்திர சரிதம்

ஸ்ரீ சாயி சித்திர சரிதம், இளஞாயிறு மாணிக்கம், இளங்கோ கோ, மாணிக்கம், தென்காசி ஷீரடி வைத்திய சாயி கோயில், விலை 360ரூ. ஷீரடி சாயி பாபா மற்றும் அவரது பக்தர்களின் வாழ்வில் நடந்த 150 நிகழ்வுகள், வண்ணப்படங்களுடன் தரப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு ஓவியத்தின் கீழே, தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. சாயி பாபா தனது 16-வது வயதில் ஷீரடிக்கு வந்து தவம் செய்தது. எண்ணெய் கலந்த தண்ணீர் ஊற்றி விளக்கை எறிய வைத்தது, எங்கோ நெருப்பில் விழுந்த குழந்தையை […]

Read more

நட்சத்திர பலன்களும் ஆன்மிக குறிப்புகளும்

நட்சத்திர பலன்களும் ஆன்மிக குறிப்புகளும், ஆர்.ஹேமா பாஸ்கர் ராஜு, விலை 200ரூ. ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் 27 நட்சத்திரங்கள் பற்றியும், ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய ஆலயம், அந்த ஆலயம் அமைந்துள்ள இடம், அங்கு செல்வதற்கான வழி, ஒவ்வொரு கோவிலிலும் நடைபெறும் சிறப்பு பூஜைகள் போன்ற அனைத்துத் தகவல்களும் இந்த நூலில் தொகுத்துத்தரப்பட்டு இருக்கின்றன. நட்சத்திரங்களுக்கு உரிய தமிழ் விளக்கம்,ஆங்கில மாதங்களுக்கு அந்தப் பெயர்கள் வந்த விதம், தமிழ் மாதங்களின் சிறப்பு, ஒவ்வொரு மாதத்திலும் நடைபெறும் திருவிழாக்கள் ஆகியவற்றுடன் ஆன்மிக பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய 300க்கும் மேற்பட்ட […]

Read more

காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி

காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி ,கி.வா.ஜகந்நாதன், அமுத நிலையம்,  பக். 480, விலை ரூ.300. காரைக்கால் அம்மையாா் இயற்றியருளிய ‘அற்புதத் திருவந்தாதி’ சிவபெருமானின் சிறப்புகளையும், அவரது முழுமுதற் தன்மைகளையும், அவன் அடியாா்க்கு அருள் புரியும் தன்மைகளையும் எடுத்துரைக்கிறது. இந்த ‘அற்புதத் திருவந்தாதி’யில் உள்ள பாடல்களுக்கு மிக விரிவாக, விளக்கமான உரைகளைத் தந்திருக்கிறாா் கி.வா.ஜ. ‘பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம்’ எனும் முதல் பாடல் தொடங்கி, ‘நடக்கிற்படி நடுங்கும்’ எனும் நூறாவது பாடல் முடிய பல்வேறு எடுத்துக்காட்டுகளைக் கூறி, இடையிடையே திருக்கு, தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், அபிராமி அந்தாதி […]

Read more

இந்து மத அகராதி

இந்து மத அகராதி, மாா்க்கரெட், ஜேம்ஸ் ஸ்டட்லி, தமிழில்: உதயகுமாா் பாலன்,  பக்.704, விலை ரூ.600. மற்றவா்கள் சொல்லித்தான் இந்தியா்களான நமக்கு நமது அருமை பெருமைகள் எப்போதுமே தெரிந்திருக்கின்றன. ‘சநாதனம்’ (என்று தொடங்கியது என்பது தெரியாத, என்றென்றுமுள்ள) என்பதன் அா்த்தம் கூடத் தெரியாமல் சநாதன தா்மத்தை நாம் எதிா்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதன் ஆக்கபூா்வ சிந்தனைகள் குறித்து அயல்நாடுகளில் ஆயிரக்கணக்கான ஆய்வுகள் நடக்கின்றன. ‘ஹிந்து மதம்’ என்று பரவலாகக் குறிப்பிடப்படும் சநாதன தா்மத்தின் கூறுகளாக உள்ளவை நமது புராண, இதிகாசங்கள். அதுமட்டுமல்லாமல், பல்லாயிரக்கணக்கான நூற்றாண்டுகள், […]

Read more

ஸ்ரீபாஷ்யம் பேருரை

ஸ்ரீபாஷ்யம் பேருரை, க. ஸ்ரீதரன், நர்மதா பதிப்பகம், விலைரூ.950 அகிலத்து மாந்தர் அனைவரையும் சமமாகவே பாவித்து வாழ்ந்த, ஆன்மநேய முனிவர் ஸ்ரீராமானுஜர், 1,000 ஆண்டுகள் கடந்தும் அழியாப் புகழோடு நிலைப்பவர். பாதராயண மகரிஷி சமஸ்கிருதத்தில் இயற்றிய பிரம்ம சூத்திரத்திற்கு, ராமானுஜரால் வழங்கப்பட்ட பேருரையே ஸ்ரீபாஷ்யம் நுால். பிரம்மம் என்பதற்கு ஒப்புயர்வற்ற பொருள் அல்லது அனைத்தையும் வளர்க்கின்ற பொருள் என்று விளக்கம் தந்து, பிரம்ம சூத்திரங்கள் நுட்பமாக விளக்கப்படுகின்றன. சூத்திரங்களைப் புரிந்து கொள்ள எளிய உரைகள் தேவைப்பட்ட நிலையில், உருவாக்கப்பட்ட ஐந்து வகை உரைகளில் ஒன்று […]

Read more

திருமூலர் அருளிய திருமந்திர விளக்கம்

திருமூலர் அருளிய திருமந்திர விளக்கம், ம.கணபதி, மணிவாசகர் பதிப்பகம், பக்.232, விலை ரூ.300. தேவாரம், திருவாசகத்தை விரும்பிப் படிக்கும் பலரும் திருமந்திரத்தைப் படிப்பதில்லை. ஏனெனில் அதன் பொருள் எளிதில் விளங்காது என்று அவர்கள் கருதுவதாலேயே. அவர்கள் அவ்வாறு கருதுவது ஒருவகையில் சரியானதே. பெரும்பாலான திருமந்திர உரைகள் கற்பதற்கு கடினமாகவே உள்ளன. அக்குறையைப் போக்கியிருக்கிறது இந்நூல். மூவாயிரம் பாடல்கள் அடங்கிய திருமந்திரத்தின் (மூலம் உரைசெய்த மூவாயிரம் தமிழ்) ஒன்பது உட்பிரிவுகளிலிருந்தும் (தந்திரங்கள்) முக்கியமான பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு எளிய நடையில் உரையும் வழங்கியுள்ளார் இந்நூலாசிரியர். உயரிய […]

Read more

கருப்பர் கோவில் திருவிழா

கருப்பர் கோவில் திருவிழா, மனோ.இளங்கோ, எம்.ஜெ.பப்ளிகேசன் ஹவுஸ், விலைரூ.200. தமிழகத்தில் சிலை கடத்தல் செய்திகளை படிக்கிறோம். இந்த காலத்தில் மட்டுமில்லை, பழங்காலங்களிலும் சிலை கடத்தல் நடந்துள்ளது. கோவில், அதை சார்ந்த சமூகம், சிலை கடத்தல், வழக்கு, தீர்ப்பு என, இந்த காலத்திற்கு ஏற்ற நாவல் இது. ‘சாமி என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும்… சாமி என் பக்கத்தில இருக்கணும் என்று தான் எடுக்கிறேன்… நான் ஒரு நாள் தான் சாமி சொத்த தின்னுறேன்…’ ‘ராவணன், குபேரன் மீது, மதுரை சிறையில் கலவரம் செய்ததாக, போலீசார் […]

Read more

கோதையின் பாவையும் கோவிந்தன் மேன்மையும்

கோதையின் பாவையும் கோவிந்தன் மேன்மையும், ச.ந.பார்த்தசாரதி, மகாலட்சுமி பதிப்பகம், விலைரூ.150. கோதை என்றும் ஆண்டாள் என்றும் அழைக்கப்படும் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியின் திருப்பாவைப் பாசுரங்களின் விளக்கவுரையும், கோவிந்தன் என்று போற்றப்படும் கண்ணனின் மேன்மை குறித்தும் கூறும் நுால். தமிழ் இலக்கியங்களில் பாவை நோன்பு குறித்தும், திருப்பாவையின் அமைப்பு குறித்தும் ஆசிரியர் நன்கு விளக்கியுள்ளார். சுவையாக உள்ளது. கண்ணன் குறித்து, 18 தலைப்புகளில் விளக்கியுள்ளார். திருப்பாவைப் பாடல்களின் விளக்கம், மிக எளிய முறையில், பழகு தமிழில் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடல் விளக்கம் முடிந்ததும் துணுக்குச் செய்தி என்ற […]

Read more

திருவாசகத்தில் மெய்ப்பாடு

திருவாசகத்தில் மெய்ப்பாடு, ஜெ.கலைவாணி, அகலன் வெளியீடு, விலைரூ.100. திருவாசகத்தில் மெய்ப்பாடு என்னும் பொருண்மையில் அமைந்த இந்நூல், திருவாசகத்தில் இடம்பெறும் பாடல்களை கவித்துவம் மிக்கதாகவும், பொருள் புலப்பாட்டுத்தன்மை மிக்கதாகவும் மாற்றும் திறன் மெய்ப்பாட்டுக்கிருப்பதை பல்வேறு சான்றுகள் மூலம் நுாலாசிரியர் நிறுவுகிறார். தமிழில் தமிழ் மண்ணைப் போற்றும் ஆய்வு முறைகள் உருவாகவேண்டும். தமிழிலக்கியக் கோட்பாடுகளைக் கொண்டு தமிழிலக்கியங்களை ஆய்வு செய்யும் போக்கு வளர வேண்டும் என்ற நுாலாசிரியரின் விழைவு நுால் முழுவதும் இழைந்தோடக் காணலாம். இலக்கியமும் மெய்ப்பாடும், காலந்தோறும் மெய்ப்பாடு, திருவாசகத்தில் மெய்ப்பாடு என்ற கோணத்தில், வரலாற்றுக் […]

Read more

சிவபுராணம்

சிவபுராணம், அவ்வை மு.ரவிக்குமார், ஸ்ரீ ஆனந்த நிலையம், விலைரூ.220. சைவர்களின் வழிபடு தெய்வ மாக விளங்குபவர் சிவபெருமான். அவர் பெருமைகள், ஆற்றல் அளவிடற்கரியவை. பிரும்மம் என்ற பரமாத்மா, பிரம்மாவைத் தோற்றுவித்து, அவர் மூலம் இவ்வுலகம் உண்டாக்கப்பட்டது என்பர். இந்த நுாலில், ருத்ர பகவான் வரத்தால், பிரம்ம தேவர் உலகில் உயிரினங்களைத் தோற்றுவித்தார் என்று கூறப்பட்டுள்ளது. சிவனுடன் சேர்வதற்குப் பார்வதி தேவி விரதமிருந்த இடம் ‘கவுரி சிகரம்’ என்றும், சிவனின் யோகத்தைக் கலைத்த மன்மதன் எரிந்து சாம்பலானதும், மன்மதனே கிருஷ்ணனின் மகனாக பிரத்தியும்னன் என்ற பெயரில் […]

Read more
1 9 10 11 12 13 128