ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், பா.சு.ரமணன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.200. இறைவனின் அன்பு எல்லையில்லாதது. படித்தவர், உயர்குலத்தவர் என்றெல்லாம் இறைவன் பகுத்தறிந்து அன்பை தருவதில்லை; பெறுவதும் இல்லை. எளிமையும், எல்லையில்லா சரணாகதியும் தான் இறைவனை மனித உடலுக்கு ஒன்றச் செய்கிறது. அதிலுள்ள உயிரை உருக்கி தன்னை நோக்கி வரச் செய்கிறது. படிக்காவிட்டாலும் எளிமையான காளி பக்தியால் தன்னை உயர்த்திய ராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றிய வரலாறு இது. காளியின் அருளால் அனைத்து மதங்களின் சாராம்சங்களையும் முழுமையாக அறிந்தவர். அனைத்தும் காட்டும் வழி ஒன்றே […]

Read more

பொருநராற்றுப்படை

பொருநராற்றுப்படை (விளக்கமும் நயவுரையும்), ம.திருமலை, மீனாட்சி புத்தக நிலையம்,  பக்.23.,  விலை ரூ.200. தமிழின் தொன்மையையும், இலக்கியப் பெருமையையும் எக்காலத் தலைமுறைக்கும் எடுத்துரைக்கும் வளங்களாக இருப்பவை சங்கத்தமிழ் இலக்கியங்கள். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என இரு பெரும் தொகுப்பில் பொருநராற்றுப்படையானது பத்துப்பாட்டில் ஆற்றுப்படை வரிசையில் இரண்டாமிடத்தில் வைத்துப் போற்றப்படும் நூலாகும். இசைப்பாடல் கலைஞர்களான பொருநர்கள் வறுமையில் வாடிய நிலையில், அந்த வறுமையைப் போக்க அரசர்களை நாடிச்சென்று அவர்தம் பெருமைகளைப் பாடி பரிசில் பெற்று வாழ்ந்ததை பொருநராற்றுப்படையின் மூலம் அறியமுடிகிறது. இந்நூலாசிரியர் கிரேக்க இலக்கியத்தோடு, பொருநராற்றுப்படையை ஒப்பிட்டு […]

Read more

பாகவதப் பாரதம்

பாகவதப் பாரதம், டாக்டர் சிவ. விவேகானந்தன், காவ்யா பதிப்பகம், விலைரூ.600 பகவான் கண்ணனின் வரலாறு கூறுவது பாகவதம். கண்ணன், பாண்டவரை வழிநடத்தி சென்றது மகாபாரதம். இரண்டு மகா காவியங்களையும் இணைத்து, அம்மானை என்ற செய்யுள் யாப்பு வடிவில், 24 ஆயிரம் பாடல்களாக இயற்றப்பட்டுள்ள நுால். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீபல்பனாப புலவர், பனையோலைச் சுவடியில் வில்லுப் பாட்டு கலை வடிவத்தில் எழுதி உருவாக்கியிருந்தார். இதை தேடி கண்டுபிடித்து புத்தகமாக பதிப்பித்துள்ளார் சிவ.விவேகானந்தன். பாமரரும் படித்து மகிழும் வகையில், உரைநடைக் காப்பிய நுாலாக உள்ளது. முதலில் […]

Read more

அறுபத்து மூவர் சரிதத்தில் ஆச்சர்யமூட்டும் பெண்கள்

அறுபத்து மூவர் சரிதத்தில் ஆச்சர்யமூட்டும் பெண்கள், ப.ஜெயக்குமார், உமாதேவி பதிப்பகம், பக்.144; விலை ரூ. 200. அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஆண்கள் அறுபது பேர்; பெண்கள் மூவர். காரைக்கால் அம்மையார், இசைஞானியார், மங்கையர்க்கரசியார் மூவரும் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் நேரிடையாக (திருத்தொண்டத் தொகையில்) குறிப்பிடப்பட்டவர்கள். ஆனால், நாயன்மார்கள் பலரது வாழ்க்கையில் அவர்களுக்குப் பெருமளவில் உதவியதுடன், அவர்களை இறையருளுக்குப் பாத்திரமாக்கிய இல்லத்தரசிகள், சகோதரி, மகள் போன்றோரின் சிறப்புகளை உலகறியவில்லை என்பதுடன், நாம் உலகத்தாருக்கு உணர்த்தவில்லை என்பதுதான் உண்மை. அந்த அருஞ்செயலை இந்நூல் செய்திருக்கிறது. மேற்குறிப்பிட்ட மூன்று பெண் […]

Read more

இந்துமத இணைப்பு விளக்கம்

இந்துமத இணைப்பு விளக்கம், கே.ஆறுமுக நாவலர், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக்.208, விலை ரூ.200. இந்து மதம் என்றால் என்ன? இந்து மதத்தின் வேத, புராண, சாத்திர, இதிகாச நூல்கள் எவையெவை? இந்து மதத்தில் உட்பிரிவுகள் எத்தனை? துவைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் இவற்றுக்கு இடையே என்ன வேறுபாடு? ஆலயம் அமைக்கும் முறை, திருவிழாக்களின் தத்துவம் என்ன – இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதிலாக அமைந்துள்ளது இந்நூல். நான்கு வேதங்கள், உபநிடதங்கள், ஆகமங்கள், 14 சைவ சித்தாந்த சாத்திரங்கள், நாலாயிர திவ்விய பிரபந்தம், ராமாயணம், மகாபாரதம் […]

Read more

நபிகளாரின் பொன்மொழிகள்

நபிகளாரின் பொன்மொழிகள், முஸ்னது அஹ்மத் , அரபு மூலம்: அபூ அப்தில்லாஹ் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்); தமிழில்: அ.அன்வருத்தீன் பாகவி, சா.யூசுஃப் சித்தீக் மிஸ்பாஹி, ஆலிம் பப்ளிகேஷன் ஃபவுண்டேஷன், பாகம் 1; பக்.726; ரூ.650; பாகம் 2; பக்.872; ரூ.650; 1300 ஆண்டுகளுக்கு முன்பு கி.பி. 780- களில் துர்க்மெனிஸ்தானில் பிறந்து ஈராக்கில் வாழ்ந்த இமாம் அகமது பின் ஹன்பல் என்பவர் தேடி ஆய்வு செய்து தொகுத்த முஸ்னது அஹ்மத் என்னும் நூல் தற்போது தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு முதல் இரண்டு பாகங்கள் […]

Read more

அரசாங்க உத்தியோகம் பெறும் 12 ராசிகள்

அரசாங்க உத்தியோகம் பெறும் 12 ராசிகள்,  வி.ரவி, கற்பகம் புத்தகாலயம்,  பக்.296,  விலைரூ.250. குறிப்பிட்ட ஜாதகத்துக்குரிய ஒருவருக்கு அரசாங்க உத்தியோகம் கிடைக்குமா கிடைக்காதா? என்ற கேள்விக்கு ஜாதகத்திற்குத் தகுந்தாற்போல் காரணத்தை அறிந்து, பரிகார சாந்தி செய்து, இறைவனை வழிபட அவர்களின் குறைகள் தகர்க்கப்பட்டு அரசாங்க உத்தியோகம் கிடைக்கும் என்பதை கிரக நிலைகள், தடைகள் உள்ளிட்ட பல்வேறு உதாரணங்களுடன் இந்நூல் விளக்குகிறது. தனியார் வேலை, சுய தொழில் முன்னேற்றம் பெறும் ஜாதகங்கள் மற்றும் பற்பல ஜோதிட ரகசியங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. ஜாதகக் கணக்கை அறிதல், ஜாதகக் கலையின் […]

Read more

குணங்குடி மஸ்தான் சாஹிப்

குணங்குடி மஸ்தான் சாஹிப், நாகூர் ரூமி; கிழக்கு பதிப்பகம், பக்.96; ரூ.120; இந்திய சூஃபிகள் வரிசையில் வெளியிடப்பட்டுள்ள நூல், குணங்குடி மஸ்தான் சாஹிப். இஸ்லாமியராக இருந்தபோதிலும் மதங்களுக்கு அப்பாற்பட்ட ஞானியாக வாழ்ந்து மறைந்தவர் சுல்தான் அப்துல் காதிர் என்ற இயற்பெயரைக் கொண்டவரான குணங்குடி மஸ்தான் சாஹிப். அவரை மிகச் சரியாகப் புரிந்துகொண்டு கிடைக்கப் பெற்ற தரவுகளைத் தேவையானஅளவு பயன்படுத்தித் தக்க விதத்தில் முன்வைத்துள்ளார் ரூமி. அரபு உலக ஞானிகளுடன் ஒப்பிட்டுத் தொடங்கும்நாகூர் ரூமி, மருத்துவமும் மகத்துவமும் தமிழும் கலந்துறையும் சித்தராக மஸ்தான்பார்க்கப்படுவதைக் குறிப்பிடுகிறார். திருமூலர், […]

Read more

ஸ்ரீ சேஷாத்ரி ஆயிரம்

ஸ்ரீ சேஷாத்ரி ஆயிரம், பா.சு.ரமணன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்,  விலைரூ.290. பற்றில்லாத நிலை என்பது தன்னை மறத்தல். உடம்பை, உணவை மறந்து போதல். தெய்வக்குழந்தையாக பிறந்து வளர்ந்த ஸ்ரீசேஷாத்ரியும் அந்த நிலையை இளம்வயதிலேயே அடைந்தார். பதின்ம வயதில் தந்தை, தாத்தாவை இழந்து பின்னர் தாயை இழந்த நிலையில், தாய் சொன்ன அருணாச்சலம் என்ற வார்த்தையை மட்டும் பற்றுக்கோடாக கொண்டார். உணவை மறந்த உடல் நலிந்தாலும் அருணாச்சல மந்திரத்தால் உள்ளம் உறுதியடைந்தார். அப்படியே ஊருக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். சேஷாத்ரி கதையை படிக்க […]

Read more

ஷீரடி பாபாவின் சீரடி பணிவோம்

ஷீரடி பாபாவின் சீரடி பணிவோம், ஜெயஸ்ரீ கிஷோர், சத்யா பதிப்பகம், விலைரூ.200. ஷீரடி சாய்பாபா நிகழ்த்திய அதிசயங்களைத் தொகுத்திருக்கிறார். சாய்பாபா என பெயர் வரக்காரணம், வியாழக்கிழமை விரதம், அதன் பலன் பற்றிய விளக்கங்களை எளிமையாகப் படிக்க முடிகிறது. ஷீரடிக்கு எப்படி செல்வது, எங்கு தங்குவது, அதைச் சுற்றியுள்ள, 23 முக்கிய இடங்களைச் சுற்றிப் பார்க்க வசதியாக தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சனீஸ்வரர் கோவில் உள்ளது போன்ற தகவல்கள் புதுமை. பாபாவுடன் இருந்த, 12 அருளாளர்கள் பற்றிய குறிப்பும் இடம் பெற்றுள்ளது. பாபா தினமும் பிச்சை […]

Read more
1 11 12 13 14 15 128