துர்க்கையின் புதுமுகம்

துர்க்கையின் புதுமுகம், என்.சண்முகலிங்கன், தமிழில் பக்தவத்சல பாரதி, சந்தியா பதிப்பகம், விலை 190ரூ. மாறும் சமூகங்கள் மாறும் வழிபாடுகள் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிய கிராமமான தெல்லிப்பழையில், கடந்த நூற்றாண்டின் பிற்பாதியில் துர்க்கை வழிபாடு தொடங்கப்பட்டு ஈழம் முழுவதும் துர்க்கை அம்மன் கோயில்களும் வழிபாடும் பரவியது தொடர்பான சமூகவியல், மானுடவியல் ஆவணம் இந்நூல். தாய் தெய்வ வழிபாடுகள் தொடரும் மரபும் அதற்கான சமூகக் காரணங்களையும் பேசும் முக்கியமான மானுடவியல் நூல் இது. தென்னிந்திய, தமிழ் சமய, கலாச்சாரம் மரபுகளுடன் தொன்மையான உறவு கொண்டவர்கள் ஈழத் […]

Read more

சேக்கிழாரின் பெரியபுராணம்

சேக்கிழாரின் பெரியபுராணம், 63 நாயன்மார்களின் வரலாறு எளிய தமிழில், பா.க.ரமணன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 344, விலை 360ரூ. நாடி ஜோதிடத்தில் வல்லவரான நுாலாசிரியர் ரமணன் எழுதிய நுால் சேக்கிழாரின் பெரியபுராணம் – 63 நாயன்மார்களின் வரலாறு எளிய தமிழில். 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு, சிவபெருமான் அவர்களுக்கு கொடுத்த சோதனைகள், அந்த சோதனையைத் தாண்டி அவர்களின் இறைபக்தியை ஊரறியச் செய்து ஆட்கொண்ட விதம் ஆகியவற்றை நுாலாசிரியர் விளக்குகிறார். நாயன்மார்கள் மீதான சிவபெருமானின் அளவு கடந்த பக்தியை கேள்விப்பட்டு, ரமண […]

Read more

சைவ சமயம்

சைவ சமயம், மா.இராசமாணிக்கனார், அழகு பதிப்பகம், விலைரூ.100 சைவ சமயம் பற்றி அறிமுகம் செய்யும் நுால். சமயம் என்பது சமைத்தல் எனும் வேர்ச்சொல்லில் பிறந்தது என்கிறார். வாழ்வை பக்குவமடையச் செய்தல் என்ற பொருளில் கூறுகிறார். சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவன் பற்றிய விபரங்களும் தொகுக்கப்பட்டுள்ளன. வரலாற்று ரீதியாக, சைவ சமயத்தை அணுகி, தகவல்களை பதிவு செய்துள்ளார். சங்க காலத்துக் கோவில்கள் பற்றியும் ஆய்வு செய்துள்ளார். கால எல்லையை கடந்து பார்க்கும் நுால். – த.பாலாஜி. நன்றி:தினமலர், 26/7/20. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030647_/ […]

Read more

திருவாய்மொழி

திருவாய்மொழி, பி.கே.வெங்கடேசன், பாதுகா பவனம், பக். 287, விலை 150ரூ. ஆழ்வார்கள் அருளிச் செய்த திருப்பாசுரங்கள் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம். இயலாதோருக்குத் துணை நிற்பது திருவாய்மொழி. இதை அருளியவர் நம்மாழ்வார். இதில் 1,102 பாசுரங்கள் அடங்கியுள்ளன. திவ்யப் பிரபந்தத்திலிருந்து எடுத்து அனைவரும் படித்துப் பயன் பெறும்வகையில் மலிவு பதிப்பாக வெளிவந்துள்ள நூலாகும். இந்நூல், ‘எம்பெருமானால் சொல்லப்பட்ட எம்பெருமானின் புகழ் கூறும் நூல்’ என்று நம்மாழ்வாரால் கூறப்பட்ட பெருமை உடையது. ஓதுபவரது மனத்தை இறைவனிடம் சேர்ப்பிக்கும் அருமை உடையது. திருவாய்மொழியுடன், திவ்யப் பிரபந்தத்தில் ஓதுதற்கு அருமையுடைய […]

Read more

புதுச்சேரித் தெய்வங்கள்

புதுச்சேரித் தெய்வங்கள், பேரா.இளமதி ஜானகிராமன், காவ்யா, பக். 259, விலை 260ரூ. உலகம் முழுதும் வழிபாடுகள் பல வடிவில் இருப்பினும், நோக்கம் ஒன்றாகவே இருந்து வருகிறது.இந்திய நாட்டிலும், வாழ்வியல் சூழலுக்கேற்ப வழிபாட்டில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. தமிழினம் சார்ந்த வழிபாட்டு நெறிகளின் மீதான ஆய்வுகள், பண்டைய இலக்கியங்கள் மற்றும் வழக்காற்றுக் கதைகள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சங்க காலத்தில் மலைமகள், கொற்றவை, பழையோள் எனப் பெண் தெய்வங்களை வழிபடப்பட்டனர். கொற்றவை வழிபாட்டிலிருந்து கிளைத்தவையே பிற்பாடு வந்த பெண் தெய்வ வழிபாடுகள் என்றும், கொற்றவையே இந்நாளில் துர்க்கையாக […]

Read more

ஜெய் அனுமன்

ஜெய் அனுமன், பிரபு சங்கர், தாமரை பிரதர்ஸ், பக். 168, விலை 170ரூ. ராம நாமம் பெருமைக்கும், போற்றுதலுக்கும் உரியதைப் போலவே, ராம நாமத்தை உச்சரிக்கும் அனுமனும் போற்றுதலுக்குரியவர். வன வாசத்திற்கு பின் அனுமன் வந்தாலும், அடுத்தடுத்த அவதாரங்களிலும் ராம பக்தனாகவே அனுமன் தொடர்கிறார்; கிருஷ்ணரை புறக்கணிக்கிறார் எப்படி என்பதை கதையோட்டத்துடன் விவரிக்கிறார் ஆசிரியர் பிரபுசங்கர். வீரம், ஆற்றல், மேன்மை, விசுவாசம், நல்லொழுக்கம், மனதாலும் தவறு நினையாத நல்ல குணம் இவையெல்லாம் நினைவு வரும். அது மட்டுமல்ல… சொல்லும் வார்த்தைகளின் இலக்கணமாக திகழ்ந்தவர் என்பதை […]

Read more

அருள்மழை தாராயோ

அருள்மழை தாராயோ, வரலொட்டி ரெங்கசாமி, தாமரை பிரதர்ஸ், பக். 216, விலை 220ரூ. இந்த எண்ணம் நமக்கும் அடிக்கடி வரும். கோவிலுக்குள் செல்லும் போது சிலர் சிறப்பு தரிசனம் செல்ல, பலர் விழிபிதுங்கி கூட்ட நெரிசலில் சிக்கி வரிசை நகராதா என ஏங்கிக் கொண்டே செல்வர்.ஆசிரியர் வரலொட்டி ரெங்கசாமிக்கும் இந்த சிந்தனை வந்தது. தாயே… மீனாட்சி… ஒரு நாளாவது நீயா சிறப்பு தரிசனத்துக்கு வழி பண்ண மாட்டியா என, உள்ளுக்குள் கோபமும் சலுகையுமாய் கேட்க, மகனின் அசைவுக்கு இசையும் தாயாய், அர்ச்சகர் வடிவில் வந்து […]

Read more

திருவாய்மொழி

திருவாய்மொழி, பி.கே.வெங்கடேசன், பாதுகா பவனம், பக். 287, விலை 150ரூ. ஆழ்வார்கள் அருளிச் செய்த திருப்பாசுரங்கள் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம். இயலாதோருக்குத் துணை நிற்பது திருவாய்மொழி. இதை அருளியவர் நம்மாழ்வார். இதில் 1,102 பாசுரங்கள் அடங்கியுள்ளன. திவ்யப் பிரபந்தத்திலிருந்து எடுத்து அனைவரும் படித்துப் பயன் பெறும்வகையில் மலிவு பதிப்பாக வெளிவந்துள்ள நூலாகும். இந்நூல், ‘எம்பெருமானால் சொல்லப்பட்ட எம்பெருமானின் புகழ் கூறும் நூல்’ என்று நம்மாழ்வாரால் கூறப்பட்ட பெருமை உடையது. ஓதுபவரது மனத்தை இறைவனிடம் சேர்ப்பிக்கும் அருமை உடையது. திருவாய்மொழியுடன், திவ்யப் பிரபந்தத்தில் ஓதுதற்கு அருமையுடைய […]

Read more

கீர்த்தன மாலை

கீர்த்தன மாலை, எஸ்.வி.ரமணி, மணிமேகலைப் பிரசுரம், பக். 124, விலை 100ரூ. பக்தியில் மனம் லயித்து எழுதப்பட்டுள்ள பாடல்களின் தொகுப்பு நூல். 147 பாடல்கள் உள்ளன. எளிமையாக புரிந்துகொள்ளும் வடிவத்தில் உள்ளன. இசையுடன் பாடி உருக ஏற்றது. இந்த பாடல்களை எழுதிய ரமணி, ஆப்ரிக்க நாடான கென்யா, நைரேபி நகரில் வசிக்கிறார். நாடு கடந்தும், இறை எண்ணத்தில் ததும்பி துதிகளை இயற்றியுள்ளார். பக்தி பரவசத்தில் கனிந்துருகி பாட உதவும் கீதங்கள். நன்றி: தினமலர், 13/9/2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

பெரியாழ்வார் போற்றும் பெருவாழ்வு

பெரியாழ்வார் போற்றும் பெருவாழ்வு, பேராசிரியர் தி.இராசகோபாலன், வானதி பதிப்பகம், விலைரூ.120. பன்னிரு ஆழ்வார்களில், எம்பெருமானுக்குப் பொங்கும் பரிவு கொண்டு, பல்லாண்டு பாடியதால் விஷ்ணு சித்தர் – பெரியாழ்வார் என்று போற்றப்படுகிறார். ஆழ்வார்கள் இறைவனைத் தாயாகப் பாவித்து காக்க வேண்டி பாசுரங்கள் பாடினர்; ஆனால், பெரியாழ்வார் இறைவனுக்குத் தாமே தாயெனப் பாவித்து பாசுரங்கள் பாடினார் என்று கூறி, அவரின் ஆன்மிக சிந்தனைகளை விளக்கும் நுால். அறிவின் திறனுக்குச் சான்றுகளாக உள்ளன. செவ்விலக்கியம் படைப்போர் வழக்கு சொற்களையும், கொச்சை சொற்களையும் பயன்படுத்த மாட்டர் என்று கூறும் நுாலாசிரியர், […]

Read more
1 17 18 19 20 21 128