சாதி ஒழிப்பு

சாதி ஒழிப்பு, கசி.விடுதலைக்குமரன், மக்கள் விடுதலை பதிப்பகம், விலை 90ரூ. இந்தியாவில் சாதி முறை தோன்றியது எவ்வாறு என்பதும், சாதியை ஏன் ஒழிக்க வேண்டும் என்பதும், சாதி ஒழிப்புக்கு என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும் இந்த நூலில் விளக்கமாகச் சொல்லப்பட்டு இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 26/9/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

இனி எல்லாம் நலமே

இனி எல்லாம் நலமே, டாக்டர் அமுதா ஹரி, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.200. பதின் பருவம் தொடங்கி, மாதவிடாய் நிற்றல் வரைக்கும் பெண்ணின் அகத்திலும் புறத்திலும் நிகழும் மாற்றங்களை அனை வருக்கும் புரியும் வகையில் எளிய மொழியில் விளக்கியுள்ளார் அமுதா ஹரி. இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழில் தொடராக வெளிவந்து வாசகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றன. இந்நூல் பெண்களுக்கானது ஆண்களும் அவசியம் படித்துத் தெரிந்துகொள்வதற்கானது. பதின்பருவ மகள் ஏன் அடிக்கடி தனிமையை நாடுகிறாள், […]

Read more

பனை ஓலையும் பழந்தமிழும்

பனை ஓலையும் பழந்தமிழும், வி.ஜி.சந்தோசம், பழனியப்பா பிரதர்ஸ், பக்.140, விலை ரூ.125 . பனை ஓலையும் பழந்தமிழும் என்ற நூலின் தலைப்புக்கேற்ப பனை ஓலை தொடர்பான அனைத்துத் தகவல்களும், பழந்தமிழர் வாழ்க்கை தொடர்பான அனைத்துத் தகவல்களும் இந்நூலில் நிரம்பியுள்ளன. மன்னர் காலத்துக்கு முன்பிருந்து மனிதர்களிடையே தகவல் தொடர்புகள் எவ்வாறு இருந்தன, அதில் ஓலைச்சுவடிகளின் பங்கு என்ன என்பதை நூல் தெளிவாக விளக்குகிறது. பனை ஓலை தொடர்பான கட்டுரையில் பனை மரத்தின் பயன்கள், பனைமரத்திலிருந்து கிடைக்கும் பொருள்கள், பனைத் தொழிலாளர்களின் வாழ்க்கை, பனை பொருள்களின் விற்பனை […]

Read more

சமுதாயத்தின் முன் நிற்கும் சவால்கள்

சமுதாயத்தின் முன் நிற்கும் சவால்கள், மா.கருணாநிதி, மணிமேகலைப் பிரசுரம், விலை 180ரூ. மூன்று முன்னாள் முதல்வர்களின் ஆட்சிக் காலத்தில் 37 ஆண்டுகள் பணியாற்றிய காவல்துறை முன்னாள் கண்காணிப்பாளரான இந்த நூலின் ஆசிரியர், சமுதாயத்திற்குத் தேவையான நல்ல கருத்தகளை இந்த நூலில் பதிவு செய்து இருக்கிறார். பணியின்போது தனக்குக் கிடைத்த அனுபவங்கள், மற்றும் அன்றாட வாழ்வை உற்றுநோக்கி அதன்மூலம் கிடைத்த உணர்வுகள் ஆகிய பயனுள்ள தகவல்களை 29 கட்டுரைகள் வாயிலாகத் தந்து இருக்கிறார். பதவி என்பது அனுபவிக்க அல்ல, சுமப்பதற்கு. தற்கொலைகள் ஆத்திரத்தில் எடுக்கும் அவசர […]

Read more

வளமும் நலமும் தரும் வாசனை தைலங்கள்

வளமும் நலமும் தரும் வாசனை தைலங்கள், டாக்டர்.எம்.ஜி.அண்ணாதுரை, நர்மதா பதிப்பகம், விலைரூ.75. வாசனை தைலத்தால் செய்யப்படும் சிகிச்சை முறை பற்றி சுருக்கமாக எழுதப்பட்டுள்ள நுால். இந்த சிகிச்சை முறை தோன்றியதன் வரலாற்று செய்திகள் முதல் இயலில் தொகுக்கப்பட்டு உள்ளன. அடுத்து வாசனை தைல தயாரிப்பு, ‘மசாஜ்’ செய்யும் முறைகள் என, 17 தலைப்புகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. எந்தந்த இயற்கை பொருட்களில் இருந்து வாசனை தைலங்கள் தயாரிக்கப்படுகிறது என்பது உட்பட தகவல்கள் உள்ளன. மிக எளிய நடையில், அரோமா தெரபி பற்றிய அறிமுக நுால். – […]

Read more

யானைகளின் வருகை பாகம் – 2

யானைகளின் வருகை பாகம் – 2, கா.சு.வேலாயுதம், வெளியீடு: கதை வட்டம், விலைரூ.220 யானை – மனித மோதலை பரிவுடன் ஆராய்ந்து தகவல்களைத் திரட்டித் தந்திருக்கும் நுால். யானைகளின் வாழ்விடம் மற்றும் வாழ்வியல் சார்ந்து ஏற்பட்டுள்ள இடர்களை, களையும் நோக்கில் முனைப்புடன் எழுதப்பட்டுள்ளது. இந்து தமிழ் திசை இணைய இதழில், தொடராக வெளிவந்தது. யானைகள் வாழ்வியல் குறித்து ஏற்கனவே வெளியான நுாலின் இரண்டாம் பாகமாக மலர்ந்துள்ளது. நுாலில், ‘இளைப்பாறுதலுக்கு ஒரு வைதேகி’ எனத் துவங்கி, ‘கதி கலங்க வைக்கும் பவானிசாகர் புதைசேறு’ என்பது வரை, […]

Read more

மாமல்லபுரம் வரலாற்று புதிர்களும் விடைகளும்

மாமல்லபுரம் வரலாற்று புதிர்களும் விடைகளும், அமுதன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.200 மாமல்லபுரம் சிற்பங்கள் பற்றி வரலாற்று பின்னணியுடன் சுவாரசியமாக எழுதப்பட்டுள்ள நுால். மொத்தம் 26 வியப்பூட்டும் தலைப்புகளில் அமைந்துள்ளது. மர்மங்கள் புதைந்துள்ள மாமல்லபுரம் என துவங்குகிறது முதல் அத்தியாயம். இரண்டு பனை மரங்களுக்கு நடுவே அமைந்துள்ள ஐந்து ரதம் பகுதியின் பழைய போட்டோ இடம் பெற்றுள்ளது. அடுத்தடுத்து மர்ம முடிச்சுகளை விடுவிக்கும் வகையில், அடுக்கமைவு முறையில் தகவல் தொகுக்கப்பட்டுள்ளது. நிரூபிக்கப்பட்ட வரலாற்று ஆதார செய்திகள் புத்தகத்தின் ஆன்மாவாக உள்ளன. அவை சிதறிவிடாமல் குழப்பமின்றி விவரிப்பு […]

Read more

வாழ்வே வசந்தம் ஆகட்டும்

வாழ்வே வசந்தம் ஆகட்டும், ஜெ.கமலநாதன், சுவாமிமலை பதிப்பகம், விலை: ரூ.90. சென்னை வானொலி நிலையத்தின் முன்னாள் இயக்குநர் ஜெ.கமலநாதன் எழுதியிருக்கும் இந்நூல், வாழ்வை மகிழ்ச்சியாக அமைத்துக்கொள்வதற்கும், சராசரி மனிதர்கள் உயர்வான வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்கும் வழிகாட்டும் 13 கட்டுரைகளை உள்ளடக்கியது. நன்றி: தமிழ் இந்து, 29/1/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000031469_-19/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

காலம் கொடுத்த கொடை

காலம் கொடுத்த கொடை, இலக்கியவீதி இனியவன், வானதி பதிப்பகம், விலை: ரூ.175 ‘இலக்கியவீதி’ அமைப்பை நடத்தியவர் இனியவன். அகிலன், லக்ஷ்மி, ராஜம் கிருஷ்ணன், ஜெயகாந்தன். நா.பா, தி.க.சி., அழ.வள்ளியப்பா உள்ளிட்ட 20 எழுத்தாளுமைகளுடனான தனது அனுபவங்களை ‘அமுதசுரபி’ இதழில் கட்டுரைகளாக எழுதியதன் தொகுப்பு. நன்றி: தமிழ் இந்து, 29/1/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%88/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

சுரங்க நகரம்

சுரங்க நகரம், மு.நடேசன், செம்மண் பதிப்பகம், விலைரூ.150. நெய்வேலி நிலக்கரி நிறுவன வளர்ச்சி வரலாற்றை, பணி அனுபவ பின்புலத்துடன் விவரிக்கும் நுால். மாற்றங்களை ஆவணப்படுத்தும் உள்ளூர் வரலாற்றுப் பதிவாக உள்ளது. எளிய மொழி நடை வாசிக்க ஏதுவாக உள்ளது. சுரங்கம் துவங்கியதில் இருந்து, வளர்ந்த விதம், உழைப்பு, அதை நெறிப்படுத்தும் நிர்வாகச் செயல்பாடு என கவனமுடன் பதிவாகிஉள்ளது. மொத்தம் 22 தலைப்புகளில் தகவல்கள் உள்ளன. போட்டோ மற்றும் ஆவண ஆதாரங்கள் உரிய இடங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. சுரங்கம் தோண்ட பயன்பட்ட இயந்திர படங்கள், பணி நடைமுறை […]

Read more
1 2 3 88