கல்வி ஓர் அரசியல்

கல்வி ஓர் அரசியல்,வே. வசந்திதேவி, பாரதி புத்தகாலயம், விலை 180ரூ. எவ்வகையான கல்வி தேவை? மானுட விடுதலைக்கான சக்தியாக இயங்குவதைவிடச் சாதாரணர்களை அடிமைப்படுத்தும் வழிமுறையாகக் கல்வி இந்தியச் சூழலில் மாற்றப்பட்டிருப்பதை ஆழமாக பேராசிரியர் வசந்திதேவியின் இப்புத்தகம் விளக்குகிறது. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் எவ்வகையான கல்வி தேவை, அதில் தொழிற்கல்வியின் பங்கு என்ன, உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த குழந்தைகளின் திறமைகளுக்கும் ஆற்றலுக்கும் நம்முடைய வகுப்பறைகளும் பாடத்திட்டங்களும் கற்பித்தல் முறைகளும் எம்மாதிரியான முன்னுரிமை அளிக்க வேண்டும், தமிழ்நாட்டில் பயிற்றுமொழி ஏன் தமிழாக இருக்க வேண்டும், மாணவப் பேரவைகள் மூலம் […]

Read more

புதிய கல்விக் கொள்கை அபத்தங்களும் ஆபத்துகளும்

புதிய கல்விக் கொள்கை அபத்தங்களும் ஆபத்துகளும், அ.மார்க்ஸ், பாரதி புத்தகாலயம், விலை 50ரூ. தோலுரிக்கும் முயற்சி! இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதிசெய்திருக்கும் மதச்சார்பின்மை, ஜனநாயக மாண்புகள் ஆகியவற்றை முற்றிலுமாக இந்திய கல்வித் திட்டத்திலிருந்து அப்புறப்படுத்த நடைபெறும் சதிகளை தோலுரித்து இப்புத்தகத்தில் காட்டியிருக்கிறார் எழுத்தாளர் அ. மார்க்ஸ். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை 2016-ன் மீது கடுமையான விமர்சனத்தை அவர் இப்புத்தகத்தின் வழியாக முன்வைத்திருக்கிறார். உலகமயம், வகுப்பு வாதம் இரண்டையும் மறைபொருளாக கொண்டு புதிய கல்வித் திட்டம் செதுக்கப்படுவதால் அது குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடமும் […]

Read more

வாழ்க்கைப் பாதை ஒரு கல்விக் காவியம்

வாழ்க்கைப் பாதை ஒரு கல்விக் காவியம், ஏ.எஸ்.மகரெங்கோ, தமிழில் பொன்னீலன், பாரதி புத்தகாலயம், விலை பாகம் ஒன்று 300ரூ, பாகம் இரண்டு 500ரூ. கல்வி என்னும் வெளிச்சம் ரஷ்யக் கல்வியாளரும் நாவலாசிரியருமான ஏ.எஸ்.மகரெங்கோ எழுதிய இந்நூல் சோவியத் கல்வி முறைக்குப் பெரும் பங்களிப்பு செய்த படைப்பாகக் கருதப்படுகிறது. உள்நாட்டுச் சண்டைகள், பஞ்சம், தொற்றுநோய் சூழலில் அகதிக் குழந்தைகளுக்குக் கல்வியளித்து அவர்களது மோசமான வாழ்க்கையில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்த மகரெங்கோ தனது அனுபவங்களைப் பின்னணியாக வைத்து எழுதிய இந்நூல் நாவலாசிரியர் பொன்னீலனால் மொழிபெயர்க்கப்பட்டது. எழுத்தாளர் […]

Read more

தேசிய கல்விக் கொள்கை 2016 – மகராஜாவின் புதிய ஆடை

தேசிய கல்விக் கொள்கை 2016 – மகராஜாவின் புதிய ஆடை, தொகுப்பு தேனி சுந்தர், அறிவியல் வெளியீடு, விலை 40ரூ. புதிய கல்விக் கொள்கை அவசியமா? இந்திய அரசின் ‘தேசிய கல்விக் கொள்கை 2016’ பற்றிய தமிழ்நாட்டின் கல்வியாளர்களின் பார்வையை விளக்குகிறது இந்நூல். ‘விழுது’ – புதிய கல்விக் கொள்கைச் சிறப்பிதழில் வெளிவந்த கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டிருக்கிறார் தேனி சுந்தர். கல்வியாளர்கள் முனைவர் ச.மாடசாமி, எஸ்.எஸ்.இராஜகோபாலான், பேரா. ஆர்.ராமானுஜம், பேரா.என்.மணி, பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்டோர் இந்தப் புத்தகத்தில் புதிய கல்விக் கொள்கையின் பல்வேறு […]

Read more

தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்

தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள், துரை மணிகண்டன், கமலினி பதிப்பகம், விலை 230ரூ. இந்நூல் கணினி, இணையம் குறித்து அடிப்படையாக அறிந்து கொள்ள வேண்டிய பல செய்திகளைத் தொகுத்து உரைக்கிறது. இதனுள், ஐந்து அலகுகளில் செய்திகள் கூறப்பட்டுள்ளன. முதல் மூன்று அலகுகளில், கணினியின் தோற்றம், வரலாறு, கணினியின் அமைப்பு-வகைகள், வன்பொருள்-மென்பொருள் விளக்கம், உள்ளீட்டுக் கருவிகளான விசைப்பலகை, ஒளிப்பேனா, சுட்டி, பந்துருளை, தொடுசுட்டி, வருடி முதலிய உள்ளீட்டுக் கருவிகளின் விளக்கம். மற்றும் திரை, அச்சுப்பொறி, அச்சுப்பொறி வகைகள், ஒலிபெருக்கி, ஒளிபெருக்கி ஆகிய வெளியீட்டுக் கருவிகளின் விளக்கம், […]

Read more

மாணவர்களுக்கான தமிழ்

மாணவர்களுக்கான தமிழ், என்.சொக்கன், கிழக்கு பதிப்பகம், விலை 200ரூ ‘காபி’க்கு தமிழில் என்ன பொருள்; முதலாளி, தொழிலாளி, உழைப்பாளி ஆகியவற்றில் வரும், ‘ஆளி’ எதைக் குறிக்கிறது; நள்ளிரவு என்ற சொல்லில், ‘நள்’ என்பது என்ன? உள்ளிட்ட பல சொற்களுக்கு இலக்கணம் கூறுகிறது இந்நூல். நன்றி: தினமலர்,16/7/2017.

Read more

கணிதம் கற்பித்தேன்

கணிதம் கற்பித்தேன், டாக்டர் வி. நடராஜன், சாந்தா பப்ளிஷர்ஸ், பக். 264, விலை 170ரூ. ஆசிரியர் கல்வியாளர்களுக்குத் தமிழில் ஒரு மூல வளநூலாக அமைந்து, கணிதம் கற்பிப்பதில் ஒரு சிறந்த வழிகாட்டியாகப் பயன் தரும். இதை இன்றைய கல்வியியல் கல்லூரிகளில் பாட நூலாகப் பயன்படுத்தலாம் என்கிறார் இந்நூலாசிரியர். நன்றி: தினமலர், 6.8.2017.

Read more

ஆயுதம் செய்வோம்

ஆயுதம் செய்வோம், என். மாதவன், புக்ஸ் ஃபார் சில்ரன், விலை 35ரூ. தமிழகக் கல்வித் துறையில் சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்கள் வரவேற்க தக்கவையே. இன்னும் கல்விக்கும சமூகத்துக்குமான விலகலை சரிசெய்யும் முயற்சிகளில் அனைவரும் ஈடுபட வேண்டிய காலகட்டமிது. ஆசிரியர், மாணவர் உறவு, பள்ளியின் அக – புறச் சூழல், ஆசிரியர்களுக்கு மேலிருந்து வரும் அதிகார உத்தரவுகள் தரும் அழுத்தம், சக ஆசிரியர்களுடனான பகிர்வு என இன்னும் பொது வெளியில் பேசப்படாத பல விஷயங்களைச் சுருக்கமாய், நம் மனதில் தைக்கும்படி எழுதியுள்ளார் தலைமையாசிரியரும் […]

Read more

பொருளறிவியல் கற்பித்தல்

பொருளறிவியல் கற்பித்தல், டாக்டர் வி. நடராஜன், அ. பன்னீர்செல்வம், சாந்தா பப்ளிஷர்ஸ், பக். 272, விலை 170ரூ. ஆறாம் பதிப்பைக் கண்டிருக்கும் இந்த நூல் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், 2016 – 2017ம் ஆண்டு வெளியிட்ட, பி.எட்., புதிய பாடத்திட்டத்தின்படி அமைந்திருக்கிறது. ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் பொருள் அறிவியல் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பெரிதும் உதவும் நூல். –மயிலை கேசி. நன்றி: தினமலர், 2/7/2017.

Read more

மாணவர்களுக்கான தமிழ்

மாணவர்களுக்கான தமிழ், என்.சொக்கன்,  கிழக்கு பதிப்பகம், பக்.232, விலை ரூ.200. ஆங்கிலவழியில் பயில்வது இன்று அதிகமாகிவிட்டதால், தமிழில் எழுதும்போது பல ஐயங்கள் தோன்றுவது இயல்பானதே. அதிலும் இன்று நாம் பயன்படுத்துகிற பல சொற்களைத் தவறாகவே எழுதிக் கொண்டிருக்கிறோம். அவற்றைச் சரியென்றும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இந்நூல் அப்படிப்பட்ட ஐயங்களைத் தீர்த்து வைக்கிறது. தேநீர், தேனீர் இவற்றில் எது சரி? எண்ணெய் சரியா? எண்ணை சரியா? ஐம்பத்து ஏழு என்று குறிப்பிடுவது சரியா? ஐம்பத்தி ஏழு என்பது சரியா? சென்னை பட்டணம், நாகப்பட்டினம் என்று சொல்கிறார்களே… பட்டணத்துக்கும் பட்டினத்துக்கும் […]

Read more
1 4 5 6 7 8 21