அறிவு தேடலில் அறிவியல் உணர்வு

அறிவு தேடலில் அறிவியல் உணர்வு, ராஜேந்திர பிஹாரி லால், தமிழாக்கம் கண்ணையன் தட்சிணாமூர்த்தி, நேஷனல் புக் டிரஸ்ட், விலை 90ரூ. உணர்ந்துப் படிக்கலாம் அறிவியலை இன்று உலகம் அடைந்திருக்கும் முன்னேற்றத்துக்கு மிகப் பெரிய பங்காற்றி இருப்பது அறிவியல்தான் என்றாலும் மூடநம்பிக்கைகளுக்குப் பின்னே ஏனோ மனிதன் ஓடிக்கொண்டே இருக்கிறான். அதற்குக் காரணம் இயற்கையின் புதிரான ரகசியங்களை விளக்கும் அறிவியலை அனைவருக்கும் கொண்டுசேர்க்கத் தவறியதே. அப்படி தவறவிட்டதைப் பிடிக்கும் முயற்சியே அறிவு தேடலில் அறிவியல் உணர்வு. நன்றி: தமிழ் இந்து, 15/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

மாற்றுக் கல்வி பாவ்லோ ஃப்ரொய்ரே சொல்வதென்ன?

மாற்றுக் கல்வி பாவ்லோ ஃப்ரொய்ரே சொல்வதென்ன?, அ.மார்க்ஸ், அடையாளம் பதிப்பகம், விலை 50ரூ. மௌனத்தைக் கலைக்கும் கல்வி சிந்திக்கும் திறனின் வழியாக உரையாடவும் செயலாற்றவும் வல்லமை பெற்றவர்கள் மனிதர்கள். ஆனால் இன்றைய ஆசிரியர் மாணவருக்கு இடையிலான உறவு, கல்வி நிலையங்கள் செயலாற்றும் முறை, பாடநூல் அமைக்கப்பட்ட விதம் எல்லாமே நம்மீது மௌனத்தைப் போர்த்துபவையாகவே உள்ளன என்று கால் நூற்றாண்டுக்கு முன்பே விமர்சித்தவர் கல்வியாளர் பாவ்லோ ஃப்ரேய்ரே. இந்த மௌனத்தைத் தகர்க்க அவர் முன்வைத்த மாற்றுக் கல்விமுறையைச் சுருக்கமாக விவாதிக்கிறது இந்தப் புத்தகம். நன்றி: தமிழ் […]

Read more

மரியா மாண்டிசோரியின் மனிதன் உருவாகிறான்

மரியா மாண்டிசோரியின் மனிதன் உருவாகிறான்,  தமிழில்: மீனாட்சி சிவராமகிருஷ்ணன், முல்லை பதிப்பகம், பக்.136, விலை ரூ.100. மாண்டிசோரி பள்ளிகள் என்றால் நமக்கு சிறுகுழந்தைகளுக்கான பள்ளிகளே நினைவுக்கு வரும். ஆனால் வெளிநாடுகளில் மாண்டிசோரி கல்விமுறையைப் பின்பற்றுகிற கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களும் உள்ளன. ஹாலந்தில் 5 பல்கலைக்கழகங்கள் உள்ளன. பாரிஸில் தனியார் மாண்டிசோரி கல்லூரி உள்ளது. இந்த நூல் மாண்டிசோரி கல்விமுறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப கல்வி கற்கும் முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று சொல்லும் இந்நூல், வெறும் வேலைக்கான கல்வி என்பதில் இருந்து […]

Read more

பன்முக அறிவுத் திறன்கள் ஓர் அறிமுகம்

பன்முக அறிவுத் திறன்கள் ஓர் அறிமுகம், ம.சுசித்ரா, தமிழ் திசை வெளியீடு, விலை 150ரூ. உயிரோட்டமான கல்வி வாசித்தல், மனப்பாடம் செய்து எழுதுதல், கணிதத் திறன் இவற்றுக்கு அப்பாற்பட்ட பன்முக அறிவுத் திறன்கள் இருக்கின்றன. மொழித் திறன், தர்க்கம் மற்றும் கணிதத் திறன், காட்சித் திறன், உடல் மற்றும் விளையாட்டுத் திறன், இசைத் திறன், மனிதத் தொடர்புத் திறன், தன்னிலை அறியும் திறன், இயற்கைத் திறன், வாழ்விருப்பு சார்ந்த திறன் என 9 விதமான திறன்களை ம. சுசித்ரா இந்து தமிழ் நாளிதழின் ‘வெற்றி […]

Read more

ஆங்கிலம் அறிவோமே

ஆங்கிலம் அறிவோமே, பாகம் 3, ஜி.எஸ்.எஸ்., தி இந்து வெளியீடு, விலை 140ரூ. படித்துச் சிரி, சிரித்துப் படி புதிதாக ஆங்கிலத்துக்குள் அடியெடுத்து வைப்பவர்களை மட்டுமல்லாமல் ஏற்கெனவே மொழியில் ஆளுமை படைத்தவர்களையும் வெற்றிக்கொடி இணைப்பிதழில் வெளிவரும் ‘ஆங்கிலம் அறிவோமே’ தொடர் ஈர்த்துவருகிறது. எவ்வளவு கடினமான கருத்தையும் சிரிக்கச் சிரிக்கப் புரியவைக்க முடியும் என்பதைத் தன்னுடைய லாகவமான எழுத்துத் திறமையால் தொடர்ந்து நிரூபித்துக்காட்டுபவர் ஜி.எஸ்.எஸ். ஏற்கெனவே இரண்டு புத்தகங்களாக வெளியிடப்பட்ட இந்தத் தொடரின் மூன்றாவது பகுதி அண்மையில் வெளியானது. சிரித்து, ரசித்துப் படித்தபடியே உங்களுடைய ஆங்கில […]

Read more

கல்வி சந்தைக்கான சரக்கல்ல

கல்வி சந்தைக்கான சரக்கல்ல, தொகுப்பு பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு, பாரதி புத்தகாலயம், உயர்கல்விக்கு ஆபத்தா? இந்திய உயர்கல்வியின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கவிருக்கும் நடவடிக்கைகளில் ஒன்று பல்கலைக்கழக மானியக் குழுவைக் கலைத்துவிட்டு இந்திய உயர் கல்வி ஆணையம் (Higher Education Commission of India – HEI) என்ற புதிய கல்விக் கழகத்தை நிறுவும் மத்திய அரசின் முடிவு. இதற்கான முன்வரைவை ஆழமாகப் பரிசீலித்த கல்வி மீது அக்கறை கொண்ட தனிநபர்களும் அமைப்புகளும் எழுதிய கடிதங்கள், கட்டுரைகளின் தொகுப்பு ‘கல்வி: சந்தைக்கான சரக்கல்ல’ என்ற புத்தகம். முனைவர் […]

Read more

இந்திய அரசும் கல்விக் கொள்கைகளும் 1986 – 2016

இந்திய அரசும் கல்விக் கொள்கைகளும் 1986 – 2016, அ.மார்க்ஸ், அடையாளம் வெளியீடு, விலை 240ரூ. மாறிவரும் கொள்கை! மக்கள் சேவை என்ற நிலையில் இருந்து லாபம் ஈட்டும் பண்டம் என்ற நிலைக்குக் கல்வி தள்ளப்பட்டதற்குப் பின்னால் உள்ள சமூக-பொருளாதார அரசியலை 1986 முதல் 2016 வரை வெளியிடப்பட்ட நான்கு அறிக்கைகளைக்கொண்டு அலசும் புத்தகம், ‘இந்திய அரசும் கல்விக் கொள்கைகளும் 1986-2016’. கடந்த 30 ஆண்டுகளாக இந்திய அரசு வெளியிட்ட கல்விக் கொள்கைகள் குறித்து விமர்சித்து நூல்களை எழுதிவரும் மூத்த கல்வியாளரும் சமூகச் செயற்பாட்டாளருமான […]

Read more

மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன்?

மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன்?, தொகுப்பாசிரியர் கி.வீரமணி, திராவிடக் கழக வெளியீடு, விலை 50ரூ. கல்வி நம் உரிமை மக்கள், மொழிகள், பண்பாடுகள் என அத்தனையிலும் பன்மைத்துவமும் ஏற்ற இறக்கமும் கொண்ட தேசத்தில் கல்வியைப் பொதுப் பட்டியலுக்குக் கொண்டுவருவது என்பது தவறான கொள்கை. இதைச் சுட்டிக்காட்டிக் கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரக் கோரும் மாநாடு சென்னையில் 2011-ல் நடத்தப்பட்டது. அதன் புத்தக வடிவமே ‘மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன்?’ நன்றி: தி இந்து, 8/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

கல்வியும் சுகாதாரமும் கொள்கைகள் பிரச்சினைகள் தீர்வுகள்

கல்வியும் சுகாதாரமும் கொள்கைகள் பிரச்சினைகள் தீர்வுகள், ஜீன் டிருஸ், அமர்த்தியா சென், தமிழில் பேரா.பொன்னுராஜ், பாரதி புத்தகாலயம், விலை 80ரூ. விவாதப் புள்ளிகள் பள்ளிக் கல்வி தொடர்பான சிக்கல்களை வெறும் தகவல்களின் அடிப்படையிலோ சித்தாந்தம் மீதான உணர்வுபூர்வமான சாய்வாலோ அணுகாமல் நுணுக்கமான விவாதப் புள்ளிகளை எழுப்பி, அவற்றின் வழியாக வாசகர்களைச் சிந்தித்துச் செயல்படத் தூண்டுகிறது கல்வியும் சுகாதாரமும் – கொள்கைகள், பிரச்சினைகள், தீர்வுகள். பொருளாதார அறிஞர்கள் அமர்திய சென், ஜீன் டிரீஸ் இணைந்து 2014-ல் எழுதிய ‘An Uncertain Glory- India and its […]

Read more

இந்திய அரசும் கல்விக் கொள்கைகளும் (1986- 2016)

இந்திய அரசும் கல்விக் கொள்கைகளும் (1986- 2016),  அ.மார்க்ஸ், அடையாளம், பக்.278, விலை ரூ.240. 1986 – ஆம் ஆண்டின் ராஜீவ் காந்தி அரசின் புதிய கல்விக் கொள்கை முதல் 2016 – ஆம் ஆண்டின் பாஜக அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை வரை இந்தியக் கல்விமுறையில் என்ன என்ன மாறுதல்களைக் கொண்டு வர அவை முயன்றிருக்கின்றன என்று இந்நூல் ஆராய்கிறது. நூலாசிரியர் கல்விக் கொள்கை தொடர்பாக, கடந்த 30 ஆண்டுகளாக எழுதிய நான்கு குறுநூல்கள்,சில கட்டுரைகள் இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டிருக்கின்றன. 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் […]

Read more
1 2 3 4 5 6 21