தமிழ் – தமிழ் அகராதி

தமிழ் – தமிழ் அகராதி, தமிழ்ப்பிரியன், அருணா பப்ளிகேஷன்ஸ், விலைரூ.250 சொற்களின் பொருளை உணர அகராதி துணை செய்கிறது. அரிய தமிழ் சொற்களுக்கு பொருள் கூறும் வகையில் இந்த அகராதி தயாரிக்கப்பட்டுள்ளது. அகர வரிசைப்படி சொற்கள் தொகுக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. சிவா என்ற சொல்லுக்கு, கடுக்காய், கீழ்க்காய்நெல்லி, நெல்லி, பங்கம்பாலை, வன்னி என்ற சொற்கள் பொருளாகக் கூறப்பட்டுள்ளன. நன்றி: தினமலர், 31/1/21 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

புதிய கல்விக் கொள்கை 2020- வரமா சாபமா?

புதிய கல்விக் கொள்கை 2020- வரமா சாபமா? ,  ஆர்.ரங்கராஜ் பாண்டே, கிழக்கு பதிப்பகம், பக்.168, விலை  ரூ.175 . மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து பல்வேறு அரசியல் கட்சியினரிடம் இருந்து ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல்வேறு கருத்துகள் கூறப்படும் சூழலில், தமிழகத்தின் மொழி அரசியல், நீட் தற்கொலை அரசியல் என பல்வேறு விஷயங்களை இந்நூலில் பேசியிருக்கிறார் நூலாசிரியர் . தனது விருப்பத்துக்கு ஏற்ப உயர் கல்வியை படிக்கும் சுதந்திரம் புதிய கல்விக் கொள்கையில் வழங்கப்பட்டுள்ளது. இது, கல்லூரிப் படிப்பில் மிகப்பெரிய புரட்சியை […]

Read more

இந்திய மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் கையேடு

இந்திய மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் கையேடு, பதிப்பக வெளியீடு, யுனிவர்சல் கிங்டம் பப்ளிகேஷன்ஸ், விலைரூ.100 மாணவ – மாணவியர் படிப்புதவி என்ற, ‘ஸ்காலர்ஷிப்’ பெறுவதற்கான வழிகாட்டி நுால். ஞானசேகர், அப்பாவு மற்றும் பட்டய கணக்காளர் ஜான் மோரீஸ் தலைமையிலான குழு தயாரித்துள்ளது.தமிழ்நாடு அரசு கல்வி உதவித்தொகைகள் என்பது உட்பட, 12 தலைப்புகளில் வழிகாட்டும் கட்டுரைகள் உள்ளன. உதவித்தொகை வழங்கும் அமைப்புகளின் அஞ்சல் முகவரி, இணையதள விபரத்துடன் தொகுக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லுாரி, உயராய்வு மையங்களில் உலக அளவில் கிடைக்கும் படிப்பு உதவிகள், அதை வழங்கும் நிறுவனங்கள் பற்றி […]

Read more

புதிய கல்விக் கொள்கை நன்மையா? தீமையா?

புதிய கல்விக் கொள்கை நன்மையா? தீமையா?, பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, இந்து தமிழ் திசை, விலை 90ரூ. புதிய கல்விக் கொள்கை புரிதல் வேண்டும் புதிய கல்விக் கொள்கை இன்றைய நாளின் மிக முக்கியமான விவாதமாகியிருக்கிறது. இது எதிர்காலச் சமூகத்தை நிர்ணயிக்கக் கூடியது என்ற வகையில் ஆழஅகலத் தெரிந்துகொள்வதும் ஆக்கபூர்வமாக உரையாடுவதும் அவசியமானது. பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தியின் இந்தப் புத்தகம் புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை வெளியானபோது எழுதப்பட்டது. புதிய கல்விக் கொள்கை அறிக்கையின் அத்தனை பக்கங்களையும் ஒவ்வொருவரும் படித்தறிய இயலுமா என்றால், அது கேள்விக்குறிதான். அதனால்தான் […]

Read more

சித்த மருத்துவ போட்டித் தேர்வு வினா விடை தொகுப்பு நூல்

சித்த மருத்துவ போட்டித் தேர்வு வினா விடை தொகுப்பு நூல், டாக்டர் ஒய்.ஆர்.மானக்சா, பக். 1560, விலை 1500ரூ. மருத்துவத் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கு உதவும் வகையில், தயாரிக்கப்பட்டுள்ள பயிற்சி நுால். கேள்வி – பதில் தொகுப்பாக உள்ளது. மத்திய, மாநில அரசு பணிகளில் சேர தேர்வு எழுதுவோருக்கும் உதவும். சுலபமாக பயன்படுத்த வசதியாக மூன்று புத்தகங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்ந்த மருத்துவக் குழு தயாரித்துள்ளது. சித்த மருத்துவம் தொடர்பான துல்லிய விபரங்கள், கேள்வி – பதில் வடிவில் உள்ளது. தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் […]

Read more

அன்பாசிரியர்

அன்பாசிரியர், க.சே.ரமணி பிரபா தேவி,  இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.200. நல்லது எங்கு நடந்தாலும், சாதனைகள் எங்கே அரங்கேறினாலும் அவற்றுக்குத் தனி முக்கியத்துவம் தர வேண்டும். அதன் மூலம் சமூகத்தின் அவநம்பிக்கையைத் துடைத்து, நன்னம்பிக்கையை விதைக்க முடியும். அந்த வகையில், உலகம் முழுவதும் உள்ள தமிழ் வாசகர்களின் பாராட்டைப் பெற்றது ‘இந்து தமிழ்’ நாளிதழின் இணையத்தில் வெளிவந்த ‘அன்பாசிரியர்’ தொடர். தனித்துவத்தோடு செயல்பட்டு மாணவர்களுக்கு ஊக்கமும், பள்ளிகளுக்குப் பெருமையும் சேர்த்த ஆசிரியர்களுக்கு இந்தத் தொடர் ஊக்கம் தருவதாக அமைந்தது. 28 பள்ளிகளில் […]

Read more

தமிழை நன்றாக எழுதுவோம்

தமிழை நன்றாக எழுதுவோம், பேராசிரியர் வே.சங்கர், நன்மொழிப் பதிப்பகம், விலை 150ரூ. தமிழை எழுதும்போது பலருக்கும் சாதாரணமாக ஏற்படக்கூடிய பிழைகளை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதற்கான வழிகாட்டி நூலாக இந்த நூல் அமைந்து இருக்கிறது. பொதுவாக எப்படிப்பட்ட பிழைகள் நேருகின்றன என்பதை விளக்கி, அந்தப் பிழைகளை எவ்வாறு சரி செய்து, நல்ல தமிழில் எழுத வேண்டும் என்பதை அருகில் இருந்து ஒருவர் சொல்லிக் கொடுக்கும் வண்ணம் ஆசிரியர் இந்த நூலை எழுதி இருக்கிறார். சந்திப் பிழை இல்லாமல் எழுதுவது, பேச்சு வழக்கு சொற்களை தவிர்த்து எழுதுவது, […]

Read more

நக்கீரன் பொது அறிவு உலகம் இயர்புக் 2020

நக்கீரன் பொது அறிவு உலகம் இயர்புக் 2020, நக்கீரன், பக். 1120, விலை 160ரூ. தமிழில் நிறைய இயர்புக்ஸ் வெளிவருகின்றன. அவற்றில், நக்கீரன் வெளியிடும் இயர்புக் 2020யும் ஒன்று. தொடர்ந்து, 14 ஆண்டுகளாக இயர்புக்கை இந்த நிறுவனம் வெளியிடுகிறது. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் வசதிக்காகவும், பொது அறிவுத் தகவல்களை தெரிந்து கொள்வோருக்கும் இந்த நுால் மிகவும் உதவிகரமாக இருக்கும். பொருளாதாரம், அறிவியல் தொழில்நுட்பம், சட்டங்கள், திட்டங்கள், சுற்றுச்சூழல் குறித்த கட்டுரைகளும் ஏராளமாக இடம்பெற்றுள்ளன. விலை மிகவும் குறைவாக இருப்பதால், எளிதாக அனைவராலும் வாங்கி, […]

Read more

நை தாலிம் புதுமைக்கல்வி

நை தாலிம் புதுமைக்கல்வி, மார்ஜோரி சைக்ஸ், ஜீவா, இயல்வாகை வெளியீடு, பக். 128, விலை 125ரூ. காந்தி, ரவீந்திரநாத் தாகூரைப் பின்பற்றி, நை தாலிம் என்ற, புதுமைக் கல்வியை புகட்டியவர், மார்ஜோரி சைக்ஸ். காந்தி தன் குந்தைகளை, ஆங்கிலப் பள்ளியில் சேர்த்து அடிமையாக்க விரும்பாமல், சுதந்திரக் கல்வி கற்க அனுமதித்தார். இந்த நூலில், மார்ஜோரியின் நை தாலிம் கல்வி பற்றி விரிவாக பேசப்பட்டுள்ளது. நன்றி: தினமலர், 19/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

இங்கிலீஷ் பார் கம்யூனிகேஷன்

இங்கிலீஷ் பார் கம்யூனிகேஷன்(ஆங்கிலம்), வி.தாமஸ், ஏஞ்சல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்போக்கன் இங்கிலீஷ், விலை 300ரூ. படிப்பில் எந்த நிலையில் இருப்பவர்களும், எத்தனை வயதுக்குழந்தைகளும் எளிதாக ஆங்கிலத்தைப் புரிந்து கொண்டு பேசுவதற்கு உதவி செய்யும் வகையில் இந்த நூல் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. ஆங்கில இலக்கணமும் மிக எளிமையான முறையில் கற்பிக்கப்படும் வகையில் ஒவ்வொரு அத்தியாயமும் எழுதப்பட்டு இருக்கிறது. அத்துடன் போக்குவரத்து விதிகள், முதல் உதவி செய்வது எப்படி என்பதும் புகழ் பெற்ற ஆங்கிலக் கவிதைகளும் இந்த நூலில் தரப்பட்டு இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 4/9/19. இந்தப் […]

Read more
1 2 3 4 21