தூது நீ சொல்லி வாராய்

தூது நீ சொல்லி வாராய், கோவி.மணிசேகரன், இலக்குமி நிலையம், விலைரூ.90. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த அழகிய தமிழகத்தை இந்த வரலாற்று நாவலின் வழியே, நாம் நேரில் கண்டு மகிழ முடிகிறது. காவியம் தீட்டும் கவிஞர் கோவி.மணிசேகரர், கவிதைத் தமிழின் இனிமையை இந்த வரலாற்றுப் புதினத்திலும் கலந்துள்ளார். பட்டுப் புடவையின் விலை உயர்ந்த தங்கச் சரிகை வேலைப் பாடாக சந்த நயம் அங்கங்கே ஜொலிக்கிறது. இதோ ஒரு துளி: `பூ மணக்கும், பூவையரின் புன்னகை மணக்கும், புலமையால் தமிழ் நாமணக்கும், காவியப் பாமணக்கும், மானுடப் பண்பு […]

Read more

புதிய வானம் புதிய பூமி

புதிய வானம் புதிய பூமி, பட்டுக்கோட்டை ராஜா, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 333ரூ. தஞ்சையின் சோழ வம்சத்து புகழ் மிக்க மன்னரான ராஜராஜ சோழனுக்குப் பிறகு தஞ்சையை பல மன்னர்கள் ஆட்சி செய்து இருந்த போதிலும், அந்த தேசத்தை 34 ஆண்டுகள் ஆட்சி செய்து மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்த மன்னர் என்ற பெருமையைப் பெற்ற சரபோஜியின் வாழ்க்கையைச் சுற்றிப் பின்னப்பட்ட இந்த நாவல், பெரும்பாலான வரலாற்றுச் சம்பவங்களை சிதைக்காமல் வழங்கி இருக்கிறது. நாவல் ருசிகரமாகவும், படிப்பதற்கு விறுவிறுப்பாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக […]

Read more

கடாரம் வென்றான் காவியம்

கடாரம் வென்றான் காவியம், மேத்தா சரஸ்வதி, மணிமேகலைப் பிரசுரம், விலை 150ரூ. தமிழகத்தில் சோழப் பேரரசை வேரூன்றச் செய்த விஜயாலயச் சோழர், ஆதீத்த சோழர் ஆகியோரின் வீரத் தீரச் செயல்களையும் அவர்கள் காலத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளையும் நாவல் வடிவத்தில் ருசிகரமாகத் தந்துஇருக்கிறார் ஆசிரியர். திருப்புறம்பயம் என்ற இடத்தில் நடைபெற்ற போரில், விஜயாலயச் சோழர் தனது கால்களின் பலத்தை இழந்த நிலையிலும் அடுத்தடுத்து வந்த வீரர்களின் தோள் மீது அமர்ந்தபடி போரிட்டு வெற்றி வாகை சூடிய வரலாற்றை சிறப்பாகப் படம் பிடித்துக்காட்டி இருக்கிறார். இந்த […]

Read more

போதி தர்மா

போதி தர்மா (4 பாகங்கள்), கயல் பரதவன், நர்மதா பதிப்பகம், மொத்த பக்.2856, விலை ரூ.1700. நீலகண்ட சாஸ்திரி எழுதிய தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள் என்ற நூலில் இந்தியாவிலிருந்து சீனா போவதற்கான கடல் வழியைப் பற்றி விவரிக்கும் இடத்தில் போதி தர்மா பற்றிய குறிப்பு வருகிறது. காஞ்சியில் இளவரசனாகப் பிறந்து உலகம் போற்றும் பெளத்த சன்னியாசியாகி சீன தேசத்திற்கு ஜென் பெளத்தத்தையும் குங்ஃபூ என்கிற மற்போரையும் கற்றுத் தந்தவர் போதி தர்மா. அவரது கால (கி.பி.520) தந்திர அரசியலைப் பற்றி விவரிக்கும் வரலாற்று நாவல் […]

Read more

சிவமகுடம்

சிவமகுடம், ஆலவாய் ஆதிரையன், விகடன் பிரசுரம், விலை 225ரூ. தமிழகத்தில் சேர, சோழ, பாண்டியர்களும், பல்லவர்களும், களப்பிரர்களும், சாளுக்கியர்களும் அடிக்கடி போரிட்டுக் கொள்வது வழக்கம். அந்தக் காலக்கட்டத்தில் நடைபெற்ற “உறையூர் போர்”, ஒரே நாளில் நடந்து முடிந்துவிட்டது! எனினும் பிற்கால வரலாற்றை மாற்றிப்போட்டது. சில காலம் சமண மதத்தைத் தழுவியிருந்த பாண்டிய மன்னன் கூன் பாண்டியன், உறையூரின் மீது படையெடுத்தபோது நடந்த சம்பவங்களின் பின்னணியில் எழுதப்பட்ட இந்த சரித்திரக்கதை, விறுவிறுப்பாக அமைந்துள்ளது. ஸ்யாம் வரைந்த வண்ணப்படங்கள் கண்ணைக் கவருகின்றன. நன்றி: தினத்தந்தி 6/6/2018.   […]

Read more

பல்லவப் பேரழகி

பல்லவப் பேரழகி, கயல் பரதவன், நர்மதா பதிப்பகம், பக். 688, விலை 375ரூ. வரலாற்றுப் புதினங்கள் வெறும் கற்பனைக் கோலங்கள் அல்ல. நிகழ்ந்த வரலாற்றை கற்பனைச் சாயங்களில் வரைந்து நம்முன் ஓடவிடுவது. சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசிக்கும், காஞ்சியின் மகேந்திர பல்லவனுக்கும் இடையில் நிகழ்ந்த போர்க்களமே புதினத்தின் கதைக் களம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பழந்தமிழரின் வாணிபச் செல்வாக்கும், கட்டடக் கலை நுட்பமும், போரில் கையாண்ட தற்காப்பு உத்திகளும், பண்பாடு நாகரிகமும், இல்வாழ்வு மாண்புகளும் நம்கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது புதினம். இரண்டாம் புலிகேசி வடஇந்தியாவிலுள்ள […]

Read more

மணிமகுடம்

மணிமகுடம், ஜெய் சீதாராமன், விருட்சம், பக். 130, விலை 120ரூ. குவிகம் மின்னிதழில் தொடராக வெளிவந்து, பலராலும், கவனிக்கப்பட்ட இந்த சரித்திர குறுநாவல், தற்போது அச்சாகி உள்ளது. பாண்டியர்களின் வம்சாவளி பொக்கிஷங்களான, விலை மதிக்க முடியாதமணிமகுடத்தில் இருந்தும், ரத்தின மாலையில் இருந்தும், இந்த கதை எழுகிறது. இலங்கை மன்னன் மகிந்தன், ஈழத்தில் மறைத்த மதுரை பாண்டியர்களின் பொக்கிஷங்களைப் பற்றி இந்நூல் விவரிக்கிறது. நன்றி: தினமலர், 17/1/2018.

Read more

நீலகேசி

நீலகேசி, கயல் பரதவன், சக்தி மலர் பப்ளிகேஷன்ஸ், பக் 312, விலை 190ரூ. நெஞ்சை அள்ளும் சரித்திர நாவல். பாண்டியர் உபசேனாதிபதி இளைய நம்பியும் யவனப் பெண் ஹீராவும் அறிமுகமாகும் முதல் இரண்டு அத்தியாயங்களிலேயே நாவல் சூடு பிடித்து விடுகிறது! சின்னச் சின்ன அத்தியாயங்களில் வேக, வேகமாக நகர்ந்து கதை முடியும்போது சிறந்த ஒரு சரித்திர நாவலைப் படித்து முடித்த திருப்தி ஏற்படுகிறது. சங்க காலம் தமிழகத்தின் பொற்காலம். அக்காலத்தில் சேர மண்ணை சீரும் சிறப்புமாக ஆண்டவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். அவன் காலத்தில் எரித்திரியக் […]

Read more

நீலகேசி

நீலகேசி, கயல் பரதவன், சக்தி மலர் பப்ளிகேஷன்ஸ், பக் 312, விலை 190ரூ. நெஞ்சை அள்ளும் சரித்திர நாவல். பாண்டியர் உபசேனாதிபதி இளைய நம்பியும் யவனப் பெண் ஹீராவும் அறிமுகமாகும் முதல் இரண்டு அத்தியாயங்களிலேயே நாவல் சூடு பிடித்து விடுகிறது! சின்னச் சின்ன அத்தியாயங்களில் வேக, வேகமாக நகர்ந்து கதை முடியும்போது சிறந்த ஒரு சரித்திர நாவலைப் படித்து முடித்த திருப்தி ஏற்படுகிறது. சங்க காலம் தமிழகத்தின் பொற்காலம். அக்காலத்தில் சேர மண்ணை சீரும் சிறப்புமாக ஆண்டவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். அவன் காலத்தில் எரித்திரியக் […]

Read more

நந்திபுரத்து நாயகன்

நந்திபுரத்து நாயகன், டி.கே. இரவீந்திரன்,  விகடன் பிரசுரம், விலை 330ரூ. பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மனை மையமாகக் கொண்டு இந்த நாவல் புனையப்பட்டுள்ளது. சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தியன் கங்க மன்னனுடன் சேர்ந்து போர் நடத்தி, போர் தர்மத்தைப் புறந்தள்ளி நந்திவர்மனைத் தோற்கடித்தான். போர்க்களத்தில் தப்பிய நந்திவர்மன் இரண்டு ஆண்டுகள் கழித்து சாளுக்கியர்களுடன் போரிட்டு வென்று மீண்டும் ஆட்சி பீடம் ஏறினான். இந்தக் கருவை மையமாகக் கொண்டு நந்திவர்மனுடன் சில கற்பனைப் பாத்திரங்களைச் சேர்த்து விறுவிறுப்பான நாவலைப் படைத்துள்ளார் டி.கே. இரவீந்திரன். நன்றி: தினத்தந்தி, 24/5/2017.

Read more
1 2 3 6